என் மலர்
நீங்கள் தேடியது "ஆடிப்பெருக்கு"
- ஆடிப்பெருக்கு விழாவையொட்டி இன்று பவானி கூடுதுறைக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
- ஒலிபெருக்கி மூலம் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களை வலியுறுத்தி வருகிறார்கள்
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி நகரில் சங்கமேஸ்வரர் கோவில் மிக பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவ பெருமாள் என சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒரே வளாகத்தில் அமைந்த சிறப்பை பெற்ற கோவிலாகும்.
அதேபோல் இந்த கோவிலுக்கு பின்பகுதி உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறையில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுது நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார ஸ்தலம் முக்கூடல் சங்கமம் சுற்றுலா தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.
இதனால் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல்வேறு வெளி மாநில பக்தர்களும் அதிகளவில் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள்.
மேலும் இங்கு பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து சாமி தரிசனம் மேற்கொண்டு செல்வது வழக்கம். இங்கு அமாவாசை, பவுர்ணமி, ஆடிப்பெருக்கு மற்றும் முக்கிய நாட்களில் வழக்கத்தை விட அதிகளவில் பொதுமக்கள் வந்து புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபடுவார்கள்.
இந்த நிலையில் ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மாவட்ட த்தில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்து வருகிறார்கள். குறிப்பாக திருமண தம்பதிகள் புனித நீராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி இன்று பவானி கூடுதுறைக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் திருமணமான புதுமண தம்பதிகள் ஏராளமானோர் கூடுதுறைக்கு அதிகாலை முதலே வந்த வண்ணம் உள்ளனர். இதை தொடர்ந்து அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் ஆற்றில் புனித நீராடி தங்கள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு வழிபட்டனர். மேலும் பலர் புது தாலி மாற்றி கொண்டனர். தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் தீயணைப்புத்துறை சார்பில் ரப்பர் படகில் தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதே போல் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் ஒலிபெருக்கி மூலம் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களை வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் கோவில் வளாகம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தி தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் பலர் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் எள்ளும் தண்ணியும் விடுதல் பிண்டம் விடுதல் போன்ற பரிகார பூஜைகள் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.
இதே போல் ஈரோடு மாவட்ட பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
இதையொட்டி போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இதேபோல் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று காலை முதலே புதுமண தம்பதிகள் பலர் வந்து புனித நீராடி வருகிறார்கள். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் வந்து மகுடேஸ்வரரை வழிபட்டு சென்றனர்.
மேலும் இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் பலர் வந்து திருமண தடை நீங்கவும், திருமணம் தடையின்றி நடக்கவும் பரிகார பூஜைகள் செய்தனர். இதேபோல் பொதுமக்கள் பலர் வந்து புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தரிப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
மேலும் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கையொட்டி இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் வந்து புனித நீராடி வருகிறார்கள். அதே போல் பக்தர்கள் பலர் காவிரி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகிறார்கள்.
இதே போல் ஆடிப்பெருக்கையொட்டி ஈரோட்டில் பல பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் படையல் போட்டு தங்கள் முன்னோர்களை வழிபட்டனர்.
இதை தொடர்ந்து அவர்கள் இறந்த தங்கள் முன்னோர்களுக்கு படையலில் உணவு வைத்து அதில் இறந்தவர்களுக்கு பிடித்த உணவு மற்றும் தின்பண்டங்களை வைத்து படைத்து வழிபாடு நடத்தினர்.
இதையடுத்து அவர்கள் படையலின் பகுதியை முன்னோர்களை நினைத்து காகத்துக்கு வைத்தனர். மற்றொரு பகுதியை தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் சாப்பிட்டனர். முன்னதாக அவர்கள் முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
- பள்ளியின் செயலாளர் நிவேதிகா ஸ்ரீராம் கலந்து கொண்டார்.
- பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டன
திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியில் ஆடிபெருக்கு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கிட்ஸ் கிளப் பள்ளியின் செயலாளர் நிவேதிகா ஸ்ரீராம் கலந்து கொண்டார். மாணவர்கள் முளைப்பாரி வைத்து, கும்மிபாட்டு, கோலாட்டம், பட்டிமன்றம் போன்ற நிகழச்சிகளை நடத்தினர். இதில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
+2
- படையலுக்கு தீபாராதனையை காண்பித்த பின்னர் ஆற்றை நோக்கி காவிரி தாய்க்கும், சூரிய பகவானுக்கும் காண்பித்து வழிபட்டனர்.
