search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேபாளம்"

    • உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தகவல்.
    • காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    காத்மாண்டு:

    நேபாளம் நாட்டின் மேற்கு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கன மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. சுதுர்பாசிம் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக அக்செம் மாவட்ட அதிகாரி திபேஷ் ரிஜாலின் தெரிவித்துள்ளார்.

    உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அவர் கூறியுள்ளார். இந்த மாகாணத்தில் உள்ள ஏழு மாவட்டங்களை இணைக்கும் பீம்டுட்டா நெடுஞ்சாலையும் இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    தலைநகர் காத்மாண்டுவில் இருந்து மேற்கே 450 கி.மீ. தொலைவில் உள்ள அக்செம் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி காயமடைந்த நிலையில் 11 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சுர்கெட் மாவட்டத்திற்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    நிலச்சரிவில் சிக்கி 3 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவு நடைபெற்ற பகுதியில் நேபாள காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் 

    • இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை.
    • சுகாதாரம் மற்றும் கல்வியில் நேபாள உள்கட்டமைப்பை வலுப்படுத்த இந்தியா ஆதரவு.

    காத்மாண்டு:

    அண்டை நாடான நேபாளத்திற்கு இந்தியா 75 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 17 பள்ளிப் பேருந்துகளை பரிசாக வழங்கி உள்ளது.நேபாள நாட்டின் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் தேவேந்திர பவுடல் முன்னிலையில் இந்தியா தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா வாகனங்களின் சாவிகளை ஒப்படைத்தார்.

    சுகாதாரம் மற்றும் கல்வியில் நேபாள உள்கட்டமைப்பை வலுப்படுத்த அந்நாட்டின் முயற்சிகளுக்கு இந்திய அரசு நீண்டகாலத் திட்டத்தின் கீழ் ஆதரவு வழங்கி அளித்து வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் 75 ஆம்புலன்ஸ்கள் பரிசாக வழங்கப்படுவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    ஆம்புலன்ஸ்கள் மற்றும் பள்ளி பேருந்துகளை பரிசாக வழங்கப்படுவது இரு நாடுகளுக்கும் இடையே உறவை வலுப்படுத்தவும் வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லவும் உதவும் என்றும் ஸ்ரீவஸ்தவா கூறினார்.

    அப்போது பேசிய நேபாள அமைச்சர் பவுடல், தங்கள் நாட்டில் இந்தியா மேற்கொண்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பாராட்டினார். இந்த முயற்சிகள் இரு நாட்டு மக்களிடையேயான தொடர்பை வலுப்படுத்தும் என்றும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இந்தியா வழங்கியுள்ள 75 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 17 பள்ளி பேருந்துகள் நேபாளத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுகாதார மற்றும் கல்வித் துறைகளில் பணிபுரியும் பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் என்று இந்திய மிஷன் அமைப்பு தெரிவித்துள்ளது.

    நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் வெற்றியை நேபாளம் பதிவு செய்துள்ளது. #NEDvNEP #NepalCricket

    கடந்த மார்ச் மாதம் நேபாளம் அணி சர்வதேச அணிக்கான அந்தஸ்தை பெற்றது. இதன் பின்னர் முதன் முறையாக அந்த அணி நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதல் ஒரு நாள் போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், நேற்று இரண்டாவது ஒரு நாள் போட்டி நடந்தது. 

    முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 216 ரன்கள் எடுத்தது. சோம்பால் காமி 51, கேப்டன் பராஸ் காட்கா 51 ரன்கள் எடுத்தனர்.

    அடுத்து விளையாடிய நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஒரு ரன்னில் நேபாளம் வென்றது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில் நெதர்லாந்து இருந்தது. கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில், பவுலிங் செய்த பராஸ் காட்கா, நெதர்லாந்து அணியின் கடைசி விக்கெட்டை ரன் அவுட்டாக்கினார்.

