search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 184225"

    • 500 கிலோ மீட்டர் தூரத்தை 15 நாட்களில் கடந்து வந்தனர்
    • தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் தேசம் காப்போம் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னெடுத்த மேக் இந்தியா நம்பர் 1 என்ற திட்டத்தை வலியுறுத்தி நடத்தப்பட்டது

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் தேசம் காப்போம் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னெடுத்த மேக் இந்தியா நம்பர் 1 என்ற திட்டத்தை வலியுறுத்தி திருச்சி முதல் கன்னியாகுமரி வரை புரட்சி நடைபயணம் நடத்து முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 5-ந்தேதி திருச்சியில் இருந்து கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் வசீகரன் தலைமையில் புரட்சி நடைபயணம் புறப்பட்டது. இந்த நடை பயணத்தை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பங்கஜ் குப்தா தொடங்கி வைத்தார். இந்த புரட்சி நடைபயணத்தின் நிறைவு விழா இன்று காலை 10 மணிக்கு கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடந்தது. அதன்பின்னர் மாதவபுரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் புரட்சி நடை பயணத்தின் நிறைவு விழாகூட்டம் நடந்தது. திருச்சியிலிருந்து கன்னியாகுமரி வரையிலான 500 கிலோ மீட்டர் தூரத்தை இவர்கள் 15 நாட்களில் கடந்து வந்துஉள்ளனர்.

    • காவடி பூஜையுடன் 25-ந் தேதி தொடங்குகிறது
    • பாதையாத்திரை அஞ்சு கிராமம், கூடங்குளம், திசையன்விளை, தட்டார் மடம், உடன்குடி வழியாக திருச்செந்தூர் சென்றடைகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மறக்குடி தெருவில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் 10 நாட்கள் மாசி பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக் கான மாசிப் பெருந் திருவிழா வருகிற 25-ந்தேதி காவடி பூஜையுடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 7 மணிக்கு காவடி பூஜையில் வைக்கும் நிகழ்ச்சி யும் நடக்கிறது. அதைத் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது.

    2-ம் திருவிழாவான 26-ந்தேதி காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, 9 மணிக்கு நையாண்டி மேளக்கச்சேரி நடக்கிறது. 3-ம் காலை 9 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதியில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து மேள தாளம் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 11.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம்1 மணிக்கு அன்ன தானம், மாலை 6 மணிக்கு பலவண்ண மலர்களால்அலங்கரிக்கப் பட்ட பன்னீர் காவடியை பக்தர்கள் மேளதாளம் முழங்க வீதிகளில் ஊர்வல மாக எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

    4-ம் காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 3 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூருக்கு பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரையாக புறப் பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. கன்னியா குமரியில் இருந்து புறப்பட்டு செல்லும் இந்த பாதையாத்திரை அஞ்சு கிராமம், கூட்டப்புளி, கூடங்குளம், நவ்வலடி, திசையன்விளை, தட்டார் மடம், மணிநகர், உடன்குடி, தருவைகுளம் வழியாக அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி காலை திருச்செந்தூர் சென்றடைகிறது. அன்று காலை திருச்செந்தூரில் சுப்பிரமணிய சாமிக்கு பன்னீர் அபிஷேகம் நடத்தப்படுகிறது. பின்னர் 4-ந்தேதி பச்சை சாத்து நிகழ்ச்சி முடிந்து பக்தர்கள் காவடியுடன் கன்னியாகுமரி நோக்கி பாதயாத்திரையாக புறப்படுகிறார்கள். அவர்கள் மீண்டும் அதே வழியாக 6-ந்தேதி காலை 9 மணிக்கு கன்னியாகுமரி வந்து சேர்கிறார்கள்.

    கன்னியாகுமரி நகர எல்லை பகுதியான விவேகானந்த புரம் சக்ர தீர்த்த குளம் அருகில் காவடிக்கு வரவேற்ப ளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து 11.30 மணிக்கு சுப்பிரமணியசாமி கோவி லில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல், இரவு 7 மணிக்கு இடும்பன் பூஜை விழா, 8 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடு களை கன்னியாகுமரி சுப்பிரமணியசாமி கோவில் நிர்வாக குழு தலைவர் இ.பாலு தேவர், செயலாளர் ஏ.சண்முகசுந்தரம், பொரு ளாளர் பி.பரமார்த்தலிங்கம், துணைத் தலைவர் நடராஜன், துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • ஆமையின் மேல் பகுதியில் உள்ள ஓடு கருப்பு நிறத்திலும் அடிப்பகுதி இளம்மஞ்சள் நிறத்திலும் காணப்பட்டது.
    • கப்பலில் அடிபட்டு அந்த ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் நேற்று மாலை ராட்சத கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதுபற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வேட்டை தடுப்பு காவலர் சிவகுமார், வன காவலர் ஜோயல்ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்த அந்த ராட்சத கடல் ஆமையை மீட்டனர்.

