search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 184225"

    • தீயணைக்கும் படை வீரர்கள் மீட்டனர்
    • 4 நபர்கள் மட்டும் செல்லக்கூடிய அந்த லிப்டில் அதிகப்படியாக 9 நபர்கள் ஏறி மேல் மாடிக்கு சென்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி வடக்குத் தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்த வட மாநில சுற்றுலா பயணிகள் 9 பேர் இன்று அதிகாலை சூரியன் உதயமாகும் காட்சியைக் காண கன்னியாகுமரி கடற்கரைக்கு சென்றனர்.

    அவர்கள் கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்து விட்டு காலை 6.30 மணிக்கு அவர்கள் தங்கி இருக்கும் லாட்ஜுக்கு திரும்பி வந்தனர். இந்த லாட்ஜில் 4 நபர்கள் மட்டும் செல்லக்கூடிய "லிப்ட்" அமைக்கப்பட்டு இருந்த நிலையில் அதிகப்படியாக 9 நபர்கள் அந்த லிப்டில் ஏறி மேல் மாடிக்கு சென்றனர்.அப்போது"லிப்ட்" பழுதாகி பாதிவழியில் நின்றது.

    இதனால் அவர்கள் 9 பேரும் அந்த லிப்டில் சுற்றி தவித்துக் கொண்டிருந்தனர். இது பற்றி தகவல் அறிந்த லாட்ஜ் ஊழியர்கள் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அதிகாரி ஆரோக்கியதாஸ் தலைமையில் தீயனைக்கும் படை வீரர்கள் அந்த லாட்ஜுக்கு விரைந்து வந்தனர்.

    தீயணைக்கும் படை வீரர்கள் மீட்பு கருவி மூலம் லிப்டில் சிக்கி இருந்த 9 வடமாநில சுற்றுலா பயணிகளை சுமார் 1 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.

    • திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல முடியவில்லை
    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தின மும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி யில் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்க மிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகா லையில் சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலை யில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத் துடன் பயணம் செய்து விவே கானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர். திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    மேலும் கன்னியாகுமரி யில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமரா ஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற் கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தளங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்க ரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கட லோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண் காணிப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.

    • விஜய்வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
    • கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட அஞ்சு கூட்டு விலை அருந்ததியார் காலனியில் விஜய்வசந்த் எம்.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டநிதியில் இருந்து ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலை வகித்தார். விஜய் வசந்த் எம். பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரைபாரதி, மற்றும் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழிலாளர்களை பாதிக்கும் சட்டங்களை கண்டித்து நடக்கிறது
    • நவம்பர் 4-ந் தேதி தொடங்குகிறது

    நாகர்கோவில்:

    இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யூ.) மாநில பொதுச்செயலாளர் சுகுமாரன் இன்று நாகர்கோவிலில் நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய தொழிற்சங்க மைய(சி.ஐ.டி.யூ)த்தின் 15-வது மாநில மாநாடு வருகிற 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கி றது. தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், மக்களை பாதிக்கும் அரசின் கொள்கைகள் ஆகியவை சம்பந்தமாகவும் எதிர் கால நடவடிக்கைகள் குறித்தும் மாநாட்டில் திட்டமிடப்படும்.

    பொதுத்துறை நிறுவ னங்களை தனியாருக்கு விற்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இதனை கைவிட வேண்டும். மேலும் மத்திய அர சின் பல்வேறு சட்டத்திரு த்தங்கள் தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த மாநாடு நடக்கிறது.

    பெட்ரோல்- டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு ஒரு புறம் இருக்க, படித்த இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. வேலை வாய்ப்பை உருவாக்குவதில் மத்திய அரசு தவறி விட்டது.

    தி.மு.க. அரசு தொழிலா ளர் சம்பந்தமான பிரச்சினை களில் உாிய தீர்வுகள் காண நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்கள் சம்பந்தமான தேர்தல் வாக்குறுதியை விரைந்து நிறைவேற்ற வேண்டும். இதற்கு மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்படும்.

    குமரி மாவட்டத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் தகவல் தொழில் நுட்ப பூங்கா ஆகிய வற்றை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தோட்டங்களை அதிகாித்தி டவும், முந்திரி தொழிலை பாதுகாத்திடவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேங்காப்பட்டணம் துறைமுகத்தை மீண்டும் உயிரிழப்பு ஏற்படாத வகையில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். குமரி மாவட்டத்தில் மக்கள் ஒற்றுமை, அமைதி, வளர்ச்சியை மையமாக வைத்து வருகிற 3-ந் தேதி யன்று சிறப்பு கருத்த ரங்கம், கலைவிழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடை பெறஉள்ளது.

