search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனங்கள்"

    • நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு,தனியார் அலுவலகங்கள்,தொழில் நிறுவனங்கள், ஜவுளி,மளிகை மற்றும் சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது.
    • ஒரு சிலரின் சுயநோக்கம் காரணமாக வாகன ஓட்டிகள் -பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவது வேதனை அளிக்கிறது.

    உடுமலை

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு,தனியார் அலுவலகங்கள்,தொழில் நிறுவனங்கள், ஜவுளி,மளிகை மற்றும் சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடைகளுக்கு சரக்குகளை ஏற்றிக் கொண்டு வருகின்ற கனரக லாரிகள் பிரதான மற்றும் இணைப்பு சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்கின்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.இது குறித்து நிர்வாகமும் போக்குவரத்து போலீசாரும் கண்டு கொள்வதில்லை. போக்குவரத்து நெருக்கம் மிகுந்த பகல் வேளையில் கனரக வாகனங்கள் நகருக்குள் வரக்கூடாது என்ற விதி இருந்தும் அதை பின்பற்றாமல் வாகனங்களை கொண்டு வந்து சாலையில் நிறுத்தி விடுகின்றனர்.இதனால் அவசர கால உதவியை பெறுவதில் கூட தடங்கல்கள் ஏற்படுகிறது.

    ஒரு சிலரின் சுயநோக்கம் காரணமாக வாகன ஓட்டிகள் -பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவது வேதனை அளிக்கிறது. மேலும் சாலையை அடைத்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால் மாற்று வழியை தேடி செல்ல வேண்டிய சூழலும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது. இதனால் காலநேர விரையம் ,எரிபொருள் செலவும் கூடுதலாக ஏற்படுகிறது.

    எனவே போக்குவரத்து இடையூறு ஏற்படும் விதத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்துடன் கனரக வாகனங்கள் பகல் வேளையில் நகரப்பகுதியில் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

    • சென்டர் மீடியனில் மோதி தினமும் விபத்தில் வாகனங்கள் சிக்குகின்றன.
    • எச்சரிக்கை விளக்குகள் பொறுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் எல்.ஐ.சி. சந்திப்பு வளைவு பகுதியில் எச்சரிக்கை பலகை மற்றும் சென்டர் மீடியனில் ஒளிரும் ஸ்டிக்கர் எதுவுமி இல்லா ததால் தினந்தோறும் வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது.

    மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக தென்காசி, மதுரை, தேனி, திருநெல்வேலி, கொல்லம் ஆகிய நகரங்களுக்கு 24 மணி நேரமும் ஆயிரக்க ணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.

    ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நூற்பாலை உள்ளிட்ட ஆலைகளுக்கு மூலப்பொ–ருட்கள் மற்றும் உற்பத்தி பொருட் களை கொண்டு செல்ல தினசரி நூற்றுக்கணக் கான கனரக வாகனங்களும் இவ்வழியே செல்கிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் எல்.ஐ.சி. சந்திப்பு அருகே வளைவு பகுதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சாலையின் நடுவே சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது. உயரம் குறைவாக உள்ள சென்டர் மீடியனில் பேருந்து கள், கனரக வாகனங்கள் சிக்கி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    வளைவு பகுதி யில் எச்சரிக்கை பலகைகள் இல்லாதது மற்றும் சென்டர் மீடியனில் ஒளிரும் ஸ்டிக்கர் கள் இல்லாததால் இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சா லையில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது.

    இந்தநிலையில் கோயம் புத்தூரில் இருந்து ராஜபா ளையம் பகுதியில் உள்ள ஆலைக்கு மூலப்பொருட் களை ஏற்றி வந்த சரக்கு லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. லாரியில் சரக்குகள் அதிக அளவில் இருந்ததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.

    இதனால் மதுரை-கொல் லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு லாரியில் இருந்த சரக்குகள் இறக்கப் பட்டு பொக்லைன் எந்திரம் மூலம் லாரி அப்புறப்படுத் தப்பட்ட பின் போக்குவ ரத்து சீரானது.

