என் மலர்
நீங்கள் தேடியது "மக்கள் அவதி"
- மதுரையில் விடிய விடிய கனமழையால் கால்வாய் ஆக்கிரமிப்பால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் சூழ்ந்தது.
- சகதி காடான வீதிகளால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

மதுரையில் பெய்த மழையால் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்கி நின்றது.
மதுரை
மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை நின்றிருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரவு பலத்த இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் மதுரை மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியது.
தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது. மதுரையில் சேதம் அடைந்த சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். கனமழை காரணமாக கண்மாய் மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. விவசாய பணிகளும் தீவிரமடைந்துள்ளன.
மதுரை மாநகராட்சி விரிவாக்க பகுதிகளான ஆனையூர், தபால்தந்தி நகர், பார்க் டவுன், ஒத்தக்கடை, ஊமச்சிக்குளம், அய்யர்பங்களா, திருப்பாலை உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக மழை தண்ணீர் கண்மாய்களுக்கு செல்ல வழி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ளது. வீதிகளிலும் தண்ணீர் தேங்கி சகதிகாடாக உள்ளதால் மக்கள் நடக்க கூட முடியாமல் கடும் அவதியடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் இரவு பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு-
சிட்டம்பட்டி -13, கள்ளந்திரி -10, தனியா மங்கலம்- 14, மேலூர் -8, சாத்தையாறு அணை- 9, வாடிப்பட்டி -22, உசிலம்பட்டி -5, மதுரை வடக்கு -21, தல்லாகுளம் -19, விரகனூர் -7, விமான நிலையம் -8, இடைய பட்டி -40, புலிப்பட்டி -40, சோழவந்தான் -11, மேட்டுப்பட்டி -19, பேரையூர்- 45, ஆண்டிப்பட்டி -29.
மதுரை மாவட்டம் முழுவதும் மொத்தமாக 29.9 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 15 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மதுரை மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 763கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 511 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணையை பொறுத்தவரை நீர்மட்டம் 69.46 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1759 கன அடி தண்ணீர் வரும் நிலையில் மதுரை நகர குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக 1819 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
- வீட்டிற்கு வெளியே நிறுத்தி விடுவது வழக்கம்.
- சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
குனியமுத்தூர்,
கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி சிக்னல் அருகே தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான சரக்கு வாகனங்கள் காய்கறிகளை இறக்கி, ஏற்றி செல்வது வழக்கம்.
மார்க்கெட்டுக்கு எதிர்ப்புறம் ஸ்ரீ நாராயண குரு சாலை உள்ளது. இது குடியிருப்பு பகுதியாகும்.
இந்நிலையில் மார்க்கெட்டில் வரும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் ஸ்ரீ நாராயண குரு சாலையில் கடைசி வரை நிறுத்தி விடுகின்றனர்.இதனால் பொது மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-
பெரும்பாலும் இப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் தங்களது 4 சக்கர வாகனங்களை வீட்டிற்கு வெளியே நிறுத்தி விடுவது வழக்கம்.
ஆனால் சரக்கு வாகனங்களை சாலை முழுவதும் வரிசையாக நிறுத்தி விடுகின்றனர்.
இதனால் குடியிருப்போர் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். மேலும் சரக்கு வாகனங்களை வரிசையாக நிறுத்தி விடுவதால் வாகனங்களுக்கு பின்புறம் மறைவாக நின்று கொண்டு ஒரு சில ஆசாமிகள் சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப் பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளை முகம் சுளிக்க வைக்கிறது. பெரும்பாலும் இப்பகுதி சுத்தமான பகுதி ஆகும். ஆனால் தற்போது இந்த வாகனங்கள் காரணமாக அசுத்தம் நிறைந்த பகுதியாக காட்சி இருக்கிறது.
தற்போது மழை காலமாக இருப்பதால், சரக்கு வாகனங்களில் இருக்கும் காய்கறி கழிவுகள் மழை நீரில் அடித்துக் கொண்டு தெருவில் கொட்டி அசத்தமாக காட்சி அளிக்கிறது.