    முன்னதாக சமூக ஒருமைப்பாட்டை முன்வைத்து வருகிற 2-ந் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மினி மாரத்தான் நடைபெற உள்ளது. வருகிற 6-ந் தேதி நாகர்கோவிலில் சுமார் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் பேரணி, பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாநாடு வரவேற்புக்குழு தலைவர் செலஸ்டின், செயலாளர் தங்கமோகன் மற்றும் நிர்வாகிகள் சித்ரா, அகமது உசேன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • ெரயில் பெட்டிகளுக் கான இணைப்பு துண்டிக் கப்பட்டதையடுத்து ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து துண் டிக்கப்பட்ட ரெயில் பெட்டிகளின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஏற்பட்டதால் ரயிலில் இருந்த பெரும்பாலான பயணிகளும் ெரயிலை விட்டு இறங்கினர்.
    • பின்னர் அவர்கள் நாகர்கோவில் ெரயில் நிலையத்திலிருந்து பஸ் மூலமாக கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றனர்.சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சீரமைப்பு பணியை மேற்கொண்ட ஊழியர்கள் துண்டிக்கப்பட்ட இணைப் பை சரி செய்தனர்.

    நாகர்கோவில், அக்.27-

    கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கும் தினமும் எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்பட்டு வரு

    கிறது.

    இணைப்பு துண்டிப்பு

    நேற்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ெரயில் இன்று அதிகாலை 5.20 மணிக்கு நாகர்கோவில் ெரயில் நிலையத்தை வந்த டைந்தது. இதையடுத்து ெரயிலில் இருந்து பயணிகள் இறங்கினார்கள். கன்னியா குமரிக்கு செல்லும் ெரயில் பயணிகள் மட்டும் ெரயிலில் அமர்ந்திருந்தனர்.

    நாகர்கோவில் ெரயில் நிலையத்திலிருந்து நீண்ட நேரம் ஆகியும் ெரயில் கன்னியாகுமரிக்கு புறப்பட வில்லை. ெரயிலில் இருந்த பயணிகள் ெரயிலை விட்டு இறங்கினர். இது குறித்து விசாரித்த போது என்ஜின் பெட்டிக்கும் அதனுடைய இணைப்பு பெட்டிக்கும் இடையே உள்ள இணைப்பு துண்டிக் கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    சரி செய்தனர்

    ெரயில் பெட்டிகளுக் கான இணைப்பு துண்டிக் கப்பட்டதையடுத்து ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து துண் டிக்கப்பட்ட ரெயில் பெட்டிகளின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஏற்பட்டதால் ெரயிலில் இருந்த பெரும்பாலான பயணிகளும் ெரயிலை விட்டு இறங்கினர்.

    பின்னர் அவர்கள் நாகர்கோவில் ெரயில் நிலையத்திலிருந்து பஸ் மூலமாக கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றனர்.சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சீரமைப்பு பணியை மேற்கொண்ட ஊழியர்கள் துண்டிக்கப்பட்ட இணைப் பை சரி செய்தனர்.

    தாமதம்

    இதைத் தொடர்ந்து ெரயிலை கன்னியாகுமரிக்கு கொண்டு செல்ல நடவ டிக்கை எடுக்கப்பட்டது. காலை 7.40 மணிக்கு நாகர்கோவில் ெரயில் நிலை யத்திலிருந்து புறப்பட்டு கன்னியா குமரிக்கு சென்றது. சுமார் 2 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக சென்றது.

    ெரயிலில் ஒரு சில பயணிகள் மட்டுமே இருந்த னர். ெரயில் நிலையத்தில் இணைப்பு துண்டிக்கப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது. நடுவழியில் இதே போன்று சம்பவம் நடந்திருந்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டிருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்த னர்.

    • சூரிய கிரகணம் நேற்று மாலை 5.17 மணிக்கு தொடங்கி 6.20 மணி வரை நீடித்தது.
    • பகவதி அம்மன் விக்ரக சிலையை சுற்றி தர்ப்பை புல்லால் கட்டி பட்டு துணியால் மூடி வைத்து இருந்தனர்.