    அதே போல் நேற்று இரவு அதே சென்டர் மீடியனில் சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. சென்டர் மீடியன் உயரத்தை அதிகரித்து எச்சரிக்கை விளக்குகள் பொறுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • முறையான நம்பர் பிளேட் இல்லாத 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ட பொம் மன் சிலை முன்பு உரிமையா ளரிடம் வாகனத்தை ஒப்படைத்தனர்.

    மதுரை

    தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்ப டுகிறதா என்பதை போக்குவரத்து போலீசார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வா ளர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பான்கள், விதி மீறும் வாகனங்களை கண்கா ணித்து அவர்களுக்கு உரிய தண்டனையும், அபராதமும் விதித்து வருகின்றனர். மதுரை மாநகர் பகுதியில் இருசக்கர வாகனங்களில் முறையாக நம்பர் பிளேட் இல்லாமல் குற்றச்செயல்க ளில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந் தது. இந்த நிலையில் மதுரை மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை துணை ஆணையர் குமார் தலைமையில், மாநகர பகுதிகள் முழுவதும் தீவிர வாகன சோதனை இன்று மேற் கொண்டனர். இதில் இரண்டு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகன பறிமுதல் செய்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அறிவுரை கூறினர்.

    மேலும் முறையாக நம்பர் பிளேட் பொருத்தி மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் அகற்றப்பட்டு புதிய நம்பர் பிளேட் வைத்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் 

    • வாகனங்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்து துரு பிடித்து கிடக்கின்றன.
    • காவல் துறை நடவடிக்கை எடுத்து வாகனங்களை பொது ஏலத்தில் விட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பள்ளிப்பட்டு:

    பள்ளிப்பட்டு போலீஸ் நிலைய எல்லைக்குள் பலவித குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை வைப்பதற்கு இடமில்லாமல் பள்ளிப்பட்டு தாலுகா அலுவலக வளாகத்தில் குவித்து வைத்துள்ளனர். இவ்வாறு வைத்துள்ள இந்த வாகனங்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்து துரு பிடித்து கிடக்கின்றன.

    இவற்றை பொது ஏலத்தில் விட்டால் அரசுக்கு ஓரளவிற்கு வருமானம் கிடைக்கும் என்றும் இந்த வாகனங்களும் நல்ல முறையில் இருக்கும் போது பொதுமக்கள் உபயோகப்படுத்த முடியும் என்றும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே திருவள்ளூர் மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுத்து வாகனங்களை பொது ஏலத்தில் விட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்கள் நடைபாதையை விட்டு இறங்கி ரோட்டில் நடந்து செல்ல வேண்டிய சிரமமும் உள்ளது.
    • நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரவேணு,

    கோத்தகிரி, சுற்றுவட்டாரங்களில் உள்ள சுமார் 300 மேற்பட்ட குக்கிராமங்களுக்கு மையப்பகுதியாக அமைந்துள்ளது.

    இங்கு தாசில்தார் அலுவலகம், கோர்ட்டு, அரசு கருவூலம், போலீஸ் நிலையம், பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்கள், பத்திரப் பதிவு அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பாலிடெக்னிக் மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ளதால் கோத்தகிரி நகர் பகுதி போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

    மேலும் கோத்தகிரி பகுதியில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாகன நிறுத்துமிடமும் ஏற்படுத்தப்படவில்லை.

    எனவே வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் நடைபாதையை விட்டு இறங்கி ரோட்டில் நடந்து செல்ல வேண்டிய சிரமமும் உள்ளது.

    எனவே நடைபாதைகளில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

    • குப்பைகளை சேகரிக்கவும் பேட்டரி மூலம் இயங்கும் ரூ.54 லட்சம் மதிப்பிலான 27 தள்ளுவண்டிகள் மற்றும் ரூ.95 லட்சம் மதிப்பிலான 13 இலகுரக வாகனம் ஆகியவை பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
    • நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் கலந்துகொண்டு வாகன பயன்பாட்டை தொடங்கி வைத்தனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி யில் உள்ள 33 வார்டுகளிலும் குப்பைகளை சேகரிக்கவும், வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கவும் பேட்டரி மூலம் இயங்கும் ரூ.54 லட்சம் மதிப்பிலான 27 தள்ளுவண்டிகள் மற்றும் ரூ.95 லட்சம் மதிப்பிலான 13 இலகுரக வாகனம் ஆகியவை பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

    நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் கலந்துகொண்டு வாகன பயன்பாட்டை தொடங்கி வைத்தனர்.

    நகராட்சி ஆணையாளர் சேகர், பொறியாளர் சரவ ணன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர், முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.

    இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ்பாபு, நகர் மன்ற துணைத் தலைவர், நகர தி.மு.க. செயலாளர் கார்த்திகேயன், துப்புரவு அலுவலர் வெங்கடாசலம், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சரவணன் முருகன், நகர இளைஞரணி அமைப்பாளர் செங்கோட்டுவேல், நகர துணை செயலாளர் ராஜவேல், நகர்மன்ற உறுப்பி னர்கள் செல்லம்மாள் தேவராஜன், புவனேஸ்வரி உலகநாதன், செல்வி ராஜவேல், சண்முக வடிவு, திவ்யா வெங்கடேசன், தாமரைச்செல்வி மணிகண்டன், டி.என்.ரமேஷ், முருகேசன், டபிள்யூ.டி.ராஜா, அண்ணாமலை, அடுப்பு ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • தடை செய்யப்பட்ட ஒலிப்பான்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
    • பொது மக்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகரத்தில் சமீப காலமாக சாலை விதிகளை அதிகளவில் மீறி வருகின்றனர். குறிப்பாக கனரக வாகனங்களில் தடைச்செய்யப்பட்ட ஒலிப்பான்கள் தனியார் வாகனங்கள் மட்டுமின்றி அரசு வாகனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஏதேனும் புகார் வந்தால் மட்டும் அதிகாரிகள் படைசூழ சென்று நடவடிக்கை எடுக்கின்றனர். பின்னர் விட்டு விடுகின்றனர். தொடர் நடவடிக்கை இல்லாத காரணத்தால் மீண்டும் பழைய நிலை தொடர்கிறது. தடை செய்யப்பட்ட ஒலிப்பான்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

    அதேபோன்று தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகரின் நெரிசல் மிகுந்த பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் செய்யும் சாகசங்கள் வாகன ஓட்டிகளுக்கு அச்சறுத்தலாக உள்ளது. இதனால் சில சமயங்களில் எதிரில் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்படுகிறது. அது மட்டு மல்லாமல் சாகச பயணம் செய்யும் இளைஞர்கள் விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது.

    இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் போது படிக்கும் பருவத்தில் எதற்காக மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்தோம் என பெற்றோர் யோசிக்கின்றனர்.

    நகரின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி அதன் வாயிலாக ஹெல்மெட் போன்றவற்றுக்கு ஆன்லைன் வாயிலாக அபராதம் விதிக்கிறார்கள். இது ஒரு புறம் இருந்தாலும் அவ்வப்போது காவல் துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அதிவேகமாக செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்து ஓட்டுகின்றனரா? என கண்காணிக்க வேண்டும். அதிலும் அதிகமாக வீடுகள் உள்ள பகுதிகளில் சிலர் கண் மூடிதனமாக வாகனங்களை ஓட்டுகின்றனர். அவ்வாறு ஓட்டி செல்பவர்களை பிடித்து உரிய தண்டனை கொடுத்தால் தான் அடுத்தவர்கள் அந்த தவறை செய்ய தயங்குவார்கள். எனவே போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சிறுவர்களை காப்பாற்ற வேண்டும். பொது மக்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏலத்தின் போது வாகனங்களின் உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    • முன்பணம் ஏலம் முடிந்த பின்னர் திரும்ப வழங்கப்படும்.

    திருவாரூர்:

    குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 103 வாகனங்கள் ஏலம் என உதவி ஆணையர் (கலால்) அழகர்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1979 மற்றும் மதுவிலக்கு-ஆயத்தீர்வை விதிகளின்படி பல்வேறு குற்ற வழக்குகளில் பயன்படுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 103 வாகனங்களை பொது ஏலம் மூலம் விற்பனை செய்து அரசுக்கு ஆதாயம் செய்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி பொது ஏலமானது திருவாரூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு, திருவாரூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு அமல்பிரிவு), தஞ்சாவூர் அரசு தானியங்கி பணிமனையின் பொறியாளர் ஆகியோர் முன்னிலையில் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 30-ந்தேதி காலை 10 மணியளவில் பொது ஏலம் நடைபெறவுள்ளது.

