search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சி"

    ஜி.டி.பி எனப்படும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 8.2 சதவிகிதம் என கணக்கிடப்பட்டுள்ளது. #GDP
    புதுடெல்லி:

    இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில் 8.2 சதவிகிதமாக உள்ளது என அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 5.59 சதவிகிதம் மட்டுமே ஜிடிபி வளர்ச்சி இருந்தது. அதன்பின் 2017 இறுதி காலாண்டில் 7.7 சதவிகிதமாக உயர்ந்த ஜி.டி.பி தற்போது 8.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

    நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற 2014-ஆம் ஆண்டு முதல் கடந்த நான்காண்டுகளில் மிகவும் அதிகமான ஜி.டி.பி வளர்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. #GDP
    ஜி.எஸ்.டி வரி அறிவித்து ஒராண்டு நிறைவு பெற்ற நிலையில், ஜி.எஸ்.டி வரி விதிப்பால் நாட்டில் வளர்ச்சியும், வெளிப்படைத்தன்மையும் அதிகரித்துள்ளதாக மோடி தெரிவித்துள்ளார். #GSTForNewIndia
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு காலம் நிறைவடைகிறது.

    இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கருத்து பதிவிட்டுள்ளார். ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையால், உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும், தொழில்முனைவோருக்கு எளிமையாக அமைந்துள்ளதாகவும், சிறு குறு தொழிலதிபர்களுக்கு பலனளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



    முன்னதாக, சமீபத்தில் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஒருங்கிணைந்த கூட்டாட்சிக்கான சிறந்த உதாரணமாக ஜி.எஸ்.டி அமைந்துள்ளதாக தெரிவித்திருந்தார். #GSTForNewIndia
    வன்முறைக்கு முடிவு கட்ட வளர்ச்சிதான் ஒரே வழி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். #NarendraModi
    பிலாய்:

    பிரதமர் நரேந்திர மோடி நேற்று சத்தீஷ்கார் மாநிலம் பிலாய்க்கு சென்றார். அங்கு ரூ.22 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கிவைத்தார்.

    இவற்றில், பிலாய் உருக்கு ஆலை விரிவாக்கம், ஐ.ஐ.டி.க்கு அடிக்கல் நாட்டுதல், ஜக்தால்பூர்-ரெய்ப்பூர் இடையிலான புதிய விமான போக்குவரத்து ஆகியவையும் அடங்கும்.

    இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:-

    சத்தீஷ்கார் மாநிலம், முன்பு காடுகளும், பழங்குடியினரும் நிறைந்த மாநிலமாக அறியப்பட்டது. இப்போது, ஸ்மார்ட் சிட்டியாக மாறி இருக்கிறது. பாதை மாறிச்சென்ற இளைஞர்கள், தேசிய நீரோட்டத்தில் இணைந்து வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றி வருகிறார்கள். எந்த வடிவிலான வன்முறைக்கும், சதிக்கும் முடிவு கட்ட வளர்ச்சிதான் ஒரே வழி.

    அதனால்தான், எங்கள் அரசு வளர்ச்சி மூலமாக நம்பிக்கையான சூழ்நிலையை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. வளர்ச்சிக்கு அமைதி, சட்டம்-ஒழுங்கு, அடிப்படை வசதிகள் ஆகியவை முக்கியம்.

    சத்தீஷ்காரில் கிடைக்கும் இரும்புத்தாது, இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கனிமங்கள் மீது இம்மாநில மக்களுக்குத்தான் உரிமை உள்ளது.

    முந்தைய காங்கிரஸ் அரசு, பல இடங்களில் சாலை கூட போடவில்லை. ஆனால், அந்த இடங்களில் எங்கள் அரசு விமான நிலையங்களையே கட்டி உள்ளது. ‘ஹவாய்’ செருப்பு அணிந்தவர் கூட விமானத்தில் பறப்பதை பார்ப்பதுதான் எனது கனவு.

    அதற்காக, சிறு நகரங்களை விமான போக்குவரத்து மூலம் இணைக்கும் ‘உடான்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, மக்கள் ரெயில்களின் ஏ.சி. பெட்டிகளில் பயணிப்பதை விட விமானங்களில் பயணிப்பதையே விரும்புகிறார்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.  #NarendraModi
    புதுவை மக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணிப்பதாக கவர்னர் கிரண்பேடி தனது பிறந்த நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். #governorkiranbedi
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு இன்று 69-வது பிறந்த நாளாகும். இதனையொட்டி ராஜ் நிவாஸ் வளாகத்தில் உள்ள பெருமாள் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் கவர்னர் கிரண்பேடி பங்கேற்று வழிபட்டார்.

    தொடர்ந்து ராஜ்நிவாஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கிரண்பேடி தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் மற்றும் பலரும் கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    தனக்கு வாழ்த்து சொல்ல வந்த சிறுவனை கவர்னர் கிரண்பேடி தனது இருக்கையில் அமர வைத்து உற்சாகப்படுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிறந்த நாள் என்பது நம்மை ஈன்றெடுத்த அன்னையை நினைவு கூரும் தினமாகும். நமக்கு பிறந்த நாள் என்பதை விட அன்னைக்கு மறுபிறவி என்பதே சரி. புதுவை மக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #governorkiranbedi

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்ட கழக வளர்ச்சிக்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சோசலிச தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.
    கோத்தகிரி:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சோசலிச தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் கரு.வெற்றிவேல் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கடந்த 1964-ம் ஆண்டு சிரிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு பணி வழங்கப்பட்டது. மேலும் அவை அரசு தேயிலை தோட்டமாக செயல்பட்டு வந்தன. அதைத்தொடர்ந்து கடந்த 1976-ம் ஆண்டு தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகமாக(டேன்டீ) தனிவாரியம் அமைக்கப்பட்டு, நீலகிரியில் நடுவட்டம், கோவையில் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நலிவுற்ற நிலையில் இருந்த அரசு சின்கோனா தோட்ட பகுதிகளையும் இணைத்து சிறப்பாக இயங்கி வந்தது.

    ஆனால் சமீப காலங்களில் டேன்டீ தொழிலாளர்களுக்கு பணபலன்களை வழங்க முடியாமலும், மாத சம்பளத்தை தொழிலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் வழங்க முடியாமலும் நலிவுற்ற நிலையில் டேன்டீ உள்ளது. இதன் காரணமாக பழுதடைந்த தொழிலாளர் குடியிருப்புகளை பராமரித்தல், டேன்டீ தேயிலை தோட்டங்களில் எரு இடுதல், மருந்து அடித்தல், பராமரிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பதால், டேன்டீ தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

    எனவே டேன்டீயை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை காப்பாற்ற தமிழக அரசு வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் டேன்டீயை புணரமைக்க குறைந்தது ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து உதவவேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    ×