search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 184225"

    • கொரோனா பிரச்சினையின் போது மூடப்பட்ட பூங்கா இதுவரை திறக்கப்படவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே கோவளம் பகுதியில் பேவாட்ச் எனப்படும் உல்லாச நீர் வீழ்ச்சி பூங்கா உள்ளது. கொரோனா பிரச்சினையின் போது மூடப்பட்ட பூங்கா இதுவரை திறக்கப்படவில்லை.

    இந்த நிலையில் அந்த பூங்காவில் இருந்த இரும்பு பொருட்கள் மற்றும் என்ஜின் ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

    இது பற்றி பூங்கா காவலாளி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • பழுதான மின் கம்பிகள் மற்றும் மின் தளவாட சாதனங்களை மாற்றி புதிதாக அமைக்கும் பணி நடைபெற உள்ளது
    • குளச்சல் மெயின் ரோடு, அரசு மருத்துவமனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் குளச்சல் விநியோகப் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உயரழுத்த மின் பாதையில் பழுதான மின் கம்பிகள் மற்றும் மின் தள வாட சாதனங்களை மாற்றி புதிதாக அமைக்கும் பணி நாளை (27-ந் தேதி) மற்றும் மறுநாள் (28-ந் தேதி) நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குளச்சல் பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், நெசவாளர் தெரு, பள்ளி விளாகம்அழகனார் கோட்ட விளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    28-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குளச்சல் மெயின் ரோடு, அரசு மருத்துவமனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். மேற்கண்ட தகவலை இரணியல் மின் விநியோகம் உதவி செயற் பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    கன்னியாகுமரி உப மின்நிலையத்திலும் நாளை (27-ந் தேதி) மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மைலாடி,திருமூலநகர், வழுக்கம்பாறை, கீழ மணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம்,கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சு கிராமம், கோழிக்கோட்டுப்பொத்தை, வாரியூர், சின்னமுட்டம் மற்றும் பால்குளம் பகுதிகளில் மின்தடை அமலில் இருக்கும்.

    மேற்கண்ட தகவலை நாகர்கோவில் மின்விநியோக செயற்பொறியாளர் ஜவகர் முத்து தெரிவித்துள்ளார்.

    கிருஷ்ணன்கோவில் விநியோக பிரிவிற்குட்பட்ட டென்னிசன் ரோடு உயர்அழுத்த மின்பாதையில் நாளை மறுநாள் (28-ந் தேதி) பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டென்னிசன் ரோடு, மணி மேடை, நாகராஜா கோவில் குறுக்கு சாலை பகுதிகளில் மின்சாரம் இருக்காது என பார்வதிபுரம் மின்விநியோக உதவி செயற்பொறியாளர் ரமணிபாய் தெரிவித்து உள்ளார்.

    • இன்று மகாளய அமாவாசை
    • பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடும் நடந்தது

    கன்னியாகுமரி:

    இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையும் ஒன்று.

    இந்த ஆண்டு மகாளய அமாவாசை இன்று கடை பிடிக்கப்படுகிறது.

    இதையொட்டி கன்னி யாகுமரி கடலில் புனித நீராடுவதற்காக இன்று அதிகாலை 2 மணி யில் இருந்தே ஏராளமான பக்தர் கள் கன்னியாகுமரியில் குவியத் தொடங்கினார்கள். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள்.

    அதன் பிறகு ஈரத் துணியுடன் கரைக்கு வந்துகடற்கரையில் அமர்ந்து இருந்தபுரோகிதர்கள் மற்றும் வேதமந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தார்கள்.

    மகாளய அமாவாசைய யொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை இன்று அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது. அதன் பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற பூஜைகள் நடந்தது.

    மகாளய அமாவாசையை யொட்டி காலை 11 மணிக்கு அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்கஆபரணங்கள் அணிவிக்கப்பட்டுசந்தனக்காப்புஅலங்கா ரத்துடன் அம்மன்பக்தர்களுக்குஅருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 11.30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. வடக்கு பிரதான நுழைவுவாசல் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்தனர்.

    மகாளய அமாவாசையை யொட்டிபக்தர்களின் தரிசனத்துக்காக கோவி லில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. பலத்த போலீஸ் பாது காப்பும் போடப்பட்டு இருந்தது. மாலை 6.30 மணிக்குசாயராட்சை தீபாராதனையும் இரவு 8.30 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள்பிர காரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வர செய்கிறார்கள்.

    பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அதன் பிறகு அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாரா தனையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வா கம் சார்பில் சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    • இதுவரை 1933 மாணவிகள் பயனடைந்துள்ளனர்
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ1,000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.

