search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டல்"

    • காரில் இருந்த மற்றொருவரும் இறங்கி வந்து கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்தனர்.
    • சம்பவம் சேலம் மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு ரவுண்டானா பகுதியில் ஒரு ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலுக்கு கடந்த 19-ந்தேதி இரவு குடிபோதையில் 2 பேர் சாப்பிட வந்தனர். அவர்கள் அசைவ உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டனர். அதில் ஒருவர் சாப்பிட்டு முடிக்கவும் கடையின் மேசை மீது தலை வைத்து அப்படியே போதையில் மயங்கிவிட்டார்.

    மற்றொருவர் அவர்கள் வந்த காரிலேயே தூங்கிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர் பலமுறை எழுப்பியும் அவர் எழுந்திருக்கவில்லை. தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஓட்டலில் மயங்கியவரை ஒருவழியாக எழுப்பினர்.

    அப்போது கடையில் இருந்து புறப்பட்டு செல்லுங்கள் என உரிமையாளர் கூறினார். அதற்கு காரில் இருந்த மற்றொருவரும் இறங்கி வந்து கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்தனர்.

    இது பற்றி அம்மாப்பேட்டை போலீசாருக்கு ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, அவர்களிடம் விசாரித்தனர். அதில், அவர்கள் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி மற்றும் ஏட்டு செந்தில்குமார் என்பது தெரியவந்தது.

    இந்த ரகளையை அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்டவைகளில் வைரலாக பரவியது.

    இதனிடையே சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் விசாரணை நடத்தி ஓட்டலில் ரகளை செய்த சப்-இன்ஸ்பெக்டர் சிவ சக்தி, ஏட்டு செந்தில்குமார் ஆகிய இருவரையும் மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

    தொடர்ந்து துறை ரீதியான விசாரணையை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்லப் பாண்டியன் நடத்தினார். இந்த விசாரணை அறிக்கையை அவர் நேற்று போலீஸ் சூப்பிரண்டிடம் சமர்பித்தார். அந்த அறிக்கையை சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரிக்கு போலீஸ் சூப்பிரண்டு அனுப்பி வைத்தார்.

    தொடர்ந்து அந்த அறிக்கையின் அடிப்படையில் துறைரீதியான நடவ டிக்கையாக சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி, ஏட்டு செந்தில்குமாரை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் உத்தரவிட்டார். இந்த சம்பவம் சேலம் மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஓட்டலுக்கு மாநகராட்சி சார்பில் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • சாலையோர உணவகங்களையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிரபல உணவகத்தில் விற்பனை ஆகாத உணவை பதப்படுத்தி மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலருக்கு புகார் வந்தது.

    இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து அந்த உணவகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது விற்பனை ஆகாத உணவை மீண்டும் பதப்படுத்தி விற்பனை செய்ய வைத்திருந்ததும், மேலும் ஓட்டலை உரிய பராமரிப்பு இல்லாமல் அசுத்தமாகவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த ஓட்டலுக்கு மாநகராட்சி சார்பில் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு நாள் உணவு விற்பனைக்கு தடை விதித்து உணவகத்தை தூய்மைப்படுத்திய பின்னர் மீண்டும் விற்பனையை தொடங்க உணவக உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இதேபோல் சுகாதார அதிகாரிகள், உரிய அனுமதியின்றியும் சுகாதார மில்லாமலும் செயல்படும் சாலையோர உணவகங்களையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • 5 வருட ஓப்பந்த அடிப்படையில் ஓட்டல் நடத்தி வருகிறார்
    • குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை அருகே உள்ள செறுவாரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் அன்சாத். இவர் அந்த பகுதியில் கடந்த 3 வருடங்களாக கனகராஜ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் 5 வருட ஓப்பந்த அடிப்படையில் ஓட்டல் நடத்தி வருகிறார். தகராறு

    இந்த நிலையில் 3 வருடங்கள் முடிந்ததும் கனகராஜ், கூடுதல் பணம் வேண்டும் இல்லை யென்றால் ஓட்டலை காலி செய்ய வேண்டும் என்று அன்சாத்திடம் கூறினாராம். இது தொடர்பாக அவர் களுக்குள் தகராறு ஏற்பட்டு களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டது. மேலும் குழித்துறை கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், அன்சாத் 5 வருடம் கடை நடத்தலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அன்சாத் ஓட்டலை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று ஒரு கும்பல் ஓட்டலுக்குள் திடீரென புகுந்துள்ளது. அவர்கள் அங்கிருந்த பொருட்களை சூறை யாடியதோடு, உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதலும் நடத்தியது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் திரண்டதால் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்த தாக்குதலில் ஓட்டல் ஊழியர் அப்துல் சலாம் படுகாயமடைந்தார். அவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்டது யார்? தாக்கு தலுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெங்கடேஷ் (வயது 45). இவர் சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார்.
    • அப்போது காய்கறி வெட்டும் எந்திரத்தை ஆன் செய்தபோது திடீரென அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.