இந்த சாலையில் தனியார் ஆஸ்பத்திரிகளும், தனியார் பள்ளியும் செயல்பட்டு வருகிறது.
எனவே சரக்கு வாகனங்களை நிறுத்த தடை விதிக்க வேண்டும். அதிகாரிகள் விரைந்து இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
- 6 மணி அளவில் எதிர்பாராத விதமாக உயர் மின் அழுத்த மின் மாற்றில் பழுது ஏற்பட்டது.
- 8:10 மணி அளவில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் எதிர்பாராத விதமாக உயர் மின் அழுத்த மின் மாற்றில் பழுது ஏற்பட்டது. இதனால் தியாகதுருகம், பெரிய மாம்பட்டு, சின்னமாம்பட்டு, தியாகை, எலவனாசூர்கோட்டை, ரிஷிவந்தியம், பாவந்தூர், நூரோலை, அய்யனா ர்பாளையம், பழைய சிறுவங்கூர், சூளாங்குறி ச்சி, மாடூர், மடம், பிரிதிவிமங்களம், வீரசோழபுரம், வீ.பா ளையம், கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது.
இதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் செயற்பொறியாளர் ரகுராமன் தலைமையில் கள்ளக்குறிச்சி மின் அளவு மற்றும் உணர்த்தி ஓர்வு அதிகாரிகள் விரைந்து வந்து மின் மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர். அதனை தொடர்ந்து இரவு சுமார் 8:10 மணி அளவில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. இவ்வாறு அறிவிக்கப்படாத மி ன்வெட்டால் தியாகதுருகம் பகுதி பொது மக்கள் மிகவும் அவதியடைந்தனர்.
- மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
- அப்பகுதியில் உள்ள பொது மக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள ஏரி குளம் போன்ற முக்கிய நீர் நிலைகளில் வெகுவாக தண்ணீர் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள விவ சாயிகளும். நேற்று இரவு முதல் இன்று காலை வரை யில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
இந்த கனமழையால் இங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க பூமி ஈஸ்வரர் கோவில் வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும் மரக்காணம் சன்னதி வீதி அம்பேத்கர் நகர் செல்லி அம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பொது மக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர் இதுபோல் மரக்காணம் தாழங்காடு சாலையிலும் மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே தில்லையேந்தல் ஊராட்சியில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
- தெருக்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் திருடர்கள் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே தில்லை யேந்தல் ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
ஊராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் தண்ணீர் தொட்டி அமைத்து குழாய்கள் மூலம் தண்ணீர் வருவதற்கு பல லட்சம் செலவில் தமிழக அரசு ஏற்பாடுகள் செய்யப்பட்டும் மக்கள் பயன் பெற முடியவில்லை. இங்கு மாதத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் மட்டும் காவிரி தண்ணீர் வருகிறது. மற்ற நாட்களில் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது.
இதனால் இந்தப்பகுதியில் உள்ள பெண்கள் முதல் சிறுவர், சிறுமிகள் 2 கிலோ மீட்டர் தொலைவில் இ.சி.ஆர். சாலையில் உள்ள கீழக்கரை துணை மின்நிலையம் அருகில் உள்ள குழாய்களில் இரவும், பகலுமாக தள்ளு வண்டிகளில் குடங்களை வைத்து இழுத்துச்சென்று குடிநீர் எடுத்து வரும் அவல நிலை இருந்து வருகிறது.
லாரியில் விற்கப்படும் குடம் தண்ணீர் ரூ.10க்கு விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். உடனடியாக குடிநீர் வசதி செய்து தர வலியுறுத்தி தில்லையேந்தல் ஊராட்சி பெண்கள் ஏராளமானோர் திரண்டு வந்து கலெக்டர் நேர்முக உதவியாளர் ஷேக் மன்சூ ரிடம் மனு அளித்தனர்.
