search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 179026"

    • 3 நாள் தொடர் விடுமுறை மதுரை ரெயில்வேக்கு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.
    • ரூ.15லட்சத்து18,946 என்ற அளவில் வருமானம், முன்பதிவில்லாத பயணச்சீட்டு விற்பனை மூலம் கிடைத்து உள்ளது.

    மதுரை

    சுதந்திர தினத்தை முன்னிட்டு 3 நாள் விடுமுறை என்பதால் ரெயிலில் பெரும்பாலானோர் பயணம் செய்தனர். அதிலும் குறிப்பாக மதுரை ரெயில் நிலையத்தில் முன்பதிவு இல்லாத பயண சீட்டு அதிகம் விற்பனையாகி உள்ளன. பொதுவாக மதுரை ரெயில் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.8.5 லட்சம் என்ற அளவுக்கு முன்பதிவில்லாத பயணச் சீட்டுகள் விற்பனை ஆகும்.

    ஆனால் சுதந்திர தின விடுமுறை காரணமாக சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் முறையே ரூ. 16 லட்சத்து 50,144, ரூ.15லட்சத்து01 734, ரூ.15லட்சத்து18,946 என்ற அளவில் வருமானம், முன்பதிவில்லாத பயணச்சீட்டு விற்பனை மூலம் கிடைத்து உள்ளது.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • 25.6 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரித்து மதுரை ரெயில்வே சாதனை படைத்துள்ளது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் பசுமை மின்சார பயன்பாட்டுக்காக, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே 5 காற்றாலைகளை நிறுவி உள்ளது. 2019-ம் ஆண்டு ஜனவரி 8-ந் தேதி, ரூ.74 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள இந்த காற்றாலைகள் தலா 2.1 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் உடையவை.

    இந்த காற்றாலைகளில் இருந்து நடப்பாண்டில் 25.686 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரூ.14.54 கோடி மின்சார செலவு குறைந்துள்ளது.

    கடந்த 3 1/2 ஆண்டுகளாக ஜூலை மாதம் வரை, ஒட்டுமொத்தமாக 91.564 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.48.54 கோடி சேமிக்கப்பட்டு உள்ளது.

    இந்த காற்றாலைகளில் இருந்து ஜூலை 13-ந் தேதி முதல் முறையாக அதிக அளவில் 2,61,412 கிலோ வாட் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார ரெயில்கள் இயக்குவதற்காக, கடந்த ஆண்டு 1.86 சதவீத மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள் எம்.பி.க்கள் பயணம் செய்த செலவு ரூ.26.92 கோடி.
    • தற்போதைய எம்.பி.க்களின் பயண செலவு ரூ.35.21 கோடி என கூறப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி :

    பாராளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.) ரெயில்களில் முதல் வகுப்பு ஏ.சி. வகுப்பில் இலவசமாக பயணம் செய்யலாம். அவர்களின் துணையும் சில நிபந்தனைகளின் பேரில் இந்த இலவசத்தை பெற முடியும். இதைப்போல முன்னாள் எம்.பி.க்கள் 2-ம் வகுப்பு ஏ.சி. வகுப்பில் தனது துணையுடனோ அல்லது முதல் வகுப்பு ஏ.சி. வகுப்பில் தனிமையிலோ இலவச பயணத்தை மேற்கொள்ளலாம்.

    இதற்கான கட்டணத்தை மத்திய அரசு செலுத்தும். ரெயில்வேயின் கட்டணம் மற்றும் கணக்குகள் துறை இதற்கான ரசீதை மக்களவை செயலகத்துக்கு அனுப்பி வைக்கிறது. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னாள் மற்றும் இந்நாள் எம்.பி.க்கள் பயணம் செய்த வகையில் மத்திய அரசு செலவழித்த தொகை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மக்களவை செயலகத்துக்கு மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் கடிதம் அனுப்பினார்.

    இதற்கு பதிலளித்துள்ள மக்களவை செயலகம், கடந்த 5 ஆண்டுகளில் மேற்படி எம்.பி.க்களின் ரெயில் பயண செலவு ரூ.62 கோடி என பதில் அளித்து உள்ளது. அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள் எம்.பி.க்கள் பயணம் செய்த செலவு ரூ.26.92 கோடி எனவும், தற்போதைய எம்.பி.க்களின் பயண செலவு ரூ.35.21 கோடி எனவும் கூறப்பட்டு உள்ளது.

    அதேநேரம் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 2020-21-ம் ஆண்டில் இந்த செலவு முறையே ரூ.1.18 கோடி மற்றும் ரூ.1.29 கோடி எனவும் மக்களவை செயலகம் தெரிவித்து உள்ளது.

    • அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி பேசினர்.
    • ரெயில்வேயில் விரைவில் ஒப்பந்த அடிப்படையில் ஆள் எடுக்க உள்ளதாக பொய்யான பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பழைய கட்டிடம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் சுப்பையா முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் தமிழரசன், சிவபெருமாள், இன்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அக்னிபத் திட்டத்தினால் இளைஞர்களின் கனவு தகர்ந்து போய்விட்டது. எனவே இந்த திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி பேசினர்.

    இதற்கிடையே அக்னி பத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சந்திப்பு ரெயில்வே புதிய கட்டிடம் அருகே பிட் லைனில் தட்சின ரெயில்வே கார்மிக் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ரெயில்வே துறையின் விதிக்கு எதிராக இளைஞர்களை திரட்டி போராட்டம் நடத்துவதாக கூறி அக்னிபத் திட்ட எதிர்ப்பாளர்களை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    மேலும் ராணுவத்தில் தற்போது ஆட்கள் எடுப்பதை போல ரெயில்வேயில் விரைவில் ஒப்பந்த அடிப்படையில் ஆள் எடுக்க உள்ளதாக பொய்யான பிரச்சாரங்களை சிலர் மேற்கொண்டு வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் எனவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    இதில் தென் மண்டல துணை பொதுச்செயலாளர் மணி, கோட்ட கூடுதல் செயலாளர் அருண்குமார், கிளை பொறுப்பாளர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ரெயில்வே ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
    • சிறப்பாக பணிபுரிந்த உதவி சிக்னல் தொலை தொடர்பு பொறியாளர் அசோக் உட்பட 46 பேருக்கு விருது வழங்கப்பட்டது.

    மதுரை

    மதுரையில் ெரயில்வே கோட்ட வார விழா நடந்தது. இதில் தலைமை முதன்மை சிக்னல் தொலை தொடர்பு பொறியாளர் மதுசுதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது சிறப்பாக பணிபுரிந்த உதவி சிக்னல் தொலை தொடர்பு பொறியாளர் அசோக் உட்பட 46 பேருக்கு விருது வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கோட்ட ெரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், கூடுதல் கோட்ட மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு, முதுநிலை கோட்ட சிக்னல் தொலை தொடர்பு என்ஜினீ யர்கள் ராம்பிரசாத், குகுலோத் யுகேந்தர் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • கூட்செட் சாலையில் உள்ள ரெயில்வே பணிமனையில் பணிமனை ஊழியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்
    • தனியார் ரெயிலில் ஆட்கள் போதிய அளவிற்கு இல்லாமல் இயக்கப்பட்டு வருகிறது.

    கோவை:

    கோவை கூட்செட் சாலையில் உள்ள ரெயில்வே பணிமனையில் பணிமனை ஊழியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அடிப்படை வசதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதில் கோவை கோட்ட கிளை செயலாளர் ஜோன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

    இதுகுறித்து கோட்ட கிளை செயலாளர் ஜோன் கூறும்போது, ரெயில்வே பணிமனையில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உயர் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் ரெயிலில் ஆட்கள் போதிய அளவிற்கு இல்லாமல் இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பணிமனையில் அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை செய்து தர வலியுறுத்தியுளளோம். இது சம்பந்தமாக ஏற்கனவே உயர் அலுவலர்களுக்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தங்களது கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்றார்.

    • ஈரோடு மாநகரில் காளைமாடு சிலை அருகில் உள்ள ரெயில்வே நுழைவு பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் மாற்று பாதை வழியாக செல்ல கட்டாயம் அனுமதி இல்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மாநகரில் காளைமாடு சிலை அருகில் உள்ள ரெயில்வே நுழைவு பாலம் மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் நாளை (19-ந் தேதி) முதல் ரெயில்வே நுழைவு பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதில் கரூர், மூலனூர், வெள்ளகோவில், தாராபுரம் மற்றும் காங்கேயத்திலிருந்து ஈரோடு வரும் அனைத்து பஸ்கள் மட்டும் அண்ணமார் பெட்ரோல் பங்க் வந்தடைந்து நாடார் மேட்டிலிருந்து இடது புறமாக திரும்பி ரீட்டா பள்ளி, சாஸ்திரி நகர் மற்றும் ரெயில்வே மேம்பாலம் வழியாக வந்து சென்னிமலை ரோடு வழியாக மாநகர் பகுதியை அடையலாம்.

    இதேபோல் ஈரோட்டில் இருந்து கரூர், மூலனூர், வெள்ளகோவில், தாராபுரம் மற்றும் காங்கேயத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் காளைமாடு சிலை, லோட்டஸ் ரவுண்டானா வழியாக செல்லலாம்.

    அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் லாரிகளும் ரிங்ரோடு வழியாக முத்துகவுண்டன் பாளையம், ஆணைக்கல்பாளையம், ரங்கம்பாளையம் ஆர்ட்ஸ் காலேஜ் வழியாக திண்டல் வந்தடைந்து மாநகருக்குள் செல்லலாம்.

