search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 184225"

    • நள்ளிரவில் போலீசார் கடும் கட்டுப்பாடு
    • நட்சத்திர ஓட்டல்களில் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன.

    கன்னியாகுமரி:

    ஆங்கில வருடமான 2022-ம் ஆண்டு நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்து 2023-ம் ஆண்டு மலர்ந்தது. புத்தாண்டு பிறந்ததை யொட்டி சுற்றுலா தலங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. கன்னியாகுமரியிலும் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று இரவு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி கன்னியா குமரியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப் பட்டு இருந்தன. நட்சத்திர ஓட்டல்களில் இரவு 7 மணி முதல் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான நிகழ்ச்சிகள் தொடங்கியது. நாதஸ்வர கச்சேரி நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆடல் - பாடல், குத்தாட்டம், பரத நாட்டியம், நடனநிகழ்ச்சிகள், கிராமிய கலைநிகழ்ச்சிகள், மெல்லிசை கச்சேரி, மேஜிக் ஷோ, குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகள்தேர்வு, சிறந்த தம்பதிகள்தேர்வு, வாண வேடிக்கை, குழந்தை களுக்கானவிளையாட்டு போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தன.

    மேலும் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்த போது அதிர் வேட்டுகள் முழங்க பலூன்கள் பறக்க விடப்பட்டு கேக் வெட்டி புத்தாண்டு கொண் டாடப்பட்டது. கன்னியா குமரியில் நடந்த இந்த புத்தாண்டு கொண்டாட் டத்தில் பங்கேற்பதற்காக வெளிநாடுகளில் உள்ள சுற்றுலாபயணிகள் நேற்றுமுன்தினம் முதலே வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர். புத்தாண்டு பிறக்கும் போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒரு வரை ஒருவர் கட்டித்தழுவி முத்தமிட்டு தங்களது புத்தாண்டு நல்வாழ்த்துக் களை தெரிவித்துக் கொண் டனர்.

    புத்தாண்டு கொண்டாட் டத்தை யொட்டி கன்னியா குமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு போலீசார் கடும் கட்டுப்பாடு விதித்து இருந்தனர்.

    கடற்கரையில் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு சுற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண் டாட தடை விதிக்கப் பட்டது. இரவு நேரங்களில் புத்தாண்டு கொண் டாட்டம் என்ற பெயரில் இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்துகிறார்களா? என்றும் போலீசார் தீவிர மாக சோதனை நடத்தி னார்கள். அதேபோல குடி போதையில் யாராவது வாகனம் ஓட்டுகிறார்களா? என்று போலீசார் தீவிரமாக கண்காணித்துவந்தனர்.

    • பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தகவல்
    • கடந்த 6 மாதங்களாக திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்து செல்வது வழக்கம்.

    கடந்த 6 மாதங்களாக திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதே நேரம் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

    கடந்த ஜனவரி மாதம் 24 ஆயிரம் பேரும், பிப்ரவரி மாதம் 73 ஆயிரத்து 700 பேரும், மார்ச் மாதம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேரும், ஏப்ரல் மாதம் ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேரும், மே மாதம் ஒரு லட்சத்து 92 ஆயிரம் பேரும், ஜூன் மாதம் ஒரு லட்சத்து 57 ஆயிரம் பேரும், ஜூலை மாதம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் பேரும், ஆகஸ்ட் மாதம் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேரும், செப்டம்பர் மாதம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரும், அக்டோபர் மாதம் 2 லட்சத்து 11 ஆயிரம் பேரும், நவம்பர் மாதம் 2 லட்சத்து 9 ஆயிரம் பேரும், கடந்த டிசம்பர் மாதம் 2 லட்சத்து 53 ஆயிரம் பேரும் படகில் பயணம் செய்து பார்வையிட்டு வந்துள்ளனர். மொத்தத்தில் கடந்த ஆண்டில் 17 லட்சம் பேர் விவேகானந்தர் மண்டபத்தை பார்த்தனர்.

