search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாவூர்சத்திரம்"

    பாவூர்சத்திரம் அருகே சண்டை கோழி வைத்து சூதாடிய 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாவூர்சத்திரம்:

    பாவூர்சத்திரம் அருகேயுள்ள மடத்தூர் வென்னியூரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் முனீஸ்வரன் (வயது 35). இவருக்கு சொந்தமான மாட்டு தொழுவம் அங்குள்ள ஆவரந்தாகுளம் பகுதியில் உள்ளது. அங்கு சண்டை கோழி வளர்த்து வருகிறாராம். இந்த நிலையில் அங்கு சண்டை கோழிகளை வைத்து சூதாட்டம் நடப்பதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கராஜ், ரெபின் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சண்டை கோழிகளை வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 4 சண்டை கோழிகள், ஊக்க மருந்து, ரொக்கம் ரூ.1050-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கீழப்பாவூரை சேர்ந்த மூக்கன் மகன் சுடலைகனி (26), குறும்பலாப்பேரியை சேர்ந்த பால்ராஜ் மகன் சக்திகிருஷ்ணன், பாவூர் சத்திரத்தை சேர்ந்த ஆதம்ஜெமினி மகன் டேனியல் ராஜ் (24), வீ.கே.புதூரை சேர்ந்த பூவலிங்கம் மகன் சந்தனராஜ் (24), திருமலைசெல்வன் மகன் சீதாராமன் (24) ஆயிரப்பேரியை சேர்ந்த செய்யது சுலைமான் மகன் அலிகார்கான் (24), மயிலப் புரத்தை சேர்ந்த செல்வ நாயகம் மகன் ஜெயபால் (36), மாதாபுரம் சிவலிங்கம் மகன் ராஜா (23), மகிழ் பால்துரை மகன் முருகன் (24) உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாவூர்சத்திரத்தில் பைக்குகள் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பாவூர்சத்திரம்:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 35). இவரும் கீழப்பாவூர் நேரு நகரை சேர்ந்த சுடலைமணி (50) என்பவரும் நேற்று மாலை தென்காசி சென்று விட்டு பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். பைக் பாவூர்சத்திரம் பள்ளி அருகில் வந்த போது இவர்களது பைக் முன்னால் சென்ற பாவூர்சத்திரம் வடக்கு தெருவை சேர்ந்த திராவிடமணி (36) என்பவர் பைக் மீது மோதியதாம்.

    இதில் சிவகுமார், சுடலைமணி ஆகியோருக்கு பலத்த காயமும், திராவிடமணிக்கு லேசான காயமும் ஏற்பட்டது. 3 பேரும் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இது குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×