search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுதங்கள்"

    திருப்பூரில் பங்களா வீட்டில் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டிய 6 பேர் கும்பல் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல், சப்-இன்ஸ்பெக்டர் மனோகர் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் திருப்பூர் கே.வி.ஆர். நகர் பகுதியில் உள்ள ஓடைக்காடு என்ற இடத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 6 பேர் கும்பல் பதுங்கி இருந்தது. அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார் அவர்களை நோக்கி சென்றனர். போலீசாரை பார்த்ததும் அக்கும்பல் ஓட்டம் பிடித்தது.

    போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    அப்போது அவர்களது பெயர் சண்முகம், வல்லரசு, கோகுல் ராஜ், வினித், வெற்றி செல்வன், சதிஷ்வரன் என்பது தெரிய வந்தது. இவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் உள்ளூரை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    அவர்களிடம் விசாரித்த போது ஓடைக்காடு பகுதியில் ஒரு பங்களா வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக தெரிவித்தனர். அந்த பங்களா வீட்டில் 3 பேர் இருப்பதாகவும் அவர்களது வீட்டில் நேற்று இரவு கொள்ளையடிக்க திட்டம் தீட்டி இருந்ததாகவும், கொள்ளையை தடுத்தால் கொலை செய்யவும் தயாராக இருந்ததாகவும் கூறினர். கடந்த 2 நாட்களாக இந்த பங்களா வீட்டை நோட்டமிட்டதாகவும் தெரிவித்தனர்.

    இதற்காக மிளகாய் பொடி, அரிவாள், இரும்பு ராடு, உளி மற்றும் முகமூடி தயார் செய்து வைத்து இருந்ததும் தெரிய வந்தது. இந்த ஆயுதங்களை அப்பகுதியில் உள்ள முள் காட்டில் பதுங்கி வைத்து இருப்பதாக தெரிவித்தனர்.

    அவர்களை முள் காட்டுக்கு அழைத்து சென்ற போலீசார் அங்கு பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். சரியான நேரத்தில் கொள்ளை கும்பலை போலீசார் பிடித்ததால் கொள்ளை தடுக்கப்பட்டு உள்ளது. கைதான 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
    ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் அந்தோணியார்புரத்தில் சிக்கிய ஆயுத குவியலை ஆய்வு செய்ய சென்னையில் இருந்து நிபுணர்கள் குழு வந்துள்ளது.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் அந்தோணியார்புரத்தில் கழிவுநீர் தொட்டி அமைக்க குழி வெட்டியபோது அங்கு புதைத்து வைக்கப்பட்டு இருந்த பயங்கர வெடி குண்டுகள், தோட்டாக்கள், கண்ணி வெடிகள் சிக்கின.

    அந்த பகுதியிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வெடிபொருட்களை நீதிபதி பாலமுருகன் நேரில் ஆய்வு செய்தார். வெடிபொருட்களை செயலிழக்கவும், அழிக்கவும் சென்னையில் உள்ள வெடி பொருட்கள் தலைமை கட்டுப்பாட்டு இணை அலுவலக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து ஒப்புதல் சான்றிதழ் வழங்க கோரி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

    அதைத் தொடர்ந்து நீதிபதியின் உத்தரவு கடிதம் சென்னையில் உள்ள வெடிபொருட்கள் தலைமை கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு வழங்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் வெடி பொருட்களை ஆய்வு செய்வதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தனர்.

    இங்கிருந்து கார் மூலம் தங்கச்சிமடத்துக்கு சென்றனர். இன்று பிற்பகலில் வெடி பொருட்களை ஆய்வு செய்தார்கள்.

    அவர்கள் ஒப்புதல் கடிதம் கொடுத்தவுடன் வெடி பொருட்களை செயழிலக்கவும், அழிக்கவும் நீதிபதி ஒப்புதல் வழங்குவார் என தெரிகிறது. #Tamilnews
    ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்து காரில் ஆயுதங்களுடன் சுற்றிய 4 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சோமங்கலத்தை அடுத்த நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவன் லெனின் (28). பிரபல ரவுடியான இவன் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளன. தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் இவன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    கூட்டாளிகளுடன் காரில் சுற்றி கைவரிசை காட்டும் இவன் படப்பை பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி. ராஜேஷ் கண்ணன், மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் தனிப்படை போலீசார் லெனினையும், அவனது கூட்டாளிகளையும் பிடிக்க வலைவிரித்தனர். இதன்படி ரவுடிகள் பதுங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்த போலீசார் துப்பாக்கி முனையில் லெனினை கைது செய்தனர்.

    அவனது கூட்டாளிகளான கரசங்கால் பகுதியை சேர்ந்த கோபி, எறுமையூர் பழனி, குரோம்பேட்டை ரகு ஆகியோரும் பிடிபட்டனர்.

    இவர்கள் பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள் ஆகியவையும், காரில் பதுக்கி வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து 4 பேரையும் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர். போலீஸ் பிடியில் சிக்கிய போது ரவுடி லெனின் தப்பி ஓட முயன்றான். அப்போது கால்வாயில் தவறி விழுந்த அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து லெனினை ஆஸ்பத்திரியில் அனுமதித்து போலீசார் சிகிச்சை அளித்தனர். இதன் பின்னர் அவர் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    ரவுடிகள் பயன்படுத்திய ஸ்கார்பியோ காரில் ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனியின் கார் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இந்த ஸ்டிக்கரை ரவுடிகள் பல இடங்களில் தவறாக பயன்படுத்தி உள்ளனர். அது பற்றியும் விசாரணை நடக்கிறது. போலியாக எம்.எல்.ஏ. ஸ்டிக்கரை தயாரித்து ரவுடிகள் காரில் ஒட்டி உள்ளனர். இதன் பின்னணி குறித்தும் விசாரணை நடக்கிறது.

    கிருமாம்பாக்கம் அருகே பயங்கர ஆயுதங்களை காட்டி பொதுமக்களை மிரட்டிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    பாகூர்:

    கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார் குப்பம் பேப்பர் மில் ரோட்டில் நேற்று மாலை 3 பேர் கொண்ட கும்பல் அவ்வழியே சென்ற பொதுமக்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டியது. மேலும் நாங்கள் ரவுடிகள். எங்களை தட்டிக்கேட்டால் கத்தியால் குத்தி கொலை செய்து விடுவோம் என மிரட்டியது.

    இதுபற்றி பொதுமக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறை போலீசார் இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கிருமாம் பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, தடி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பாலசந்தர் (19) மற்றும் அண்ணன்- தம்பிகளான உதயகுமார் (30), உதயமூர்த்தி (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ×