search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுமுறை"

    • விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல கூட்டம் அலைமோதியது
    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன் பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமானோர் குவிந்திருந்தனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் பார்வையிட்டு வந்தனர். திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்யும் போதும் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் கடற்கரையில் இருந்த படியும் செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர்.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, வட்டக் கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • பள்ளி, கல்லூரிகளுக்கு 11-ந் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என நவாஸ்கனி எம்.பி.கோரிக்கை வைத்துள்ளார்.
    • வருகிற 10-ந் தேதி இஸ்லாமியர்கள் பக்ரீத் பெருநாள் எனும் தியாகத் திருநாளைக் கொண்டாட உள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் எம்.பி.யும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவருமான நவாஸ்கனிமுதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விடுத்துள்ள கோரிக்கை கூறியிருப்பதாவது:-

    வருகிற 10-ந் தேதி இஸ்லாமியர்கள் பக்ரீத் பெருநாள் எனும் தியாகத் திருநாளைக் கொண்டாட உள்ளனர். அன்று பெரும்பாலானோர் வெளி ஊர்களுக்கும், சொந்த ஊர்களுக்கும் சென்று பண்டிகையை கொண்டாடுபவர்களாக இருக்கின்றனர்.

    வெளியூர்களுக்கு செல்பவர்கள் திரும்பும் வகையில் மறுநாளான 11-ந் தேதி அன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளித்தால் பெற்றோர்களும், மாணவர்களும் ஊர் திரும்புவதற்கு வசதியாக அமையும். பக்ரீத் பெருநாள் ஞாயிற்றுக்கிழமை வருவதால் மறு தினம் திங்கள்கிழமையும் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளிக்க முதல்-அமைச்சர் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 9-ந் தேதி ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
    • விடுமுறை வழங்காத பட்சத்தில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி, குடிமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் வருகிற 9-ந் தேதி ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி அவினாசி ஒன்றியத்தில் உப்பிலிபாளையம், ராமநாதபுரம் 16-வது வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், அய்யம்பாளையம் 6-வது வார்டு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், பல்லடம் ஒன்றியத்தில் இச்சிப்பட்டி 1-வது வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊத்துக்குளி ஒன்றியத்தில் இச்சிப்பாளையம் ஊராட்சி தலைவர், குடிமங்கலம் ஒன்றியம் குடிமங்கலம் 1-வது வார்டு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

    இடைத்தேர்தல் நடக்கும் கிராம ஊராட்சி பகுதிகளுக்கு ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு தேர்தல் நடக்கும் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை வழங்க வேண்டும்.

    தவறும்பட்சத்தில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர்.
    • சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    கன்னியாகுமரி:

    சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

    விடுமுறை நாளான இன்றும் (சனிக்கிழமை), ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர். அவர்கள் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர்.

    அதன்பிறகு கன்னியா குமரி முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் சென்று விவேகானந்தர் மண்ட பத்தை பார்வையிட்டனர்.

    மேலும் கன்னியா குமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச், சொத்த விளை பீச் உள்பட அனைத்து சுற்று லாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபம் செல்ல ஆர்வம் காட்டினர்
    • கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி:

    புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு கோடை விடுமுறை சீசன் முடிந்த பிறகும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்த வண்ணமாக உள்ளனர்.விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துஇருந்தனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் பார்வையிட்டு வந்தனர். திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை.

    மேலும் கன்னியா குமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, வட்டக்கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தளங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • கோடை விடுமுறை சீசன் பள்ளிகள் திறந்ததைத் தொடர்ந்து கடந்த 13-ந்தேதியுடன் நிறைவடைந்தது
    • விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் கியூசெட் வெறிச்சோடி கிடக்கிறது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் காணப்படும்.

    இதனால் இந்த3மாத காலமும் இங்கு மெயின் சீசன் காலமாகக் கருதப்படுகிறது. இதேபோல ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையை குடும்பத்தோடு குதூகலத்துடன் கொண்டாட சுற்றுலாப்பயணிகள் இங்கு படையெடுத்து வந்த வண்ணமாக இருப்பார்கள்.

