search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 187782"

    இந்தியாவில் ஆயிரத்து 991 அனாதை குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களை தத்தெடுக்க சுமார் 20 ஆயிரம் பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. #AdoptionKids #Parents #CentralAdoptionResourceAuthority
    புதுடெல்லி:

    பல்வேறு காரணங்களினால் பெற்றோரை இழந்த குழந்தைகள் அனாதைகளாக காப்பகங்களிலும், கருணை இல்லங்களிலும் வளர்ந்து வருகிறார்கள். அவர்களை தங்களது சொந்த பிள்ளைகளாக வளர்க்க குழந்தை பெற இயலா பெற்றோர்கள் பலர் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்தியாவில் அனாதை குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்ட காப்பகங்களில் மட்டும் ஆயிரத்து 991 குழந்தைகள் பராமரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பெண் குழந்தைகள் மட்டும் ஆயிரத்து 322 பேர் உள்ளனர்.



    அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 376 குழந்தைகளும், ஒடிசாவில் 299 குழந்தைகளும் வளர்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இவர்களை தத்தெடுக்க 20 ஆயிரம் பெற்றோர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள ஆயிரத்து 991 குழந்தைகளின் எண்ணிக்கை என்பது மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட காப்பகங்களில் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், குழந்தைகளை தத்தெடுக்க 20 ஆயிரம் பெற்றோர்கள் காத்திருப்பதாகவும், அதன்படி, 1 குழந்தைக்காக சுமார் 10 பெற்றோர்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். #AdoptionKids #Parents #CentralAdoptionResourceAuthority 
    மாணவிகள் ஆளுமை திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பழனிசாமி பேசினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் தன்னாட்சி கல்லூரி மாணவிகள் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கில்) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

    ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் 1952 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவிகள் கல்வி பயின்று இன்று தமிழ்நாட்டை கடந்து உலகளவில் பல்வேறு நாடுகளில் உயர் பதவிகளில் இருந்து வருகின்றனர். இன்றைய நவீன சூழலில் மாணவ, மாணவியர்கள் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்களுடையே பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடையேயான பகிர்தலை குறைத்து வருகின்றனர். அவ்வாறு இல்லாமல் தங்களுடைய பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களின் நல்ல ஆலோசனைகளை உள்வாங்கி அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    மேலும், அறிவு சார்ந்த புத்தகங்களை படிப்பதோடு இந்திய ஆட்சிப்பணி மற்றும் தமிழ்நாடு அரசால் நடத்தப்படுகின்ற அனைத்து போட்டி தேர்வினையும் எதிர்கொள்ள நீங்கள் உங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

    எனவே, இன்று புதிய உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட மாணவிகளாகிய நீங்கள் உங்கள் ஆளுமைத் திறனை வளர்த்து தன்னம்பிக்கையுடன், கடின உழைப்பு, விடா முயற்சியுடன் வாழ்வை எதிர்கொண்டு நல்ல பணியில் சேர்ந்து பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அசோகன், எஸ்.வி.ஜி. விசாலாட்சி கல்லூயின் செயலாளர் திரவீந்திரன், கல்லூரி முதல்வர் கலைச்செல்வி, வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் சரஸ்வதி, உடுமலை வட்டாட்சியர் தங்கவேல், நந்தினி ரவீந்திரன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தாய்லாந்தில் குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்கள் தாங்கள் நலமுடன் இருப்பதாக கூறும் புதிய வீடியோவை கடற்படை வெளியிட்டுள்ளது. #ThailandCaveRescue #ThaiBoys #ThaiBoysTrappedVideo
    பாங்காக்:

    தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் 9 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டனர். பிரிட்டனைச் சேர்ந்த நீர்மூழ்கி வீரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அவர்கள் அனைவரும் மிகுந்த பசியுடன் காணப்பட்டனர். நீர்மூழ்கி வீரர்களுடன் அவர்கள் உரையாடும் வீடியோவை அரசு வெளியிட்டது. சிறுவர்கள் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டதும், அவர்களை மீட்கும் பணிகள் தொடங்கின. 

    முதலில் அவர்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக ஒரு மருத்துவர், ஒரு நர்ஸ் உள்ளிட்ட 7 பேர் சென்றனர். இவர்கள் அனைவரும் நீரில் மூழ்கி நீந்திச் செல்லும் பயிற்சி பெற்றவர்கள். தற்போது 10 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

    தற்போது மழைக்காலம் என்பதால் குகைக்குள் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த சமயத்தில் சிறுவர்களை வெளியே அழைத்து வருவதில் சிக்கல்கள் உள்ளன. அவசரப்பட்டு வெளியே அழைத்து வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே, இந்த விஷயத்தில் நிதானமாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். சிறுவர்களுக்கு நீரில் மூழ்கி நீந்துவதற்கு கற்றுக்கொடுத்து அதன்பின்னர் மீட்க வேண்டும். இதைவிட்டால், நீர் மட்டம் குறையும் வரை காத்திருக்க வேண்டும். 

    இந்நிலையில், குகைக்குள் இருக்கும் சிறுவர்கள் நலமுடன் இருப்பதை காட்டும் புதிய வீடியோ ஒன்றை தாய்லாந்து கடற்படை இன்று வெளியிட்டுள்ளது. 

    அந்த வீடியோ பதிவில், சிறுவர்கள் சிரித்த முகத்துடன் காணப்படுகின்றனர். ஒவ்வொருவரும் கேமரா முன்பு தனது புனைப்பெயரை கூறி தன்னை அறிமுகம் செய்து , ‘நான் நலமுடன் இருக்கிறேன்’ என கூறுகிறார்கள். 

    தாய்லாந்து கடற்படையின் பேஸ்புக் தளத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவைப் பார்த்ததும், சிறுவர்களின் பெற்றோர் ஆறுதல் அடைந்துள்ளனர். #ThailandCaveRescue #ThaiBoys #ThaiBoysTrappedVideo
    ×