    இதில் கடந்த ஆண்டில் டிசம்பர் மாதம் மட்டும் அதிக அளவு அதாவது 2 லட்சத்து 53 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை படகில் பயணம் செய்து பார்வையிட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • இந்த ஆண்டின் கடைசி சூரியஉதய காட்சியை காண திரண்டனர்
    • கடற்கரை பகுதி போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறியது

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை இந்த ஆண்டின் கடைசி சூரிய உதயகாட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் திரண்டதால் கடற்கரைப் பகுதி போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறியது. அதேபோல முக்கடல் சங்கமத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் கடலில் ஆனந்த குளியல் போட்டனர். பின்னர் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். இதனால் கோவிலில் இன்று அதிகாலையில் இருந்தே நீண்ட கியூவரிசை காணப்பட்டது.

    இதேபோல கன்னியாகுமரி விவேகானந்தபுரம் கடற்கரையில் உள்ள திருப்பதி வெங்கடேஷ் வரபெருமாள் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமு டன் பயணம்செய்து பார்வையிட்டு திரும்பினர். இதனால் படகுத்துறையில் நீண்ட கியூவரிசை காணப்பட்டது.விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் சுமார் 3 மணி நேரம் நீண்ட கியூவில் காத்திருந்தனர். இந்த கியூ சுமார்2கிலோமீட்டர் தூரத்துக்கு இருந்தது.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேருராட்சி பொழுதுபோக்கு பூங்கா, போன்ற அனைத்து பொழுதுபோக்கு இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதுமட்டுமின்றி கன்னியாகுமரியில் சன்னதி தெரு, தேரோடும் 4 ரதவீதிகள், மெயின்ரோடு பார்க்வியூ பஜார், காந்தி மண்டப பஜார், கடற்கரை சாலை, சன்செட் பாயிண்ட்கடற்கரைப்பகுதி போன்ற அனைத்து இடங்களிலும் சுற்றுலாபயணிகள் கூட்டம் அலைமோதியது.

    மேலும் கன்னியாகுமரியை சுற்றி உள்ள மற்ற சுற்றுலா தலங்களா னவட்டக்கோட்டை பீச், சொத்தவிளைபீச், திக்குறிச்சி பீச், திற்பரப்பு அருவி, பத்மநாபபுரம் அரண்மனை, ஆசியாவிலேயே மிக நீளமான மாத்தூர் தொட்டிப் பாலம், போன்ற அனைத்து சுற்றுலா தலங்களிலும் கிறிஸ்துமஸ் விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஒரேநேரத்தில்ஏராளமான பஸ், கார், வேன், ஜீப் போன்ற வாகனங்களிலும் இரு சக்கரவாகனங்களிலும் சுற்றுலா பயணிகள் வந்து குவிந்ததால் கன்னியாகுமரியில் இன்றுஅதிகாலை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து போக்கு வரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். சுற்றுலாபயணிகள் கூட்டம் அலை மோதியதால் கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.பாதுகாப்பு பணியில் உள்ளூர் போலீசாருடன் சுற்றுலா போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இணைந்து பணியாற்றினார்கள்.

    • போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்
    • கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் களை கட்டி உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் களை கட்டி உள்ளது. இதற்கிடையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக நேற்று முதலே கன்னியாகுமரியில் வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணமாக இருக்கிறார்கள்.

    இந்த சீசனை யொட்டி கன்னியா குமரியில் வெளி மாநில வியாபாரிகளும் ஏராளமான சீசன் கடை களை வைத்து உள்ள னர். இதற்கிடையில் நரிக்குற வர்களும் கன்னியாகுமரியில் சாலையோரம் தங்கி இருந்து ஊசி மற்றும் பாசி மாலைகள் விற்பனை செய்து வருகிறார்கள்.

    இவர்கள் வியாபாரத்தை முடித்து விட்டு இரவு நேரங்களில் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் சாலை ஓரமாக படுத்து தூங்குவது வழக்கம். அவ்வாறு நேற்று இரவு நரிக்குறவர்கள் வியாபாரத்தை முடித்து விட்டு கடற்கரை சாலையில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டபம் அருகே சாலையோரமாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தூங்குவது போல் நடித்து அவர்கள் வைத்திருந்த பாசி மாலைகள் மற்றும் பொருட்களை திருடியதாக கூறப்படுகிறது.

