search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 180944"

    • தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
    • உங்கள் செல்போனுக்கு வந்த ஓ.டி.பி., கூறுமாறு கேட்டு மோசடியில் ஈடுபடுகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா கூறியதாவது :- தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஆன்லைன் மோசடி நபர்கள் பல்வேறு வழிகளை கையாண்டு பொதுமக்களை ஏமாற்றுகின்றனர். உதாரணமாக ஆன்லைனில் நீங்கள் ஆர்டர் செய்யாத உணவுகள் உங்களுக்கு வந்திருப்பதாக கூறி, அதை திருப்பி அனுப்ப உங்கள் செல்போனுக்கு வந்த ஓ.டி.பி., கூறுமாறு கேட்டு மோசடியில் ஈடுபடுகின்றனர்.மேலும் கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி, நீங்கள் அனுப்பிய பார்சலில் சட்டவிரோத பொருள் உள்ளது. தடையின்மை சான்று பெற பணம் கட்டவும் என்று சொல்லி மோசடியில் ஈடுபடுகின்றனர். மேலும் ஆன்லைன் ஷாப்பிங் ஆப்களை மிக கவனமாக கையாள வேண்டும். ஏ.டி.எம்.,.மற்றும் கிரெடிட் கார்டு விபரங்களை எந்த வங்கியும் தொலைபேசி வாயிலாக கேட்பதில்லை.

    வங்கி கணக்கு சம்பந்தமான தகவல்களை யாரிடமும் பகிராமல் இருப்பது நல்லது. லோன் ஆப் வாயிலாக குறைந்த வட்டிக்கு உடனடியாக பணம் பெறலாம் என விளம்பரப்படுத்தி உங்களது அனைத்து தனிப்பட்ட விபரங்களையும் பெற்று சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டக் கூடும்.இது போன்ற அழைப்புகள் வந்தால், நேரில் வருவதாக கூறி உடனடியாக போலீஸ் உதவியை பொதுமக்கள் நாட வேண்டும். மேலும் அங்கீகாரம் இல்லாத லோன் ஆப்களில் கடன் பெறுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.உங்கள் மொபைல் போனில் உள்ள ப்ளூடூத்தை நீங்கள் ஆப் செய்யாமல் இருக்கும்போது, அதை சைபர் கிரைம் குற்றவாளிகள், உங்கள் மொபைல் போனில் உள்ள தகவல் மற்றும் டேட்டாக்களை திருடுகின்றனர்.எனவே தேவையற்ற நேரங்களில் ப்ளூடூத் ஆப் செய்து வைத்தல் நல்லது. பொது இடங்களில் கிடைக்கும் இலவச 'வைபை' வசதியை நீங்கள் பயன்படுத்தும் போது, உங்களுக்கு தெரியாமல், உங்களது மொபைல் போனில் உள்ள வங்கி சம்பந்தமான தகவல்களை இணைய வழியாக திருடர்கள் திருட வாய்ப்பு உள்ளது.

    சமூக வலைதளங்களில் போலியான கணக்குகளை தொடங்கி அதன் வாயிலாக நட்பு அழைப்புகளை அனுப்பி பேசி பழகி ஏமாற்றும் நபர்களிடம், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முகம் தெரியாத நபர்களிடம் சமூக வலைதள நட்பு வைக்க வேண்டாம்.எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து டிஜிட்டல் மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவை, திருச்சி, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
    • குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையத்தில் உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, கோவை, திருச்சி, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சமீபகாலமாக பஸ் நிலையத்தில் போதை ஆசாமிகள் தொல்லை நாளுக்கு,நாள் அதிகரித்து வருகிறது. குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர். மேலும் தகாத வார்த்தைகளில்,கத்திக்கொண்டு இருப்பதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண் பயணிகள் அச்சம் அடைகின்றனர்.