    இதனால் இந்த 2 மாத காலமும் இங்கு கோடை விடுமுறை சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு கோடை விடுமுறை சீசன் பள்ளிகள் திறந்ததைத் தொடர்ந்து கடந்த 13-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இந்த கோடை விடுமுறை சீசன் நிறைவடைந்ததை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணி களின் வருகை அடியோடு குறைந்து விட்டது.

    தற்போது நாள் ஒன்றுக்கு 1500 முதல் 2000 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்றுபார்த்து வருகிறார்கள்.

    நேற்று ஒரே நாளில் மட்டும் 1500 சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்த்து வந்துஉள்ளனர். இதனால் 2 படகு மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

    அந்த படகுகளும் இருக்கைகள் நிரம்பிய பிறகே விவேகானந்தர் மண்டபத்துக்கு புறப்பட்டு செல்கிறது. அதுவரையிலும் சுற்றுலாப் பயணிகள் படகில் சில நிமிட நேரம் காத்திருக்க வேண்டியது உள்ளது.

    சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்ததால் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் "கியூ" செட்டில் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில், விவேகானந்தபுரம் கடற்கரையில் அமைந்து உள்ள திருப்பதி வெங்கடா ஜலபதி கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. கன்னியா குமரியில் உள்ள முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரைப்பகுதி, காந்திநினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், மீன்காட்சிசாலை, கடற்கரையில்உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள், அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, அரசு அருங்காட்சியகம், மியூசியம் வட்டக்கோட்டைபீச், சொத்தவிளைபீச், சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி போன்ற அனைத்து சுற்றுலா தளங்களும் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன. இதனால் கடைகளில் வியாபாரம் இன்றி வியாபாரிகள் தவிக்கிறார்கள்.

    • பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
    • பேச்சிபாறை அணை, பெருஞ்சாணி அணை, மாத்தூர் தொட்டில் பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, கன்னியாகுமரி, குளச்சல், வட்டக்கோட்டை, முட்டம் போன்ற சுற்றுலா இடங்களுக்கு மக்கள் தினமும் அதிக அளவில் வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

    தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து தினமும் பஸ், வேன், கார், பைக் மூலம் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது இதனால் அந்த பகுதியில் உள்ள வணிகர்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. சிறுவர்கள் நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்கிறார்கள் மற்றும் படகு சவாரி நடைபெறும் இடத்தில் நல்ல கூட்டம் அலைமோதுகிறது.

    சுற்றுலா பயணிகள் இங்கு குளித்து முடித்துவிட்டு பேச்சிபாறை அணை, பெருஞ்சாணி அணை, மாத்தூர் தொட்டில் பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, கன்னியாகுமரி, குளச்சல், வட்டக்கோட்டை, முட்டம் போன்ற சுற்றுலா இடங்களுக்கு மக்கள் கூட்டம் தினமும் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

    மாத்தூர் தொட்டில் பாலம் இரு மலைகளுக்கு இடையே விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல காமராஜ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாலம் ஆகும் சுற்றுலா பயணிகள் பாலத்தின் ஒரு பகுதியில் இருந்து அடுத்த பகுதிக்கு நடந்து சென்று மலைகளின் அழகை கண்டு களிக்கிறார்கள்.

    அதன் பிறகு கீழ் பகுதிக்கு வந்து ஆனந்த குளியல் போடுகிறார்கள் தற்போது சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சிறுவர் பூங்காவை சீர மைத்து வைத்து இருக்கி றார்கள். அதில் விளையாடி பொழுதை கழிக்கிறார்கள்.

    சக மாணவர் தற்கொலைக்கு நீதி கேட்டு போராடியதன் விளைவாக கல்லூரிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவர்கள் எழுமாத்தூர் கலை கல்லூரியை முற்றுகையிட்டனர்.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூர் மலையடிவாரத்தில் அரசு கலை கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் படித்து வந்த நடுப்பாளையத்தை சேர்ந்த மாணவர் தினேஷ் குமார் (30). திடீரென தற்கொலை செய்து கொண்டார். மாணவர் சக மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டதால் கடந்த 3 மாதத்துக்கு முன் கல்லூரி நிர்வாகத்தால் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன் இதேபோல் ஏற்பட்ட தகராறில் 2-வது தடவையாக மாணவர் தினேஷ்குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதனால் மாணவர் தினேஷ் 2 தினங்களுக்கு முன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். சஸ்பெண்டு செய்யப்பட்டதால் மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார்.