    அந்த கடல் ஆமை சுமார் 50 கிலோ எடை கொண்டதாக இருந்தது. அந்த ஆமையின் மேல் பகுதியில்உள்ள ஓடு கருப்பு நிறத்திலும் அடிப்பகுதி இளம்மஞ்சள் நிறத்திலும் காணப்பட்டது. கப்பலில் அடிபட்டு அந்த ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர்.

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல படகு துறையில் 2 மணி நேரம் காத்திருப்பு
    • திற்பரப்பு அருவியிலும் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் இன்றுஅதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.கன்னியாகுமரி கடலில்இன்றுஅதிகாலை யில் சூரியன் உதயமான காட்சி தெளிவாகத் தெரிந்தது.

    சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமான இந்த அற்புத காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

    அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள்கூட்டம்அலை மோதியது.கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    சுற்றுலா பயணிகள் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.

    மேலும் கன்னியாகுமரி யில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், கலங்கரை விளக்கம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைபகுதி, மியூசியம், அரசுஅருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள்கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதே போல் திற்பரப்பு அருவியிலும் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    • மகா சிவராத்திரி விழா 18-ந்தேதி நடக்கிறது
    • விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகா னந்தபுரம் சந்திப்பில் சக்கர தீர்த்த காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் அமைந்து உள்ளது.

    இந்த கோவிலில் சனி பிரதோஷத்துடன் மகா சிவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி நடக்கிறது. இதை யொட்டிஅன்றுஅதிகாலை 4.30 மணிக்கு மஹா கணபதி ஹோமமும், காலை 7 மணிக்கு நித்திய பூஜையும் 7.30 மணிக்கு தீபாராதனையும் 10.30 மணிக்கு சிறப்பு அபி ஷேகமும் 11 மணிக்கு மகா தீபாராதனையும்  நடக்கிறது.

    இந்த அன்னதானத்தை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார். மாலை 4.30 மணிக்கு சனி மகா பிரதோஷமும், மாலை 4.35 மணிக்கு பிரதோஷ அபிஷேகமும் 5.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் 5.35 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது.

    6.15 மணிக்கு முதல் ஜாம பூஜையும் இரவு 8.30மணிக்கு ஆன்மீக சொற் பொழிவும் 9.15 மணிக்கு 2-ம் ஜாம பூஜையும் 10 மணிக்கு இசை நாட்டியாஞ்சலியும் நள்ளிரவு 12.15 மணிக்கு 3-ம் ஜாம பூஜையும் 12.30 மணிக்கு சமய சொற் பொழிவும் 1.30 மணிக்கு ஆன்மீக சங்கமமும் நடக் கிறது. மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு 4-ம் ஜாம பூஜையும் தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும் புஷ்பாபிஷேகமும் நடக்கிறது. 4 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் 4.15 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்த் மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • போலீஸ் டி.எஸ்.பி. எச்சரிக்கை
    • பிப்ரவரி மாதம் 14-ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாட்டம்

    கன்னியாகுமரி:

    ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14-ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு உலகம் முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

    காதலர் தினத்தை யொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் இப்போது முதலே காதல் ஜோடிகள் குவியத் தொடங்கி விட்டனர். கன்னியாகுமரிக்கும் காதல் ஜோடிகள் வந்து இருந்தனர். இதைத் தொடர்ந்து காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரியில் காதலர் தினத்தையொட்டி பலத்த போலீஸ் பாது காப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரைப் பகுதி, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, வட்டக்கோட்டை பீச், சொத்த விளை பீச், மருந்து வாழ் மலை போன்ற சுற்றுலாத் தலங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும்.

    இதுதவிர சுற்றுலாத் தலங்களில் போலீசாரும் வாகனம் மூலம் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். குறிப்பாக கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் காதல் ஜோடியினர் அத்துமீறி நடந்து கொள்கிறார்களா? என்று போலீசார் தீவிரமாக கண்காணிப்பார்கள். அப்படி அத்துமீறி நடந்து கொள்ளும் காதல் ஜோடிகள் போலீசாரால் எச்சரிக்கப்படுவார்கள். அதையும் மீறி நடந்து கொள்ளும் காதல் ஜோடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காதலர் தினத்தன்று கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் பைக் ரேஸ் செல்லும் காதல் ஜோடியினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கபடும்.