    எனவே போலீசார் பஸ்நிலையத்தில் அடிக்கடி ரோந்து பணிகளை மேற்கொண்டு போதை ஆசாமிகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மது விற்பனைகளுக்கு எதிராகவும் சிறப்பு சோதனைகளை நடத்தி குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
    • தகவல் கொடுக்கும் பொது மக்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்கும் வகையில் போதைக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும் போலீசாரால் புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மது விற்பனைகளுக்கு எதிராகவும் சிறப்பு சோதனைகளை நடத்தி குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக கள்ளச் சாராயம், போலி மதுபானம், கஞ்சா மற்றும் மெத்தனால் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள், கடத்தி வருபவர்கள் பதுக்கி வைப்பவர்கள் தொடர்பான புகாரை போலீசாரிடம் பொதுமக்கள் தெரிவிக்க செல்போன் எண்களை சென்னை போலீசார் வெளியிட்டு உள்ளனர்.

    மதுவிலக்கு அமலாக்க பிரிவு வடக்கு மண்டலத்தில் பூக்கடை, வண்ணாரப்பேட்டை புளியந்தோப்பு காவல் மாவட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் 8072864204 என்ற செல்போன் எண்ணிலும், மேற்கு மண்டலத்தில் அண்ணா நகர், கொளத்தூர், கோயம்பேடு காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 9042380581 என்ற செல்போன் எண்ணிலும், தெற்கு மண்டலத்தில் அடையாறு, புனித தோமையர் மலை, தி.நகர் காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 9042475097 என்ற செல்போன் எண்ணிலும், கிழக்கு மண்டலத்தில் திருவல்லிக்கேணி, கீழ்பாக்கம், மயிலாப்பூர் காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 6382318480 என்ற செல்போன் எண்ணிலும் பொது மக்கள் தொடர்பு கொண்டு வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என சென்னை காவல் துறை தெரிவித்து உள்ளது.

    தகவல் கொடுக்கும் பொது மக்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • குறுக்கு சாலையில் இருந்து வரும் வாகனங்கள், அதிவேகமாக டிபி சாலையில் திரும்புகிறது.
    • குறுக்கு சாலை நோக்கி திரும்பும் இடங்களில் வேகத்தடைகள் அமைத்தால் விபத்துகளை தடுக்க முடியும்.

    குனியமுத்தூர்,

    கோவையில் உள்ள பிரதான சாலைகளில் ஆர்.எஸ்.புரம் -டிபி ரோடு முக்கியமானது.

    இது சுக்ரவார்பேட்டை மூன்று கம்பத்தில் தொடங்கி, டி.பி.ரோடு, கவ்லி பிரவுன் சாலை வரை நீண்டு செல்கிறது. இங்கு சீனிவாச ராகவன் வீதி, சுப்பிரமணியன் ரோடு, வெங்கடகிருஷ்ணன் ரோடு, அருணாச்சலம் ரோடு, ராமலிங்கம் ரோடு, ஆரோக்கியசாமி சாலை, சம்பந்தம் ரோடு, லோகமானிய வீதி, பொன்னுரங்கம் வீதி, வெங்கடசாமி ரோடு, பெரியசாமி ரோடு, பாசிய காரலூரோடு உள்பட எண்ணற்ற குறுக்கு சாலைகள் உள்ளன. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

    அப்போது குறுக்கு சாலையில் இருந்து வரும் வாகனங்கள், அதிவேகமாக டிபி சாலையில் திரும்புகிறது. அப்படி திரும்பும் போது அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மீது உரசக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் அங்கு தினமும் விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. டிபி சாலையில் இருந்து குறுக்கு சாலை நோக்கி திரும்பும் இடங்களில் வேகத்தடைகள் அமைத்தால் விபத்துகளை தடுக்க முடியும்.

    எனவே பெரிய அளவில் விபத்து நடப்பதற்கு முன்பாக, இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலையில் தினமும் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
    • கடந்த 2 நாட்களாக சுப முகூர்த்த நாள் என்பதால் கார், மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

    பல்லடம் :

    பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.

    திருமணம் போன்ற விசேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சுப முகூர்த்த நாள் என்பதால் கார், மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை, வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்தது. இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணா நகர் முதல், பனப்பாளையம் தாராபுரம் ரோடு பிரிவு வரை, வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன. போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வைத்தும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    • பட்டா உட்பரிவு மாற்றம், அடிப்படை வசதிகள் குறித்து 418 மனுக்களை கலெக்டர் சாருஸ்ரீயிடம் அளித்தனர்.
    • முத்துப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் வருவாய் தீர்வாய கணக்கு முடிக்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் முத்து ப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான 1432-ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி கலெக்டர் சாருஸ்ரீ தலைமை யில் 2-வது நாளாக நேற்று நடைபெற்றது.

