search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 177044"

    • பிறந்தநாளை யொட்டி காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • தஞ்சை மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமை வகித்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட காங்கிரஸ் (தெற்கு) சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்ததினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் கீழவாசலில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமை வகித்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

    முன்னதாக ஐ.என்.டி.யூ.சி மாவட்ட பொதுச்செயாலளர் பூதலூர் என்.மோகன்ராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்டிதம்பட்டு ஆர்.கோவிந்தராஜூ, மாவட்ட ஊடக பிரிவுதலைவர் பிரபு மண்கொண்டார், சோழ மண்டல சிவாஜி பாசறைத்தலைவர் சதா வெங்கட்ராமன், மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மாநகர மாவட்ட கோட்டத்தலைவர் கதர்வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் களிமேடு ராமலிங்கம், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ரமேஷ்சிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏரிப்புரக்கரை ராஜேந்திரன், தேசிகன், அய்யாறு, சுந்தர், பாலசுப்ரமணியன் காலிங்கராயர், பின்னையூர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • காமராஜர் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • விழாவில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் 120-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மாவட்ட தலைவர் ச.பாஸ்கர் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் வி.கே.செல்வம், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் பாலபாஸ்கர், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் கமாலுதீன், மாவட்ட துணை தலைவர் ஆர்.சிவக்குமார், மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஏ.சி.எஸ்.அறிவுராம், வர்த்தபிரிவு மாநில ெசயலாளர் சிவ.காமராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ராகவன், மாநில செயற்குழு உறுப்பினர் சி.எஸ்.கண்ணன், மாவட்ட துணை தலைவர் எஸ்.பானுமதி, நகர தலைவர் ஆர்.ரகுராமன், நகர பொது செயலாளர்கள் கோகுல், எம்.எஸ்.செயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தென்னிந்தியாவின் பாரம்பரிய பலகாரங்களில் ஒன்று நெய் அப்பம்.
    • இதன் வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும், உட்புறம் மென்மையாகவும் இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி - 250 கிராம்

    தேங்காய் துருவல் - 6 தேக்கரண்டி

    ஏலக்காய் - 4

    சமையல் சோடா - ¼ தேக்கரண்டி

    வாழைப்பழம் - 1

    உப்பு - ¼ தேக்கரண்டி

    வெல்லம் - 200 கிராம்

    நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    பச்சரிசியை நன்றாக சுத்தம் செய்து 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். வாழைப்பழத்தின் மேல் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் பாகு பதத்தில் காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். ஊறவைத்த அரிசியுடன் வாழைப்பழம், ஏலக்காய் சேர்த்து, மிக்சியில் சிறிது கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.

    அதில் வெல்லப்பாகு மற்றும் தேங்காய் துருவலைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். பின்னர் அதில் சிறிது உப்பு, சமையல் சோடா சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கலந்துகொள்ளவும்.

    குழிப்பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும், அதன் ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு நெய் ஊற்றவும். பின்பு குழிகளில் மாவை ஊற்றி, அப்பத்தின் இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை நன்றாகப் பொரித்தெடுக்கவும்.

    இப்போது நெய் அப்பம் தயார்.

    • இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
    • இந்த ரெசிபியை 30 நிமிடங்களில் செய்து விடலாம்.

    தேவையான பொருட்கள்:

    அவல் மாவு - 1 கப்

    பால் - 500 மி.லி

    பாதாம் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

    வெல்லம் - தேவைக்கு ஏற்ப

    ஏலக்காய்த்தூள் - சிறிது

    நெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    அகலமான பாத்திரத்தில் அவல் மாவுடன் ஒரு சிட்டிகை உப்பு, நெய் மற்றும் கொதிக்கும் தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

    பாலுடன், பாதாம் பவுடர் கலந்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

    அதில் பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.

    உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் போட்டு கொதிக்க வைக்கவும்.

    5 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கினால் 'அவல் பால் கொழுக்கட்டை' தயார்.

    • கேழ்வரகில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாலிபீனால் ஆகியவை நிறைந்துள்ளன.
    • கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும்.