    இவ்வறு அவர் கூறினார்

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் விவேகானந்தா கேந்திர வளாகத்தில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவே கானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 5½ ஏக்கர் பரப்பில் ரூ. 22 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த கோவிலில் கும்பாபி ஷேகம் நடந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து 4-வது ஆண்டு வருஷா பிஷேக விழா இன்று நடந்தது. இதையொட்டி கலசா பிஷேக பூஜை, யாக சாலை, அபிஷேக ஆரா தனைகள் போன்றவை நடந்தன.

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை அர்ச்சகர் வேணு கோபால் தீட்சிதர் தலைமையில் அர்ச்சகர்கள் முரளி கிருஷ்ணா, கிரண் குமார், ரிக்வித், சசி மற்றும் கன்னியாகுமரி ஸ்ரீவெங்க டேஸ்வரா சுவாமி கோவில் அர்ச்சகர்கள் நடத்தி னார்கள்.

    பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வருஷாபிஷேக நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

    • விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை
    • கன்னியாகுமரி கடல் பகுதியில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க காலதாமதம் ஏற்படுகின்றது.

    நாகர்கோவில்:

    இந்திய கடலோர காவல் படையின் கூடுதல் டைரக்டர் ஜெனரல் ராகேஷ் பாலை விஜய் வசந்த் எம்.பி. நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட் டத்தின் கடற்புறத்தில் 42 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 2 லட்சம் மீன வர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் புயல் மற்றும் சூறாவளி காற்று காரணமாக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது பல ஆபத்துக்களை சந்திக்கின்றனர். இதன் மூலம் உயிர் மற்றும் பொருள் இழப்புகள் ஏற்படுகின்றன.

    மேலும் இயற்கை சீற்றங் கள் மற்றும் கடலில் ஏற்படும் விபத்துக்கள் காரணமாக மீனவர்கள் கடலில் மாயமாகி விடுகின்றனர். திருவனந்தபுரம் மற்றும் தூத்துக்குடியில் கடலோர காவல் படை நிலையங்கள் இருப்பினும் கன்னியாகுமரி கடல் பகுதியில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க கடலோர காவல் படைகள் மற்றும் ஹெலிகாப்டர் வந்து சேர காலதாமதம் ஏற்படுகின்றன.

    மேலும் மாவட்ட மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும் போது அண்டை நாடுகளின் கடற்படை மற்றும் போலீ சாரால் அத்துமீறி நுழைந்த தாக கூறி கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் படுகின்றனர். இந்த மீனவர்களுக்கு ஆலோச னைகள் வழங்கவும், அவர் கள் எல்லை தாண்டாமல் இருப்பதை கண்காணிக்கவும் கடலோர காவல் படையின் கண்காணிப்பு மிக அவசியம்.

    கன்னியாகுமரியின் நிலவியல் அமைப்பை கணக்கில் கொண்டும், கன்னி யாகுமரி மாவட்டத்தில் வாழ்கின்ற மீனவர்களின் நலனை கருத்தில் கொண் டும் கன்னியா குமரியில் விரைவு படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவற்றுடன் கூடிய ஒரு கடலோர காவல் படை நிலையம் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருமணமான 2½ ஆண்டுகளில் பரிதாபம்
    • நாகர்கோவில் ஆர்.டி.ஓ. விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே ஒற்றையால்விளை அம்பலபதி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்.

    இவரது மனைவி மேரி சுருதி (வயது 26). இவர்களுக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.பிரகாஷ் வெளிநாட்டில் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வந்தார். கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பிரகாஷ் கடந்த 5-ந்தேதி ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று கணவன்-மனைவிகளிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த மேரி சுருதி அறையில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த பிரகாஷ் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கன்னியா குமரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய மேரி சுருதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இவர்களுக்கு திருமண மாகி 2½ ஆண்டுகளே ஆவதால் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டு வருகிறார். தற்கொலை செய்து கொண்ட மேரி சுருதியின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

    திருமணமான 2½ ஆண்டு களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மத்திய அரசின் “புனீத் சாகர் அபியன்” திட்டத்தின் கீழ் நடந்தது
    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் கடற்கரை பகுதியை குப்பைகள் இல்லாமல் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்காக மத்திய அரசு "புனீத் சாகர் அபியன்" என்னும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

    கடற்கரையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை சேகரித்து கடற்கரையை அழகான பாதுகாப்பான சுத்தமான இடமாக மாற்று வதுடன் கடற்கரை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி நாகர்கோவில் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த என்.சி.சி. மாணவ- மாணவிகள் கன்னியா குமரியில் முக்கடலும் சங்க மிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் தூய்மை பணி யில் ஈடுபட்டனர்.