    இதைப் பார்த்து திடுக்கிட்டு எழுந்த நரிக்குற வர்கள் கூச்ச லிட்டனர். பின்னர் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டவர் என்ப தால் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் கடும் கட்டுப்பாடு
    • குத்தாட்டம், ஆடல் பாடலுடன் நடக்கிறது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் புத்தாண்டு கொண்டாட் டத்துக்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதையொட்டி கன்னியாகுமரியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப் பட்டுவருகிறது. இரவு 7 மணிமுதல் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.

    நாதஸ்வர கச்சேரி நிகழ்ச்சியுடன் தொடங்கும் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆடல்- பாடல், குத்தாட்டம், பரதநாட்டியம், நடனநிகழ்ச்சிகள், கிராமிய கலைநிகழ்ச்சிகள், மெல்லிசை கச்சேரி, மேஜிக் ஷோ, குலுக்கள் முறையில் அதிர்ஷ்டசாலிகள்தேர்வு, சிறந்த தம்பதிகள்தேர்வு, வான வேடிக்கை, குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    மேலும் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கும் போது அதிர் வேட்டுகள் முழங்க பலூன்கள் பறக்கவிடப் பட்டு கேக்வெட்டிபுத்தாண்டு கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரியில் நடக் கும் இந்தபுத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக வெளி நாடுகளில் உள்ள சுற்றுலாபயணிகள் நேற்று முதலே வந்து குவிந்த வண்ணமாக இருக்கிறார்கள்.புத்தாண்டு பிறக்கும் போது வெளிநாட்டு சுற்றுலா சுற்றுலாபயணிகள் ஒரு வரை ஒருவர் கட்டித்தழுவி முத்தமிட்டு தங்களது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வார்கள்.

    ஒரு தம்பதிக்கு ரூ.6ஆயிரம் வீதமும் தனிநபர் ஒருவருக்கு ரூ.3ஆயிரம் வீதமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுஉள்ளது. புத்தாண்டு கொண் டாட்டத்தை யொட்டி கன்னி யாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு போலீசார் கடும் கட்டுப்பாடு விதித்துஉள்ளனர். கன்னியாகுமரி கடற்கரை யில் புத்தாண்டு கொண்டாட போலீசார் தடைவித்து உள்ளனர். நட்சத்திரஓட்டல்களில் ஆபாச நடனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீச்சல்குளம் அருகே புத்தாண்டு கொண்டாட்டம் நடத்த தடை விதிக்கப் பட்டுள்ளது.

    மேலும் கடற்கரையில் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு சுற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல குடிபோதையில் வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த பிறகு அவரை காணவில்லை
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வட மாநில சுற்றுலா பயணியை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    ஒடிசா மாநிலம் சுந்தர்கட் பிரமின்படா பகுதியைச் சேர்ந்தவர் கோகுல் நந்தா ஜோஷி (வயது 85).

    இவர் தனது மகள் ஆர்த்தி ஜோஷி (67) என்பவ ருடன் கன்னியாகுமரிக்கு கடந்த 27-ந்தேதி சுற்றுலா வந்தார். பின்னர் இவர்கள் கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்து கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தனர்.

    மறுநாள் (28-ந்தேதி) காலையில் இவர் தனது மகளுடன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தார். அதன் பிறகு அவரை காண வில்லை என்று கூறப்ப டுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகள் அவரை பல இடங்க ளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    உடனே இது பற்றி அவரது மகள் கன்னியா குமரி போலீசில் காணா மல் போன தனது தந்தையை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்து உள்ளார்.

    அதன்பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வட மாநில சுற்றுலா பயணியை தேடி வருகின்றனர்.

    • தங்குவதற்கு இடம் கிடைக்காமல் சாலையோரம் படுத்து உறங்கும் மக்கள்
    • சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு எதிரொலி

    கன்னியாகுமரி:

    உலக புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் கன்னி யாகுமரியும் ஒன்று. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்கள் இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாகும். இதனால் தற்போது கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன்களை கட்டி உள்ளது.இதனால் தற்போது கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசிப்பதோடு மட்டுமின்றி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை ஆர்வத்துடன் படகில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். மேலும் பகவதி அம்மன்கோவில், திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள். முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போடுகிறார்கள்.

