search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காயம்"

    • திடீரென அவர் போதையில் கேசவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • காயம் அடைந்த கேசவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்டம் மெலட்டூர் மேல தெருவை சேர்ந்தவர் கேசவன் (வயது 45). இவர் தஞ்சை கரந்தையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பம்ப் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் தஞ்சை வடக்கு வாசல் சுண்ணாம்பு கால்வாய் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (24) என்பவர் குடிபோதையில் பெட்ரோல் பங்கிற்கு வந்தார்.

    திடீரென அவர் போதையில் கேசவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    வாக்குவாதம் முற்றி வெங்கடேஷ் ஆத்திரமடைந்து கத்தியால் கேசவனின் கையில் குத்தினார்.

    இதில் காயம் அடைந்த கேசவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கேசவன் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.

    • எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் பேட்டரி வெடித்ததில் கணவன், மனைவி காயம் அடைந்தனர்
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி உறையூர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் பாஸ்கர் (வயது29). இவர் அண்மையில் எலக்ட்ரிக்கல் மோட்டார் சைக்கிள் வாங்கி பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் பாஸ்கர் தனது வீட்டின் உள்ளே எலக்ட்ரிக்கல் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றி உள்ளார். பிறகு சார்ஜை ஆப் செய்துவிட்டு வண்டியை நிறுத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் திடீரென்று எலக்ட்ரிக்கல் மோட்டார் சைக்கிளின் பேட்டரி வெடித்தது. இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த பாஸ்கர் மற்றும் அவரது மனைவி நந்தினி இருவரும் காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பாஸ்கர், நந்தினி இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பாஸ்கர் உறையூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மை காலமாக எலக்ட்ரிக்கல் மோட்டார் சைக்கிள் திடீரென்று தீப்பற்றி எரிவது தொடர் கதையாகி வருகிறது.

    • சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறியதில் இவர்கள் 5 பேரும் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
    • 5 பேரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை சூரியம்பேட்டை பகுதியில் வனிதா, புண்ணியகோட்டி, நித்தியா, ஆறுமுகம், நித்யானந்தா, ஆகியோர் தொண்டு நிறுவனங்களுக்கு சமையல் செய்து கொடுக்கும் பணியினை செய்து வருகின்றனர்.

    சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறியதில் இவர்கள் 5 பேரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். 5 பேரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வனிதா, புண்ணியகோட்டி, ஆகிய இருவரும் 70 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்களுடனும், நித்தியா 41 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்களுடனும், நித்தியானந்தா 43 சதவீத தீக்காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆறுமுகத்துக்கு 32 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை சென்று பார்த்தார்.

    • காடம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த தருமபுரியை சேர்ந்த 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
    • இதில் பரத்ராஜ் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், எழிலரசன் கோவை தனியார் மருத்துவ மனை யிலும், விஜயன் பெங்களூர் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள சிக்கம்பட்டி கிராமம், பெரியகாடம்பட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் பரத்ராஜ் (வயது 19). இவரது நண்பர் எழிலரசன் (19). இருவரும் சம்பவத்தன்று எழிலரசனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் காடம்பட்டியில் இருந்து தாரமங்கலம் நோக்கி வந்தனர்.

    பரத்ராஜ் வண்டியை ஓட்ட எழிலரசன் பின்னால்

    அமர்ந்திருந்தார். காடம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த தருமபுரியை சேர்ந்த விஜயன் (31) என்பவர் மோதியதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    இதில் பரத்ராஜ் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், எழிலரசன் கோவை தனியார் மருத்துவ மனை

    யிலும், விஜயன் பெங்களூர் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர், இதுபற்றி தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் பலர் மயக்கம் அடைந்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    • மயக்கமடைந்தவர்களில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவைகள் வழங்குவதாக தனியார் நிறுவனம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டது. தகவலை தொடர்ந்து 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்தனர்.

    ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் பலர் மயக்கம் அடைந்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மயக்கமடைந்தவர்களில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் மற்றும் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனையில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா விசாரணை மேற்கொண்டார்.

    • இரு சக்கர வாகனத்தில் சென்ற போது சம்பவம்
    • வாகன விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார்

    கரூர்:

    குளித்தலையை அடுத்த, சேப்ளாபட்டியை சேர்ந்தவர் தங்கராசு (வயது 60). இவர், இரு சக்கர வாகனத்தில் மாகாளிபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். கழுகூர் -மகாளிப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே, இனுங்கூரை சேர்ந்த பால முருகன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் இவர் மீது மோதியது.இதில், தங்கராசு படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மணப் பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தங்கராசு மனைவி சின்னபொண்ணு கொடுத்த புகாரின் பேரில் பாலமுருகன் மீது தோகைமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காரைக்காலில் இருந்து திருவாரூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் வந்துகொண்டிருந்தது.
    • இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த நாகூர் ரவுண்டானா பகுதியில் சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு மரக்கட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்தது.