    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருணைபள்ளி உருளை தொட்டி பகுதியைச் சேர்ந்த வர் வெங்கடேஷ் (வயது 45). இவர் சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இன்று காலை காய்கறி வெட்டும் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அப்போது காய்கறி வெட்டும் எந்திரத்தை ஆன் செய்தபோது திடீரென அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதனை பார்த்த உடன் வேலை பார்த்தவர்கள் அதிர்ச்சி யடைந்தனர். பின்னர் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அரசு ஆஸ்பத்தி ரியில் பரிசோதித்த டாக்டர் கள் , அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த உறவினர்கள் சேலம் விரைந்துள்ளனர்.

    இந்த சம்பவம் ஓட்டல் ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து சேலம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பராமரிப்பு பணி நடப்பதால் 4 நாட்களாக ஓட்டலுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் அடுத்துள்ள ஸ்ரீரெங்கராஜ புரம் கருப்பூர் புதுத்தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (வயது 47). இவர் பந்தநல்லூர் மெயின் சாலை அரச மரத்தடி பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஓட்டலில் தொழிலா ளியாக வேலை செய்து வந்தார். பராமரிப்பு பணி நடப்பதால் 4 நாட்களாக ஓட்டலுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஜாகிர் உசேன் சம்பவதன்று ஓட்டலுக்கு வந்துள்ளார். அப்போது அங்கு சுவிட்ச் போர்டு பிளக்கில் இருந்த ஒயரை எடுத்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட ஜாகீர்உசேன் உடல்நிலை பாதிக்கப்ப ட்டார். அவரை குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர்கள், ஜாகீர் உசேன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைய டுத்து ஜாகிர் உசேனின் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலையில் பலத்த படுகாயமடைந்த சுப்ரமணி பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளார்.
    • கும்பல் தாக்கும் காட்சிகள் அங்கு பொருந்தபட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி பஸ் நிலைய வளாகத்தில் ஓட்டல்கடை நடத்தி வருபவர் சுப்பிரமணி. இவர் வழக்கம் போல் உணவகத்தில் இருந்தபோது குடிபோதையில் வந்த 3 வாலிபர்கள் அநாகரிகமாக பேசிக்கொண்டே உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் . அப்போது திடீரென ஒரு வாலிபர் ஆம்லேட் கேட்டால் உடனே தரமுடியாதா என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கடை உரிமையாளர் ஆம்லேட் ஆர்டர் சொல்லவே இல்லை என தெரிவித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் 3 பேரும் கடையில் இருந்த பொருட்களை வீசி எறிந்தும், சுப்ரமணியை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியபடியே அடுப்பில் எரிந்து கொண்டிருந்த கட்டையால் தாக்கினர். இதைப்பார்த்ததும் சுப்ரமணியின் மகன் தினேஷ் தடுக்க வந்தார். அவரையும் இந்த கும்பல் தாக்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த சுப்ரமணியின் மனைவி லட்சுமி, மகன் தினேஷ் ஆகியோரையும் அந்த கும்பல் தாக்கும் காட்சிகள் அங்கு பொருந்தபட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது.

    இதில் தலையில் பலத்த படுகாயமடைந்த சுப்ரமணி பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அடிதடியில் ஈடுபட்ட அசோக், நவீன், சீனிவாசன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனியில் ஓட்டலில் ஆம்லேட் கேட்டு அடிதடியில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • டிப்-டாப் வாலிபர் சிறுவனை தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
    • தப்பி சென்ற வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    கே.கே. நகர் பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் மோகன்ராஜ். இவரது கடைக்கு நேற்று இரவு வந்த "டிப் டாப்" வாலிபர் ஒருவர் ரூ.760-க்கு பரோட்டா, பிரைட் ரைஸ், சிக்கன் உள்ளிட்ட டிபன் வகைகளை பார்சல் வாங்கினார் அப்போது பணத்தை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டதாக கூறிய வாலிபர் கடை ஊழியரை அனுப்பி வைத்தால் பணம் கொடுத்து அனுப்புகிறேன் என்று தெரிவித்தார்.

    இதையடுத்து மோகன் ராஜ், கடையில் வேலை பார்த்து வரும் சிறுவனை அனுப்பி வைத்தார். டிப்-டாப் வாலிபர் சிறுவனை தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

    கடையின் அருகில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவிற்குள் சென்று ஒரு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திய வாலிபர் ஓட்டல் ஊழியரின் செல்போனை கேட்டு வாங்கினார்.

