search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 188514"

    • தகவல் கிடைத்ததும் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் சம்பவத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.
    • இதற்கு நிரந்தர தீர்வு என்ன என்பது குறித்து மேயர் தினேஷ்குமார் ஆலோசனை நடத்தினார்.

    திருப்பூர்:

    திருப்பூரில் நேற்று பெய்த மழையினால் டி.எம்.எப் மருத்துவமனை அருகே உள்ள சுரங்க பாலத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். தகவல் கிடைத்ததும் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் சம்பவத்துக்கு சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது தண்ணீரை உறிஞ்சும் மோட்டார் பழுதாகி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக வரவழைத்து மோட்டாரை சரி செய்ய உத்தரவிட்டார். மேலும் கூடுதலாக ஒரு புதிய மோட்டார் ஒன்றை பொருத்தவும் நடவடிக்கை மேற்கொண்டார்.

    அதனைத்தொடர்ந்து பாலத்தில் தேங்கி நின்ற தண்ணீரை அப்புறப்படுத்த உத்தரவிட்டதை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் வாகனங்கள் மூலம் தண்ணீரை அப்புறப்படுத்தி போக்குவரத்து செல்லும் வரை சரி செய்தனர்.பின்னர் மாநகராட்சி அதிகாரிகளிடம் இந்த பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு என்ன வழிமுறைகள் உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு என்ன என்பது குறித்து மேயர் தினேஷ்குமார் ஆலோசனை நடத்தினார்.

    • சேலம் மாநகராட்சி பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சேலம் மாநகராட்சியில் மொத்தம் 96 பள்ளிகள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கல்வி நிலைக்குழு மேற்கொள்ளப்பட வேண்டிய கல்வி மேம்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.

    சேலம் மாநகராட்சியில் 51 துவக்கப்பள்ளிகள், 29 நடுநிலைப்பள்ளிகள், 9 உயர்நிலைப்பள்ளிகள், 7 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 96 பள்ளிகள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இப்பள்ளிகளுக்கு புதிதாக கட்டிடங்கள் கட்டுதல், கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல், கணினி உபகரணங்கள் வாங்குதல், ஆய்வகங்கள் வசதி ஏற்படுத்துதல், தளவாட சாமான்கள் வாங்குதல், பள்ளிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்துதல், கழிப்பிட வசதி, நூலகங்கள் ஏற்படுத்துதல், விளையாட்டு மைதானங்கள், சுற்றுசுவர் போன்ற கல்வி மேம்பாட்டு பணிகளை எவ்வாறு மேற்கொள்ளுவது என்பது குறித்து ஆலோசிக்கபப்ட்டது,

    மேலும் மேற்குறிப்பிட்ட மேம்பாட்டு பணிகளை மாநகராட்சி நிதி, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு, சமூக பொறுப்பு நிதி, நமக்கு நாமே திட்டம் மற்றும் அரசின் சிறப்பு நிதி ஆகியவற்றில் இருந்து மேற்கொள்ளுவது குறித்தும், தனியார் கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் மாநகராட்சி பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர கோருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் பேசியதாவது:

    மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்வது மிகவும் அவசியமாக கருதப்படுகிறது.

    அனைத்து பள்ளிகளிலும் மாணவமாணவியர்களுக்கு கழிப்பிட வசதியும், நூலக வசதியும் சுற்றுசுவர் அமைத்தலும் மிக முக்கியமானதாகும். மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிறப்பான முறையில் மாணவமாணவியர்களுக்கு கல்வியை கற்று தருகிறார்கள்.

    அந்த பள்ளிகளுக்கு மிக முக்கிய தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதை நோக்கமாக கொண்டு புது பொலிவுடன் கூடிய மாநகராட்சி பள்ளியாக மாற்றி அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    கல்வி நிலைக்குழு உறுப்பினர்கள் மாநகராட்சி பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து எடுத்து கூறியுள்ளிர்கள். இது குறித்து ஆய்வு மேற்கொண்டு அனைத்து பணிகளையும் நிறைவேற்றி தரப்படும்.

    • தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • தூய்மையாக பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் செல்வராஜ் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட துணி பைகளை பொதுமக்களுக்கு வழங்கினர் .

    பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர் . இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் திருப்பூர் மாநகரை தூய்மையாக பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

    பள்ளி மாணவிகளுக்கு மக்கும், மக்கா குப்பையை பிரித்து வழங்கும் வகையில் குப்பை பாக்சை செல்வராஜ் எம்.எல்.ஏ., தினேஷ்குமார் அருகில் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் மற்றும் பலர் உள்ளனர்.