    கன்னியாகுமரி:

    சூரிய கிரகணம் நேற்று மாலை 5.17 மணிக்கு தொடங்கி 6.20 மணி வரை நீடித்தது. இந்த கிரகணம் கன்னியாகுமரியில் ஒரு சில நிமிட நேரம் மட்டும் தெரிந்தது.

    இதை கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் சூரிய அஸ்தமன கடற்கரையில் நின்றபடி பைனாகுலர் மூலம் பார்த்தனர். சிலர் தங்களது செல்போன்களில் அதனை புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த சூரிய கிரகண நேரத்தில் கோவில்களில் மூலஸ்தான கருவறையில் கிரகணத்தினால் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக கோவில் நடை அடைக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி சூரிய கிரகணத்தையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நேற்று மாலை 3 மணி நேரம் நடை அடைக்கப்பட்டுஇருந்தது. மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுவதற்கு பதிலாக 3 மணி நேரம் தாமதமாக இரவு 7 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இந்த 3 மணி நேரமும் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. சூரிய கிரகண நேரத்தில் கிரகணத்தினுடைய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பகவதி அம்மன் விக்ரக சிலையை சுற்றி தர்ப்பை புல்லால் கட்டி பட்டு துணியால் மூடி வைத்து இருந்தனர்.

    சூரிய கிரகணம் முடிந்த பிறகு கோவிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு பகவதி அம்மன் விக்ரக சிலைக்கு அபிஷேகம் நடத்தி கோவில் நடை திறக்கப்பட்டது. அதன் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    • இரவு 7 மணிக்கு பிறகு பரிகார பூஜைகள் முடிந்து நடை திறக்கப்படுகிறது
    • பகவதி அம்மன் விக்ரக சிலையைசுற்றி தர்ப்பை புல்லால் கட்டி பட்டு துணியால் மூடி வைக்கப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல தினமும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று மாலை 5.27 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த சூரிய கிரகண நேரத்தில் கோவில்களில் மூலஸ்தான கருவறையில் கிரகணத்தினால் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக கோவில் நடை அடைக்கப்படுவது வழக்கம். அதன்படி சூரிய கிரகணத்தையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று மாலை 3 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது.

    மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுவதற்கு பதிலாக 3 மணி நேரம் தாமதமாக இரவு 7 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இந்த 3 மணி நேரமும் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். சூரிய கிரகண நேரத்தில் கிரகணத்தினுடைய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பகவதி அம்மன் விக்ரக சிலையைசுற்றி தர்ப்பை புல்லால் கட்டி பட்டு துணியால் மூடி வைக்கப்படுகிறது.

    சூரிய கிரகணம் முடிந்த பிறகு கோவிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு பகவதி அம்மன் விக்ரக சிலைக்கு அபிஷேகம் நடத்தி கோவில் நடை திறக்கப்படுகிறது. அதன் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    • ஐப்பசி மாத சனி பிரதோஷம் நேற்று மாலை நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு 9 வகையான பிரசாதம் வழங்கப்பட்டது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பொற்றையடி வைகுண்ட பதியில் 1800 அடி உயர மருந்துவாழ்மலை அமைந்து உள்ளது. இந்த மலையில் ஜோதிலிங்கேஸ்வரர் உடனுறை ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் கோவில் அமைந்து உள்ளது.

    இந்த கோவிலில் ஐப்பசி மாத சனி பிரதோஷம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கும் மூலவரான ஜோதி லிங்கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணை, மஞ்சள் பொடி, மாப்பொடி, திருமஞ்சனப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், நாட்டு சர்க்கரை, இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம், உள்பட 16 வகையான வாசனைத் திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது.

    இந்த அபிஷேகத்தை சிவாச்சாரியார் பிரபாகரன் அடிகளார் நடத்தினார். பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் சிவனடியார் பேராசிரியர் அசோகன் தலைமையில் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண்பொங்கல் கொண்டக்கடலை, எள்ளு, உளுந்து, பஞ்சாமிர்தம், சாம்பார் சாதம் ஆகிய 9 வகையான அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    • கன்னியாகுமரி போலீசார் விவேகானந்தபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • கிறிஸ்தவ ஆலயம் மற்றும் கோவில்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் தலைமையில் போலீசார் நேற்று கன்னியாகுமரி விவேகானந்தபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அங்கு சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக் கிளில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீ சார் அவரை போலீஸ் நிலை யத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் சுசீந்திரம் அக்கரை பகுதியை சேர்ந்த திராஜ் (வயது 19) என்பதும், தற்போது தெற்கு குண்டலில் தங்கி இருந்து கிறிஸ்தவ ஆலயம் மற்றும் கோவில்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் அவர் 7 வழக்குகளில் சம்பந் தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து திராஜை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் நாகர்கோவிலில் உள்ள ஜெயிலில் அடைத்தனர்.

    • மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்ற பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
    • 26-ந்தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மின் வினியோக செயற்பொறியாளர் ஜவகர் முத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மற்றும் கேப் கன்னியாகுமரி உபமின் நிலையத்தில் வருகிற 26-ந்தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மைலாடி, வழுக்கம்பாறை, கீழ் மணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம், சின்னமுட்டம், கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், கோழிக்கோட்டுபொத்தை, வாரியூர், அகஸ்தீஸ்வரம், மருங்கூர், தேரூர், தென்தாமரைகுளம், ஊட்டுவாள்மடம் உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேலும் மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்ற பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • அதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ திருவிழாவும், அதற்கு முன்பாக அடுத்தமாதம் (நவம்பர் 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை, 4 நாட்கள் பவித்ர உற்சவ திருவிழாவும் நடத்தப்பட உள்ளது.
    • அதைத்தொடர்ந்து சீனிவாசத் திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட உள்ளது.

    கன்னியாகுமரி, அக்.20-

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்த புரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் ரூ.22 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கோவிலின் மூலஸ்தானத்தில் ஸ்ரீதேவி- பூதேவியுடன் வெங்கடேச பெருமாள் எழுந்தருளியுள்ளார். இது தவிர பத்மாவதி தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருட பகவான் சன்னதி ஆகிய சன்னதிகளும் தனித்தனியாக கட்டப்பட்டுள்ளன. கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த கோவிலில் திருப்பதியை போன்று பிரம்மோற்சவ திருவிழா நடத்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து பக்தர்களின்கோரிக்கையை ஏற்று இந்த கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. அந்த அடிப்படையில் பிரம்மோற்சவ திருவிழாவின் போது 10 நாட்களும் காலை மற்றும் மாலை நேரங்களில் கோவிலை சுற்றி வெங்கடாஜலபதி சுவாமி பவனி வருவதற்காக 12 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    இந்த நிலையில் திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 7 தலைநாகம் கொண்ட பெரிய சேஷ வாகனம், அனுமந்த வாகனம், அன்ன வாகனம் ஆகிய 3 புதிய வாகனங்கள் கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜபதி கோவிலுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இது தவிர 5 தலை நாகம் கொண்ட சின்னசேஷ வாகனம், சிம்மவாகனம் ஆகிய மேலும் 2 புதிய வாகனங்கள் திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இருந்து கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீதி உள்ள வாகனங்கள் பக்தர்கள்மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் கும்பகோணத்தில் வடிவமைக்கப்பட்டு விரைவில் கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ திருவிழாவும், அதற்கு முன்பாக அடுத்தமாதம் (நவம்பர் 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை, 4 நாட்கள் பவித்ர உற்சவ திருவிழாவும் நடத்தப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து சீனிவாசத் திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட உள்ளது.

    • கடற்கரை வெறிச்சோடியது
    • மேகமூட்டத்தினால் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியும் மாலையில் சூரியன் மறையும் காட்சியும் தெரியவில்லை.

    கன்னியாகுமரி:

    உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சபரிமலை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகமாக காணப்படும். இதேபோல ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை சீசனை யொட்டியும் வருகை அதிகமாக இருக்கும்.

    தற்போது சீசன் இல்லாத இந்த நேரத்திலும் வாரத்தின் கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும். இருப்பினும் நாளொன்றுக்கு சராசரி 5ஆயிரம் முதல் 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வரை கன்னியாகுமரிக்கு வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து அடிக்கடி தடைபடுகிறது. இதனால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்து வருகிறது.

    சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இல்லாமல் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. தொடர் மழையின் காரணமாக கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக மழை மேகமூட்டத்தினால் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியும் மாலையில் சூரியன் மறையும் காட்சியும் தெரியவில்லை. இதனால் அதிகாலை வேளையில் சூரியன் உதயமாகும் காட்சியை காணவும், மாலை வேளையில் சூரியன் மறையும் காட்சியை காணவும் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அடியோடு குறைந்துவிட்டது.

    ×