search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனம்"

    • சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார்
    • இருசக்கர வாகனத்தை திருடி சென்ற திருடர்களை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    தெங்கம்புதூர் அருகே உள்ள பணிக்கன் குடியிருப்பை சேர்ந்தவர் கண்ணன் (வயது 39). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை சம்பவத்தன்று வீட்டு காம்பவுண்டுக்குள் நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார்.

    மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை. பல இடங்களிலும் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை‌. உடனே பதறிப்போன கண்ணன் இதுகுறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருசக்கர வாகனம் திருட்டுப் போன இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஏதாவது திருடனின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று விசாரணை செய்தனர்.

    அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமிராவில் இருசக்கர வாகனத்தில் மேலே ஒருவன் ஏறி இருந்து 2 நபர்கள் இருசக்கர வாகனத்தை தள்ளுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்தப் பதிவை போலீசார் கைப்பற்றி அதன் அடிப்படையில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட்செல்வசிங் வழக்குப்பதிவு செய்து. இருசக்கர வாகனத்தை திருடி சென்ற திருடர்களை தேடி வருகின்றனர். வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் திருட்டுப் போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மோட்டார் சைக்கிளுடன் தலையில் பலத்த அடிபட்ட நிலையில் கீழே கிடந்துள்ளார்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள மூத்தநாயக்கன் வலசு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 62) . இவர் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் கரட்டுப்பாளையம்- மயில்ரங்கம் ரோட்டில் மோட்டார் சைக்கிளுடன் தலையில் பலத்த அடிபட்ட நிலையில் கீழே கிடந்துள்ளார்.

    இதை கண்ட அந்த வழியாக சென்ற நபர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து அவரது உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து சுப்பிரமணி தனது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்தாரா? அல்லது ஏதேனும் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மார்த்தாண்டம் நோக்கி சென்ற அந்த வாகனம் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது
    • லெனின் கொடுத்த புகா ரின் பேரில் கல்லூரி பஸ் டிரைவர் விஜயனிடம் திரு வட்டார் போலீசார் வழக்கு பதிவு

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே உள்ள தச்சூர் அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜான் ஸ்டீபன் அருள்ராஜ் (வயது 48).

    இவர் நேற்று மாலை மார்த்தாண்டத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் குலசேகரம் நோக்கி புறப்பட்டார். ஆற்றூர் கல்லுபாலம் பகுதியில் சென்ற போது தனியார் கல்லூரிக்கு சொந்தமான கல்லூரி வாகனம் எதிரே வந்தது.

    மார்த்தாண்டம் நோக்கி சென்ற அந்த வாகனம் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ஜான்ஸ்டீபன் அருள்ராஜ் தூக்கி வீசப்பட்டார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர்.

    ஜான்ஸ்டீபன் அருள் ராஜ் உடலைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்தி ரிக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். ஜான் ஸ்டீபன் அருள்ராஜின் உறவினர் லெனின் கொடுத்த புகா ரின் பேரில் கல்லூரி பஸ் டிரைவர் விஜயனிடம் திரு வட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • மகள் சரண்யா நாகர்கோவில் அருகே வசித்து வருகிறார். அவரை பார்க்க வேலப்பன் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்றார்
    • எதிர்பாராதவிதமாக வேலப்பன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த வேலப்பன் தலையில் பலத்த காயமடைந்தார்.

    கன்னியாகுமரி :

    கொல்லங்கோடு வள்ளவிளை பகுதியைச் சேர்ந்தவர் வேலப்பன் (வயது 65). இவர் கயிறு தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

    இவரது மகள் சரண்யா நாகர்கோவில் அருகே வசித்து வருகிறார். அவரை பார்க்க வேலப்பன் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்றார். இரவு மொட்ட விளை சந்திப்பில் சென்ற போது அந்த வழியாக அடையாளம் தெரியாத வாகனம் வந்தது.