    மேலும் 2-வது தளத்தில் உள்ள நண்பரிடம் கூறி விட்டேன். போய் பணத்தை வாங்கி கொண்டு வா" என்று கூறி அனுப்பி வைத்தார். இதை உண்மை என்று நம்பிய ஓட்டல் ஊழியர் அந்த வீட்டின மேல் தளத்திற்கு சென்றபோது அங்கு யாரும் இல்லை.

    அவர் கீழே இறங்கி வருவதற்குள் டிப்-டாப் வாலிபர் அங்கிருந்து செல்போனுடன் தப்பி சென்றுவிட்டார். சினிமா பாணியில் அவர் ஏமாற்றி டிபன் வாங்கி சென்று இருப்பது தெரிந்தது.

    டிபன் பார்சல் வாங்கிக் கொண்டு நூதனமான முறையில் செல்போனையும் பறித்து தப்பி சென்ற வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முகமது உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.
    • வாடிக்கையாளரிடம் தவறு இருந்தால் திருத்திக் கொள்வதாக கடிதம் ஒன்றையும் உணவகம் எழுதிக் கொடுத்தது.

    மதுரை:

    மதுரை சோலையழகு புரம் பகுதியை சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி நேற்று மதிய உணவு சாப்பிடுவதற்காக ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பாடு பார்சல் வாங்கி சென்றார். இந்நிலையில் வீட்டிற்கு சென்று சாப்பாடு பார்சலை பிரித்து பார்த்தபோது உணவில் பாதி உடைந்த ஒரு பிளேடு துண்டு ஒன்று இருந்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு அவர் சென்றார். அங்கிருந்த ஊழியரிடம் உணவில் பிளேடு துண்டு இருந்தது குறித்து கேட்டுள்ளார். அப்போது அந்த ஊழியர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் முகமது உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முகமது மனைவி ஆர்டர் செய்த சாதத்தை சோதனை செய்த தோடு, உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெள்ளை சாதம் எதுவும் அங்கு வைக்கப்படவில்லை.

    மேலும் விசாரணை நடத்தியதில் பணியாளர்களுக்கு மருத்துவசான்று பெறாமல், தலையுறை அணியாமல் உணவுகளை சமைத்து வந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளரிடம் தவறு இருந்தால் திருத்திக் கொள்வதாக கடிதம் ஒன்றையும் உணவகம் எழுதிக் கொடுத்தது.

    மேலும் உணவுப் பாதுகாப்புத்துறை சுட்டிக் காட்டிய புகார்கள் குறித்து உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    • சங்கரன்கோவில் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தங்கள் வேலையை சரியாக செய்யவில்லை.
    • தென்காசி மாவட்டத்திலும் பொது மக்களின் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நெல்லை-ராஜபாளையம் சாலையில் ஒரு ஓட்டல் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் உணவு சாப்பிட்டு வருகின்றனர். நேற்று சங்கரன்கோவிலை சேர்ந்த ஒருவர் அங்கு சிக்கன் வாங்கி சென்றுள்ளார். பின்னர் அதனை உண்ணும் போது சிக்கன் கிரேவி உள்ளே பல்லி கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சங்கரன்கோவில் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தங்கள் வேலையை சரியாக செய்யவில்லை. உணவு பாதுகாப்பு அதிகாரியை தொடர்பு கொண்டால் மாவட்டம் முழுவதும் நான் சோதனைக்கு செல்ல வேண்டி இருப்பதால் தனக்கு நேரமில்லை என கூறுகிறார். எனவே சங்கரன்கோவில் நகருக்கு என தனி உணவு பாதுகாப்பு அதிகாரி நியமிக்க வேண்டும்.

    மேலும் பிரபல உணவங்களுக்கு அதிகாரி செல்லும் தகவல் முன்கூட்டியே உணவகத்திற்கு தெரிந்து விடுவதால் எந்தவித சோதனையிலும் அவர்கள் பிடிபடுவதில்லை. தற்பொழுது நெல்லை மாவட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் தரமற்ற, கலப்பட உணவு பற்றிய புகார்களுக்கு புகார் செய்ய புதிய இணையதளம் மற்றும் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளார். இதன் மூலம் புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதேபோன்று தென்காசி மாவட்டத்திலும் பொது மக்களின் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.
    • உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வாழை இலைகளின் பார்சல் செய்து கொடுத்த பல ஓட்டல்களில் தற்போது பிளாஸ்டிக் பாக்ஸ்களில் உணவுப்பொருட்களை அடைத்து விற்பனை செய்கின்றனர்.

