search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காயம்"

    • திருப்பத்தூர் அருகே வாலிபர் ரோட்டில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
    • அந்த பகுதியில் கிடந்த தடயங்களையும் போலீசார் சேகரித்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருகோஷ்டியூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ேபாலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அந்த பகுதியில் கிடந்த தடயங்களையும் போலீசார் சேகரித்தனர். 

    இறந்த வாலிபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்திய போது அவர் சிவகங்கை மாவட்டம் இடையமேலூரை சேர்ந்த தினேஷ் என தெரியவந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
    • இறுதிப்போட்டிக்கான பயிற்சியின்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வாஷிங்டன்:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நாளை தொடங்குகிறது. இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான பயிற்சியின்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டதால் பயிற்சியில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளார்.

    • வெள்ளகோவில் நோக்கி வந்த கார் குமரேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது
    • வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகேயுள்ள மூலனூர்- கிளாங்குண்டல் பகுதியைச் சேர்ந்த குமரேசன் (வயது 29) ,அவரது உறவினர் விவேக பிரியன் ( 17) ஆகிய இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் வெள்ளகோவில் -கரூர் ரோட்டில் புஷ்பகிரி நகர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கரூரிலிருந்து வெள்ளகோவில் நோக்கி வந்த கார் குமரேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் குமரேசன் மற்றும் பின்னால் அமர்ந்து வந்த விவேகப்பிரியன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வேன் மோதி 4 பேர் காயம் அடைந்தனர்
    • இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    குளித்தலை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் மனைவி மோகனசுந்தரி (வயது 32). இவர் குளித்தலை காவிரி நகர் பகுதியில் தள்ளுவண்டியில் பானி பூரி உள்ளிட்ட தின்பண்டங்களை விற்கும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் வழக்கம்போல தனது கடையில் வியாபாரம் செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த வேன் தாறுமாறாக ஓடி மோட்டார் சைக்கிகள்கள் மற்றும் மோகனசுந்தரி வைத்துள்ள தள்ளு வண்டியில் மோதியதி உள்ளது.

    இந்த விபத்தில் தள்ளுவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. மேலும் மோகனசுந்தரி, குளித்தலை காவிரி நகர் பகுதியை சேர்ந்த (பாலாஜி 19), வைகநல்லூர் அக்ரகாரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (57), கவுசல்யா (22) ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். இதைக்கண்ட அங்கிருநு்தவர்கள் காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயம் அடைந்த கவுசல்யா மட்டும் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தகவல் அறிந்ததும் கூவத்தூர் போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து குறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் சையது இப்ராகிம் (வயது45). தர்காவில் அஜிரத்தாக உள்ளார். இவர் இன்று அதிகாலை 5 மணியளவில் கோவளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

    கூவத்தூர் அடுத்த பெருந்துறவு கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டு இருந்த போது எதிரே பெருங்குடியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ராகுல்(23) மற்றும் அவரது நணபர் ஒருவர் என 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது திடீரென ராகுல் வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இப்ராகிம் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் வேகமாக மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் நொறுங்கின.

    மோட்டார் சைக்கிளில் வந்த இப்ராகிம் மற்றும் என்ஜினீயர் ராகுல் பலத்த காயம் அடைந்த சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ராகுலுடன் வந்த அவரது நண்பர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    தகவல் அறிந்ததும் கூவத்தூர் போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடிய வாலிபருக்கும் அதே ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கீழ் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியுள்ளார்.
    • ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    கொழும்பு:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. இந்த போட்டி நாளை முதல் தொடங்கவுள்ளது.

    இந்நிலையில் கீழ் முதுகு காயம் காரணமாக முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து ஆப்கானிதானின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் விலகி உள்ளார். ஜூன் 7-ந் தேதி நடக்கும் மூன்றாவது போட்டியில் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அனைத்து போட்டியிலும் (17 போட்டிகள்) விளையாடி 27 விக்கெட்டுகள் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த தொடரின் லீக் போட்டிகளில் டோனி விளையாடும் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது.
    • சில போட்டிகளில் கீப்பிங் செய்யும்போது அதை காண முடிந்தது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இந்த சீசனில் முதல் முறையாக 3 நாட்கள் ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்தது. அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. இதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

    இந்த தொடரின் லீக் போட்டிகளில் டோனி விளையாடும் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. சில போட்டிகளில் கீப்பிங் செய்யும்போது அதை காண முடிந்தது. அந்த காயத்துடன் தற்காலிகமாக சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் இறுதிப்போட்டி வரை அவர் விளையாடி விளையாடினார்.

