search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காயம்"

    • அரிமளம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 10 பேர் காயமடைந்தனர்.
    • இதில் 43 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கீழாநிலைக்கோட்டை அருகே புதுநிலைப்பட்டி கண்ணுடை அய்யனார், குருந்துடை அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று காலை 10 மணியளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.முன்னதாக காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் ஜல்லிக்கட்டு திடலுக்கு அனுமதிக்கப்பட்டனர். முதலில் உள்ளூர் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை.

    அதை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 43 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது.இதில் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், பொன்னமராவதி, திருச்சி, காரைக்குடி, திருப்பத்தூர், திருமயம், பனையப்பட்டி, விராச்சிலை, அறந்தாங்கி, சிங்கம்புணரி, திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட சுமார் 150 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பலத்த காயமடைந்த 2 பேர் மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சில்வர் பாத்திரம், ரொக்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி, முன்னாள் எம்.எல்.ஏ. ராமசுப்புராம், காங்கிரஸ் வட்டார தலைவர் புதுப்பட்டி கணேசன் மற்றும் அரிமளம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.

    • திருப்பத்தூர் அருகே ஜல்லிகட்டில் காளைகள் முட்டியதில் 39 பேர் காயமடைந்தனர்.
    • திடலில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பூலாங்குறிச்சி கிராமத்தில் அங்காள பரமேசுவரி, கணவாய் கருப்பர் வருடாபிஷேக விழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 600 காளைகளும், 50 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் அடக்க முற்பட்டனர். இதில் காளைகள் முட்டியதில் 39 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக 7 பேர் பொன்னமராவதி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாநில ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பேரவை தலைவர் ஒண்டிராஜ், மாநில இளைஞரணி தலைவர் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் அன்பு சரவணன் பலத்த காயமடைந்தார்.
    • அன்பு சரவணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பாவூர்சத்திரம்:

    சென்னை மயிலாப்பூர் குடிசைப்பகுதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் அன்பு சரவணன்(வயது 20).

    கல்லூரி மாணவரான இவருடன் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள புல்லுக்காட்டு வலசை பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் படித்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 2-ந்தேதி அன்பு சரவணன் புல்லுக்காட்டுவலசை மாணவரின் ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் அங்குள்ள ராமச்சந்திரபட்டினம் நான்குவழிச்சாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் அன்பு சரவணன் பலத்த காயமடைந்தார்.

    அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அன்பு சரவணன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தன்னைத்தானே தாக்கி காயப்படுத்திக்கொண்டவர் இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    விருதுநகர் மேட்டுக்குண்டு சென்னல்குடியை சேர்ந்தவர் சேகர் (48). மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மனைவி மதுரைக்கு அழைத்து வந்தார். மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இறங்கி நின்றனர். அப்போது சேகர் ஆவேசமாக கத்தியபடி தன்னைத்தானே தாக்கிக்கொண்டார்.இதில் அவர் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார். அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மனைவி மாரீஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 11 பேர் காயம் அடைந்தனர்.
    • காவல் ஆய்வாளர் கலாவாணி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மகிபாலன்பட்டியில் பூங்குன்ற நாயகி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. சிவகங்கை , திருப்பத்தூர், பொன்னமராவதி, கீழச்சிவல்பட்டி, திருமயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 208 காளைகளும், 50-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

    போட்டியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர். இந்த போட்டியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். அவிழ்த்து விடப்பட்ட காளைகளின் திமிலை பிடித்து வீரர்கள் அடக்க முற்பட்டனர்.

    இதில் காளைகள் வீரர்களை தூக்கி வீசியது. காளைகள் முட்டியதில் 11 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 பேர் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாபன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை 24 அரை கிராமமக்கள் செய்திருந்தனர். கோட்டாட்சியர் பால்துரை, வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர் கலாவாணி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • ரூ.20 ஆயிரம் மட்டுமே வாடகை பேசியதால் கூடுதலாக கட்டணம் தர முடியாது.
    • 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    நாகப்பட்டினம்:

    சென்னை கொளத்தூரை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தனது உறவினர்கள் 10 பேருடன் ஏலக்குறிச்சி அடைக்கல மாதா கோவில், பூண்டி மாதா கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்று விட்டு இறுதியாக உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வந்தார். அப்பொழுது சுற்றுலா வேனிற்கு பாண்டிச்சேரி பர்மிட் இல்லை என ஓட்டுனர் அசோக்குமார் கூறி அதற்கு ரூ.2000 கூடுதலாக கட்டணம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே வாடகை பேசியதாலும் கூடுதலாக கட்டணம் தர முடியாது என ஹரிஹரன் தரப்பினர் கூறியுள்ளனர் .

    இது குறித்து ஓட்டுனர் தனது வேன் உரிமையாளரிடம் கூறியுள்ளார். அதை அடுத்து வேளாங்கண்ணி கார் ஓட்டுனர்கள் சங்கத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஹரிஹரன் தங்கியுள்ள விடுதிக்கு சென்று ரூ.2000 கூடுதலாக கொடுக்க வேண்டும் என வாக்குவா–தத்தில் ஈடுபட்டனர். இதில் ஹரிஹரன் தரப்பினர் கார் ஓட்டுனர்களை தாக்கியதாக கூறப்படுகிறது . சுமார் 20 பேர் கொண்ட கார் ஓட்டுநர்கள் வந்து ஹரிஹரன் தரப்பினரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

    இதில் இரண்டு தரப்பிலும் தாக்கிக் கொண்டதில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட இரண்டு தரப்பிலும் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பார்வையிட்டார்.