    இது தவிர கன்னியாகுமரி யில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன்காட்சி சாலை, சுனாமி நினைவு பூங்கா, பொழுதுபோக்கு பூங்காக்கள், மற்றும் சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி போன்றவற்றையும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் சென்று பார்த்து வருகிறார்கள். மாலையில் சூரியன் மறையும் காட்சியை பார்த்து ரசித்து விட்டு இரவு கன்னியாகுமரியில் தங்குகிறார்கள்.

    அதன் பிறகு சுற்றுலா பயணிகள் கூடுதலாக ஒருசில நாட்கள் லாட்ஜிகளில் தங்கிஇருந்து கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களான திற்பரப்பு அருவி, மாத்தூர்தொட்டி பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, முட்டம்பீச், சொத்தவிளை பீச், வட்டக் கோட்டை போன்ற சுற்றுலா தலங்களையும் பார்வை யிட்டு செல்கிறார்கள்.

    தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு உள்ளதாலும் கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டம், போன்ற தொடர் விடுமுறை காரண மாகவும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

    இதற்கிடையில் மண்டல பூஜையையொட்டி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்கள் கன்னியாகுமரி வந்து செல்கிறார்கள். இதனால் கன்னியாகுமரிக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வரை வந்து செல்கிறார்கள். கன்னியாகுமரியில் 106 லாட்ஜ்கள் இருந்த பிறகும் தங்குவதற்கு அறை கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் திண்டாடுகிறார்கள். இந்த சீசனை பயன்படுத்தி கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் அறை வாடகை தாறுமாறாக உயர்ந்துஉள்ளது. சீசன் இல்லாத காலங்களில் ரு.1000 வாடகைகட்டணம் உள்ள 2 படுக்கைகள் கொண்ட சாதாரண அறைவாடகை தற்போது சீசனையொட்டி 3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரத்துக்கு வாடைக்கு விடப்படுகிறது. அதேபோல ரூ.2 ஆயிரம் வாடகை உள்ள 2 படுக்கை கள் கொண்ட"குளுகுளு" வசதியுடையஅறை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7ஆயிரம் வரை வாடகைக்கு விடப்படுகிறது.

    தற்போது இந்த லாட்ஜ்களில் உள்ள அறை கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் லாட்ஜ்களில் தங்குவதற்கு அறை கிடைக்காமல் சாலையோரம் படுத்து தூங்கும் அவல நிலை ஏற்பட்டுஉள்ளது. கன்னியாகுமரிக்கு வரும் ஒரு சில சுற்றுலா பயணி கள் கன்னியாகுமரியில் தங்கு வதற்கு அறை கிடைக்காத தால் நாகர்கோவில் போன்ற வெளியூர்களுக்கு சென்று தங்கி இருந்து சுற்றுலா தலங்களை பார்வையிட்டு வருகிறார்கள்.

    எனவே கன்னியா குமரியில் சீசன் காலங்க ளில் லாட்ஜ்களில் அறை வாடகையை தாறு மாறாக உயர்த்துவதை கட்டுப்படுத்த வாடகை கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அதே போல கட்டண விவரங்கள் அடங்கிய பட்டியலை அந் தந்த லாட்ஜ்களில் வைக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? எப்படி இறந்தார்? என்பன போன்ற விவரம் எதுவும் தெரியவில்லை.
    • பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் போலீஸ் நிலையம் அருகே இன்று காலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியோர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? எப்படி இறந்தார்? என்பன போன்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இது பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    • அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 வாலிபர்கள்
    • கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் நள்ளிரவில் சீறிப்பாய்ந்த சொகுசு கார் வீட்டு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதில்இருந்த 5 வாலிபர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். இந்த விபத்து பற்றிய சி.சி.டி.வி.காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

