என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் கொலை"

    • பெண்ணின் கழுத்தில் இருந்த நகைகளை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்துள்ள ஜிஞ்சேப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடப்பன் (வயது50). மாற்றுத்திறனாளியான இவரது மனைவி பாப்பம்மா (45). இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் பாப்பம்மா ஆடுகளை தினமும் காலை 7 மணிக்கு காட்டுக்குள் மேய்ச்சலுக்கு அழைத்து சென்று மதியம் 2 மணிக்கு வீடு திரும்புவார்.

    நேற்றும் வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு காட்டுக்குள் அவர் அழைத்து சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிபோன குடும்பத்தினர் காட்டுக்குள் சென்று தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இன்றுகாலை பெரியஏரி காட்டுப்பகுதியில் பாப்பம்மா இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரை உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.

    இது குறித்து ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    அப்போது ஆடை இல்லாமல் நிர்வாண நிலையில் பாப்பம்மா இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது. அப்பெண்ணின் கழுத்தில் இருந்த நகைகளை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர். அதனால் மர்ம நபர்கள் நகைக்காக பெண்ணை கழுத்தை இறுக்கி கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

    இதையடுத்து அவரை உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால், கொலை நடந்து 4 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என போலீசார் கருதினர்.
    • பெண் உடலை பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள இளங்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தம்பதியர் வாடகைக்கு குடி வந்தனர்.

    அவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராம்பகதூர்-லட்சுமி என வீட்டு உரிமையாளரிடம் கூறி உள்ளனர். ஆனால் முகவரிக்கான ஆவணங்கள் எதையும் கொடுக்கவில்லை.

    இந்த நிலையில் அந்த வீட்டில் இருந்து சம்பவத்தன்று இரவு துர்நாற்றம் வீசியது. இது குறித்து போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர்.

    இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு இளம்பெண் உடல் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது. போலீசார் உடலைக் கைப்பற்றிய போது, கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    மேலும் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால், கொலை நடந்து 4 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என போலீசார் கருதினர். பெண் உடலை பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    பெண்ணுடன் தங்கி இருந்தவர் தலைமறைவாகி உள்ளார். எனவே அவர் தான் பெண்ணை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர்கள் கொடுத்த முகவரி போலியானது என தெரியவந்துள்ளது.

    எனவே தலைமறைவானவர் சிக்கினால் தான் உண்மையான முகவரி தெரிய வரும். அவர் எங்கு சென்றார்? கொலை செய்யப்பட்ட பெண் அவரது மனைவி தானா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன் விரோதத்தால் ஆத்திரம்
    • தந்தை-மகன் கோர்ட்டில் சரண்

    வாணியம்பாடி:

    ஆலங்காயம் அடுத்த குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் சங்கர் மற்றும் சண்முகம் உறவினர்கள். இவர்கள் 2 பேருக்கும் நில சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி சங்கர் மற்றும் சண்முகம் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 2 குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த சண்முகம் மற்றும் அவரது மகன்களான ஜெயமோகன் (39), ரஞ்சித் குமார் ஆகியோர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சங்கர் குடும்பத்தினரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் சங்கரின் மனைவி ஜெயந்தி தலை உள்ளிட்ட பகுதிகளில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இந்த நிலையில் ஜெயந்தி மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயந்தி நேற்று பரிதாபமாக இறந்தார். இது சம்பந்தமாக ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆலங்காயம் ரஞ்சித் குமாரை கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள சண்முகம் மற்றும் ஜெயமோகனை தேடி வந்தனர். ஜெயந்தி உயிரிழந்ததால் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் சண்முகம் அவரது மகன் ஜெயமோகன் ஆகியோர் திருப்பத்தூர் குற்றவியல் கோர்ட்டில் சரணடைந்தனர்.

    • சாந்தா எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை.
    • காய்கறி சந்தை பகுதியில் படுத்து இருந்த சாந்தாவை யாரோ மர்ம நபர் இழுத்து வந்து தலையில் பயங்கரமாக தாக்கி கொலை செய்துள்ளனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சிகோவில் ரோடு, திருவேங்கடம்பாளையம், புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சாந்தா (57). இவர்களுக்கு வெங்கடேஷ், கார்த்திக் என 2 மகன்களும், மீனா, வனிதா என 2 மகள்களும் உள்ளனர்.

    இந்நிலையில் ராஜா கடந்த 6 வருடத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாததால் உயிரிழந்தார். மூத்த மகன் வெங்கடேஷ் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மாயமாகி விட்டார்.