    ராகி எனும் கேழ்வரகு தென்னிந்திய மக்களின் முக்கிய உணவுப் பொருட்களில் ஒன்றாகும். இதில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாலிபீனால் ஆகியவை நிறைந்துள்ளன. கேழ்வரகில் உள்ள அமினோ அமிலங்கள், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகின்றன. இதில் உள்ள நார்ச்சத்து உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும். சரும ஆரோக்கியம், எலும்புகளின் வலிமை, முடி வளர்ச்சி போன்றவற்றுக்கும் கேழ்வரகில் உள்ள சத்துக்கள் பயன்படுகின்றன. கேழ்வரகைக் கொண்டு பாரம்பரிய சுவையுடன் தயாரிக்கப்படும் 'ராகி சிமிலி' செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம்.

    தேவையானப் பொருட்கள்:

    கேழ்வரகு மாவு - 200 கிராம்

    வெல்லம் - 100 கிராம்

    வேர்க்கடலை - 100 கிராம்

    எள் - 4 தேக்கரண்டி

    ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி

    நெய் - தேவையான அளவு

    உப்பு - ¼ தேக்கரண்டி

    செய்முறை:

    பாத்திரத்தில் கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, நெய் ஊற்றி சப்பாத்திகளாக சுட்டுக்கொள்ளவும்.

    பின்னர் வாணலியில் எள் மற்றும் வேர்க்கடலையை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.

    வறுத்த வேர்க்கடலையின் தோலை நீக்கி பொடித்துக்கொள்ளவும்.

    கேழ்வரகு சப்பாத்தி ஆறியதும் மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    அதனுடன் ஏலக்காய்த்தூள் மற்றும் வெல்லம் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாகப் பிசையவும். கலவை கையில் ஒட்டும் பதத்தில் வரும்போது உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும்.

    இப்பொழுது சுவையான மற்றும் சத்து மிகுந்த 'கேழ்வரகு சிமிலி' தயார்.

    • அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு
    • நோட்டு புத்தகங்கள் இன்றே வழங்கப்பட்டது

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

    குமரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவ-மாணவிகள் காலையிலேயே ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களை பெற்றோர் தங்களது இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் அழைத்து வந்து பள்ளியில் விட்டனர்.

    இதனால் நாகர்கோவில் பகுதியில் உள்ள பள்ளிகள் முன் பெற்றோர் திரண்டி ருந்தனர். பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் இன்முகத்துடன் வர வேற்றனர். ஒரு சில அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

    முதல் நாளான இன்று ஏராளமான மாணவ-மாணவிகள் சீருடைக்கு பதிலாக புத்தாடை அணிந்து வந்திருந்தனர். அவர்களை விரைவில் சீருடை அணிந்து வரும்படி ஆசிரியர்கள் கூறினர். ஒரு சில பள்ளிகளில் வழக்கம் போல சீருடை அணிந்து மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர்.

    அதே சமயம் புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும் தங்களது பெற்றோரை விட்டு பிரிய முடியாமல் அழுதனர். பள்ளிக்குப் போக மாட்டேன் என்று கூறி அழுததையும் பார்க்க முடிந்தது. அந்த மாணவ- மாணவிகளுக்கு பெற்றோர் சிறிது நேரம் ஆறுதல் கூறி மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    பள்ளிகள் திறக்கப்பட்ட தை தொடர்ந்து வடசேரி பஸ் நிலையம் மற்றும் அண்ணா பஸ் நிலையம் காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது. பஸ்களிலும் மாணவ-மாணவிகள் கூட்டமே அதிகமாக இருந்தது. இரணியல், மார்த்தாண்டம், குளச்சல் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.