இது தொடர்பாக ஊராட்சி தலைவர் கிருஷ்ண மூர்த்தி கூறியதாவது:-
தில்லையேந்தல் ஊராட்சிக்கு காவிரி குடிநீர் முறையாக வருவது கிடையாது. மாதத்திற்கு 2 அல்லது 3 முறை தண்ணீர் திறந்து விடுவதால் மக்கள் குடிநீருக்காக பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாவட்ட கலெக்டர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தில்லை யேந்தல் ஊராட்சியில் அனைத்து பகுதியில் உள்ள குடிதண்ணீர் குழாய்களில் தடையில்லாமல் குடிநீர் கிடைக்கவும், ஊரணிகள் தூர்வாரவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பாலையாறு அருகே ஒரு கூட்டு குடிநீர் பைப்லைன் அமைக்க வேண்டும்.
ஊராட்சி பகுதிகளை சுத்தம் செய்ய கூடுதலாக துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். உடனுக்குடன் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய டிராக்டர் வசதி செய்து ஏற்படுத்தி தர வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் கிராமங்கள் அதிகமான பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் போதிய தெரு விளக்கு வசதிகள் செய்யவில்லை. தெருக்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் திருடர்கள் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக உள்ளது.
- பண்ருட்டில் உள்ள அனைத்து திருமண நிலையங்களிலும் திருமணம் நடந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்றுப்புற வட்டார கிராமங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர் ஹெட்லைட்களை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றனர். பண்ருட்டி - கடலூர் ரோடு, சென்னை ரோடு, கும்பகோணம் ரோடு, காந்தி ரோடு, ராஜாஜி ரோடு ஆகிய ரோடுகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பண்ருட்டி-சென்னை ரோட்டில் கண்டரக்கோட்டை வரையிலும், பண்ருட்டி-கும்பகோணம் ரோட்டில் கொள்ளுக்காரன் குட்டை வரையிலும் குண்டும் குழியுமான சாலையில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாகி உள்ளது.
எல்.என்.புரம், கும்பகோணம் ரோடு ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக உள்ளது. மேலும், இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் பண்ருட்டில் உள்ள அனைத்து திருமண நிலையங்களிலும் திருமணம் நடந்தது. இதில் கலந்து கொள்ள வெளியூரில் டூவீலரில் வந்த உறவினர்கள் கடும் அவதிக்குள்ளாயினர். நகரில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் கொட்டும் மழையி லும் அதிகாரிகள் ஊழிய ர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- சாலையை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் அருகேயுள்ளது ஆத்துக்கொல்லை கிராமம். இந்த பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராம மக்கள் இறந்தவர்கள் உடலை ஆத்துக்கொல்லை கிராமத்தை ஒட்டியவாறு செல்லும் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் புதைப்பது வழக்கம்.
இந்த சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த நிலையில் அந்த பாதையை சிமென்ட் சாலையாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தடுத்து பாதையை துண்டிப்பு செய்து தகராறில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால் இந்த பகுதி மக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் இதுகுறித்து அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கை இல்லை என இப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
- ஈரோட்டில் இன்று காலை கடும் பனி பொழிவு இருந்தது.
- வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு களை எரிய விட்டபடியே சென்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மாவட்ட த்தின் பல பகுதிகளில் கடும் குளிர் வாட்டியது. தொட ர்ந்து மழை குறைந்தது. ஆனால் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிர் வாட்டி வருகிறது.
மாவடடத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசி வரு கிறது. மேலும் பனி மூட்ட மாக காணப்பட்டு வருகிறது. இதனால் கடும் குளிர் வாட்டி வருகிறது.
இந்த நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள வனப்பகுதிகளான தாள வாடி, கேர்மாளம், ஆசனூர், பண்ணாரி, தலமலை உள்பட பல்வேறு கடும் பனி மூட்டமாக இருந்து வருகிறது.
இதனால் தாளவாடி வனப்பகுதிகளில் கடும் குளிர் வாட்டி வருகிறது.