    அந்த வாகனம் எதிர்பாராதவிதமாக வேலப்பன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த வேலப்பன் தலையில் பலத்த காயமடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் கள் தீவிர சிகிச்சை அளித்த னர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை வேலப் பன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மகன் சதீஷ் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மாணவிக்கு கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக ரூ. 25,000-க்கான காசோலையை வழங்கினார்.
    • பயனாளிக்கு சுயதொழில் தொடங்க ரூ. 1,05,570 லட்சம் மானியத்துடன் கூடிய மூன்று சக்கர வாகனம் வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது கலெக்டர் பேசியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 461 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் மாவட்ட கலெக்டரின் தன் விருப்ப நிதியிலிருந்து பாபநாசம் வட்டம் மாலினி என்ற மாணவிக்கு கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக ரூ. 25,000- மதிப்பிலான காசோலையினையும், தாட்கோ திட்டத்தின் சார்பில் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த உதயகுமார் என்ற பயனாளிக்கு சுயதொழில் தொடங்கிட ரூ. 1,05,570 லட்சம் மானியத்துடன் கூடிய மூன்று சக்கர வாகனத்தினையும் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) மரு.என்.ஓ.சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் , தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • காய்கறிகள் வாங்குவதற்காக தினம்தோறும் உழவர் சந்தைக்கு வந்து செல்கின்றனர்.
    • வாகனங்கள் ரோட்டிலேயே தாறுமாறாக நிறுத்தப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை உழவர் சந்தையில் உடுமலை மற்றும் கிராம பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். உடுமலை மட்டுமன்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் காய்கறிகள் வாங்குவதற்காக தினம்தோறும் உழவர் சந்தைக்கு வந்து செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பொது மக்கள் வரும் வாகனங்கள் ரோட்டிலேயே தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. மேலும் வடக்கு பகுதியில் செல்லும் ரோட்டில் ரோட்டை அடைத்து இரண்டு புறமும் தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்படுவதால் வாகனங்கள் அந்த வழியாக உடனடியாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்ததை சரி செய்ய போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை வெங்கடகிருஷ்ணா ரோட்டில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு உடுமலை வெங்கட கிருஷ்ணா ரோட்டில் வாகனங்களை ரோட்டிலும் ஓரங்களிலும் தாறுமாறாக நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது இதனால் இந்த வழியாக உடுமலை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் செல்வதற்கு வாகனங்கள் இடையூறாக இருக்கிறது. மேலும் இந்த வழியாகத்தான் சந்தைக்கு செல்ல வேண்டும். பெரும்பாலானோர் இந்த வழியைத் தான் பயன்படுத்துகின்றனர். மேலும் சந்தை நாட்களில் இந்த ரோட்டில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்வதால் ரோட்டை கடக்க முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே போக்குவரத்து இடையூறு ஏற்படும் நேரங்களில் காவலர்களை நிறுத்தி போக்குவரத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெள்ள மோடியில் ஊய்காட்டு சிவ சுடலை மாடன் கோவில் உள்ளது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    அம்மாண்டிவிளை அருகே உள்ள வெள்ள மோடியில் ஊய்காட்டு சிவ சுடலை மாடன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் முன்பு மாசானசாமி மண்டபம் இருக்கிறது. நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் மாசானசாமி மண்டபம் மீது மோதியது. இதில் கோவில் மண்டபம் சேதமடைந்தது.

    இச்சம்பவம் குறித்து ஊர் தலைவர் ராதாகிருஷ்ணன் மணவாளக்குறிச்சி போலீ சில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • டி.கல்லுப்பட்டி அருகே கூலி தொழிலாளி வாகனம் மோதி பலியானார்.
    • ராஜபாளையம்-மதுரை சாலையை கடக்க முயன்றார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள ஜாரி உசிலம்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது52), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சண்முகத்தாய். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கருப்பசாமி டீ குடிப்பதற்காக அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றார். பின்னர் அவர் வீட்டிற்கு செல்வதற்காக ராஜபாளையம்-மதுரை சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது சென்னை தாம்பரம் கணபதிபுரத்தைச் சேர்ந்த ராம்சுந்தர் மகன் பரத் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், நடந் து சென்ற கருப்பசாமி மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பேரையூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கருப்பசாமி இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இந்த விபத்து குறித்து கருப்பசாமி மனைவி சண்முகத்தாய் கொடுத்த புகாரின்பேரில் பரத் மீது டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாத்தூர் அருகே சரக்கு வாகனம் மீது பஸ் மோதியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • ஆம்புலன்ஸ் மூலம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சாத்தூர்