    இதில் முத்துப்பேட்டை வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், பட்டா உட்பரிவு மாற்றம், அடிப்படை வசதிகள் குறித்து 418 கோரிக்கை மனுக்களை கலெக்டர் சாருஸ்ரீயிடம் அளித்தனர்.

    அந்த வகையில் நேற்றுடன் முத்துப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் வருவாய் தீர்வாய கணக்கு முடிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து, வருவாய்துறை சார்பில் 291 பேருக்கு ரூ.83 லட்சத்து 29 ஆயிரத்து 357 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

    இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்ரமணியன், முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவா ஸ்கான், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கலைவாணி மோகன், தாசில்தார் மகேஷ் குமார், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் சந்தான கோபால கிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஏழுமலை, துணை தாசில்தார்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தனியார் பள்ளிகளின் 12 ஆயிரத்து 179 வாகனங்கள் இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் பாதிக்கப்படாத அளவுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட த்தில் உள்ள தனியார் பள்ளிகளின் மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தமிழக போக்கு வரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் ஆய்வு மேற்கொண்டார்.

    நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில் 106 பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி, மாணவர்கள் இருக்கை, சி.சி.டி.வி கேமரா, அவசரகால வழி, வாகனத்தின் தரம், தீயணை ப்பான் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிரு ப்பதாவது :-

    தமிழக முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளின் 32,167 வாகனங்களில் 12,179 வாகனங்கள் இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    மீதமுள்ள வாகனங்களை வரும் 29ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் நிர்ணயம் செய்ய தமிழக அரசிடம் வழிமுறை இல்லை .

    தனியார் பஸ்கள் சங்கத்தின் சார்பில் பொதுமக்கள் பாதிக்கப்படாத அளவுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அதனை மீறியதாக ஒரு சில பஸ்கள் மீது புகார் வந்துள்ளது.

    கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் தனியார் ஆம்னி பஸ்கள் மீது போக்குவரத்து ஆணையர் மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும்.

    போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிப்பணி யிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும்.

    பள்ளி வாகனம் அல்லாமல் தனியார் வாகனத்தை பயன்படுத்தி மாணவர்களை அழைத்துச் சென்றால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழகம் முழுவதும் விரைவில் மினி பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை மாலி எம்.எல்.ஏ., வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்லடம் முதல் குண்டடம் வரை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி தொடங்கப்பட்டு நிறைவடைந்துவிட்டன.
    • ஒத்தக்கடை பகுதியில் மழைநீா் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

    குண்டடம் :

    குண்டடம் அருகே 4 வழிச் சாலைப் பணிகள் முடிவடைந்து சில மாதங்களே ஆகும் நிலையில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் கற்கள் பெயா்ந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

    கோவை-மதுரை நெடுஞ்சாலையில் பல்லடம் முதல் குண்டடம் வரை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி தொடங்கப்பட்டு வே.கள்ளிப்பாளையம் முதல் குண்டடம் வரை பணிகள் நிறைவடைந்துவிட்டன. இதில் மேட்டுக்கடையை அடுத்துள்ள ஒத்தக்கடை பகுதியில் மழைநீா் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய்க்கும், தாா் சாலைக்கும் இடையில் உள்ள பகுதியில் நடைபாதையில் பாா்க்கிங் டைல்ஸ் எனப்படும் கற்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    அண்மையில் பெய்த மழையில் இங்கு பதிக்கப்பட்டுள்ள கற்கள் அரிக்கப்பட்டு சேதமாகியுள்ளன. பதிக்கப்பட்ட சில நாள்களிலேயே இவ்வாறு ஆகியுள்ளதால் இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு முறையாக டைல்ஸ் கற்கள் பதிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

    • பட்டா மாறுதல் உள்ளிட்ட 3 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.
    • இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக மனு கொடுத்தனா்.