    இதையடுத்து சாந்தா தனது 2-வது மகன் கார்த்திக்குடன் வசித்து வந்தார். சாந்தாவும், கார்த்திக்கும் கட்டிட வேலைக்கு சென்று வந்தனர். பின்னர் கார்த்திக் பெருந்துறையில் உள்ள வாரச்சந்தை பகுதியில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார்.

    சாந்தாவுக்கும், அவரது மகன் கார்த்திக்குக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. சாந்தாவும், கார்த்திக்கும் இரவில் பெருந்துறை காய்கறி மார்க்கெட்டில் உள்ள பகுதிகளில் தங்குவது வழக்கம். இரவில் மது அருந்திவிட்டு அங்கேயே தூங்கி விடுவார்கள். சாந்தா அவ்வப்போது கருமாண்டி செல்லிபாளையத்தில் உள்ள இளைய மகள் வனிதா வீட்டிற்கு சென்று வருவார்.

    இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் சாந்தா குடிபோதையில் வனிதா வீட்டிற்கு வந்தார். பின்னர் இரவு 7 மணி அளவில் காய்கறி மார்க்கெட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    இந்நிலையில் இரவு 11 மணி அளவில் கார்த்திக் தனது தங்கை வனிதா வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். சத்தம் கேட்டு வனிதா அவரது கணவர் வேலன் ஆகியோர் கதவை திறந்து வெளியே வந்து கார்த்திக்கிடம் எதற்காக பதட்டமாக இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

    அதற்கு கார்த்திக் இரவு 10.30 மணி அளவில் அம்மாவுக்கு சாப்பாடு வாங்கி கொண்டு அம்மா படுத்து தூங்கும் காய்கறி மார்க்கெட் பகுதிக்கு சென்று பார்த்தபோது அம்மாவை காணவில்லை என்றும் சந்தையின் மேற்புறம் பகுதியில் சென்று பார்த்தபோது அம்மா தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மூச்சு பேச்சில்லாமல் கிடப்பதாக கூறினார்.

    இதனையடுத்து வனிதா தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தார். அப்போது காய்கறி சந்தை மேற்பகுதியில் தலையில் ரத்த காயங்களுடன் சாந்தா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அந்த இடம் முழுவதும் ரத்தம் உறைந்து காணப்பட்டது.

    இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாந்தா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    சாந்தா எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை. சாந்தா தலையில் பலத்த காயம் இருந்துள்ளது. காய்கறி சந்தை பகுதியில் படுத்து இருந்த சாந்தாவை யாரோ மர்ம நபர் இழுத்து வந்து தலையில் பயங்கரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். குடிபோதை தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வள்ளியம்மாள் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சைக்கிளை அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்ற வாலிபர் தாக்கி கொண்டிருந்தார்.
    • வள்ளியம்மாள் அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன், வள்ளியம்மாளை அவதூறாக பேசியுள்ளார்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் அனந்தநம்பிக்குறிச்சி வடக்கூரை சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயி. இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது65). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 7-ந்தேதி வள்ளியம்மாள் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை முடித்து விட்டு மாலை வீடு திரும்பி உள்ளார்.

    அப்போது வள்ளியம்மாள் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சைக்கிளை அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்ற வாலிபர் தாக்கி கொண்டிருந்தார். இதைப் பார்த்த வள்ளியம்மாள் அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன், வள்ளியம்மாளை அவதூறாக பேசியுள்ளார்.

    மேலும் கத்தியுடன் கூடிய துணிப்பை வைத்து தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த வள்ளியம்மாளை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் இன்று காலை வள்ளியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அதனை கொலை வழக்காக மாற்றிய முறப்பநாடு போலீசார் கணேசனை கைது செய்தனர்.

    • கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறில் பாண்டியம்மாள் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
    • பாண்டியம்மாளின் கள்ளக்காதலன் செல்வம் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி பாண்டியம்மாள் (வயது 43). இவர் மேல அனுப்பானடி தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள மாவு மில்லில் பணியாற்றி வந்தார்.