    மேலும், மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். தனியார் பள்ளியில் Right to Education (RTE) யின் கீழ் 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயின்ற பின் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

    மாணவிகள் 8, 10, 12 வகுப்புகளில் படித்து பின்னர் முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது. 2022-2023-ம் கல்வியாண்டில், மாணவிகள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர். இணையதளம் வழியாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

    மேலும், இதர முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும், தொழிற்கல்வியை பொருத்த மட்டில் மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்கு செல்லும் மாணவி களுக்கும். மருத்துவக் கல்வியைப் பொருத்தமட்டில் நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

    2021-2022-ம் ஆண்டில், இறுதியாண்டு பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய இயலாது. ஏனெனில் ஒரு சில மாதங்களில் இந்த மாணவியர்கள் தங்களது இளநிலைப் படிப்பினை நிறைவு செய்துவிடுவார்கள். இத்திட்டத்தின் கீழ் இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயனடைய இயலும். முதுநிலை படிப்பு பயிலும் மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது.

    இத்திட்டத்தில் பயன்பெறுவது குறித்து தங்களுக்குத் தேவையான தெளிவுரைகள், கூடுதல் விவரங்களை கட்டணமில்லா தொலைப்பேசி எண்.14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம்.

    இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும் இத்திட்டத்திற்காகப் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப்பங்களை ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததற்கான சான்று மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் போன்ற ஆவண நகல்களைக் கொண்டு மாணவியர்கள் தாங்களாகவே தங்களது கைப்பேசி அல்லது கணினி வாயிலாகவும் இணையதளம் முகவரியை பயன்படுத்தி பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

    இதனை சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்து கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் இதுவரை 1933 கல்லூரி மாணவிகள் கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நவராத்திரி திருவிழா நாளை தொடங்குகிறது
    • நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த திருவிழா அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. விழாவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 11-30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் மதியம் 12 மணிக்கு அன்னதானமும் மாலை 6:30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும்நடக்கிறது. 1-ம் திருவிழாவானநாளை காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் அம்பாள் கொலுமண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. 8 மணிக்கு பஜனையும் மாலை 5.30 மணிக்கு மங்கள இசையும் ஆறு மணிக்கு ஆன்மீக அருளுரையும் 6.30 மணிக்கு சிறப்பு பட்டிமன்றமும் இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக்கலைமான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது.

    2-ம் திருவிழாவான (27-ந்தேதி) மாலை 6 மணிக்கு சமய உரையும் 6.30 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக்கலைமான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும்நடக்கிறது. 3-ம் திருவிழாவான (28-ந்தேதி) மாலை 6மணிக்கு ஆன்மீக உரையும் 6.30 மணிக்கு பரதநாட்டியமும் இரவு 9மணிக்கு அம்மன் வெள்ளிக்கலைமான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும்நடக்கிறது. 4-ம் திருவிழாவான 29-ந்தேதி மாலை 6மணிக்கு ஆன்மீக உரையும் இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் 9 மணிக்கு அம்மன் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது.

    5-ம் திருவிழாவான (30-ந்தேதி) மாலை 6 மணிக்கு ஆன்மீக உரை யும் இரவு 7 மணிக்கு நாட்டிய நடன நிகழ்ச்சியும் 9 மணிக்கு அம்மன் வெள்ளிக்காம தேனு வாகனத்தில் எழுந்த ருளி பவனி வருதலும் நடக்கிறது. அப்போது இலங்கையை சேர்ந்த அறங்காவலர் டாக்டர் செந்தில்வேள் தலைமையில் இலங்கை பக்தர்கள் அம்மன் எழுந்தருளியிருக்கும் வாகனத்தின் மீது கூடை கூடையாக மலர் தூவி வழிபடுகிறார்.

    6-ம் திருவிழாவான (1-ந்தேதி) காலை 10 மணிக்கு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஆன்மீக உரையும் 6-30 மணிக்கு பக்தி மெல்லிசை கச்சேரியும் இரவு 9மணிக்கு அம்மன் வெள்ளிக்கலைமான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது. 7-ம் திருவிழாவான 2-ந்தேதி மாலை 6 மணிக்கு ஆன்மீக உரையும் இரவு 7 மணிக்கு பக்தி பஜனையும் ஒன்பது மணிக்கு அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்திருளி பவனி வருதலும் நடக்கிறது.

    8-ம் திருவிழாவான (3-ந்தேதி) மாலை 6 மணிக்கு ஆன்மீக உரையும் இரவு 7 மணிக்கு வயலின் இன்னிசை கச்சேரியும் 9மணிக்கு அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது. 9-ம் திருவிழாவான4-ந்தேதி மாலை 6 மணிக்கு ஆன்மீக உரையும் இரவு 7 மணிக்கு பக்தி கர்நாடக இசைப் பாட்டும் 9 மணிக்கு அம்மன் வெள்ளிக்கலைமான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும் நடக்கிறது.