    இதேபோல் அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் மாற்று பாதையான அண்ணமார் பெட்ரோல் பங்க், நாடார் மேடு, சாஸ்திரி நகர் வழியாக செல்ல கட்டாயம் அனுமதி இல்லை.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • ரெயில் நிலையங்களில் ரெயில்டெல் வழங்கும் 30 நிமிட இலவச வைஃபையில் 350 எம்.பி.க்கள் ஆபாச படங்கள் டவுன்லோட் செய்யவே பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளன.
    • விபிஎன் மற்றும் இன்னும் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படாத சில இணையதளங்கள் மூலம் மக்கள் ஆபாச படங்களை பார்க்கின்றனர்.

    புது டெல்லி:

    ரெயில் பயணிகளை டிஜிட்டல் முறையுடன் இணைப்பதற்காக இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் வைஃபை வசதி அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 2016ஆம் ஆண்டில் மும்பையில் முதன்முதலாக வைஃபை சேவை தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு ரெயில் நிலையங்களில் வைஃபை அமைக்கப்பட்டு இதுவரையில் சுமார் 6,100 ரெயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த வைஃபை சேவை பெரும்பாலும் ஆபாச வீடியோக்களை பார்க்கவும், ஆபாச வீடியோ டவுன்லோடு செய்யவும் பயன்படுத்தப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    தனியார் பத்திரிகை ஒன்று நடத்திய ஆய்வில் செகந்திராபாத் மற்றும் விஜயவாடா ரெயில் நிலையங்களில்தான் அதிகபட்சமாக ஆபாச வீடியோக்கள் டவுன்லோடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஐதராபாத் மற்றும் திருப்பதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    ரெயில் நிலையங்களுக்கு இணைய சேவை வழங்கும் ரெயில்டெல்லின் தகவலின்படி, செகந்திராபாத் மற்றும் விஜயவாடாவில் உள்ள ரெயில் நிலையங்களில் பயன்படுத்தப்படும் வைஃபையில் 35% ஆபாசப் படங்கள் டவுன்லோடு செய்யவே பயன்பட்டு வருவதாகதெரியவந்துள்ளது. அந்த ரெயில் நிலையங்களில் ரெயில்டெல் வழங்கும் 30 நிமிட இலவச வைஃபையில் 350 எம்.பி.க்கள் ஆபாச படங்கள் டவுன்லோட் செய்யவே பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளன.

    இதுகுறித்து ரெயில் டெல் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "கணிசமான எண்ணிக்கையிலான வைஃபை சேவைகள் ஆபாச வீடியோ டவுன் லோடு செய்யவே பயன்படுத்தப்படுகின்றன. நூற்றுக்கணக்கான ஆபாச இணையதளங்களை அணுக முடியாத நிலையில், விபிஎன் மற்றும் இன்னும் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படாத சில இணையதளங்கள் மூலம் மக்கள் ஆபாச படங்களை பார்க்கின்றனர்" என்று கூறியுள்ளார்.

    பாகிஸ்தானில் சமீபத்தில் பதவியேற்ற புதிய ரெயில்வே மந்திரி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து ரெயில்வே அதிகாரி ஒருவர் 730 நாட்கள் லீவு கேட்டு அனுப்பிய கடிதம் வைரலாக பரவிவருகிறது. #PakistanRailways
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான புதிய அரசு சமீபத்தில் பதவியேற்றது. ஷாகித் ரஷித் அஹ்மெத் ரெயில்வே துறை மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், அந்நாட்டு ரெயில்வே அமைச்சகத்தில் தலைமை வணிக மேலாளராக உள்ள முகம்மது ஹானிப் குல் புதிய மந்திரி மீது குற்றம் சாட்டி 730 லீவு கேட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

    ரெயில்வே துறை செயலாளருக்கு ஹானிப் குல் எழுதியுள்ள கடிதத்தில் ‘புதிய மந்திரி துறை பற்றி எந்த விபரம் தெரியாதவராகவும், அநாகரிகமாக நடந்து கொள்வதால், பாகிஸ்தானின் குடிமைப்பணி அதிகாரியான என்னால் அவருக்கு கீழ் வேலை பார்க்க இயலாது. எனவே, எனக்கு 730 நாட்கள் விடுப்பு வழங்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

    இந்த கடிதம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. எனினும், அவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? என்ற விபரங்கள் வெளியாகவில்லை.
    ரெயில்கள் தாமதமானால் பயணிகள் வசதிக்காக இழப்பு நேரத்தை சரிகட்ட தற்போதைய வேகத்தை விட கூடுதல் வேகத்தில் ரெயில்களை இயக்க எஞ்சின் டிரைவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. #Railways
    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய போக்குவரத்து சேவைகளில் ஒன்றான இந்திய ரெயில்வே நாளொன்றுக்கு சராசரியாக 2.5 கோடி பயணிகளை கையாளுகிறது. இது ஆஸ்திரேலியா நாட்டின் மக்கள் தொகைக்கு சமமான ஒன்றாகும். இந்நிலையில், கடந்த ஓராண்டில் 30 சதவிகித ரெயில்கள் தாமதமாக வந்துள்ளன.