    அப்போது காரைக்காலில் இருந்து திருவாரூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த தனியார் பஸ் கட்டு பாட்டை இழந்து லாரியின் பக்கவாட்டில் உரசியது.

    இதில் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மரக்கட்டைகள் பஸ்சின் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பயணிகள் மீது விழுந்தது. மேலும் பஸ்சின் கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 3 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

    பஸ்சில் இருந்த பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என 50 க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
    • இதில் மின்கம்பம் முறிந்து மின்கம்பிகள் அறுந்தன.

    திருவாரூர்:

    திருத்துறைப்பூண்டியில் இருந்து ராயநல்லூர் புழுதிக்குடி வழியாக விக்கிரபாண்டியம் வரை தனியார் மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இந்த மினி பஸ்சை டிரைவர் சுந்தரம் (வயது 50) ஓட்டினார்.

    கண்டக்டர் வருண்குமார் (25) பணியில் இருந்தார். மினி பஸ் விக்கிரபாண்டியம் வந்து விட்டு திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் விக்கிரபாண்டியம் கீழத்தெரு அருகே பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி அருகிலிருந்த குட்டையில் இறங்கியது.

    இதில் பயணம் செய்த மஞ்சவாடி கிராமத்தை சேர்ந்த கவுசல்யா (22), டிரைவர் சுந்தரம், கண்டக்டர் வருண்குமார் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.

    இவர்கள் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் மின்கம்பம் முறிந்து மின்கம்பிகள் அறுந்தன.

    இதனால் அங்கு மின்தடை ஏற்பட்டது. மின் கம்பம் முறிந்தபோது அங்கு மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இதுகுறித்து விக்கிரபாண்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆட்டோ டிரைவர் உள்பட மூவரும் காயமடைந்தனர்.
    • விபத்து குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

    திருவாரூர்:

    மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கபிலன் (வயது60). இவர் நேற்று முன்தினம் திருவாரூர் பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    தரிசனம் முடித்து தனது மனைவி லதாவுடன் ஸ்கூட்டரில் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு புறப்பட்டார். மயிலாடுதுறை சாலை சேந்தமங்கலம் என்ற இடத்தில் எதிரே வந்த ஆட்டோ, கபிலன் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது.

    இந்த விபத்தில் கணவன், மனைவி மற்றும் ஆட்டோ டிரைவர் சொரக்குடி பகுதியை சேர்ந்த சங்கர் (30) ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர்.

    இதனையடுத்து அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கபிலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    காயம் அடைந்த லதா, ஆட்டோ டிரைவர் சங்கர் ஆகிய இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பத்தரே கிராமம் அருகே சின்னார் சீரடி நெடுஞ்சாலையில் பஸ் சென்ற போது லாரி மீது மோதியது. இதில் பஸ் கடுமையாக சேதமடைந்தது.
    • விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

    நாசிக்:

    மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் அம்பர்நாத்தில் இருந்து 50 பேருடன் சொகுசு பஸ் ஒன்று சீரடி நோக்கி சென்றது.

    நாசிக்கில் உள்ள பத்தரே கிராமம் அருகே சின்னார் சீரடி நெடுஞ்சாலையில் பஸ் சென்ற போது லாரி மீது மோதியது. இதில் பஸ் கடுமையாக சேதமடைந்தது.

    இந்த விபத்தில் 7 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

    • பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதிக்கொண்டன.
    • கடும் பனிமூட்டத்தால் எதிரே செல்லும் வாகனங்கள் தெரியவில்லை.

    பீஜிங்:

    கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை நன்சாங் கவுண்டி பகுதியில் பனிமூட்டம் காரணமாக சாலை விபத்து ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதின. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயம்அடைந்தனர்.

    கடும் பனிமூட்டத்தால் எதிரே செல்லும் வாகனங்கள் தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் விளக்குகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வேகத்தை குறைத்து கவனமாக வாகனத்தை இயக்க வேண்டும் என்றும் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தினர்.

    • வேன் இன்று அதிகாலை 5.15 மணியளவில் திண்டிவனம் டி.வி. நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வேன் தலைகுப்புற பள்ளத்தில் கவிழ்ந்தது.

    திண்டிவனம்:

    சென்னை தாம்பரம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று நள்ளிரவில் ஒரு வேனில் 22 பேர் சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர். இந்த வேனை டிரைவர் சந்திரசேகர் ஓட்டினார்.

    அந்த வேன் இன்று அதிகாலை 5.15 மணியளவில் திண்டிவனம் டி.வி. நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வேன் தலைகுப்புற பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் 8 வயது சிறுமி உள்பட 18 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் வலியால் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அந்த வழியாக வாகனத்தில் வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடனடியாக காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அவர்கள் 18 பேரும் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×