    • 4வது குடிநீர் திட்டப் பணிகள் காரணமாக குடிநீர் சப்ளையில் சற்று தாமதம் ஏற்பட்டது.
    • குப்பை அகற்றும் பணிக்கு புதிய குப்பை தொட்டிகள், வாகனங்கள் வாங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் கூட்டம் அரங்கில் நடந்தது.

    கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:-

    மாநகராட்சிக்கு 497 பேட்டரி வாகனங்கள் வாங்கியதாக ஆவணங்கள் உள்ளது. இதில், தற்போது 202 மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. வாகனங்கள் சப்ளை செய்த நிறுவனம், அதை பெற்று கொண்ட அதிகாரிகள், பயன்படுத்த வழங்கிய அலுவலர்கள் அனைவரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

    குடிநீர் பிரச்னையில் 4வது குடிநீர் திட்டப் பணிகள் காரணமாக சப்ளையில் சற்று தாமதம் ஏற்பட்டது. பயன்பாட்டில் இல்லாத மேல்நிலைத் தொட்டிகள் கணக்கெடுக்கப்பட்டு–ள்ளன. அவை முறையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.குழாய் பதிப்பு பணிக்குப்பின் சாலை முறையாகப் பராமரிக்காவிட்டால் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பணி நடைபெறும் இடங்களில் உரிய விவரங்களுடன் தகவல் பலகை வைக்கப்படும்.விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர திட்டமதிப்பீடு செய்யும் பணி நடைபெறுகிறது.

    விடுபட்ட பகுதிகள் குறித்து கவுன்சிலர்கள் தகவல் அளிக்கலாம். குப்பை அகற்றும் பணிக்கு புதிய குப்பை தொட்டிகள், வாகனங்கள் வாங்கப்படும்.ஊட்டச்சத்து துறை மூலம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும். மாநக ராட்சியில் மக்கள் குறை கேட்புக்காக 155304 என்ற டோல் பிரீ எண் பெறப்பட்டுள்ளது. இதனால், வசதிகள் உள்ளிட்ட எந்த துறை குறித்த புகார்களும் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும்.இவ்வாறு அவர் பேசினார்.

    • கடலூர் மாநகராட்சியில் 150 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் மேயர் சுந்தரி ராஜா அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
    • கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கடலூர்:

    கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடலூர் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன், செயற்பொறியாளர், புண்ணியமூர்த்தி , நகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி முழுவதும் 150 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும் தடுப்பூசி போடாத நபர்களை கண்டறிந்து தடுப்பூசி போடுவதற்கு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி வீடுகள் தோறும் நேரில் சென்று தடுப்பூசி போடும் பணியிலும் பணியாளர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரை ஆனையூரில் உள்ள கிழக்கு மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் 12-ந் தேதி நடக்கிறது
    • மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளில் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற 12-ந் தேதி (செவ்வாய்கிழமை) ஆனையூர் பஸ் நிலையம் அருகில் உள்ள மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    கிழக்கு மண்டலத்திற்கு (எண் 1) உட்பட்ட ஆனையூர், பார்க்டவுன், நாகனாகுளம், அய்யர் பங்களா, திருப்பாலை, கண்ணனேந்தல், உத்தங்குடி, கற்பக நகர், பரசுராம்பட்டி, லூர்து நகர், ஆத்திக்குளம், கோ.புதூர், வள்ளுவர் காலனி, எஸ்.ஆலங்குளம், அலமேலு நகர், கூடல்நகர், மேலமடை, பாண்டிகோவில், சவுராஷ்டிராபுரம், தாசில்தார் நகர், வண்டியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையில் ரோடு பணி நடைபெற்று வருகிறது.
    • ரோடு போடும் பணியை துரிதப்படுத்தி பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என மேயர் உத்தரவிட்டார்.