    ரெயில்கள் தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக கூறப்பட்டாலும், பயணிகள் இந்த தாமதத்தால் பெரிதும் அவதிப்படுகின்றனர். சங்கிலித்தொடர் போல இந்த தாமதம் அவர்களின் திட்டங்களிலும் இடையூறை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், ஒரு ரெயில் தாமதமானால் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட கூடுதல் வேகத்தில் அந்த ரெயிலை இயக்க எஞ்சின் டிரைவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    ஒரு ரெயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 130 கி.மீ என எடுத்துக்கொண்டால், அந்த ரெயில் சராசரியாக 80 முதல் 90 கி.மீ வேகத்தில் இயங்கும். இது போக, குறிப்பிட்ட வழித்தடத்தில் ரெயில்கள் இந்த வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்ற விதிகளும் இருக்கும். 

    அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட கூடுதல் வேகத்தில் ரெயிலை இயக்கினால் தண்டனை என்ற நிலை இருந்ததால், எஞ்சின் டிரைவர்கள் அனுமதிக்கப்பட்ட வேகத்தை கூட நெருங்காமலே ரெயிலை ஓட்டி வந்தனர். 

    தற்போது, தாமதமாகும் ரெயில்களின் இழப்பு நேரத்தை சரிகட்ட அனுமதிக்கப்பட்ட வேகத்தை நெருங்க எஞ்சின் டிரைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதாவது, ஒரு ரெயிலின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வேகம் 110 கி.மீ என்றால் 105 கி.மீ வேகம் வரை தேவைக்கேற்ப செல்லலாம்.

    இந்த புதிய நடைமுறை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக ரெயில்வே தெரிவித்துள்ளது. 
    செங்கல்பட்டு - தாம்பரம் இடையே இன்று மாலை வரை மின்சார ரெயில்கள் இயங்காது என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    செங்கல்பட்டு - தாம்பரம் இடையே உள்ள வண்டலூர் மற்றும் கூடுவாஞ்சேரி வழித்தடத்தில் பாலம் கட்டும் பணி நடப்பதால் காலை 8.25 மணி முதல் மாலை 6.40 மணி வரை 10 மணி நேரம் மின்சார ரெயில்கள் இயங்காது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 

    மாலைக்கு பின்னர் வழக்கமான சேவை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்திய ரெயில்வே குறித்து தவறான தகவலை பரப்பியதற்காக ரெயில்வேயிடம் பாலிவுட் நடிகை ஷாபனா ஆஸ்மி மன்னிப்பு கேட்டுள்ளார். #ShabanaAzmi
    புதுடெல்லி:

    பாலிவுட் நடிகையும், சமூக சேவைகியுமான ஷாபனா ஆஸ்மி நேற்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் மூன்று பேர் மிகவும் அழுக்கான நீரில் பாத்திரங்களை கழுவி கொண்டிருந்தனர். 

    அவர்கள் ரெயில்வே ஊழியர்கள் எனவும், அந்த வீடியோவை ரெயில்வே துறை மந்திரி பியூஸ் கோயல் கவனத்தை ஈர்க்கும் வகையில் 'டாக்' செய்திருந்தார். 67 ஆயிரம் பேர் பார்வையிட்டு சுமார் ஆயிரம் பேர் ரீடுவிட் செய்த அந்த வீடியோ வைரலாக பரவியது.

    அந்த வீடியோ பார்த்து அதற்கு விளக்கம் அளித்த ரெயில்வே துறை மந்திரி, 'இந்த வீடியோவில் இருப்பது மலேசியாவில் உள்ள ஒரு உணவகம். அங்குள்ள ஊழியர்கள் அசுத்தமான நீரில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருக்கின்றனர்' என குறிப்பிட்டிருந்தார்.

    இதனை கண்ட ஆஸ்மி உடனடியாக ரெயில்வே துறையிடம் மன்னிப்பு கேட்டார். அதில், இது குறித்து விளக்கம் அளித்ததற்கு நன்றி. எனது மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்” என டுவிட் செய்தார்.

    ஷாபனா பாலிவுட் நடிகையாக மட்டுமல்லமால் பல சமூக சேவைகளையும் புரிந்துள்ளார். 1989-ம் ஆண்டு முதல் தேசிய ஒருமைப்பாட்டு குழுவின் உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும், 1998-ம் ஆண்டு இந்தியாவின் நல்லெண்ண தூதராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ShabanaAzmi

    ×