    பொது ஏலத்தின் போது வாகனங்களின் உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வாகன உரிமையாளர்கள் ஏலம் கோராதபட்சத்தில் பொது ஏலம் விடப்படும்.

    ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அவர்களது ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமத்துடன் முன்பணத்தொகையாக ரூ.1000 வருகிற 30-ந்தேதி அன்று காலை 10 மணியளவில் நேரில் செலுத்த வேண்டும்.

    வாகனங்களை பொது ஏல அடிப்படையில் ஏலம் எடுத்து கொள்ளலாம்.

    அவ்வாறு ஏலம் எடுக்காத நிலையில் ஏலத்தில் கலந்து கொள்ள செலுத்தப்பட்ட முன்பணம் ஏலம் முடிந்த பின்னர் திரும்ப வழங்கப்படும்.

    அதிக விலை கோருபவர்களுக்கு வாகனங்கள் ஏலம் விடப்படும் என்பதால் விருப்பமுடைய பொதுமக்கள் அனைவரும் ஏலத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆரல்வாய்மொழியில் இருந்து வாகனங்கள் அணிவகுத்து சென்றது
    • மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் கலந்துகொள்ள உற்சாக பயணம்

    நாகர்கோவில் :

    மதுரையில் இன்று அ.தி.மு.க. மாநாடு நடக்கிறது. மாநாட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண் டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இதையடுத்து தொண் டர்கள் மதுரையில் குவிந்த வண்ணம் உள்ளனர். குமரி மாவட்டத்தில் இருந்தும் அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் 10 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மதுரைக்கு சென்றனர். குமரி மேற்கு மாவட்டத்தில் இருந்து மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம் ஏற்பாட்டில் நிர்வாகிகள் வாகனங்களில் இன்று காலை மதுரைக்கு புறப்பட்டனர்.

    இதேபோல் கன்னியா குமரி கிழக்கு மாவட்டத் துக்குட்பட்ட அகஸ்தீஸ் வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் இருந்தும் ஏராளமான வாகனங்களில் நிர்வாகிகள் மதுரைக்கு புறப்பட்டு சென்றனர். நாகர்கோவில் பகுதியில் இருந்து முன்னாள் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் நாஞ்சில் முருகேசன், வடக்கு மாநகர செயலாளர் ஸ்ரீலிஜா ஏற்பாட் டில் ஏராளமான நிர்வாகிகள் வாகனங்களில் மதுரைக்கு புறப்பட்டு சென்றனர்.

    குமரி மேற்கு மாவட்டம், கிழக்கு மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதியில் இருந்து புறப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் ஆரல்வாய்மொழி யில் இருந்து ஒன்று சேர இன்று காலை மதுரைக்கு சென்றனர்.

    வாகனங்கள் அனைத் தும் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து சென்றது. குமரி மாவட் டத்தில் இருந்து புறப்பட்டு சென்ற நிர்வாகிகள் பலரும் சீருடையுடன் கையில் கட்சி கொடியுடன் புறப்பட்டு சென்றனர். இன்று காலையில் மட்டுமே 500-க் கும் மேற்பட்ட வாக னங்களில் நிர்வாகிகள், பொதுமக்கள் சென்றனர்.

    ஏற்கனவே நேற்று இரவும் 150-க்கும் மேற்பட்ட வாகனங்களில் நிர்வாகிகள் சென்று இருந்தனர். குமரி மாவட் டத்தில் இருந்து மதுரைக்கு சென்ற நிர்வாகிகளுக்கு தேவையான உணவு உள்பட அனைத்து வசதி களையும் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • தூய்மை பணியாளர்களுக்கு புதிய இலகுரக வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • ரூ1 கோடியே 67 லட்சம் மதிப்பில் புதிய வாகனங்கள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளை அப்புறப்படுத்த போதிய வாகனங்கள் இல்லாததால் தூய்மை பணியாளர்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

    இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் சிரமத்தை போக்க நாகப்பட்டினம் நகராட்சி சார்பில் புதிய இலகுரக வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அவுரிதிடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், நகர் மன்ற தலைவர் மாரிமுத்து, மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து ரூ1 கோடியே 67, லட்சம் ரூபாய் மதிப்பிலான 23, இலகுரக வாகனத்தின் சாவியினை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் நகராட்சி ஓட்டுநர்களிடம் ஒப்படைத்தனர்.

    • தக்கலையில் போலீசார் அதிரடி நடவடிக்கை
    • போதையில் வாகனம் ஓட்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையில் தக்கலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் பழைய பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட னர்.

    அப்போது குமார கோவில் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 43) என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். அவரை போலீ சார் பிடித்து சோதனை செய்த போது அவர் போதையில் இருந்தது தெரியவந்தது. தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது அவர் மது போதையில் வாகனம் ஓட்டியது உறுதியானது.

    உடனே அவர் மீது மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது, நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தியது, வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுமார் 100 வாகனங்கள் மீது வழக்கு பதிவுசெய்து ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    தக்கலை போக்குவரத்து போலீசாரின் அதிரடி நடவடிக்கை போதையில் வாகனம் மற்றும் ஹெல்மெட் அணியாமல் ஓட்டுபவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மாலைமலர் செய்தி எதிரொலி
    • கடந்த 2 மாதத்திற்கு முன் சாலை சீரமைக்கும் பணியை தொடங்கியது

    கன்னியாகுமரி :

    குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டில் குழித்துறையில் இருந்து பாலவிளை, ஈத்தவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் அருகில் அரசு மேல்நிலை பள்ளி மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. பாலவிளை ஈத்தவிளை பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் மாணவ - மாணவிகள் இந்த சாலை வழியாக தான் அலுவலங்களுக்கும் பள்ளிக்கும் செல்வார்கள்.

    இந்த சாலை பல வருடங்களாக குண்டும் குழியுமாக காணப்பட்டது. வாக னங்களோ பொது மக்களோ செல்ல முடியாமல் மிகவும் அவதிபட்டனர். மேலும் இந்த சாலை வழியாக செல்லும் சில வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்துள்ள சம்பவமும் நடந்துள்ளது.

    இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் பல முறை கோரிக்கை வைத்தும் இந்த சாலை சீரமைக்க படாமல் கிடந்தது. மேலும் சில மாதங்களுக்கு முன் வக்கீல் ஒருவர் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் இல்லை என்றால் தான் தீ குளிக்க போவதாக மண்எண்ணை பாட்டிலுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.

    மேலும் பொது மக்கள் சேர்ந்து இந்த சாலை சீரமைக்கப்படா விட்டால் போராட்டம் நடத்த போவதாக அறி வித்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்ற குழித்துறை நகராட்சி நிர்வாகம் கடந்த 2 மாதத்திற்கு முன் சாலை சீரமைக்கும் பணியை தொடங்கியது. அந்த வழியாக வாகனங்களோ பொது மக்களோ செல்ல முடியாத வாறு சாலையின் முன் பகுதியை அடைத்துள்ளனர். 2 மாதங்களாக மாற்று பாதைவழியாக செல்வதால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் பெரும் சிர மத்துக்கு ஆளாகி வந்தனர்.

    மேலும் நகராட்சி நிர்வாகம் கடந்த 2 வாரங்களுக்கு முன் பாலவிளை, ஈத்தவிளை சாலையில் இண்டர்லாக் பதிப்பித்து அப்டியே கிடப்பில் போடப்பட்டது. மேலும் வாகனங்களோ பொதுமக்களோ செல்லாத வாறு சாலையின் முன் பகுதியில் பள்ளம் தோண்டி அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதுகுறித்து மாலைமலரில் விரிவாக செய்தி பிரசுர மானது. இதைதொடர்ந்து சாலை பணி தொடங்கப்பட்டு இன்று முதல் வாகனங்கள் செல்வதற்கு சாலை திறக்கப்பட்டது. பொது மக்களும் வாகன ஓட்டிகளும் நிம்மதி யடைந்தனர்.

    ×