- மஞ்சள் கயிற்றை பூஜைக்கு பின் சுமங்கலி பெண்கள் மற்ற சுமங்கலி பெண்களின் கழுத்திலும், திருமணமாகாத இளம்பெண்களின் கழுத்திலும் கட்டி விட்டனர்.
திருச்சி:
திருச்சி, கரூர் மாவட்டங்களில் இன்று ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இங்கு அதிகாலை முதல் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வர தொடங்கினர். காலையில் சற்று கூட்டம் குறைவாக காணப்பட்டாலும் நேரம் செல்ல செல்ல கூட்டம் அலைமோதியது.
திருச்சி மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மா மண்டபம் படித்துறையில் திரண்டிருந்தனர். வழக்கமாக ஆடிப்பெருக்கின்போது காவிரியில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்படும்.
அதேபோன்று இன்றைய தினமும் 10 ஆயிரம் கன அடி நீர் வந்தது. இதனால் காவிரியில் பாய்ந்தோடிய தண்ணீரை கண்டு பூரிப்படைந்தனர். பின்னர் பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் புனித நீராடி காவிரி தாய்க்கு நன்றி தெரிவித்தனர்.
அதன் பின்னர் வாழை இலை விரித்து அதில் மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்து, தேங்காய், பழம், வெல்லம், ஏலக்காய் கலந்த அரிசி, கரும்பு துண்டு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம் ஆகியவற்றினை வைத்தும், மஞ்சள், குங்குமம், கருகமணி போன்ற மங்கல பொருட்களை வைத்தும் படையலிட்டனர்.
பின்னர் வீட்டின் மூத்த சுமங்கலி பெண்கள் அந்தப் படையலுக்கு கற்பூரம் ஏற்றி பூஜை செய்தனர். அப்போது வீட்டில் உள்ள இதர குடும்ப உறுப்பினர்கள் பயபக்தியுடன் விநாயகரை வழிபட்டனர்.
படையலுக்கு தீபாராதனையை காண்பித்த பின்னர் ஆற்றை நோக்கி காவிரி தாய்க்கும், சூரிய பகவானுக்கும் காண்பித்து வழிபட்டனர்.
இதில் மஞ்சள் கயிற்றை பூஜைக்கு பின் சுமங்கலி பெண்கள் மற்ற சுமங்கலி பெண்களின் கழுத்திலும், திருமணமாகாத இளம்பெண்களின் கழுத்திலும் கட்டி விட்டனர். குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினர்களுக்கு கையில் மஞ்சள் கயிறு கட்டப்பட்டது. பின்னர் தங்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி இறைவனை மனதுருகி வேண்டிக்கொண்டனர்.
வாழ்வில் வளமும் செல்வமும் பெருக, தொழில், வியாபாரம் விருத்தி அடைய, விவசாயம் செழிக்க வேண்டிக்கொண்டனர்.
புதுமண தம்பதிகள் தாலிச்சரடுகளை மாற்றிக்கட்டி வீட்டில் உள்ள மூத்த சுமங்கலி பெண்களிடம் ஆசி பெற்றனர்.
பூஜைக்கு பின்னர் படையலில் வைத்தவற்றில் சிலவற்றை ஒரு பையில் எடுத்து வைத்துவிட்டு 2 பழம், பத்தி, மஞ்சள், பிள்ளையார், வெற்றிலை பாக்கு, திருமண மாலைகள் ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்தும் அதில் காணிக்கையாக காசு மற்றும் ரூபாய் நோட்டுகளை வைத்து ஆற்றில் விட்டனர்.
அம்மா மண்டபம் படித்துறையில் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு தீயணைப்பு படை வீரர்கள் ரப்பர் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் நீர்வரத்து அதிகமாக இருந்த காரணத்தால் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியபடி அம்மா மண்டபம் தவிர்த்து அய்யாளம்மன் படித்துறை, கருடா மண்டபம், கீதாபுரம், சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை காந்தி படித்துறை, ஓடத்துறை, முக்கொம்பு, கம்பரசம் பேட்டை( தடுப்பணை), முருங்கைப்பேட்டை,
முத்தரசநல்லூர், அக்ரஹார படித்துறை, பழுர் படித்துறை, அல்லூர் மேல தெரு படித்துறை, திருச்செந்துறை, வெள்ளாளர் தெரு படித்துறை, அந்தநல்லூர் படித்துறை, திருப்பராய்த்துறை, மேலூர் அய்யனார் படித்துறை, பஞ்சகரை படித்துறை ஆகிய இடங்களிலும் ஆடிப்பெருக்கு வழிபாடுகள் நடந்தன.