    இந்த வெற்றியின் மூலம் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டி வெற்றியை நேபாளம் பதிவு செய்துள்ளது. 2 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற தொடர் சமனானது.
    நேபாளத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் ஸ்வால்லன் கோஷி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். #Nepal
    காத்மாண்டு:

    நேபாளத்தில் பேடாடர் மலைப்பகுதியில் இருந்து கோஷி பகுதி வழியாக வந்துகொண்டிருந்த இந்திய பதிவு எண் கொண்ட வாகனம் திடீரென்று ஓட்டுனரது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், அந்த வாகனம் அருகில் இருந்த ஸ்வால்லோன் கோஷி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அப்பகுதிக்கு சென்றனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்ததாகவும், மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வாகன ஓட்டுனரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Nepal
    நேபாளத்தில் இரு முக்கிய பிரிவுகளாக உள்ள ஆளும் இடதுசாரி கட்சிகள் ஒரே கட்சியாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என ஒருங்கிணைந்துள்ளது. #Nepal #NepalCommunistParty
    காத்மண்டு:

    மன்னராட்சியின் கீழ் இருந்த நேபாளம் பெரும் மக்கள் போராட்டத்திற்கு பின்னர் குடியரசு நாடானது. 2015-ம் ஆண்டு புதிய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டது. இதில், பிரதிநிதிகள் சபை (கீழ்சபை), தேசிய சபை (மேல்சபை) ஆகிய இரண்டு சபைகள் கொண்ட பாராளுமன்றம் அமைக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் சென்டர்) கட்சிகள் அடங்கிய கூட்டணி அபார வெற்றி பெற்றது. நேபாள காங்கிரஸ் கட்சி கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.

    பாராளுமன்ற மேல்சபை தேர்தலிலும் மொத்தமுள்ள 59 இடங்களில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கினைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சி 27 இடங்களையும், மாவோயிஸ்ட் சென்டர் கட்சி 12 இடங்கள் என இடதுசாரிகள் கூட்டணி 39 இடங்களில் வென்றது.

    தேர்தல் முடிவுகளை அடுத்து, புதிய பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சி தலைவரான சர்மா ஒலி தேர்வு பதவியேற்றார்.

    இதற்கிடையே இரண்டு கட்சிகளையும் இணைப்பது தொடர்பாக முடிவெடுக்க அமைத்த குழுவின் முடிவுப்படி, இரு கட்சிகளும் ஒன்றாக இணைந்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என இனி அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் சர்மா ஒலி, மாவோயிஸ்ட் சென்டர் கட்சியின் தலைவராக இருந்த பிரசந்தா ஆகியோருக்கு நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் சம அதிகாரங்கள் கொண்ட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மார்க்ஸ் மற்றும் லெனின் ஆகியோரின் கோட்பாடுகளின் அடிப்படையில் கட்சி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு பிரிவுகள் இணைந்ததன் மூலம் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி பழைய பலத்தை பெற்று புதிதாக உருவெடுத்துள்ளதாக அந்நாட்டின் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 
    நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் முதல் முக்கியத்துவமான அண்டை நாடு நேபாளம் என கூறினார். #modiinnepal #Janakpurtemple
    காத்மாண்டு:

    பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று நேபாளம் சென்றார். நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்ட மோடி, நேபாளத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நகரமான ஜனக்பூருக்கு நேரடியாக சென்றார்.

    ஜனக்பூர் நகரில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகருக்கு நேரடி பஸ் சேவையை இன்று தொடங்கி வைத்தார். அதன்பின் அங்குள்ள சீதை ஆலயத்தில் வழிபாடு செய்தார்.



    இதையடுத்து, அங்கு கூடியிருந்த மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    சீதை பிறந்த இடத்திற்கு வந்து வழிபாடு செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. நேபாளம் மற்றும் இந்தியாவில் உள்ள மக்கள் மரியாதை மற்றும் புகழினால் ஒருங்கிணைந்து உள்ளனர். நேபாளம் பல ஆண்டுகளாக ஆன்மீக சுற்றுலா தளமாக திகழ்ந்து வருகிறது. நேபாளம் இல்லாமல் இந்தியாவின் நம்பிக்கை முழுமையற்றது.

    இந்தியாவும், நேபாளமும் இணைந்து உள்ளதற்கு வரலாறு சான்றாக உள்ளது. எத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் நேபாளம், இந்தியாவிற்கு துணையாக இருந்துள்ளது. ஜனக்பூரானது, ஜானக்கின் ராஜா மற்றும் ராஜா தசரதனை மட்டும் இணைக்க வில்லை, இந்தியாவையும், நேபாளத்தையும் இணைத்துள்ளது.



    நான் இந்தியா குறித்து மட்டும் பேசவில்லை. அண்டை நாடுகளின் வளர்ச்சி குறித்தும் பேசுகிறேன். நேபாளம் வளர்ச்சியடைந்து வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இரு அண்டை நாடுகளும், பாரம்பரியம், வியாபாரம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து ஆகிய 5 துறைகளிலும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும், ஜனக்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சிக்கு 100 கோடி ரூபாய்  வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

    என மோடி கூறினார். #modiinnepal #Janakpurtemple

    ×