இதனால் பொதுமக்கள் வெளியே வரமுடி யாமல் கடும் அவதி அடைந்து வருகிறா ர்கள். அதிகாலையி ல் வேலைக்கு செல்லும் கிராம மக்கள் கடும் குளிரால் வெளியே வர தயக்கம் காட்டி வரு கிறார்கள்.
மேலும் பலர் ஸ்சுவட்டர், குல்லா அணிந்த படியே வருகிறார்கள். மேலும் வனப்பகுதி களில் கடும் பனி பொழிவு பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு களை எரிய விட்டப்படியே செல்கிறார்கள்.
மேலும் கோபிசெட்டி பாளையம், நம்பியூர், சென்னிமலை, பெருந்துறை, கவுந்தப்பாடி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இன்று காலை வரை கடும் பனி பொழிவு பொழிந்து வருகிறது.
அதே போல் அந்தியூர் அடுத்த பர்கூர், தாமரை க்கரை, தட்டக்கரை போன்ற மலைப்பகுதியில் இன்று காலை பனி பொழிவு காரண மாக கடும் குளிர் வாட்டியது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. மேலும் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது.
ஈரோட்டில் இன்று காலை கடும் பனி பொழிவு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு களை எரிய விட்டபடியே சென்றனர். மேலும் பனியால் குளிர் வாட்டியது.
இதனால் பெரும்பாலான பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் கடும் குளிரால் குல்லா அணிந்தபடியே வந்தனர்.
சென்னிமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் வழக்கத்தை விட கடந்த 2 நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.
காலை சூரிய உதயத்தை கடந்தும் 8 மணி வரை பனிப்பொழிவு தொடர்வதால் காலை நேரத்தில் வேலைக்கு, தொழிற்சாலைக்கும், கைத்தறிநெசவுத் தொழிலுக்கும், விசைத்தறி குடோனுக்கு, நெசவு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், அதிகாலை நடைப்பயிற்சி செய்வோர் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
அதனால் வெளியில் செல்லும் பெரும்பாலானோர் குல்லா, ஸ்வெட்டர் அணியும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்றும் அதிகாலை 8 மணி வரை கடும் பனிப்பொழிவும், குளிர் நடுக்கம் இருந்தது.
- காலை மற்றும் இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக கடும் குளிர் நிலவி வருகிறது.
- விபத்து ஏற்படும் அபாயம் அளவுக்கு அதிகமாக உள்ளது.
கடலூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில் சீதோசன நிலை மாற்றத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் தற்போது கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. அதன்படி கடலூர் நகர், புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக காலை மற்றும் இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த கடும் குளிரால் சாலைகளில் தெருக்களில் திரும்பும் திசையெல்லாம் வெள்ளை புகை மண்டலமாக பணி அடர்ந்து காணப்படுகிறது.
இந்த பனியினால் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் செல்லும்போது முன்னால் செல்லும். வாகனங்கள் தெரியாத நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் அளவுக்கு அதிகமாக உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு செல்கின்றனர்.
குறிப்பாக சிறுவர் முதல் பெரியவர் வரை பணியினால் உண்டா கும் கடும் குளிரை தாங்க முடியாமல் அவதி ப்படுகின்றனர். மேலும் இதனால் பல்வேறு நோய்களும் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் கூட்டம் அலைமோதுகிறது. பிற மாவட்டங்களை விட கடலூர் மாவட்டம் வெயில் அடித்தாலும் மழை பெய்தாலும் கடும் பணி பெய்தாலும் அளவுக்கு அதிகமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சீதோசன நிலை மாற்றத்தின் போது ஏற்படும் ஒவ்வொரு இடர்பாடுகளிலும் அளவுக்கு அதிகமாக பாதிக்கின்றனர்.
- ராஜபாளையம் பஸ் நிறுத்தங்கள் மாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
- டவுன் பஸ்கள் எங்கெங்கு நிறுத்தப்பட்டுள்ளது? என்ற அறிவிப்பு பலகைகளை பழைய பஸ்நிலையம் முன்பு மக்கள் பார்லையில் படும்படி வைக்க வேண்டும்.