கரூர் மாவட்டத்தில் நொய்யல், தவிட்டுப்பாளையம், நன்செய் புகளூர், கடம்பன்குறிச்சி, என்புதூர், வாங்கல், மாயனூர் கதவணை, மகாதானபுரம், குளித்தலை ஆகிய காவிரி கரையோரப்பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இதே போன்று பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு தண்ணீர் போதுமான அளவுக்கு வந்ததால் ஆடிப்பெருக்கு விழாவை பக்தர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
- ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.
- சுமங்கலி பெண்கள் தங்கள் மஞ்சள் கயிறை மாற்றி புதிய கயிறை மாற்றிக்கொண்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் வெக்காளி யம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு நாளன்று பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி இன்று காலை பூக்குழி இறங்குவதற்காக பூமேடை தயார்படுத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
கோவில் பூசாரி முதலில் பூக்குழி இறங்கிய பின் பக்தர்கள் ஒவ்வொருவராக பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தீச்சட்டி எடுத்தபடியும், அலகு குத்திய படியும், குழந்தைகளை சுமந்தவாறும் பக்தர்கள் பூக்குழி இறங்கிய காட்சி பக்தர்களை பரவச ப்படுத்தியது. இதேபோல் திண்டுக்கல் கோட்டை மாரியம்ம ன்கோவில், அபிராமி அம்மன் கோவில், புவனே ஸ்வரி அம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.
அதிகாலை முதல் ஏராள மான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் கோட்டை குளத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெண்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். சுமங்கலி பெண்கள் தங்கள் மஞ்சள் கயிறை மாற்றி புதிய கயிறை மாற்றிக்கொண்டனர்.
- வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று வைகை பெருவிழா நடந்தது.
- தூய்மையை பராமரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மதுரை
மதுரையை தலைமையிட–மாக கொண்டு வைகை நதி மக்கள் இயக்கம் இயங்கி வருகிறது. இந்த இயக்கம் கடந்த 8 ஆண்டுகளாக தூய்மையான வைகை என்ற இலக்கை நோக்கியும், நீர் நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விழிப்பு–ணர்வை ஏற்படுத்தவும், அதன் தூய்மையை பராம–ரிக்கவும் பல்வேறு பணி–களை தொடர்ந்து செயல்ப–டுத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக வைகை பெருவிழா நான் காம் ஆண்டு நிகழ்ச்சி இன்று (3-ந்தேதி, வியாழக் கிழமை) நடைபெறுகிறது. ஆடிப்பெ–ருக்கை ஆற்றில் கொண்டா–டுவோம் என்ற தலைப்பில் வைகை ஆற்றில் சித்திரை திருவிழாவின் போது, கள்ளழகர் இறங்கும் ஆற்றங்கரையில் மாலை 4.30 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடை–பெற இருக்கிறது.
நிகழ்ச்சிக்கு வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப் பாளர் வைகை எம்.ராஜன் தலைமை தாங்குகிறார். மேயர் இந்திராணி குத்து–விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். இதில் தமிழ் நாடு சேவாபாரதி ராதா, சின்மயா மிஷன் திலகர், புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ., கிழக்கு மண்டல தலைவர் முகேஷ் சர்மா, மேற்கு மண்டல தலைவர் வாசுகி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலவர் திருமாறன் உள்ளிட்டோர் பங்கேற்கி–றார்கள். இதுபற்றி வைகை நதி மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் வைகை எம்.ராஜன் கூறுகை–யில், ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி. நமது வாழ்வாதாரமான ஆறுகளை ஆடி மாதத்தில் போற்றி வணங்கக்கூடிய மரபு பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. மக்க–ளுக்கு அதனை உணர்த்தும் விதமாக வைகை ஆற்றங்க–ரையில் பாரம்பரிய விளை–யாட்டுகள் விளையாடி, வைகை ஆற்றுடன் உணர் வுப்பூர்வமாக உறவை ஏற்ப–டுத்திக்ெகாள்ள நல் வாய்ப்பை ஏற்படுத்தி தருகி–றது.நதி பாதுகாப்பின் அவசி–யம் குறித்த சொற்பொழிவு, நாட்டிய அஞ்சலி மற்றும் வைகை நதி தீபாராதனை, வைகை நதியை பாதுகாப் போம் என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்வோடு விழா நிறைவு பெறுகிறது.