    குமரி மாவட்டத்தில் பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்த கங்கள் மற்றும் நோட்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதற்காக கடந்த சில தினங்க ளுக்கு முன்பே அந்தந்த பள்ளிகளுக்கு நோட்டு மற்றும் புத்த கங்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன. அவை அனைத்தும் இன்று மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

    அதுவே தனியார் பள்ளி மாணவ-மாணவி களுக்கு பள்ளி திறப்ப தற்கு முன்பாகவே பாட புத்தகங்கள் வழங்க ப்பட்டன. நாகர்கோவில் மாநகராட்சியில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் வந்து சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கேப் ரோடு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, வெட்டூர்ணிமடம் செல்லும் சாலை, ஆராட்டு ரோடு உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு போலீசார் போக்கு வரத்தை சீரமை க்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தோவாளை அருகே உள்ள விசுவாசபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் இன்று மாணவ-மாணவிகள் வருகையினை முன்னிட்டு மாணவ மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் உதயகுமாரி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் விஜேஷ் வரவேற்று பேசினார்.தொடக்கப்பள்ளி கல்வி துறை அலுவலர் லதா, தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினிபகவதியப்பன், சகாய நகர் ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ் ஏஞ்சல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி பின்னர் பள்ளிக்கு வந்திருந்த மாணவ மாணவிகளை வாழ்த்தி பேசியதுடன் இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.

    • வீட்டில் குழந்தைகளுக்கு பாயாசம், கீர் செய்து கொடுத்து இருப்பீங்க.
    • இன்று வித்தியாசமாக ஆப்பிள் ரபடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    ஆப்பிள் - 2,

    பால் - அரை லிட்டர்,

    சர்க்கரை - ஒரு கப்,

    பாதாம் - 10 (துருவிக் கொள்ளவும்),

    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,

    முந்திரிப் பொடி - 2 டீஸ்பூன்.

    செய்முறை:

    பாலை நன்கு காய்ச்சி வைக்கவும்.

    ஆப்பிளை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

    துருவிய ஆப்பிளை வெறும் கடாயில் சூடுபட கிளறவும்… சர்க்கரை, பால் சேர்த்து, குறைவான தீயில் கொதிக்கவிடவும்.

    திக்கான பதம் வந்ததும், பாதாம் துருவல், முந்திரிப் பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

    இதை சூடாகவோ… குளிர வைத்தோ பரிமாறலாம்.

    இப்போது சூப்பரான ஆப்பிள் ரபடி ரெடி.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. வீட்டில் கிருஷ்ணருக்கு படைக்க 7 வகையான நிவேதனங்கள் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    1. அவல் பாயசம்

    தேவையான பொருட்கள் :

    அவல் - ஒரு கப்,
    காய்ச்சிய பால் - ஒரு கப்,
    வெல்லத்தூள் - தேவையான அளவு,
    ஏலக்காய்த்தூள் - சிட்டிகை,
    நெய் - ஒரு டீஸ்பூன்,
    முந்திரி, திராட்சை - தலா 10.

    செய்முறை:

    பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும்.

    அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு உருக்கி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    அதே நெய்யில் அவலை சேர்த்து வறுத்து எடுக்கவும்.

    அதே பாத்திரத்தில் தண்ணீர் சிறிதளவு விட்டு கொதிக்க விடவும். இதனுடன் அவலை சேர்த்து வேக விடவும்.

    பிறகு பால் ,ஏலக்காய்த்தூள், வெல்லக் கரைசல் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

    மேலே வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம்.

    2. இனிப்பு அவல் பிசறல்



    தேவையான பொருட்கள் :


    கெட்டி அவல் - 100 கிராம்,
    ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன்,
    சர்க்கரை - கால் கப்,
    தேங்காய்த் துருவல் - கால் கப்.

    செய்முறை:


    அவலுடன் தண்ணீர் விட்டு அலசி 5 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து எடுக்கவும்.

    பாத்திரத்தில் ஊற வைத்த அவலுடன் ஏலக்காய்த்தூள், சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்து கலக்கவும்.

    3. வெல்ல சீடை:



    தேவையான பொருட்கள் :


    பதப்படுத்திய அரிசி மாவு - ஒரு கப்,
    வறுத்து அரைத்து சலித்த உளுத்த மாவு - ஒரு டீஸ்பூன்,
    வெல்லத்தூள் - அரை கப்,
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
    வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    கறுப்பு எள் - ஒரு டீஸ்பூன்.

    செய்முறை:

    வெறும் வாணலியில் அரிசி மாவை வறுத்தெடுத்து சலிக்கவும்.

    வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும்.

