search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகள்"

    • தந்தை உடலுக்கு மயானம் வரை வந்து மகள் இறுதி சடங்கு செய்தார்
    • ஆலங்குடி அருகே நெகிழ்ச்சி சம்பவம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இருசக்கர வாகன மெக்கானிக்கான இவர் நேற்று உடல்நலைக்குறைவால் இறந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை அவர்கள் செய்தனர்.

    இதையடுத்து இறந்த சேகருக்கான மயானக்கரை கொள்ளி வைக்கும் சடங்குகளை செய்வதில் உறவினர்கள் கேள்வி எழுப்பினர். இறுதியில் அவரது மூத்த மகளான ஆனந்தி என்ற பட்டதாரி மகள் தந்தைக்கான காரியங்களை நானே செய்கிறேன் என்று கூறினார். அதன்படி மயானம் வரை சென்ற அவர் தந்தையின் உடலுக்கு தீ மூட்டினார்.

    ஆண்பிள்ளை இல்லாத குறையை தீர்த்து தனது தந்தைக்கு கொள்ளி வைத்த பட்டதாரி பெண் ஆனந்தியை அங்கு வந்த உறவினர்கள் மற்றும் ஊரார்கள் பாராட்டினர்.

    இதற்கிடையே ஆலங்குடி இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் இறந்த சேகர் குடும்பத்திற்கு இறுதி சடங்குகள் செய்வதற்காக ரூ.20 ஆயிரம் வழங்கி உதவி செய்தனர்

    • உற்றார், உறவினர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்தது.
    • உயிர் தந்த தாயின் தனிமை துயரை துடைத்த மகளின் துணிச்சலான இந்த முடிவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

    திருவனந்தபுரம் :

    கேரளாவில் 59 வயது தாய்க்கு 2-வது திருமணம் செய்து அழகு பார்த்த மகளை பலரும் பாராட்டி வருகிறார்கள். அவர் தனது தாயின் தனிமையை போக்க விரும்பியதாக கூறினார்.

    இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ரதிமேனன் (வயது 59). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உண்டு. இருவருக்கும் திருமணமான நிலையில், ரதிமேனன் தனிமையில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் தனது தாயார் தனிமையில் தவித்து வருவதை உணர்ந்த ரதிமேனனின் மகள் பிரசிதா, கண்டிப்பாக தனது தாயாருக்கு ஒரு துணை வேண்டும் என்று சிந்திக்கத்தொடங்கினார். இதற்காக தனது தாய்க்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என்று அவர் முடிவு செய்தார். இதற்காக தகுந்த மணமகனை தேட ஆரம்பித்தார்.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த திவாகரன் (63) என்பவர்தான் தனது தாய்க்கு ஏற்ற துணை என்று பிரசிதா முடிவு செய்தார். 2 மகள்களுக்கு தந்தையான திவாகரன் வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

    அவரிடம் தனது தாயின் தனிமை பற்றியும், அவருக்கு ஒரு துணை வேண்டும், அது நீங்களாக இருந்தால் மிகவும் நல்லது என்று உருக்கமாக விளக்கிகூறினார் பிரசிதா.

    இதனை புரிந்து கொண்ட திவாகரன் 2-வது திருமனத்திற்கு சம்மதம் தெரிவித்தார். திவாகரனின் மனநிலை குறித்து அவரது 2 பெண்குழந்தைகளிடமும் பிரசிதா பேசினார். அவர்களும் தந்தையின் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

    இதை தொடர்ந்து, தனது தாய் ரதிமேனனின் சம்மதத்தை பெற்ற அவர் திருச்சூர் திருவம்பாடி கோவிலில் இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைக்க முடிவு செய்தார். அதன்படி உற்றார், உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி முடித்தார். உயிர் தந்த தாயின் தனிமை துயரை துடைத்த மகளின் துணிச்சலான இந்த முடிவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

    தாய்க்கு 2-வது திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த பிரசிதா கூறியதாவது:-

    எனது அம்மாவுக்கு நாங்கள் 2 பெண் குழந்தைகள். அப்பா உயிரோடு இருக்கும்போதே எங்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. நாங்கள் அவரவர் கணவர் வீட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் அப்பா திடீரென்று மரணம் அடைந்ததால் அம்மா தனிமையானார். எங்களுக்கும் கணவர், குழந்தைகள் என ஆனதால் அம்மாவை அடிக்கடி நேரில் வந்து பார்க்க முடியவில்லை. அம்மாவின் தனிமை நிலையை போக்க வேண்டும் என்று யோசித்தேன். அதற்காகத்தான் இந்த திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 தினங்களுக்கு முன்பு காந்திமதி தனது 5 வயது மகளை அழைத்துக் கொண்டு, கணவர் கதிர்வேலிடம் வெளியில் சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • 2 நாட்களாக அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்காததால், காந்திமதியின் தாய் வெள்ளகோவில் போலீசில் புகார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில், முத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி ஈஸ்வரி ( வயது 43). இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் காந்திமதி (வயது 21) . இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார்.

    இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஜூலை 6ந்தேதி காந்திமதி தனது 5 வயது மகளை அழைத்துக் கொண்டு, கணவர் கதிர்வேலிடம் வெளியில் சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. காந்திமதி தனது தாய் ஈஸ்வரியிடம் போன் மூலம் தகவல் கூறியுள்ளார். இதனையடுத்து அவரது போன் சுவிட்ச் ஆப் ஆனது. இதையடுத்து 2 நாட்களாக அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்காததால்,காந்திமதியின் தாய் ஈஸ்வரி வெள்ளகோவில் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் கே.முத்துக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தாய் மற்றும் மகளை தேடி வருகின்றனர்.

    • சுதாகரன் ஆத்திரம் அடைந்து பேபியை சரமாரியாக தாக்கியுள்ளார். அவரது மகளையும் தாக்கமுயன்றுள்ளார்
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுதா கரனை தேடி வருகின்றனர்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட கழுவந்திட்டை பகுதியை சேர்ந்தவர் பேபி (வயது 65).

    இவரது மகள் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து வந்து தாயாருடன் வசித்து வருகிறார். இந்தநிலையில், அவரை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி நரியன்விளையை சேர்ந்த சுதாகரன் என்பவர் பேபியிடம் கேட்டுள்ளார்.

    ஆனால் பேபி அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். இருப்பினும் சுதாகரன் இது தொடர்பாக அடிக்கடி தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பேபி மற்றும் அவரது மகள் தாங்கள் நடத்தும் பெட்டி கடையில் இருந்த போது சுதாகரன் அங்கு வந்தார். அவர் பேபியிடம் மீண்டும் அவரது மகளை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

    இதற்கு பேபி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் சுதாகரன் ஆத்திரம் அடைந்து பேபியை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் அவரது மகளையும் தாக்கமுயன்றுள்ளார். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.இவர்களது கூச்சல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பேபியை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுதா கரனை தேடி வருகின்றனர்.

    • வேல்சாமி குடித்துவிட்டு வந்து தனது மகள்களிடம் தகராறு செய்துள்ளார்
    • தனது மகளை அடிப்பதற்கு அவர் விரட்டி சென்றபோது கீழே விழுந்துள்ளார்

    கன்னியாகுமரி :

    ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ஆலங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 58). மாங்காய் பறிக்கும் தொழிலாளி. இவரது மனைவி பூவதி நாகர்கோவிலில் உள்ள ஒரு ஹோட்டலில் உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். கடந்த சில நாட்களாக இவர் தனது வீட்டிற்கு வரவில்லை இதனால் மனமுடைந்த வேல்சாமி குடித்துவிட்டு வந்து தனது மகள்களிடம் தகராறு செய்துள்ளார். சம்பத்தன்று தனது மகளை அடிப்பதற்கு அவர் விரட்டி சென்றபோது கீழே விழுந்துள்ளார்.

    அதில், அவர் படுகாயம் அடைந்து மயங்கிய நிலையில் கிடந்தார். பின்னர் அவரை அருகில் உள்ளவர்கள் பார்த்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேல்சாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜா க்கமங்கலம்போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் தாய் மகள் பலியான சம்பவம் குறித்து டிராக்டர் டிரைவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இன்று பிரேத பரிசோதனை முடிந்து இன்று உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அடுத்த செல்லம்பகவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார்(34). இவர் மொடக்குறிச்சி பூந்துறை ரோட்டில் நகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கோமதி (30). இவர்களுக்கு 4 வயதில் சுகுதி என்ற மகள் உள்ளார். நேற்று கோமதி தனது மகளுடன் நரிகாட்டுவலசு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு மொபட்டில் சென்றார். பின்னர் இரவு தாய் வீட்டில் சென்று விட்டு மீண்டும் மொபட்டில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    வேலம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் கருப்பு பாரம் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. டிராக்டரை முந்திச் செல்வதற்காக கோமதி முயன்றார்.

    அப்போது எதிரே மோட்டார் சைக்கிள் வந்ததால் கோமதி நிலைதடுமாறி மகளுடன் கீழே விழுந்தார். இதில் டிராக்டரின் சக்கரம் ஏறி அவர்கள் 2 பேரு ம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து மொட க்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் டிராக்டர் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த கோமதி, சுகுதி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    சாமியார் பேச்சை கேட்டு மாற்றுத்திறனாளி மகளை கொன்று தனது வீட்டிலேயே குழி தோண்டி புதைத்த பெற்றோர் அடுத்த குழந்தை நன்றாக பிறக்கும் என காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள சௌதார்புர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தாபால் என்பவர் தனது குழந்தையை கொன்றுவிட்டதாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனந்தாபாலுக்கு 6 வயதில் தாரா என்ற மகள் இருந்துள்ளார். ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தாராவின் உடல்நிலை மருத்துவ சிகிச்சையில் முன்னேறவில்லை.

    இதனை அடுத்து, சாமியார் ஒருவர் மகளை கொன்று விட்டால், அடுத்து ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என ஆனந்தாபாலிடம் கூறியுள்ளார். சாமியாரின் பேச்சை கேட்டு, 5 நாட்களாக உணவு, குடிநீர் எதுவும் கொடுக்காமல் தனது மகளை ஆனந்தாபால், அவரது மனைவி கொன்றுள்ளனர்.

    இதனை அடுத்து, தனது வீட்டின் பின்புறம் குழி தோண்டி மகளின் சடலத்தை புதைத்துள்ளனர். தற்போது, போலீசார் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் ஆனந்தாபால், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்ய உள்ளனர். 
    ×