    இந்த நிலையில், முழங்கால் காயம் உள்பட பல காயங்கள் காரணமாக இன்னும் ஒரு வாரத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருக்கிறார். இந்த வாரம் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் முழங்கால் காயம் தொடர்பான பல பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    • காங்கயம் ஈரோடு சாலை அரசு கல்லூரி அருகே செல்லும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், தங்கராஜ் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதின.
    • தங்கராஜ், ராமசாமி இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள முள்ளிப்புரம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 59), விவசாயி. இவர் அவரது உறவினர் ராமசாமி(61) என்பவருடன் காங்கயத்திற்கு சென்று விட்டு நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் முள்ளிப்புரத்திற்கு புறப்பட்டனர்.

    காங்கயம் ஈரோடு சாலை அரசு கல்லூரி அருகே செல்லும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், தங்கராஜ் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதின. இதில் தங்கராஜ், ராமசாமி இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தங்கராஜ், ராமசாமி உயிரிழந்தனர்.

    இந்த விபத்து குறித்து காங்கயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் விசாரணை நடத்தி வருகிறார். விபத்து நடந்ததும் எதிரே மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் தப்பி சென்று விட்டனர். அவர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். விபத்தில் விவசாயி உள்பட 2பேர் பலியான சம்பவம் காங்கயம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் சுற்றுலா பஸ் கார் மீது மோதியதில் 18 பேர் காயம் அடைந்தனர்.
    • இந்த விபத்து குறித்து பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பெரம்பலூர்:

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 41 பேர் தமிழ்நாட்டிற்கு பஸ் மூலம் சுற்றுலா வந்துள்ளனர். இந்த பஸ்சை ரமேஷ் (வயது 51) என்பவர் ஓட்டி சென்றார். ஆந்திர மாநில சுற்றுலா பயணிகள் நாகர்கோவிலில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு சென்னையில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர்.இதற்காக அவர்கள் பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் சிறுவாச்சூர் சர்வீஸ் ரோடு அருகே நேற்று அதிகாலை பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர்.

    சிறுவாச்சூர் பாலத்தின் அருகே சர்வீஸ் ரோட்டில் கீழே இறங்கும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற பஸ் அந்த வழியாக சென்ற கார் மீது மோதி பாலத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் டிரைவர் சென்னையை சேர்ந்த கிறிஸ்டோபர் (53), காரில் பயணம் செய்த பிரின்ஸ் (48), சியாந்த் (17), பஸ் டிரைவர் ரமேஷ், கண்டக்டர் சாய் (31), பஸ்சில் பயணம் செய்த பயணிகள் உள்பட 15 பேர் லேசான காயமும், 3 பேர் படுகாயமும் அடைந்தனர். இவர்களில் 5 பேர் பெண்கள் ஆவர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து, காயம் அடைந்த 18 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதில் படுகாயம் அடைந்த 3 பேர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஞானஒளிவுபுரத்தில் கழுத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்த வாலிபரை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    மதுரை

    மதுரை ஞானஒளிவுபுரம் விசுவாசபுரி முதல் தெருவை சேர்ந்தவர் முனியசாமி (39). இவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் காயங்கள் இருந்தன. இதனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கருதுகின்றனர். இது குறித்து முனியசாமியின் தந்தை பூபதி கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியசாமி சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அவரது கழுத்தில் எப்படி காயம் ஏற்பட்டது? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் பள்ளி மெயின் ரோடு அருகே வந்தபோது குறுக்கே திடீரென ஒரு மாடு புகுந்தது.
    • பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள அண்டமி ஊராட்சியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 30) . கட்டிட தொழிலாளி.

    இவர் அண்டமியில் இருந்து மதுக்கூருக்கு கட்டுமானம் சென்ட்ரிங் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது மதுக்கூர் அருகே தனியார் பள்ளி மெயின் ரோடு அருகே வந்தபோது குறுக்கே திடீரென ஒரு மாடு புகுந்தது.

    இதில் நிலைதடுமாறிய சந்தோஷ்குமார் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த மதுக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலத்த காயமடைந்த சந்தோஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சந்தோஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளிக்குடி அருகே விபத்தில் லாரி மோதி கார் கவிழ்ந்தது. இதில் பெண் இறந்தார். 6 பேர் காயம் அடைந்தனர்.
    • அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருமங்கலம்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே யுள்ள மாதங்கோவில் பட்டியை சேர்ந்தவர் ஜான்சாமுவேல். இவர் குடும்பத்தினருடன் காரில் ஈரோடு சென்று விட்டு காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    நேற்று இரவு மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடி அருகே சென்று கொண்டி ருந்தபோது பின்னால் வந்த லாரி, கார் மீது மோதியது. இதில் கார் நிலைத்தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது.

    இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அமிர்தம் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார். மேலும் காரில் இருந்த ஜான்சாமுவேல், இறைநிலா, லில்லிபுஷ்பம், எர்ணாஸ், லியோன், டேவிட் ஆகியோர் படுகாயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×