    திருப்பூர் :

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் அணைப்பாளையம் முதல் மணிய காரபாளையம் வரை ரோடு பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் இன்று காலை நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது அதிகாரிகளிடம் ரோடு போடும் பணியை துரிதப்படுத்தவும், தனியார் சொந்தமான இடத்தை உரிய இழப்பீடு கொடுத்து அதனை சரி செய்து பணியை உடனடியாக தொடங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். அதேபோல் திருப்பூர் மாநகராட்சி மாட்டு கொட்டகையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான தூய்மைப் பணி வாகனங்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் வருகை பதிவேட்டினை ஆய்வு மேற்கொண்டார்

    இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் காந்தி குமார், உதவி கமிஷனர் வாசுகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கடலூர் பெண்ணையாறு சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க மேயர் சுந்தரி ராஜா அதிரடி உத்தரவிட்டார்.
    • ராமசாமி படையாட்சியார் மணிமண்டபம் அருகில் உள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் சுத்தம் செய்யும் பணி, மழைநீர் வடிகால் கட்டும் பணி, மழைநீர் தேங்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு பணியில் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு சாலையில் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன், செயற்பொறியாளர் புண்ணியமூர்த்தி, நகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி ஆகியோர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்‌. அப்போது பெண்ணை யாறு சாலைப் பகுதியில் மழைநீர் வடிகால் மேல் 10 கட்டிடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இது சம்பந்தமாக ஏற்கனவே மாநகராட்சி சார்பாக கட்டிடங்களை அகற்றுவதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு நடவடிக்கையில் இருந்து வந்தது. ஆனால் அவர்கள் கட்டிடங்கள் இடிக்காமல் இருந்து வந்ததால் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மீண்டும் நோட்டீஸ் வழங்கி உடனடியாக ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். இதனை மீறும் பட்சத்தில் மாநகராட்சி சார்பில் கட்டிடங்கள் இடிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து கடலூர் வேணுகோபாலபுரம் பள்ளி அருகில் புதிதாக நூலகம் கட்டிடம் கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனை பார்வையிட்ட மேயர் சுந்தரி ராஜா மற்றும் அதிகாரிகள், இந்த இடம் சற்று குறுகிய இடமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்கு தடையின்றி நூலகத்திற்கு வந்து செல்வதற்கு ஏதுவாக ராமசாமி படையாட்சியார் மணிமண்டபம் அருகில் உள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். 

    இருந்தபோதிலும் எந்த இடத்தில் நூலகம் அமைத்தால் அனைவரும் ஏதுவாக வந்து செல்வதற்கு அமையும் என்பதனை ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து நத்தவெளி ரோட்டில் உள்ள குளம் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வாரும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என மேயர் சுந்தரி ராஜா உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மழைக் காலங்களில் குண்டுஉப்பலவாடி பகுதியில் பல்வேறு நகரங்களில் மழைநீர் வடிகால் இல்லாததால் தண்ணீர் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. ஆகையால் அந்தப் பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்து மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா அறிவுறுத்தி உள்ளார். அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, சங்கீதா, கல்வி குழு தலைவர் ராஜமோகன், கவுன்சிலர் அருள்பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    WWE ரசிகர்கள் எளிதில் மறக்காத முடியாத நட்சத்திர போட்டியாளரான கேன், இப்போது நாக்ஸ் கவுண்டி நகர மேயர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார். #WWE #Kane
    நியூயார்க்:

    அமெரிக்காவின் WWE மல்யுத்த போட்டிகள் நாடு கடந்தும் பல்வேறு நாடுகளில் பிரபலமான ஒன்று. இந்த போட்டியை பார்த்தவர்கள் மறக்க முடியாத போட்டியாளர்களில் ஒருவர் கேன். 

    7 அடி உயரம் 100 கிலோ எடை என பிரம்மாண்ட உருவம் கொண்ட கேன், கண் கருவிழிகள் தெரியாத வண்ணம் ஒரு விதமாக பார்க்கும் போது, போட்டியை பார்ப்பவர்களுக்கு பயம் தொற்றிக்கொள்ளும்.



    குறிப்பாக மற்றொரு போட்டியாளரான அண்டர்டேகர் உடன் இவர் போட்ட சண்டைகள் மிக பிரபலமான ஒன்று. 1995-ம் ஆண்டு முதல் WWE மல்யுத்த போட்டியில் விளையாடி வரும் கேன், கடந்த ஜுன் மாதம் கடைசியாக கலந்து கொண்டார்.

    க்லென் ஜேகப்ஸ் என்ற இயற்பெயர் கொண்ட கேன், அந்நாட்டை ஆளும் குடியரசு கட்சி சார்பில் நாக்ஸ் கவுண்டி நகர மேயர் பதவிக்கு போட்டியிட்டார். ஜனநாயக கட்சியின் லிண்டா ஹனேவை தோற்கடித்து மேயர் பதவிக்கு கேன் தேர்வாகியுள்ளார்.
    ×