    காங்கயம் :

    காங்கயம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில், திருப்பூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் மகாராஜ் தலைமையில் நத்தக்காடையூா் உள்வட்டத்தைச் சோ்ந்த மறவபாளையம், கீரனூா், பாப்பினி, நான்கு சாலை, பரஞ்சோ்வழி, மருதுறை, நத்தக்காடையூா், முள்ளிப்புரம், குட்டப்பாளையம், பழையகோட்டை ஆகிய பகுதிகளுக்கு நடைபெற்ற வருவாய்த் தீா்வாய நிகழ்வில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக 110 போ் மனு கொடுத்தனா். இதில் பட்டா மாறுதல் உள்ளிட்ட 3 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

    நிகழ்ச்சியில் காங்கயம் வட்டாட்சியா் புவனேஸ்வரி, மண்டல துணை வட்டாட்சியா் ஆா்.மோகனன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் கோபால் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

    வெள்ளகோவில் உள்வட்டத்தைச் சோ்ந்த முத்தூா், சின்னமுத்தூா், ஊடையம், மங்கலப்பட்டி, வேலம்பாளையம், பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, மேட்டுப்பாளையம், சேனாபதிபாளையம், வெள்ளகோவில், உத்தமபாளையம், லக்கமநாயக்கன்பட்டி, கம்பளியம்பட்டி, பச்சாபாளையம், வீரசோழபுரம், வள்ளியரச்சல் ஆகிய பகுதிகளுக்கு இன்று வருவாய்த் தீா்வாய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

    • போலி ஆன்லைன் செயலிகளில் கடன் பெற்று ஏமாற வேண்டாம்.
    • பொருட்காட்சிக்கு வந்த பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் மற்றும் இந்திரா சுந்தரம் அறக்கட்டளை இணைந்து போலி ஆன்லைன் செயலிகளில் கடன் பெற்று ஏமாற வேண்டாம் என்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன்படி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையில், இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவனரும், சமூக சேவகியுமான இந்திராசுந்தரம், சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் சையது ரபீக் சிக்கந்தர் ஆகியோர் முன்னிலையில் திருப்பூர் காங்கயம் ரோடு பத்மினி கார்டனில் நடைபெற்று வரும் பொருட்காட்சிக்கு வந்த பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அப்போது போலி ஆன்லைன் செயலிகள் மூலமாக கடன் பெறும்போது ஏற்படும் பாதிப்புகள் குறித்து சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினார்கள். இதில் இந்திராசுந்தரம் அறக்கட்டளை செயலாளர் ராஜா முகமது, நிர்வாகிகள் சுரேஷ், சித்ரா, சசூரி சி.பி.எஸ்.இ. பள்ளி துணை முதல்வர் சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாகவத மேளா நாடகவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கியது.
    • வள்ளி திருமணம் எனும் தமிழ் நாட்டிய நாடகம் நடைபெற உள்ளது.

    மெலட்டூர்:

    மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடகக் கலைவிழா 500 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    தெலுங்கு மொழியில் படைக்கப்பட்ட இந்த பாகவதமேளா என்கிற நாட்டிய நாடகம் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு பாகவத மேளா நாடகவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கியது.

    ஒவ்வொரு நாளும் நாடகம் நடைபெற்று வருகிறது.

    விழாவில் நேற்று ஹரிஹரலீலா விலாசம் எனும் நாடகம், நடைபெற்றது.

    இதனை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

    இன்று இரவு வள்ளி திருமணம் எனும் தமிழ் நாட்டிய நாடகம் நடைபெற உள்ளது.

    ஏற்பாடுகளை பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் இயக்குனர் கலைமாமணி குமார் செய்திருந்தார்.

    • பட்டா நகல் கோருதல், பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 94 மனுக்கள் பெறப்பட்டது.
    • மனுக்களை, திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விஜயன் ஆய்வு செய்தார்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பட்டா நகல் கோருதல், பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தளர்.

    மனுக்களை, திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விஜயன் ஆய்வு செய்தார்.

    சுமார் 94 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 11 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் வலங்கைமான் தாசில்தார் அன்பழகன், மண்டல துணை வட்டாட்சியர் ஆனந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×