search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனம்"

    • ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது போன்றவற்றால் ஏற்படும் விளைவுகளை தத்ரூபமாக நடித்து காட்டினார்.
    • செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்க கூடாது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே நேற்று தஞ்சை ஜோதி அறக்கட்டளை மற்றும் தஞ்சை மாவட்ட காவல்துறையுடன் இணைந்து ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு நூதன விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.

    தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    பிள்ளையார்பட்டியை சேர்ந்த முன்னாள் அங்கன்வாடி ஆசிரியை ஜெயலட்சுமி, நாட்டுப்புற கலைகளை ஆராய்ச்சி செய்துவரும் மாணவர் சேகர் ஆகியோர் பொதுமக்களுக்கு நூதன முறையில் ஆத்தா வந்திருக்கேண்டா..,

    ஹெல்மெட் போட்டு வண்டிய ஓட்றா.. என அருள்வாக்கு கூறி சாலை பாதுகாப்பு நாடகம் நடத்தினர்.

    இதன் மூலம் தலைகவசம் அணிவதன் அவசியத்தை தாங்கள் அதிகமாக உணர்ந்து ள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கூறுகையில்:-

    "குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்குவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது போன்றவற்றால் ஏற்படும் விளைவுகளை தத்ரூபமாக நடித்து காட்டினார்.

    இது நிச்சயமாக வாகன ஓட்டிகளுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்தியிருக்கும் என்றார்.

    மேலும், ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக போக்குவரத்து போலீ சார் இனிப்பு வழங்கினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை தஞ்சை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பா ர்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, தன்னார்வலர் ஆர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

    முடிவில் அறக்கட்டளை கள ஒருங்கிணைப்பாளர் நாராயணவடிவு நன்றி கூறினார்.

    • அருப்புக்கோட்டை அருகே வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி-மூதாட்டி பலியாகினர்.
    • இதுகுறித்து எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள தும்மு சின்னம்ப ட்டியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் இளையராஜா (வயது 27). இவர் அதே பகுதியில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று மதியம் இவர் மோட்டார் சைக்கிளில் காளையார் கரிசல்குளத்தில் உள்ள ஓட்டலில் சாப்பாடு வாங்கி விட்டு புறப்பட்டார்.

    கரிசல்குளம் தொழிற்பயிற்சி கூடம் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த அடையா ளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இளைய ராஜா தூக்கி வீசப்பட்டார்.

    படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இளையராஜா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் பெத்தனாட்சி நகரை சேர்ந்தவர் மாத வன். இவரது மனைவி பரமேஸ்வரி (66). இவர் சம்பவத்தன்று மதுரை ரோட்டில் உள்ள போக்கு வரத்து பணிமனை முன்பு கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார்பரமேஸ்வரி மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். பாண்டியன் நகர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    • பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறையிடம் கோரிக்கை
    • திருவட்டார் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சுமார் 200 அடி தூரத்துக்கு பல இடங்களில் சாலையில் வெடிப்பு ஏற்பட்டது.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் காங்கரை பகுதியில் காங்கரை தேரி மேடான பகுதியாகும். சாதாரணமாக வாகனங்கள் இந்த ரோட்டில் வரும் போது மிகவும் சிரமத்துடன் செல்லும்.

    லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் பெரும் சிர மத்துடன் தான் சென்று வரு கின்றன. இதன் காரணமாக சாலையும் சேதத்தை சந்தித்து வருகிறது. மேலும் கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் இந்த சாலையின் வழியாக அடிக்கடி சென்று வருவதும் சாலையில் சேதத்தை அதிகப்படுத்துகிறது.

    மார்த்தாண்டம் -பேச்சி ப்பாறை நெடுஞ்சாலை கடந்த ஆண்டு தொடக்க த்தில் புதிதாக அமைக்க ப்பட்ட நிலையில் கடந்த வாரம் திருவட்டார் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சுமார் 200 அடி தூரத்துக்கு பல இடங்களில் சாலையில் வெடிப்பு ஏற்பட்டது. மேலும் தார்க்கலவை முழுமையாக பெயர்ந்து சிதறியது.

    இரவோடு இரவாக ஒப்பந்தக்காரர் இதனை சீரமைத்தார். ஆனால் ஒரு வாரம் கூட முடியாத நிலை யில் தற்போது மீண்டும் சாலையின் குறுக்காக 2 இடங்களில் பெரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ரோட்டின் ஓரம் முழுவதும் பெயர்ந் துள்ளது. சாலையில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வருவதால் இந்தப் பகுதி வழியாக செல்லும் வாகன ஒட்டுநர்கள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகி உள்ளனர்.

    எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து தரமற்ற முறை யில் அமைக்கப்பட்ட சாலையை அகற்றி விட்டு தரமானதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அந்த பகுதியில் பெரும் விபத்துக்கள் நடைபெறும் முன் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் தரமான முறையில் சாலையை செப்பனிட நெடுஞ்சாலைத்துறை முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேலம் கிச்சிப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை மேயர் தொடங்கி வைத்தார்.
    • அதில் ஒரு வாகனம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து வாகனத்தில் பெருத்தப்பட்டுள்ள எக்ஸ்ரோ கருவியை பார்வையிட்டார்.

    இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளால் உயரம், உடல் எடை, இரத்த அழுத்தம், சளி பரிசோதனை, அதிநவீன பரிசோதனை, மார்பக எக்ஸ்ரே ஆகிய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். சேலம் மாவட்டத்திற்கு இரண்டு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு வாகனம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    2 மாத காலத்திற்கு நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மாநகராட்சிப் பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத நாடாக மாற்றும் வகையில் காசநோய் ஒழிப்பில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் தான் நகர்ப்புற பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை கண்டறிந்து அதன் அடிப்படையில் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள எக்ஸ்ரே கருவி மூலம் காசநோய் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

    இந்த வாகனத்தில் 5 சமூக பணியாளர்கள் பணிபுரிவார்கள். எனவே, மாநகராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் காசநோய் தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் தங்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    காசநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 15 நபர்களுக்கு மருத்துவ பெட்டகத்தையும் மேயர் ராமச்சந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் யோகானந், கவுன்சிலர் மஞ்சுளா மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். 

    • இருசக்கர வாகனத்தில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.
    • மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே விஷ்ணம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ராஜேஷ் கண்ணன் (38).

    திருவையாறில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.நேற்று மாலை 3 மணியளவில் அவர் தஞ்சாவூரிலிருந்து திருவையாறு நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்தபோது அம்மன்பேட்டை வெட்டாறு பாலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.

    உடனே, ஆம்புலன்சு மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

    இதுகுறித்து நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்கு ப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • 24 இருசக்கர வாகனங்கள் மற்றும் 100 நான்கு சக்கர வாகனங்களை ஆய்வு செய்தார்.
    • வாகனங்களின் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட போலீசா ரால் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு போலீஸ் வாகனங்களை ஆய்வு செய்வதற்காக, அந்தந்த போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார் தாங்கள் பயன்படுத்தும் வாகனங்களை தஞ்சை மாவட்ட ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு வந்தனர்.

    இந்த வருடாந்திர ஆய்வில் சரக டி.ஐ.ஜி. கயல்விழி கலந்து கொண்டு காவல் ஆளினர்களின் கவாத்து, உடை பொருட்களை தணிக்கை செய்தார். பின்னர் 24 இருசக்கர வாகனங்கள், 100 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    அப்போது அந்த வாக னங்களை பார்வையிட்டு அவை சரியாக பராமரிக்கப்ப டுகிறதா? என்றும், எரிபொருள் சரியாக பயன்படுத்துகிறார்களா? எனவும், வாகனங்களின் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, தஞ்சை ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன், வாகன பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • சாலைகளின் நடுவிலும், ஓரங்களிலும் ஆங்காங்கே சாலை பெயர்ந்து பள்ளங்கள் உருவாகி உள்ளன.
    • விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    திருவையாறு:

    திருவையாறு நகரத்தில் நான்கு திசைகளிலும் செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் நடுவிலும் ஓரங்களிலும் ஆங்காங்கே சாலை பெயர்ந்து பள்ளங்கள் உருவாகி உள்ளன.

    இதனால் இருசக்கர வாகனங்கள், கார்கள் முதலிய இலகு ரக வாகனங்கள், பஸ், லாரி முதலிய கனரக வாகனங்கள் ஆகியவற்றின் டயர்கள் அந்தப் பள்ளங்களில் இறங்கி மேலே ஏறும் போது வாகன அச்சு சாலையில் மோதி பழுதாகவும், விபத்துகள் நேரவும் வாய்ப்புள்ளது.

    மேலும், சைக்கிள் முதலிய இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் அப்பள்ளங்களில் வாகனத்தை இறக்கி ஏற்றும் போது பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இதனால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்படுகிறது,

    எனவே, திருவையாறு நகரப் போக்குவரத்து சாலைகளில் உள்ள கிடுகிடு பள்ளங்களை தரமான தார் மற்றும் ஜல்லிக் கலவையினால் நிரப்பி சமன்படுத்தி உதவுமாறு வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 46 இடங்களில் ரூ. 14 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
    • திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா மையத்தை எஸ்பி திறந்து வைத்தார் திருத்துறைப்பூண்டி நகரப் பகுதியில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நகராட்சி நிர்வாகமும், வர்த்தக சங்கமும் இணைந்து நகரம் முழுவதும் 46 இடங்களில் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    இதனை கண்காணிக்க போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு மையம் திறப்பு விழா நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் வரவேற்றார்.

    மாரிமுத்து எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் , வர்த்தக சங்கத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கண்காணிப்பு மையத்தை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் திறந்து வைத்து பேசும்போது :-

    நகர சுற்று வட்டார பகுதிகளில் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது

    திருத்துறைப்பூண்டியில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் போலீஸ் நிலையத்தில் நிறுத்து வாகனம் விரைவில் வழங்கப்பட உள்ளது.