இவ்வாறு அவர் கூறி–னார்.
- இந்தாண்டு ஆடி 18-ம் நாளான இன்று நம்பெருமாள் காவிரி தாயாருக்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- மங்கலப்பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து காவிரி படித்துறைக்கு கொண்டு வந்து காவிரி ஆற்றில் விட்டு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
திருச்சி:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 18-ம் நாள் அல்லது 28-ம் நாளில் நம்பெருமாள் அம்மா மண்டபம் படித்துறையில் காலை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
பின்னர் மாலை காவிரி தாயாருக்கு மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பார். அதன்படி இந்தாண்டு ஆடி 18-ம் நாளான இன்று நம்பெருமாள் காவிரி தாயாருக்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதற்காக நம்பெருமாள் கோவில் மூலஸ்தானத்திலிருந்து காலை 6.30 மணிக்கு தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11.30 மணிக்கு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாலை 4 மணிவரை நம்பெருமாள் அங்கு பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இதனை தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு நம்பெருமாள் காவிரி தாயாருக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
பட்டுசேலை, மாலை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து காவிரி படித்துறைக்கு கொண்டு வந்து காவிரி ஆற்றில் விட்டு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
பின்னர் நம்பெருமாள் அம்மா மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மேலஅடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் மேட்டூருக்கு பல ஆயிரம் பேர் வந்து குவிந்திருந்தனர்.
- அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகே பொது மக்கள் முண்டியடித்து செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம்:
காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அனைவரது வாழ்விலும் காவிரி போல மகிழ்ச்சியும், வளமும் பொங்கி வாழ வேண்டும் என்று ஆடிப்பெருக்கு நன்னாளில் காவிரிக்கு படையிலிட்டு வழிபாடு செய்வது வழக்கம். மேலும் காவிரி கரையோர மக்கள் கோவிலில் உள்ள சாமி சிலைகளையும் காவிரி ஆற்றுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து நீராட்டி மீண்டும் மேள தாளங்கள் முழங்க கோவிலுக்கு எடுத்து செல்வார்கள்.
அந்த வகையில், காவிரி கரையோர மக்கள் இன்று அதிகாலை முதலே மேட்டூர் காவிரிக்கு சாரை சாரையாக வர தொடங்கினர். இதனால் காவிரி கரையோர பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது. பெரும்பாலான பக்தர்கள் மேட்டூர் காவிரியில் நீராடி மகிழ்ந்தனர்.
மேலும் பக்தர்கள் தங்களது குல தெய்வங்களை தலையில் சுமந்த படி மேள தாளங்கள் முழங்க மேட்டூருக்கு பக்தர்கள் புடை சூழ நடந்தே வந்தனர். அவர்கள் சாமி சிலைகளை காவிரியில் நீராட்டி மீண்டும் தங்களது கிராமங்களுக்கு மேளதாளங்களுடன் எடுத்து சென்றனர்.
புதுமண தம்பதியர் தங்களது திருமண மாலைகளை வாழை இலையில் வைத்து வழிபட்டு காவிரி ஆற்றில் விட்டு சென்றனர். இதற்காக தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் மேட்டூருக்கு பல ஆயிரம் பேர் வந்து குவிந்திருந்தனர்.
மேட்டூருக்கு வந்த பக்தர்களில் சிலர் ஆடு, கோழிகளை பலியிட்டு மேட்டூர் அணைக்கட்டு முனியப்பனுக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து ஆடு, கோழிகளை சமைத்து அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கினர்.
அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகே பொது மக்கள் முண்டியடித்து செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையொட்டி மேட்டூரில் பூங்கா சாலை, கொளத்தூர் சாலைகள் உள்பட பல்வேறு சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காட்சி அளித்தது. அணை பூங்காவிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.
பொது மக்கள் நீராட காவிரி பாலப்பகுதியில் உள்ள 2 படித்துறைகள், மட்டம் பகுதியில் உள்ள 3 படித்துறைகள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதிகளில் அதிக அளவில் பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர். காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் மற்ற பகுதிகளில் குளிக்க அனுமதி அளிக்கவில்லை.