    இதையொட்டி மாணவ- மாணவிகள் தினேஷ்குமார் தற்கொலைக்கு காரணமான கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரின்ஸ்பாலை கைது செய்ய வேண்டும் என கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. மாணவர்களின் போராட்டம் காரணமாக இன்று முதல் 5 நாட்கள் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.

    இந்த நிலையில் இன்று கல்லூரிக்கு வந்த மாணவர்கள் கல்லூரி மூடப்பட்டதை கண்டித்தும் பிரின்ஸ்பாலை கைதுசெய்ய கோரியும் கல்லூரி முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பாதுகாப்பு பணிக்காக போலீசார் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

    மேலும் கல்லூரிக்கு போக பஸ்சில் இருந்து இறங்கி 2 கி.மீட்டர் தூரம் நடத்துதான் போக வேண்டும் ஆகவே பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கோரியும் மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    டெல்லியில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு புதுவை முதல்வர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #Narayanasamy

    புதுச்சேரி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியும், வாஜ்பாய் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

    மேலும் புதுவையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் அரசு விடுமுறையும் அறிவித்துள்ளார். அதே போல் புதுவை அரசு சார்பில் வாஜ்பாய் மறைவையொட்டி 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


     

    இந்த நிலையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வாஜ்பாய் இறுதிச்சடங்கில் பங்கேற்க இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    சென்னை மாநகர போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிப்பது குறித்து அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    சென்னை:

    தமிழக காவல்துறையில் பணியாற்றும் போலீசார் பணிச்சுமை காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பல்வேறு பிரச்சினைகளுக்காக இடைவிடாமல் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றன. இதனால் இடைவிடாமல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டியுள்ளது.

    ஜனாதிபதி, பிரதமர் போன்ற முக்கிய பிரமுகர்கள் சுற்றுப்பயணம் செய்யும்போது, தொடர்ந்து 2 அல்லது 3 நாட்கள் இரவு-பகல் பாராமல் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இதனால் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லை என்று போலீசாருக்கு ஒரு மனக்குறை இருந்தவண்ணம் உள்ளது. இதுபோன்ற இடைவிடாத பணிச்சுமையால் தங்களது குடும்பத்தை கவனிக்க முடியவில்லை என்றும் போலீசார் உள்ளக்குமுறலுடன் உள்ளனர்.

    இதனால் ஏற்படும் மன அழுத்தத்தால் போலீசார் தற்கொலை செய்யும் நிகழ்வுகள் நடக்கின்றன. போலீசாருக்கு தேவையான விடுமுறை அளிக்க வேண்டும், அவர்களது பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் போலீசாரால் எழுப்பப்பட்டுள்ளது.


    போலீசாரின் மனக்குறையை போக்கும்வகையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளார் என்றும், சென்னை மாநகர போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க உள்ளதாகவும், நேற்று ‘வாட்ஸ்-அப்’பில் தகவல் பரவியது.

    இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    சென்னை மாநகர போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்கலாமா? என்பது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசித்து வருகிறோம். அதில் உள்ள சாதக-பாதக அம்சங்கள் குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். முதல்கட்டமாக, முதல்நிலை மற்றும் இரண்டாம்நிலை காவலர்களுக்கு மட்டும் வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்கலாமா?, அதற்கடுத்தாற்போல, சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு, இன்ஸ்பெக்டர்களுக்கு விடுமுறை சலுகையை கொடுக்கலாமா? என்பது பற்றியெல்லாம் யோசித்து வருகிறோம்.

    போலீஸ் துறையைச் சேர்ந்த சிலர் விடுமுறை நாட்களில் வேலைபார்த்து அதனால் கிடைக்கும் பணபலனை அனுபவித்து வருகிறார்கள். விடுமுறை கிடைக்கும்பட்சத்தில் பணபலனில் குறைவு ஏற்படும். அதை சிலர் விரும்பவில்லை. ஒட்டுமொத்தமாக இதுகுறித்து தீவிரமாக ஆலோசித்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    ×