    திருத்துறைப்பூண்டி நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை நிறைவேற்றப்பட்டுள்ளது .இதில் திருத்துறைப்பூண்டி காவல் நிலையம் இரண்டாகப் பிரிப்பதற்கு அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றார்.

    விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், நகராட்சி நியாயமான குழு உறுப்பினர் பாண்டியன், ஆணையர் அப்துல் ஹரிஷ், நகராட்சி பொறியாளர் பிரதன் பாபு ,நகராட்சி துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் வீரசேகரன் , இன்ஸ்பெக்டர் கழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • போக்குவரத்து போலீசார் சோதனை
    • பஸ் நிலையத்திற்குள் நிறுத்தபட்டிருந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் போக்குவரத்து விதிமுறை களை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். நேற்று நாகர்கோவில் நகரம் முழுவதும் போலீசார் அபராதம் விதித்தனர்.

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்திற்குள்ளும் இருசக்கர வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பொது மக்களுக்கு இடைஞ்சலாக வும் இருச்சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதாக தொடர்ந்து வந்த புகாரை தொடர்ந்து போக்கு வரத்து போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது பஸ் நிலை யத்திற்குள் நிறுத்தப்பட்டி ருந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 50க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக காலை முதலே போக்கு வரத்து போலீசார் சோதனை மேற் கொண்டனர். நாகர்கோவில் கேப் ரோட்டில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் வாகன ஓட்டிகள் சிலர் அண்ணா பஸ் நிலையத்திற்கு உள்ளாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.

    பஸ் நிலையத்திற்குள் நிறுத்தபட்டிருந்த மோட் டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. இன்றும் 25 க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சாலை ஓரங்களிலும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் இருசக்கர வாகனங்களை அதற்கான ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • சாலையின் குறுக்கே கம்புகளை ஊன்றி
    • பேரூராட்சி வாகனம் சிறைப்பிடிக்கப்பட்டது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பர்மா காலனி சாலையானது செரியலூர் இணைப்புச்சாலையாக உள்ளது. இங்கு புதிய சாலை அமைக்க கடந்த ஆண்டு பூமி பூஜை செய்யப்பட்டது. ஆனால் சாலை அமைக்கும் பணிகள் எதுவும் நடைபெறாததால் அப்பகுதியைசேர்ந்த பொது மக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைத்தனர்.

    ஆனாலும் கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று காலை பர்மா காலனி மக்கள் சாலையின் நடுவில் கற்களை குவித்தும், கம்புகளை ஊன்றியும் அடைப்பு ஏற்படுத்தியதோடு, பேரூராட்சி பணியாளர்களையும், வாகனத்தையும் சிறைப்பிடித்தனர்

    பேரூராட்சி பணியாளர்கள் வாகனத்தில் சென்று அப்பகுதியில் உள்ள குப்பைகளை எடுத்து வெளியில் வர முடியாமல் சிறை பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த கீரமங்கலம் போலீசார் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து மிக்க சிறு தானிய பயிர் ஊக்குவிப்பு பிரசார வாகனத்தை பரமத்தி வட்டார அட்மா தலைவர் தனராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • பரமத்தி வட்டாரத்தில் 24 வருவாய் கிராமங்களில் இந்த பிரசார வாகனங்கள் செல்ல உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து மிக்க சிறு தானிய பயிர் ஊக்குவிப்பு பிரசார வாகனத்தை பரமத்தி வட்டார அட்மா தலைவர் தனராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார். பரமத்தி வட்டாரத்தில் 24 வருவாய் கிராமங்களில் இந்த பிரசார வாகனங்கள் செல்ல உள்ளது.

    மக்களிடம் சிறு தானியங்கள் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பிரசார வாகனங்கள் இயக்கப்படுகிறது. இந்நிகழ்வில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், வட்டார தொழில்நுட்ப மேலாளர், உதவி தொழில்நுட்ப மேலாளர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • இருசக்கர வாகன விபத்துக்களை தடுக்க தலைக்கவசம் அணிய வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • காவல் கண்காணிப்பாளர் மனோகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில், நடைபெற்றது. அப்போது அவர் ேபசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் இரு சக்கர வாகன விபத்துகளில், தலையில் அடிப்பட்டு அதனால் ஏற்படும் உயிழப்புகள் அதிகமாக உள்ளது. எனவே தலைக்கவசத்தின் பயன் குறித்து பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு எற்படுத்த வேண்டும். மேற்படி விழிப்புணர்வினை அரசு அலுவலகங்களிலிருந்து அரசு அலுவலர்கள் மூலமாக முதற்கட்டமாக ஏற்படுத்த வேண்டும்.

    அதன்படி, வருகிற 5-ந் தேதி அரசு அலுவலங்களுக்கு இருசக்கர வாகனத்தில் வருகிற அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் தலைக்கவசம் அணிந்து, விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

    இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியும் விழிப்புணர்வினை படிப்படியாக பொது மக்களிடமும் கொண்டு சென்று, பொதுமக்களும் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஒட்டுவதை ஊக்குவிக்க காவல்துறையினர் மூலமாக அறிவுறுத்த வேண்டும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×