மேட்டூர் நகராட்சி சார்பில் பக்தர்கள் வசதிக்காக தற்காலிக உடை மாற்றும் அறைகள், கழிவறைகள் அமைக்கப்பட்டிருந்தன. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மேட்டூர் ஆர்.டி.ஓ. தணிகாசலம், டி.எஸ்.பி. மரியமுத்து ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் 20 பேர் காவிரி கரையில் படகுகளில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். மேலும் 5 பரிசல்கள், ரப்பர் படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்காலிக புறக்காவல் நிலையம், முதல் உதவி மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இது தவிர 12 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு காவல் உதவி மையத்தில் இருந்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
திருடர்கள், குற்றவாளிகளை கண்காணிக்க சாதாரண உடையில் குற்றப்பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆடிப்பெருக்கு விழாவவையொட்டி ஏராளமான தற்காலிக கடைகளும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கடைகளிலும் வியாபாரம் சூடு பிடித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- அனைவரது வாழ்விலும் காவிரி போல் மகிழ்ச்சியும் வளமும் பொங்கி வாழ வேண்டும் என்று காவிரிக்கு படையிலிட்டு வழிபடுவர்.
- காலை முதலே பெண்கள் குடும்பம் குடும்பமாக வர தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கட்டுகடங்காத கூட்டம் காணப்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் சிறப்பு வாய்ந்த மாதம் . ஆடி மாதம் முழுவதுமே அம்மன் கோவில்களில் உற்சவங்கள் நடைபெறும்.
அந்த வகையில் ஆடி மாதம் 18-ம் நாள் ஆடிப்பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, இந்த விழா காவிரி ஆறு பாயும் பகுதிகளில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
தமிழகத்தில் வளம் கொழிக்க வைக்கும் நதிகளில் ஒன்றான காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மேலும் அனைவரது வாழ்விலும் காவிரி போல் மகிழ்ச்சியும் வளமும் பொங்கி வாழ வேண்டும் என்று காவிரிக்கு படையிலிட்டு வழிபடுவர்.
அதன்படி இன்று ஆடிப்பெருக்கு விழா தமிழகத்தில் குறிப்பாக தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை பெரிய கோவில் புது ஆற்றுப் படித்துறை, வடவாற்று படித்துறை, வெண்ணாற்றுப் படித்துறை, திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை, சுவாமிமலை காவிரி படித்துறை, கும்பகோணம் பாலக்கரை காவிரி படித்துறை, மகாமகக்குளம் உள்பட பல்வேறு காவிரி ஆற்றங்கரைகளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது.
திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் உள்ள புஷ்ய மண்டப படித்துறைக்கு இன்று காலை முதலே பெண்கள் குடும்பம் குடும்பமாக வர தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கட்டுகடங்காத கூட்டம் காணப்பட்டது.
படித்துறையில் ஏராளமான பெண்கள் வாழை இலையை விரித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்தனர். மேலும் தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பனை ஓலையால் செய்யப்பட்ட காதோலை, கருகமணி மாலை, வளையல், அரிசி, வெல்லம், மலர், பேரிக்காய், கொய்யா, மாதுளை, விளாம்பழம் ஆகியவற்றை வைத்து விளக்கேற்றினர். தொடர்ந்து மாவிளக்கு, அரிசி, வெல்லம் கலந்த காப்பு அரிசி ஆகியவற்றை வைத்து சாம்பிராணி, ஊதுபத்தி உள்ளிட்ட வாசனைபொருட்களை ஏற்றி வழிபாடு செய்ததுடன் மஞ்சள் பிள்ளையாருக்கும், காவிரி தாய்க்கும் தாம்பூலத்தட்டில் கற்பூரத்தை ஏற்றி வழிபட்டனர்.
இந்த வழிபாடு முடிந்தவுடன் புத்தாடை அணிந்து வந்திருந்த புதுமண தம்பதியினர் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். தொடர்ந்து திருமணத்தின்போது தாங்கள் அணிந்து இருந்த மாலைகளை பைகளில் பத்திரமாக கொண்டு வந்து அவற்றை காவிரி ஆற்றில் புதுமண தம்பதியினர் விட்டு வழிப்பட்டனர்.
சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக்கொண்டனர். அதேபோல திருமணமாகாத இளம்பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டியும், நல்ல மணமகன் கிடைக்க வேண்டியும் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர். திருமணமாகாத ஆண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டி மஞ்சள் கயிற்றை கைகளில் கட்டிக்கொண்டனர்.
இதேபோல் புதுப்பெண்களுக்கு தாலியை பிரித்து கட்டும் நிகழ்ச்சியும் காவிரி படித்துறையில் நடந்தது. திருமணத்தின்போது கட்டப்பட்டிருந்த தாலிக்கு பதிலாக புது தாலியை அணிந்து கொண்டனர். பின்னர் வாழை மட்டையில் தீபத்தை வைத்து காவிரி ஆற்றில் மிதக்கவிட்டனர்.
திருவாரூர் கமலாலய குளம், ஒடம்போக்கியாற்றின் கரைகளில் காலை முதலே பெண்கள் கூட்டம் அலைமோதியது. படிக்கட்டுகளில் மஞ்சளில் பிள்ளையார் உருவம் செய்து வைத்து காதோலை கருகமணியுடன் பேரிக்காய், வாழைப்பழம், வெல்லம் கலந்த அரிசி ஆகியவற்றை படையலிட்டு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
மன்னார்குடி பாமணி நதிக்கரையில் புதுபாலம், மேலப்பாலம், மன்னை நகர் ஆகிய பகுதிகளில் ஏராளமான பெண்கள் படையலிட்டு வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை துலாகட்டத்தில் ஆயிரகணக்கானோர் திரண்டனர். பாரம்பரிய முறையில் புதுப்பெண்கள் தாலி கயிறை பிரித்து கோர்த்தனர். புதுமண தம்பதிகள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு வழிப்பட்டனர்.
முக்கடல் சங்கமிக்கும் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் காவிரி கடலோடு கலக்கும் சங்கம துறையில் பல்வேறு பகுதிகளில் இருந்து புதுமண தம்பதிகள் வந்து வழிபாடு நடத்தி, புதிய தாலி அணிந்தனர்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க படித்துறை பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல போலீசார் மப்டியில் நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- கோவிலில் இருந்து நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் புறப்பட்டு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார்.
- நம்பெருமாள் அணிந்திருந்த மாலை, புடவை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் காவிரியில் விடப்பட்டது.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி நதி பாயும் பகுதிகள் முழுவதும் பொதுமக்கள் காவிரித் தாயை வணங்கி வழிபடுவது வழக்கம். அதேபோல் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் நம்பெருமாள், காவிரித் தாயாருக்கு ஆண்டுதோறும் ஆடி 18-ம் நாள் அல்லது 28-ம் நாளில் அம்மா மண்டபம் படித்துறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் காவிரி தாயாருக்கு மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பார்.
அவ்வகையில் ஆடி 18-ம் நாளான இன்று நம்பெருமாள், காவிரி தாய்க்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதற்காக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து நம்பெருமாள் காலை 6.30 மணிக்கு தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11.30 மணிக்கு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 4 மணிவரை அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதன்பின்னர் நம்பெருமாள் அணிந்திருந்த மாலை, புடவை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து மேளதாளங்கள் முழங்க காவிரி படித்துறைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த சீர்வரிசை பொருட்களை காவிரி தாய்க்கு வழங்கும் வகையில், காவிரி ஆற்றில் விடப்பட்டு, சீர்வரிசை கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி தாயையும், நம்பெருமாளையும் தரிசனம் செய்தனர்.
பின்னர் நம்பெருமாள் அம்மா மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மேலஅடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
+2
- சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஆடிப்பெருக்கு விழாவை நடத்துவதற்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை இணைந்து நடவடிக்கை எடுத்தது.
- ஆடிப்பெருக்கு விழாவில் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்கு பொதுமக்களும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு பயனாளிகளும் வருகை தருவார்கள்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் அளித்து வருகிறார்கள். கோவிலின் அடிவாரத்தில் இருந்து சற்று உயரத்தில் அடர்ந்த வனப் பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. கோவிலுக்கு செல்லும் வழியில் திருமூர்த்தி அணை, சிறுவர் பூங்கா, நீச்சல் குளம்,படகு இல்லம், வண்ண மீன்காட்சியகம் ஆகிய பொழுதுபோக்கு அம்சங்களும் அமைந்துள்ளது. இதனால் திருமூர்த்தி மலையில் உள்ள இயற்கை சூழலை ரசிக்கவும் பஞ்சலிங்க அருவியில் குளித்து புத்துணர்வு பெறவும் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்வதற்கும் நாள்தோறும் ஏராளமான வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் பக்தர்கள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கிறார்கள். இதனால் திருமூர்த்தி மலை சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது.