    இந்தப் பணியை கன்னி யாகுமரி சிறப்பு நிலை பேரூ ராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச் சிக்கு 11-வது தமிழ்நாடு பெட்டாலியன் என்.சி.சி. அதிகாரி கேப்டன் கே.ஆர். அஜீந்திரநாத் தலை மை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர் தாமஸ் தி.மு.க. நிர்வாகிகள்அன்பழகன், ரூபின், ஷியாம்தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கடற்கரை தூய் மை பணியில் 70-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவ-மாண விகள் கலந்து கொண்டு கடற்கரையில் கிடந்த குப்பைகள் மற்றும் கழிவு களை அப்புறப்படுத்தி னார்கள்.

    முன்னதாகபொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணி களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக காந்தி மண்டபம் முன்பு இருந்து முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி த்துறை கடற்கரைவரை என்.சி.சி. மாணவ-மாண விகள் கடற்கரையை தூய்மை யாக வைப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்தபடி விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள்.

    • 12 ஆயிரத்து 830 கிலோ மீட்டர் தூரத்தை 14 மாதத்தில் கடந்து வந்தார்
    • இளைஞர்களை சந்தித்து பாகுபாட்டை தவிர்த்து தேச ஒற்றுமையை கடைபிடிக்க வலியுறுத்தி பேசி வருவதாக தெரிவித்தார்.

    கன்னியாகுமரி:

    பீகார் மாநிலம் ஜெகானா பாத் மாவட்டத்தை சேர்ந்த வர் தீரஜ்குமார் (வயது 30). இவர் எம். பில். பட்டதாரி ஆவார். இவர் மக்கள் மத்தியில் நிலவும் பாகுபாட்டை களைய வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ந்தேதி பஞ்சாப் மாநிலத்திலிருந்து தனது தேசிய அளவிலான சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார்.

    இவர் இமாச்சலப்பிர தேசம், அரியானா, டெல்லி, உத்திரப்பிரதேசம், பீகார், உத்ரகாண்ட், சிக்கீம், அசாம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோராம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், சட்டிஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா வழியாக கடந்த ஜனவரி மாதம் கும்மிடிப்பூண்டி வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைந்தார். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களை கடந்து நேற்றுகன்னியாகுமரி வந்தார். இவர் 22 மாநிலங்கள் வழியாக 12 ஆயிரத்து830 கிலோ மீட்டர் தூரத்தை1வருடம்2 மாதம் 29 நாட்களில் கடந்து வந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் தனது சைக்கிள் பயணத்தின் போது அந்தந்த மாநிலத்தில் உள்ள இளைஞர்களை சந்தித்து பாகுபாட்டை தவிர்த்து தேச ஒற்றுமையை கடைபிடிக்க வலியுறுத்தி பேசி வருவதாக தெரிவித்தார்.

    கன்னியாகுமரி வந்த அவருக்குகன்னியாகுமரி முக்கடல்சங்கமம்கடற்கரை யில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூரா ட்சி தலைவர் குமரி ஸ்டீபன் அவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில்கன்னி யாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர் தாமஸ், சினிமா நடிகர் ராஜ்குமார், தி.மு.க. நிர்வாகிகள் அன்பழகன், ரூபின், ஷியாம் தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விவேகானந்தர் மண்டப த்துக்கு செல்ல படகு துறையில் 2 மணி நேரம் காத்திருப்பு
    • கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணமாக உள்ள னர். இந்த நிலையில் ஞாயிற் றுக்கிழமை விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படையெடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர். அந்த அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக் கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சி தெளிவாக ெதரிந்தது. சூரியன்உதயமான இந்த அற்புத காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட "கியூ"வில் காத்திருந்தனர். காலை 8 மணிக்குபடகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.சுற்றுலாபயணிகள் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வை யிட்டனர்.

    மேலும் கன்னியா குமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கலங்கரை விளக்கம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்குபூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைபகுதி, மியூசியம், அரசுஅருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள்கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    ×