    10-ம் திருவிழாவான (5-ந்தேதி) காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள்அலங்காரமண்டபத்தில்அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    அதை தொடர்ந்து மதியம் 11-30 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்கா ரத்துடன் மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக் கிறது.

    கோவிலில் இருந்து புறப்படும் இந்த ஊர்வலம் கன்னியாகுமரி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, மெயின் ரோடு, ரெயில் நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைபுளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமத்தலிங்கபுரம், தங்க நாற்கர சாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மகா தானபுரத்தில் உள்ள வேட்டை மண்டபத்தை மாலை சென்று அடைகிறது. அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது.

    பின்னர் மகாதானபுரம் பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வீதி உலா முடிந்ததும் அம்மன் வெள்ளி பல்லக்கில் கன்னி யாகுமரிக்கு புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. அங்கு நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    அதன் பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் கள் நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் இணைந்து செய்து வருகிறார்கள்.

    • மாவட்ட விளையாட்டு அலுவலர் தொடங்கி வைத்தார்
    • சாதனை பயணம் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது

    கன்னியாகுமரி:

    ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் சபீர் (வயது27). இவர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு 58 மணி நேரத்தில் 3ஆயிரத்து 600 கிலோமீட்டர் தூரத்தை காரில் கடந்து சாதனை நிகழ்த்தி உள்ளார்.

    இதனை முறியடிக்கும் வகையில் கன்னியா குமரியில் இருந்து காஷ்மீருக்கு அதே தூரத்தை 48 மணி நேரத்தில் கடக்க சபீர் திட்டமிட்டார். அதன்படி அவரது சாதனை பயணத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி 4 வழி சாலை முடிவடையும் சீரோ பாயிண்ட் பகுதியில் நடந்தது.

    அவரது சாதனை பய ணத்தை குமரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலு வலர் டேவிட் டேனியல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சபீர், தேசிய நெடுஞ்சாலை 44 வழியாக பல்வேறு மாநிலங்களை கடந்து 3600 கிலோ மீட்டர் தூரத்தை 48 மணி நேரத்தில் கடந்து காஷ்மீர் சென்றடைகிறார்.

    இதன் மூலம் இவரது சாதனை பயணம் சாதனை பயணம் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது புத்தகத்தில் இடம் பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • தேதிப்படி திருவிழா 23-ந்தேதி தொடங்குகிறது
    • 2 நாட்கள் நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலம் தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்றாகும்.

    இந்தத் திருத்தலத்தில் திருவிழா முன்பு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 10 நாட்கள் நடைபெறும். இந்த மாதத்தில் மீன் தொழில் அதிகமாக இருந்து வந்ததால் தேர்பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி கள் நடத்துவதில் சிரமம் இருந்து வந்தது. இதன் காரணமாக செப்டம்பர் மாதம் நடைபெற்றுவந்த திருவிழா பொதுமக்களின் வசதிக்காக டிசம்பர் மாதம் மாற்றி வைக்கப்பட்டது.

    இருப்பினும் பாரம்பரிய மாக நடந்து வந்த செப்டம்பர் மாத திருவிழாவை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 2 நாட்கள் மட்டும் தேதிப்படி திருவிழா என நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேதிப்படி திருவிழா வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது.

    இதனையொட்டி அன்று மாலை 6.30 மணிக்கு ஜெபமாலையும் மாலை ஆராதனையும் நற்கருணை ஆசீரும் நடக்கிறது. 2-வது நாளான 24-ந்தேதிகாலை 6 மணிக்கு திருவிழா திருப்ப லியும் முதல் திருவிருந்து விழாவும் நடக்கிறது. பின்னர் மாலை 5.30 மணிக்கு நற்கருணைப் பவனியும் அதைத்தொடர்ந்து மறையுரை நற்கருணை ஆசீரும் நடக்கிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்தந்தை ஆன்றனி ஆல்காந்தர், பங்குப் பேரவை துணைத்தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், பொரு ளாளர் தீபக் மற்றும் இணை பங்குதந்தையர்கள், பங்கு பேரவையினர் அனைத்து அன்பிய ஒருங்கி ணைப்பாளர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
    • பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் என். எஸ். எ.ஸ் மற்றும் என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை யொட்டி கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி, கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ், தமிழ்நாடு கடற்கரை தூய்மை இயக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கன்னியா குமரி கடற்கரையில் மெகா தூய்மை பணி நடந்தது.

    இந்த தூய்மைப்பணி தொடக்க விழா கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் நடந்தது. குமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் சீதாராமன் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கடற்கரை தூய்மை பணி முகாமை கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்.

    கன்னியாகுமரி போலீஸ் டி. எஸ். பி. ராஜா, சுற்றுச்சூழல் கோட்ட பொறுப்பாளர் கண்ணன், கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன், பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஸ், அகஸ்தீஸ்வரம் விவே கானந்தா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராம்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் முத்துசாமி நன்றி கூறினார்.