    கன்னியாகுமரிஅருகே உள்ள குண்டல் பகுதியில் நேற்று நள்ளிரவு சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்தது. அதில்இருந்த 5 வாலிபர்களும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.அதிவேகமாக வந்த அந்த சொகுசு கார் வடக்கு குண்டல் பகுதியில் வளைவில் திரும்பிய போது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஒரு வீட்டின் சுவர் மீது மோதியது.விபத்து ஏற்படுத்திய சொகுசு காரில் இருந்த அந்த 5 வாலிபர்கள் மது போதையில் இருந்ததால் போலீசாருக்கு பயந்து காரை அங்கேயே விட்டுச் சென்று உள்ளனர்.

    இந்த விபத்துகுறித்து தகவல்அறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்து நடந்த பகுதியின்அருகில் உள்ள ஒரு தங்கும்விடுதியில் இருந்தகண்காணிப்பு கேமராவில்விபத்துநடந்தது தெளிவாக பதிவாகி உள்ள து. அந்த சி.சி.டி.வி.காட்சி கள்சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • தீயணைக்கும் படையினர் மீட்டனர்
    • மண்ணுளி பாம்பு வகையை சேர்ந்தது.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையானகன்னியா குமரிக்கு வரும் ஜனாதிபதி, பிரதமர், பல மாநில முதல்வர்கள், கவர்னர்கள், மத்திய-மாநில அமைச்சர் கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமு கர்கள் தங்கும் அரசு விருந்தினர் மாளிகை உள்ளது. பொதுப்பணி துறையின் கட்டிட பிரிவு கட்டுப்பாட்டில் இந்த அரசு விருந்தினர் மாளிகை உள்ளது.

    இந்த அரசு விருந்தினர் மாளிகை முறையான பராமரிப்பு இல்லாமல், புதர்கள் நிறைந்தும், சுற்று சுவர்கள் இடிந்தும், ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் செடி, கொடிகள் வளர்ந்தும், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டும் குப்பை கிடங்காகவும், இரவு வேளைகளில் சமூக விரோதிகளுக்கு மது அருத்தும் கூடாரமாகவும் மாறியுள்ள பரிதாப நிலையில் காணப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் இந்த அரசு சுற்றுலா மாளிகையில் உள்ள முக்கிய கட்டிடத்தில் பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து அங்குள்ள ஊழியர்கள் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் ஆரோக்கியதாஸ் தலைமையில்தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து வந்து அந்த பாம்பை லாவக மாகபிடித்தனர். அந்த பாம்பு சுமார் 3 அடி நீளம் கொண்டதாக இருந்தது. மண்ணுளி பாம்பு வகையை சேர்ந்தது.

    பின்னர் தீயணைக்கும் படையினர் அந்தப் பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த விஷ பாம்பை பாது காப்பான காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர்.

    • தேவாலயத்தின் பங்கு தந்தையை சந்தித்து ஆசி பெற்றார்.
    • மாவட்ட, மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரியில் உள்ள புகழ்பெற்ற தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தின் 10ம் திருவிழாவையொட்டி தங்கத் தேர் பவனியை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொடங்கி வைத்தார். 


    தொடர்ந்து புனித அலங்கார உபகார மாதா தேவாலயத்தின் பங்கு தந்தை அருட் பணி ஆன்றணி அல்காதர் அவர்களை சந்தித்த அவர் ஆசி பெற்றார். 


    நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டார தலைவர்கள், மாநில பொது குழு உறுப்பினர்கள், வட்டார, மாவட்ட, மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • சபரிமலைஅய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கி உள்ளதால் கூட்டம் மேலும் அதிகரித்து உள்ளது.
    • சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். சபரிமலைஅய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கி உள்ளதால் கூட்டம் மேலும் அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் வந்து குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சூரியன் உதயமா கும் காட்சியை அவர்கள் பார்த்து ரசித்தனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலிலும் தரிசனத்துக் காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதன் பின்னர் அவர்கள் படகில்சென்று விவேகா னந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.

    மேலும் கன்னியா குமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி உள்பட அனைத்து பகுதிகளிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீ சாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீ சாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த னர்.

    ×