    அப்போது இவருக்கும், அங்கு வேலை பார்த்த சிந்தாமணி கங்காநகரை சேர்ந்த செல்வம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பாண்டியம்மாள், செல்வம் வீட்டுக்கு சென்றுள்ளார். இன்று காலை அவர் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். பாண்டியம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தது குறித்து கீரைத்துறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாண்டியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாண்டியம்மாளை கொலை செய்தது யார்? என்பது உடனடியாக தெரியவில்லை.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாண்டியம்மாளின் கள்ளக்காதலன் செல்வம் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கடந்த 11-ந்தேதி இரவு செல்வத்திடம் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு, பாண்டியம்மாள் தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார்.
    • நள்ளிரவு ஆகியும் பாண்டியம்மாள் வீட்டுக்கு திரும்பி வராததால் மகன் கண்ணன் அவரை தேடி செல்வத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    மதுரை:

    மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் அண்ணாமலையார் வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா. இவரது மனைவி பாண்டியம்மாள் (43). இவர்களுக்கு கண்ணன் (27) என்ற மகன் உள்ளார். பாண்டியம்மாள் மேலஅனுப்பானடி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள மாவு மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    அப்போது அவருக்கும், அதே மில்லில் வேலை பார்த்த அனுப்பானடி பூம்புகார் நகரை சேர்ந்த செல்வம் (57) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு செல்வத்திடம் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு, பாண்டியம்மாள் தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். நள்ளிரவு ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வராததால் மகன் கண்ணன் அவரை தேடி செல்வத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது அவரது வீடு உள்பக்கமாக பூட்டி கிடந்துள்ளது. வீட்டினுள் பார்த்தபோது பாண்டியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கீரைத்துறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த பாண்டியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் பிணமாக கிடந்த வீட்டில் வசித்து வந்த செல்வத்தை காணவில்லை.

    அவர் தான் பாண்டியம்மாளை கொன்றுவிட்டு தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் ஆகியோரின் உத்தரவின்பேரில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தலைமறைவாகிய செல்வத்தை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் பாண்டியம்மாளை கொன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    பாண்டியம்மாளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும், அது தொடர்பாக கேட்டபோது தங்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும், அதில் ஆத்திரம் அடைந்து கத்தியால் கழுத்தை அறுத்து அவரை கொன்று விட்டதாகவும் செல்வம் கூறியிருக்கிறார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு உடுமலை அருகே மாடுகளை மேய்க்க சென்ற பெண் கொலை செய்யப்பட்டார்.
    • மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை புக்குளம் சாலை பஸ் நிறுத்தத்தில் இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக உடுமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து உடுமலை டி.எஸ்.பி., தேன்மொழி வேல், இன்ஸ்பெக்டர் ராஜ்கண்ணா, மகளிர் இன்ஸ்பெக்டர் கவிதா, கிராம நிர்வாக அதிகாரி அருள்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பெண்ணின் தலை, கழுத்து பகுதியில் காயம் இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இறந்து கிடந்த பெண்ணின் பெயர் விவரம் குறித்து விசாரிக்கும் போது அவர் உடுமலை காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி தனலட்சுமி என்பது தெரியவந்தது. மனநிலை பாதிக்கப்பட்ட அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்தநிலையில் அவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு உடுமலை அருகே மாடுகளை மேய்க்க சென்ற பெண் கொலை செய்யப்பட்டார். தற்போது மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நேற்று முன்தினம் அதிகாலை பஸ் நிறுத்தத்தில் தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.
    • தனலட்சுமி எதற்காக கொலை செய்யப்பட்டார், கொலையாளிகள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த புக்குளம் நடராஜர் காலனி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மனைவி தனா என்கிற தனலட்சுமி (வயது 40). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இதனால் இவரது கணவர் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. தனலட்சுமி அடிக்கடி புக்குளம் பகுதியில் உள்ள பஸ் நிறுத்த நிழற்குடையில் படுத்து தூங்கி வந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை பஸ் நிறுத்தத்தில் தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். இதனை பார்த்தவர்கள் உடுமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் உடுமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவ இடத்தில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் மற்றும் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் ஆகியோர் விசாரணை நடத்தினர். தனலட்சுமி எதற்காக கொலை செய்யப்பட்டார், கொலையாளிகள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் விசாரணையில் தனலட்சுமியை கொலை செய்தது உடுமலை ஏரிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் (வயது 30) என்பது தெரியவந்தது. சைக்கோவான இவர் ஏற்கனவே ஒரு மூதாட்டியை கொலை செய்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் தனலட்சுமியை கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    • மனைவி மீது சந்தேகம் அடைந்த ரஞ்சித் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • கவுசல்யாவின் தாயார் செல்வராணி கொடுத்த புகாரின் பேரில் அனக்காவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா அனுப்பத்தூர் ரோடு தெருவை சேர்ந்தவர் ராஜா மகன் ரஞ்சித் (வயது 27). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் எதிர் வீட்டில் உள்ள நெடுஞ்செழியன் என்பவரது மகள் கவுசல்யா (23) என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    கவுசல்யா செய்யாறு சிப்காட் ஷூ தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில், ரஞ்சித்துக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அடிக்கடி தகராறு செய்து வந்தார். அப்போது உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்துள்ளனர்.

    இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தம்பதியிடைய தகராறு ஏற்பட்டது. அப்போது அனக்காவூர் போலீசில் கவுசல்யா புகார் செய்தார். இதையடுத்து போலீசார் ரஞ்சித்தை எச்சரித்து ஒழுங்காக குடும்பம் நடத்த அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை மனைவி மீது சந்தேகம் அடைந்த ரஞ்சித் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    பின்னர் ஆத்திரமடைந்த ரஞ்சித் கவுசல்யாவின் கழுத்தை அவரது தாலி கயிற்றாலும், துப்பட்டாவாலும் இறுக்கி கொலை செய்துள்ளார்.

    பின்னர் அங்கிருந்து தனது 1½ வயது மகன் கபிலேஷை தூக்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த அனக்காவூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் கன்னியப்பன், மனோகர் ஆகியோர் விரைந்து வந்து கவுசல்யாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கவுசல்யாவின் தாயார் செல்வராணி கொடுத்த புகாரின் பேரில் அனக்காவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.

    • தாய் பிணமாக கிடப்பதை பார்த்ததும் சுரேஷ்குமார் கதறி அழுதார்.
    • சுரேஷ்குமாரின் அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை ஜடையம்பாளையம்புதூரை சேர்ந்தவர் முருகையன் (60). விவசாயி. இவரது மனைவி சரோஜா (55).

    இவர்களுக்கு சுரேஷ்குமார் (37) என்ற மகனும், நித்யாபிரியா (33) என்ற மகளும் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது.

    சுரேஷ்குமார் தனது மனைவி மற்றும் மகளுடன் மேட்டுப்பாளையம் பாயப்பனூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இதனால் முருகையனும், அவரது மனைவியும் தோட்டம் அருகே உள்ள வீட்டில், தனியாக வசித்து வந்தனர்.

    சுரேஷ்குமார், தோட்டத்திற்கு வந்து விட்டு, பெற்றோரை பார்த்து செல்வது வழக்கம். நேற்று வேலை காரணமாக சுரேஷ்குமார் தோட்டத்திற்கு வரவில்லை. அவரது தந்தை முருகையன் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். வீட்டில் சரோஜா மட்டும் தனியாக இருந்தார்.

    இந்த நிலையில் காலையில் வராததால் மாலையில் தனது அம்மாவை பார்க்க சுரேஷ்குமார் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

    இதனால் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கு அவரது தாய் சரோஜா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த நகைகளும் மாயமாகி இருந்தது.

    தாய் பிணமாக கிடப்பதை பார்த்ததும் சுரேஷ்குமார் கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் அங்கு ஓடி வந்தனர்.

    அவர்கள் இறந்து கிடந்த சரோஜாவின் உடலை பார்த்தனர். மேலும் சம்பவம் குறித்து சிறுமுகை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செல்வ விநாயகம், முருகதாசன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி. பாலாஜி ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்வையிட்டு ஏதாவது தடயங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்தனர். மேலும் இந்த சம்பவம் எப்போது எப்படி நடந்தது என்பது குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர்.

    மேலும் கோவையில் இருந்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று மர்மநபர் 18 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதற்கிடையே கொலை நடந்த வீட்டில் வாசல் மற்றும் அங்குள்ள தெருவில் ரத்தக்கறையாக உள்ளது. கொள்ளையன் மூதாட்டியை கொன்று நகையை எடுத்து கொண்ட பின் ரத்தக்கறையுடன் அங்கு சுற்றி திரிந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக 3 தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் சரோஜாவின் கணவர், மகன் மற்றும் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என பலரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டார்.
    • இந்த கொலையில் சம்பந்தப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் அருகே அல்லம்பட்டியை சேர்ந்தவர் சரவணபாண்டியன் (43). காவலாளியாக பணிபுரிந்து வந்த இவர் கடந்த 2016-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த குருவம்மாள்(54) என்பவரை நகைக்காக கொலை செய்தார். சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணபாண்டியனை கைது செய்தனர்.

    வழக்கு விசாரணை திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பகவதியம்மாள், குற்றவாளி சரவணபாண்டியனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.14 ஆயிரம் விதித்து உத்தரவிட்டார்.

    ×