ராஜபாளையம்
ராஜபாளையம் சிறப்பு நிலை நகராட்சி ஆகும். இந்த நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. நகராட்சி சார்பில் 60 ஆண்டு காலமாக பழைய பஸ் நிலையம் நகரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மக்கள் தொகை பெருக்கம், வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சங்கரன்கோவில் சாலையில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு அதுவும் செயல்பட்டு வருகிறது. அதிகமான மக்கள் வந்து செல்லும் அளவிற்கு பழைய பஸ் நிலையம் உள்ளது.
இந்த பஸ் நிலையத்தை அகற்றிவிட்டு நவீன வசதிகளுடன் அமைக்க ராஜபாளையம் நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதற்காக கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பழைய பஸ் நிலையத்தை இடித்து அகற்றிவிட்டு 21 கடைகள், 2 உணவு விடுதிகள், 2 காத்திருக்கும் அறைகள், ஒரு புறக் காவல் நிலையம், பெண்களுக்கான பாலூட்டும் அறை போன்ற வசதிகளுடன் 2 நவீன கழிப்பிடங்களும் கட்டப்பட உள்ளன.
பஸ் நிலையம் புதுப்பி க்கும் பணிகள் காரணமாக பஸ்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் பஞ்சு மார்க்கெட் டி.பி. மில்ஸ் ரோடு வழியாக ெரயில்வே பீடர் ரோடு சென்று அங்கிருந்து தென்காசி சாலை வழியாக புதிய பஸ் நிலையம் செல்லவும், கிழக்கே செல்லும் பஸ்கள் மதுரை சாலை, பஞ்சு மார்க்கெட், டி.பி. மில்ஸ் ரோடு வழியாக மலையடிப்பட்டி ெரயில்வே கேட் சென்று மலையடிப்பட்டி வழியாக கிழக்கே செல்லவும், தெற்கே இருந்து வரும் பஸ்கள் தென்காசி சாலை வழியாக காந்தி சிலை ரவுண்டானா வந்து மேற்கு புறமாக முடங்கியார் ரோடு திரும்பி வட்டாட்சியர் அலுவலகம் சாலை வழியாக, மாடசாமி கோவில் சாலை வழியாக பஞ்சு மார்க்கெட் சென்று வடக்கே செல்லவும் மாறுதல் செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக பொதுமக்கள் அவதி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை நிவர்த்தி செய்யும் வகையில் டவுன் பஸ்கள் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கும், பஞ்சு மார்க்கெட்டில் இருந்து மலையடிப்பட்டி வழியாக கிழக்கு பகுதி செல்லவும், பஞ்சு மார்க்கெட் பகுதியில் இருந்து டி.பி. மில்ஸ் ரோடு, ெரயில்வே பீடர் ரோடு வழியாக முடங்கியார் சாலை, மாடசாமி கோவில் தெரு வழியாக ஒரு டவுன் பஸ் விடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஏற்கனவே ெரயில்வே மேம்பால பணிகள், பாதாள சாக்கடை பணிகள், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளால் சாலை மோசமான நிலையில் உள்ளது. இந்த நிலையில், பழைய பஸ் நிலைய மேம்பாட்டு பணிகளால் எந்தெந்த டவுன் பஸ்கள் எங்கெங்கு நிறுத்தப்பட்டுள்ளது? என்ற அறிவிப்பு பலகைகளை பழைய பஸ்நிலையம் முன்பு மக்கள் பார்லையில் படும்படி வைக்க வேண்டும்.
கிராமங்களுக்கு ெசல்லும் டவுன் பஸ்கள் புதிய பஸ்நிலையத்தில் இருந்தும், அரசுமகப்பேறு மருத்துவமனை முன்பிருந்தும் புறப்ப டுவதை பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் பலகைகளை பழைய பஸ்நிலையம் முன்பு வைத்தால் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு தலை சுற்றுவது கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளது.