    அதன்பிறகு கன்னியா குமரி திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் தூய்மை பணி நடந்தது. இதில் பள்ளி, கல்லூரிமாணவ- மாணவிகள் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் என். எஸ். எ.ஸ் மற்றும் என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டு கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பை கூழங்களை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    • 33 அதிநவீன சுழலும் கேமிராக்கள் அமைப்பு
    • ரூ.5 லட்சம் செலவில் பணி நடந்து வருகிறது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் பிரதிஷ்டைசெய்யப்பட்ட கோவில் ஆகும்.

    இந்த கோவிலில் உள்ள மூலஸ்தான கருவறையில் பகவதி அம்மன் சன்னதி அமைந்து உள்ளது. இது தவிர கால பைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, தியாக சவுந்தரி அம்மன் சன்னதி , இந்திரா காந்த விநாயகர் சன்னதி, பால சவுந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்ம சாஸ்தா அய்யப்பன் சன்னதி, ஸ்ரீ நாகராஜர் மற்றும் ஸ்ரீ தர்ம சாஸ்தா சன்னதி ஆகிய சன்னதிகள் அமைந்து உள்ளன.

    இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணி களும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இந்தக் கோவில் பக்தர்களின் தரிசனத் திற்காக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    இந்த கோவிலில் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக கோவில் உள்பிரகாரம் மற்றும் வெளிப்பிர காரங்களில்ரூ.5 லட்சம் செலவில் 33 அதிநவீன சுழலும் கண்கா ணிப்பு கேமராக்கள் பொருத்தம் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே இருந்த 18 பழுதடைந்த கண்கா ணிப்பு கேமராக்கள் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக புதிய கண்கா ணிப்பு கேமராக் கள் பொருத்தும் பணியும் நடந்து வருகிறது. 

    • 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார்.
    • பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்

    கன்னியாகுமரி:

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை மந்திரி ஜெனரல் வி.கே.சிங் இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதுரை வருகிறார்.

    பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். மாலை 4 மணிக்கு கன்னியாகுமரியில் குமரி மாவட்ட விதான் சபா பிரகாஷ் யோஜனா கமிட்டி உறுப்பினர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடுகிறார். இரவு கன்னியாகுமரியில் தங்குகிறார். நாளை காலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசிக்கிறார். அதன் பிறகு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தனிப்படகில் சென்று பார்வையிடுகிறார்.

    10 மணிக்கு கார் மூலம் நாகர்கோவில் புறப்பட்டு செல்கிறார். அங்கு காலை 11 மணி முதல் 12 -30 மணி வரை முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். அதன் பிறகு மாலை 3-30 மணிக்கு தக்கலை புறப்பட்டு செல்கிறார். அங்கு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.அதன்பிறகு மீண்டும் கன்னியாகுமரி வருகிறார்.நாளை மறுநாள் (16-ந்தேதி) காலை 9 மணிக்கு அவர் கார் மூலம் மதுரை புறப்பட்டு செல்கிறார்.

    • 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்
    • பள்ளி வாகனத்தில் மாணவர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர்.

    அவர்கள் வேன், கார், பஸ் என பல வாகனங்களில் வருவதால் கன்னியாகுமரி மட்டுமின்றி குமரி மாவட்டம் முழுவதுமே போக்குவரத்து நெரிசல் காணப்படும். இந்த நிலையில் கன்னியாகுமரி அருகே உள்ள சுவாமிநாத புரத்தில் சுற்றுலா பயணி களை ஏற்றிக் கொண்டு மினி பஸ் புறப்பட்டது.

    இந்த பஸ் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே பள்ளி வேன் வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த வேன், சுற்றுலா பஸ் மீது பயங்கரமாக மோதியது.

    இதில்2வாகனங்களும் பலத்த சேதமடைந்தது. பள்ளி வாகன டிரைவர் பாக்கியராஜ் மற்றும் சுற்றுலா பஸ் டிரைவர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அதிர்ஷ்டவசமாக பள்ளி வாகனத்தில் மாணவர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
    • விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார்.

    கன்னியாகுமரி:

    கோவா மாநில கவர்னர் பி. எஸ். ஸ்ரீதரன் பிள்ளை நாளை (11-ந்தேதி) மதியம் 1 மணிக்கு கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அவர் பிற்பகல் 2 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார். மாலை 4.30 மணிக்கு விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தர்கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள விவேகானந்தா சபாக்கிரகத்தில் நடக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் 52- வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றியதை நினைவு கூறும் விழா ஆகிய விழாக்களில் பங்கேற்கிறார்.

    இந்த தகவலை கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் தெரிவித்தார். கோவா கவர்னர் கன்னியாகுமரி வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ×