என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குழித்துறையில் முடங்கி கிடந்த சாலை வாகனங்கள் செல்ல திறப்பு
- மாலைமலர் செய்தி எதிரொலி
- கடந்த 2 மாதத்திற்கு முன் சாலை சீரமைக்கும் பணியை தொடங்கியது
கன்னியாகுமரி :
குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டில் குழித்துறையில் இருந்து பாலவிளை, ஈத்தவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் அருகில் அரசு மேல்நிலை பள்ளி மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. பாலவிளை ஈத்தவிளை பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் மாணவ - மாணவிகள் இந்த சாலை வழியாக தான் அலுவலங்களுக்கும் பள்ளிக்கும் செல்வார்கள்.
இந்த சாலை பல வருடங்களாக குண்டும் குழியுமாக காணப்பட்டது. வாக னங்களோ பொது மக்களோ செல்ல முடியாமல் மிகவும் அவதிபட்டனர். மேலும் இந்த சாலை வழியாக செல்லும் சில வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்துள்ள சம்பவமும் நடந்துள்ளது.
இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் பல முறை கோரிக்கை வைத்தும் இந்த சாலை சீரமைக்க படாமல் கிடந்தது. மேலும் சில மாதங்களுக்கு முன் வக்கீல் ஒருவர் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் இல்லை என்றால் தான் தீ குளிக்க போவதாக மண்எண்ணை பாட்டிலுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.
மேலும் பொது மக்கள் சேர்ந்து இந்த சாலை சீரமைக்கப்படா விட்டால் போராட்டம் நடத்த போவதாக அறி வித்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்ற குழித்துறை நகராட்சி நிர்வாகம் கடந்த 2 மாதத்திற்கு முன் சாலை சீரமைக்கும் பணியை தொடங்கியது. அந்த வழியாக வாகனங்களோ பொது மக்களோ செல்ல முடியாத வாறு சாலையின் முன் பகுதியை அடைத்துள்ளனர். 2 மாதங்களாக மாற்று பாதைவழியாக செல்வதால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் பெரும் சிர மத்துக்கு ஆளாகி வந்தனர்.
மேலும் நகராட்சி நிர்வாகம் கடந்த 2 வாரங்களுக்கு முன் பாலவிளை, ஈத்தவிளை சாலையில் இண்டர்லாக் பதிப்பித்து அப்டியே கிடப்பில் போடப்பட்டது. மேலும் வாகனங்களோ பொதுமக்களோ செல்லாத வாறு சாலையின் முன் பகுதியில் பள்ளம் தோண்டி அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதுகுறித்து மாலைமலரில் விரிவாக செய்தி பிரசுர மானது. இதைதொடர்ந்து சாலை பணி தொடங்கப்பட்டு இன்று முதல் வாகனங்கள் செல்வதற்கு சாலை திறக்கப்பட்டது. பொது மக்களும் வாகன ஓட்டிகளும் நிம்மதி யடைந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்