கூடுதலாக சிரமங்களை சந்திக்கும் பொதுமக்கள் மீது ராஜபாளையம் ெரயில் நிலையத்தையும் மேம்ப டுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது வயிற்றில் புளியை கரைத்துள்ளது. நடிகர் வடிவேல் பாணியில், ''அடிக்குமேல அடியா அடிச்சுக்கிட்டே இருந்தா' எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரி இருக்கமுடியும்'' என்ற நிலை தான் ராஜபாளையம் மக்களின் நிலை என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த மாற்றத்தினால் கடலூர் மாவட்டம் முழு வதும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.
- பல்வேறு நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
கடலூர் :
தமிழகத்தில் கடந்து சில நாட்களுக்கு முன்பு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. கடலில் காற்று அதிகம் இருந்ததால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. தற்போது கடல் பகுதியில் அமைதி திரும்பியது. என்றாலும் கடலூர் மாவட்டத்தில் திடீர் என பருவநிலை மாறி உள்ளது. இந்த மாற்றத்தினால் கடலூர் மாவட்டம் முழு வதும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இந்த கடும் குளிர் கடலூர் நெல்லிக்குப்பம் பண்ருட்டி விழுப்புரம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் பனிமூட்டம் அடர்ந்த புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்வோர் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் முகப்பு விளக்கை எரிய விட்டபடி கடும் குளிரில் நடுங்கியபடி எப்போது விபத்து ஏற்படும் என்ற அச்சத்துடன் வாகனங்களை ஓட்டி செல்கிறார்கள். குறிப்பாக கடலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் கடுங்குளிர் வாட்டி வதைகிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கடுங்குளிரை தாங்காமல் பெரும் சிரமப்பட்டு செல்கிறார்கள். இந்த கடும் குளிரால் அவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் வயதானோர் இந்த குளிரால் ஏற்படும் உடல் நடுக்கத்தை தாங்க முடியாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர் அலுவல கத்திற்கு செல்லும் பணி யாளர்கள் அதிகாலை நேரத்தில் இந்தக் கடுங்குளிரிலும் குளிர்ந்த தண்ணீரில் குளித்து விட்டு செல்கின்றனர்.இந்த தண்ணீரால் அவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கடலூர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் ஏற்படும் கடும் குளிரிலிருந்து ஸ்வெட்டர் அணிந்து செல்கிறார்கள். எனவே பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய உடல் நல பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
- சி.புதூர் கிராமத்தில் வீதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
- சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள வாடிப்பட்டி யூனியனுக்குட்பட்ட சி.புதூர் கிராமத்தில் வடக்கில் இருந்து தெற்கு பக்கம் செல்லும் முக்கிய கழிவுநீர் வாய்காலில் குடியிருப்பு களில் இருந்து வெளியேறும் தண்ணீர் கலந்து சென்று தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் பாய்ந்து வந்துள்ளது. இந்தநிலையில் நிலத்தில் பாய்ந்து வந்த கழிவுநீர் பாதையை நில உரிமையாளர் மண்கொட்டி அடைத்து விட்டதால் 2 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மேற்கொண்டு செல்ல வழியின்றி வீதிகளில் வெள்ளம்போல் தேங்கி நிற்கிறது.
இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த பகுதி வீடுகளில் உள்ளவர்கள் கால்கள் நனையாமல் நடந்து செல்ல தற்காலிகமாக கல்பாதை அமைத்து நடந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊராட்சி தலைவர் பாண்டுரங்கன் கூறுகையில், இந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மாற்று வழியில்லாத நிலையால் தனியார் பட்டா இடத்தை ஆர்ஜிதம் செய்து கழிவுநீர் வாய்க்கால் கட்ட ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிள்ளோம். ஊரக வளர்ச்சி துறையின் அனுமதி கிடைத்த பின்னர் சாக்கடை நீர் வெளியேற வாய்கால் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை தெருவில் தேங்கி நிற்கும் தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.