search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிர்மலாதேவி"

    • நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
    • முதல்கட்டமாக தண்டனையை நிறுத்தி வைத்து, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என நிர்மலாதேவி கூறியிருந்தார்.

    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் நிர்மலாதேவி. அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டில் இவர் தன்னிடம் படித்த மாணவிகளை பாலியல் ரீதியில் தவறாக வழி நடத்த முயன்றதாக புகார் எழுந்தது.

    இந்த விவகாரம் தொடர்பான புகார்களின் அடிப்படையில் அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேராசிரியை நிர்மலாதேவியை கைது செய்தனர். அவருக்கு உதவியதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள். ஆனாலும் இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் கோர்ட்டு விசாரித்தது. சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர், பேராசிரியர்கள், மாணவிகள், அவர்களின் பெற்றோர் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜராகி, சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 29, 30-ந்தேதிகளில் அளிக்கப்பட்டது.

    இதில், பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பின் அடிப்படையில் நிர்மலா தேவியை மதுரை சிறையில் போலீசார் அடைத்தனர்.

    இந்த தண்டனையை எதிர்த்து பேராசிரியை நிர்மலாதேவி மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டு எனக்கு வழங்கிய தண்டனை சட்டவிரோதமானது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும். முதல்கட்டமாக தண்டனையை நிறுத்தி வைத்து, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரருக்கு விதித்த தண்டனையை நிறுத்தி வைக்கவோ, ஜாமீன் வழங்கவோ முடியாது என் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

    கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலாதேவி, விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. #NirmalaDevi #NirmalaDeviCase
    சென்னை :

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்து நிர்மலாதேவி மற்றும் உடந்தையாக இருந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை கைது செய்தனர். நிர்மலா தேவி குரல் மாதிரி பரிசோதனை சென்னையில் நடத்தப்பட்டது.

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவி உள்பட 3 பேரும் பலமுறை மாவட்ட மற்றும் ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் ஜாமீன் வழங்கப்படவில்லை.

    மேலும், நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த மாதம் விருதுநகர் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரியிடம் 1160 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

    தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் பேராசிரியை நிர்மலா தேவி, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியர் முருகன் ஆகிய 3 பேர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம், விபசார தடுப்புச்சட்டம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில், நிர்மலாதேவி தொடர்பான வழக்கை சிபிசிஐடி-விசாரிப்பதற்கு பதிலாக பெண் டிஐஜி தலைமையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கணேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி குலுவாடி ரமேஷ் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் சிபிசிஐடி பதில்மனு தாக்கல் செய்துள்ளது.
     
    சிபிசிஐடி விசாரனை அதிகாரியான கூடுதல் எஸ்பி லாவண்யா தாக்கல் செய்த அந்த பதில்மனுவில், ‘மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக நிர்மலாதேவி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். முருகன், கருப்பசாமிக்காகவே பெண்களிடம் பேசியதாக அவர் கூறியுள்ளார்’ என குறிப்பிடப்படப்பட்டுள்ளது.

    மேலும், விசாரணைக்கு பிறகு இந்த வழக்கை தலைமை நீதிபதியின் அமர்வுக்கு பரிந்துரை செய்து நீதிபதி குலுவாடி ரமேஷ் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. #NirmalaDevi #NirmalaDeviCase
    ×