    இந்த சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சிசுவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • எதனால் குழந்தையை வீசி சென்றனர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள முத்தாண்டிப்பட்டி ஆலடிஏரி பகுதியில் உள்ள சிறிய பாலத்தின் அருகே பிறந்த தொப்புள் கொடியுடன் பெண் சிசு காயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக பூதலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் அங்கு சென்று காயங்களுடன் கிடந்த பெண் குழந்தையை மீட்டு உடனடியாக பூதலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிசுவை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புதுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) அன்பரசன் பூதலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.பூதலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் தாய் யார்? எதனால் குழந்தையை வீசி எறிந்து சென்றனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்மாற்றி வெடித்து 2 பேர் காயம் அடைந்தனர்
    • மின்மாற்றியில் எரிந்து கொண்டிருந்த தீயானது தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தானாக அணைந்து விட்டது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள மின்மாற்றி நேற்று மாலை திடீரென்று வெடித்து தீப்பிடித்ததால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மின்மாற்றி வெடித்ததில் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மின்மாற்றியில் எரிந்து கொண்டிருந்த தீயானது தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தானாக அணைந்து விட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்மாற்றியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியத்தை சேர்ந்த ஜெயமேரி என்பவர் இறந்து போனார்
    • இதையடுத்து அவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் எடுத்து சென்றனர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியத்தை சேர்ந்த ஜெயமேரி என்பவர் இறந்து போனார். இதையடுத்து அவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் எடுத்து சென்றனர். அதே கிராமத்தை சேர்ந்த மைக்கேல் என்பவர் நாட்டு வெடிகளை வெடித்து கொண்டே இறுதி ஊர்வலத்தின் முன்பாக சென்றார்.அப்போது மொத்தமாக வைக்கப்பட்டிருந்த வெடிகளில் எதிர்பாராதவிதமாக தீ பட்டது. இதில் அனைத்து வெடிகளும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியது. இதனால் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அதே கிராமத்தை சேர்ந்த கிருபை (வயது 13) அடைக்கலமேரி (50), செல்வி (39), கன்னிமேரி (55), ரஞ்சித் (15), கோவிந்தன் (50), மைக்கேல் (25) ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து படுகாயமடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக ரிஷிவந்தியம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த வெடி விபத்து குறித்து ரிஷிவந்தியம் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படுகாயத்துடன் 2 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி ரோடு பூலாவூரணியில் பிரவீன்ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 30-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த பட்டாசு ஆலைகளில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இன்று காலை ஆலை திறக்கப்பட்டு தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள ஒரு அறையில் தரை சக்கரம் தயாரிக்கும் பணி நடந்து வந்தது.

    இதில் இடையன்குளத்தை சேர்ந்த கருப்பசாமி (வயது 32), தங்கவேல் (55), கருப்பம்மாள் (50) உள்பட 4 பேர் பணியாற்றி வந்தனர். மதியம் பட்டாசு தயாரிப்புக்காக மருந்து கலவை தயார் செய்யப்பட்டது. அப்போது திடீரென மருந்துகள் உரசி தீப்பற்றியது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் தீ அங்கு ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் சிறிது நேரத்தில் அந்த அறை மற்றும் அருகில் இருந்த மற்றொரு அறை முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது.

    இந்த விபத்தில் அந்த அறையில் இருந்த கருப்பசாமி, தங்கவேல் ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காயம் அடைந்த கருப்பம்மாள் உள்பட 2 பேரை சக தொழிலாளர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாரனேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர்கள் 3 பேரும் கடலூர் திருவந்திபுரம் - பாலூர் சாலையில் பில்லாலி தொட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
    • ட்டார் சைக்கிளுக்கு பின்னால் வந்த டிராக்டர் திடீரென்று மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டை சேர்ந்தவர் இளவழகன் (வயது 25), கொங்கராயனூரை சேர்ந்தவர்கள் நிவேதா (20), நிரோஷா (17). இவர்கள் 3 பேரும் கடலூர் திருவந்திபுரம் - பாலூர் சாலையில் பில்லாலி தொட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் வந்த டிராக்டர் திடீரென்று மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக கியாஸ் சிலிண்டரில் தீப்பிடித்து வெடித்து சிதறியது.
    • தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    திருவாரூர்:

    மன்னார்குடி அருகே கோட்டூர் புதுத்தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (வயது35).

    இவர் குடும்பத்தோடு கூரை வீட்டில் வசித்து வந்தார்.

    இவரது மனைவி நேற்று மதியம் கியாஸ் அடுப்பின் அருகே விறகு அடுப்பில் சமையல் செய்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக கியாஸ் சிலிண்டரில் தீப்பிடித்து வெடித்து சிதறியது.

    இதில் கூரை வீ்டு முற்றிலும் எரிந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமடைந்தன.

    இது குறித்து தகவல் அறிந்த கோட்டூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிலிண்டரில் தீப்பிடித்த உடன் வீட்டில் உள்ள அனைவரும் ெவளியே சென்று விட்டதால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

    ×