    இதேபோல் சாம்பார் உள்ளிட்ட குழம்பு மற்றும் டீ, காபி ஆகியவையும் பிளாஸ்டிக் கவர்களில் தான் வழங்கப்படுகிறது. பிளாஸ்டிக் மனிதர்க ளுக்கும் கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆண்டுதோறும் விழிப்புணர்வு பிரசாரங் களை மேற்கொள்ளும் நிலையில் எங்கும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    பல ஓட்டல்களில் விலை பட்டியல் வைக்கப்படா ததால், அவைகளை வாங்கி சாப்பிடும் பொதுமக்கள் அதிக செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மேலும் பல ஓட்டல்களில் நல்ல குடிநீரும் கொடுப்ப தில்லை. கேன் தண்ணீர் வழங்காமல் ஆர்.ஓ. வாட்டர் என்று எதையோ கொடுக்கின்றனர். பாட்டில் தண்ணீருக்கும் விலை வைத்து தனியாக பணம் வாங்கிக் கொள்கின்றனர்.

    எனவே ஓட்டலில் சாப்பிடும் மக்களுக்கு நல்ல தண்ணீர் வழங்குவதில்லை. அவைகளை கவனிக்க உணவு பாதுகாப்பு அதிகாரி கள் இருந்த போதும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்யப்பட்டது,
    • பெண்கள் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    கே.கே.நகர் 3-வது கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாலவைரவன் (40). ஓட்டல் நடத்தி வருகிறார். இவரிடம் அறிமுகமான கார்த்திகை ராஜன், கீதா, சாந்தி, ராஜசேகரன் ஆகிய 4 பேரும், தாங்கள் பழைய இரும்பு வியாபாரம் செய்வதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறினர்.

    இதை நம்பிய பாலவைரவன் ரூ.15 லட்சம் முதலீடு செய்தார். அதன்பிறகு லாபத்தில் பங்கு தரவில்லை, முதலீடு செய்த பணத்தையும் திருப்பி தரவில்லை. இது குறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பெண்கள் உள்பட 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கழிவுநீர் சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள நீரோடையில் விடப்படுவதாக புகார்எழுந்துள்ளது.
    • பொங்கலூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சியிடம் மனு கொடுத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம்அருகே மாதப்பூரில் கோவை- திருச்சி தேசிய நெடு ஞ்சாலை, சிங்கனூர் பிரிவு அருகே தனியார் ஓட்டல் ஒன்றுசெயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள நீரோ டையில் விடப்படுவதாக புகார்எழுந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் அருகில் உள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகள் கழிவு நீரை ஓடையில் விடும் ஓட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொங்கலூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சியிடம்மனு கொடுத்தனர்.அந்த மனுவில்அவர்கள் கூறியிருப்பதாவது:- ஓட்டலில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு குழாய்அமைத்து நீரோடையில் கழிவுநீர் திறந்து விடப்படுகிறது. இந்தகழிவுநீரானது நீரோடையில் கட்டப்ப ட்டுள்ள தடுப்பணைகளில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நிலத்தடி நீர்ம ட்டமும் பாதிக்கப்படுகிறது. அருகில் உள்ள விவசாய நிலங்களில்உள்ள ஆழ்துளை கிணறுகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்ஆழ்துளை குழாயில் இருந்து வரும் குடிநீரை மக்கள் குடிக்க முடியவில்லை. துர்நாற்றத்தை கட்டுப்படுத்த ஓட்டல் நிர்வாகம் ஒருவித ரசாயனத்தை பயன்படு த்துவதாக தெரிகிறது. இந்த ரசாயனம் கலந்த நீர் அருகில் உள்ள கிணறுகளில் கலந்து அந்த நீரை குடிக்கும் மாடுகள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு வளர்த்து வந்த மீன்களும் இறந்து விட்டது. ஓட்டல் நிர்வாகம் ஏற்கனவே அந்த பகுதியில் உள்ளஆழ்துளை கிணறுகளிலும் கழிவுநீரை கலந்து விடுவதாக தெரி கிறது. சுத்தகரிக்கப்படாத இந்த கழிவுநீரை அப்படியே நீரோடையில் விடுவதால் பெரும்சுற்றுச்சூழல் மாசுபாடுஏற்பட்டு வருகிறது.

    நீரோடைகளில் கழிவு நீரை கலக்கக்கூடாது என நீதிமன்ற உத்தரவு இருந்தும்அதனை மதிக்காமல் செயல்படும் ஓட்டல் நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதனால் பாதிக்கப்ப ட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையும் பெற்று தர வேண்டும். இந்த சட்டவிரோத செயலை உடனடியாக தடுக்க ஒன்றிய நிர்வாகமும்,அரசு அதிகாரிகளும் முன்வர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில்தெரிவித்து ள்ளனர்.

    ×