    அதனுடன் ஏலக்காய்த்தூள், எள், அரிசி மாவு, உளுத்த மாவு, வெண்ணெய் சேர்த்து பிசையவும்.

    ஆறிய பின் சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

    வாணலியில் எண்ணெய் காய வைத்து உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    4. உப்பு சீடை:



    தேவையான பொருட்கள் :

    பதப்படுத்திய அரிசி மாவு - ஒரு கப்,
    வெண்ணெய், வறுத்து அரைத்து சலித்த உளுத்த மாவு - 2 டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
    பெருங்காயத்தூள் - சிட்டிகை.

    செய்முறை:

    வெறும் வாணலியில் அரிசி மாவை வறுத்தெடுத்து சலிக்கவும்.

    அரிசி மாவுடன் உளுத்த மாவு, உப்பு, பெருங்காயத்தூள், வெண்ணெய் சேர்த்து பிசறவும்.

    இதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசையவும்.

    பிறகு மாவை சிறிய உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெய் காய விட்டு உருட்டிய சீடைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    5. கோகனட் ரவா லட்டு



    தேவையான பொருட்கள் :

    ரவை, தேங்காய்த் துருவல் - தலா ஒரு கப்,
    சர்க்கரை - ஒன்றரை கப்,
    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
    நெய் - அரை கப்,
    உடைத்த முந்திரி, திராட்சை - தலா 10.

    செய்முறை:


    அடிகனமான வாணலியில் சிறிதளவு நெய் விட்டு உருக்கி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    அதே நெய்யில் ரவை, தேங்காய்த் துருவலை தனித்தனியாக சேர்த்து வறுத்தெடுக்கவும்.

    ஆறியதும் மிக்சியில் ரவையுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து அரைக்கவும்.

    பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து அரைத்தெடுக்கவும்.

    அகலமான பாத்திரத்தில் அரைத்த பொருட்களுடன் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலக்கவும்.

     வாணலியில் நெய் விட்டு சூடாக்கி சிறிது சிறிதாக அரைத்த கலவையுடன் சேர்த்து கலந்து உருண்டைகளாக்கவும்.  

    6. தட்டை



    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - ஒரு கப்,
    உளுத்த மாவு - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
    மிளகுத்தூள், வெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்,
    ஊற வைத்த கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:


    அகலமான பாத்திரத்தில் அரிசி மாவுடன் உளுத்த மாவு, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், வெண்ணெய், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கலக்கவும்.

    அதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.

    பிறகு மாவை சிறிய உருண்டைகளாக்கி தட்டவும்.

    வாணலியில் எண்ணெய் காய வைத்து தட்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.  

    7. வெல்ல திரட்டுப்பால்



    தேவையான பொருட்கள் :

    காய்ச்சாத பால் - ஒரு லிட்டர்,
    வெல்லத்தூள் - கால் கப்,
    ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

    செய்முறை:

    அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

    பிறகு சிறு தீயில் வைத்து கை விடாமல் கிளறி நன்கு சுண்டக் காய்ச்சவும். (ஓரங்களில் படியும் ஏடுகளையும் சேர்த்து கிளறி காய்ச்சவும்).

    அதனுடன் வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும். 

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு குஜராத் மாநிலம் சூரத்தில் 24 காரட் தங்க இழைகளால் மூடப்பட்ட ஸ்வீட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. #RakshaBandhan
    அகமதாபாத்:

    சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்‌ஷா பந்தன் பண்டினை வடமாநிலங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள இனிப்பு கடை ஒன்று வித்தியாசமான அதே வேளையில் பிரம்மாண்டமாக ஒரு ஸ்வீட்டை தயார் செய்துள்ளது. 

    பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில் 24 காரட் தங்க இழைகளால் மூடப்பட்டுள்ள இந்த ஸ்வீட் ஒரு கிலோ 9 ஆயிரம் ரூபாய் மட்டுமே. ‘வழக்கமாக பயன்படுத்தும் சில்வர் இழைகளுக்கு பதிலாக தங்க இழைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் இந்த ஸ்வீட்டை விரும்பி வாங்கிச்செல்கின்றனர்’ என கூறியுள்ளார் கடை உரிமையாளர். 
    ×