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் சரக்கு வாகனத்தில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேல ஒட்டம்பட்டி கிராமத்தில் இருக்கும் சகோதரி வீட்டுக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். சாத்தூர் அருகே உள்ள சிந்தப்பள்ளி ரவீந்திரா பயர் ஒர்க்ஸ் அருேக வந்த போது எதிரே வந்த தனியார் பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த மாரீஸ்வரி (40), அவரது மகன்கள் மாரி ரமேஷ் (20), மாரி பாபு (19), தாய் கங்கா தேவி, டிரைவர் சுரேந்திரன் (40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் படுகாயமடைந்த மாரீஸ்வரி, கங்காதேவி இருவரும் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • 35-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
    • விநாயகர் சிலையோடு நான்கு பேர் மட்டுமே வந்ததால் விநாயகர் சிலையை வாகனத்தில் இருந்து இறக்கிட கூடுதல் ஆட்கள் தேவைப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி பல்வேறு இடங்களில் 35க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    இந்நிலையில் இன்று ஒவ்வொரு விநாயகர் சிலையாக சீர்காழி உப்பனாற்றுக்கு கொண்டு செல்கின்ற நிகழ்ச்சி நடந்தது அப்பொழுது சீர்காழி கொள்ளிட முக்கூட்டு பகுதியில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலை கரைக்க கொண்டு வரப்பட்டது.

    விநாயகர் சிலையோடு நான்கு பேர் மட்டுமே வந்ததால் விநாயகர் சிலையை வாகனத்தில் இருந்து இறக்கிட கூடுதலாக ஆட்கள் தேவைப்பட்டது.

    இதனால் விநாயகர் சிலை கரைப்பதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து மேலும் விநாயகர் சிலைகள் வந்த வண்ணம் இருந்ததால் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விநாயகர் சிலையை வாகனத்தில் இருந்து இறக்க தூக்கி சென்று உப்பனாற்றில் சென்று கரைக்க உதவினர்.

    • மளிகை பொருட்கள் வாங்க சாலக்கடை அருகே உள்ள கடைக்கு வந்தார்.
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தாராபுரம் :

    தாராபுரத்தை அடுத்த சாலக்கடை நடு வலசு பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 55), கூலி தொழிலாளி .இவர் நேற்று இரவு மளிகை பொருட்கள் வாங்க சாலக்கடை அருகே உள்ள கடைக்கு வந்தார்.

    பின்னர் பொருட்கள் வாங்கி விட்டு தனது வீட்டுக்கு செல்வதற்காக நடந்து சென்றபோது மேம்பாலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து மூலனூர் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பி அபராதம் செலுத்திய பிறகு விடுவிக்கப்படும்.
    • இருசக்கர வாகனத்தில் செல்லும் மாணவர்கள் தலைக்கவசம் அணியாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்து.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நெடுஞ்சாலை மருத்துவம் மற்றும் போக்கு வரத்து துறை இதர அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நாகை மாவட்டத்தில் 11 பேர் ஜூலை மாதம் உயிரிழந்துள்ளனர்.

    இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள், மாணவர்கள் தலைக்கவசம் அணியாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது இதை தடுக்கும் பொருட்டு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகர்ஆகியோர் உத்தரவின் அடிப்படையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் காவல்து றையினர் இணைந்து வாகன சோதனை செய்தனர்.

    சோதனையில் ஓட்டுநர் உரிமம் இல்லாத 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பி அபராதம் செலுத்திய பிறகு விடுவிக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு, நாகை நகர இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், வின்சென்ட் ராஜ், லோகநாதன், செல்வராஜ் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து இந்த சோதனை நடைபெறும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.

    ×