இதன் காரணமாக திருமூர்த்தி மலைப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஆடிப்பெருக்கு விழாவை நடத்துவதற்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை இணைந்து நடவடிக்கை எடுத்தது. அதைத் தொடர்ந்து கடந்த 2013 -ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் வருகின்ற ஆடிப்பெருக்கு தினத்தன்று திருமூர்த்திஅணைக்கு அருகே உள்ள பகுதியில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வந்தது. அப்போது வனம்,வருவாய், தோட்டக்கலை, சமூகநலம், பொதுப்பணி, சுற்றுலா, சுகாதாரம், போக்குவரத்து, பட்டு வளர்ச்சி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கால்நடை பராமரிப்பு, குழந்தைகள் வளர்ச்சி, வேளாண்மை துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக அதற்கான தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கும்.அதன் மூலம் அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களை எளிதில் சென்றடைந்தது.
அதுமட்டுமின்றி தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம்,வால் சண்டை,மான் கொம்பு உள்ளிட்ட தற்காப்பு கலைகளும், பரதம், யோகாசனம்,கிராமிய பாடல்கள்,கரகாட்டம் போன்றவற்றையும் வீரர்,வீராங்கனைகள் விழாவில் தத்துவமாக செய்து காட்டுவார்கள். ஆடிப்பெருக்கு விழாவில் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்கு பொதுமக்களும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு பயனாளிகளும் வருகை தருவார்கள்.
ஆனால் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த ஆடிப்பெருக்கு விழா பல்வேறு நிர்வாக காரணங்களால் கடந்த 2019 -ம் ஆண்டில் நடத்தப்படவில்லை. அதை தொடர்ந்து கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக நடத்தவில்லை. இந்த சூழலில் இந்த ஆண்டில் ஆடிப்பெருக்கு விழா நடத்தப்படுமா என்று எதிர்பார்ப்பு நிலவியது.ஆனால் அதற்குண்டான நடவடிக்கைகள் அதிகாரிகள் தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை.இந்த நிலையில் நேற்று ஆடிப்பெருக்கு விழாவை யொட்டி திருமூர்த்தி மலையில் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.கோவில், அருவி, அணைப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் காணப்பட்டது. அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் ஆடிப்பெருக்கு விழாவை எதிர்நோக்கி வருகை தந்திருந்த வெளிமாவட்ட பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
அத்துடன் ஆடி மாதம் முடிவதற்குள் திருமூர்த்தி மலையில் அரசு சார்பில் ஆடிப்பெருக்கு விழா நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
- குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு பத்திரப்பதிவு செய்ய 200 டோக்கன்கள் வினியோகம் செய்யப்படும்.
- அலுவலகம் முன்பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக பந்தல்கள் போடப்பட்டிருந்தது.
குன்றத்தூர்:
குன்றத்தூர் வட்டத்திற்குட்பட்ட குன்றத்தூர், மலையம்பாக்கம், நந்தம்பாக்கம், சிறுகளத்தூர், கொல்லசேரி, கோவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களுடைய நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்கு குன்றத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தை நாடுவது வழக்கம், வழக்கமாக குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு பத்திரப்பதிவு செய்ய 200 டோக்கன்கள் வினியோகம் செய்யப்படும்.
அதில் அதிகபட்சமாக 100 முதல் 120 வரை பத்திரப் பதிவுகள் நடைபெறுவது வழக்கம்.
நிலம் வாங்குபவர்கள் ஆடிப்பெருக்கன்று பத்திரப்பதிவு செய்ய அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று காலை முதலே அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர். அலுவலகம் முன்பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக பந்தல்கள் போடப்பட்டிருந்தது.
நேற்று ஒரு நாள் மட்டும் பத்திரப்பதிவு செய்ய 214 டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டிருந்தது. அதில் 160 பேர் பத்திரப்பதிவு செய்தனர்.
+2
- திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நாளை கிடாய் வெட்டுதல் மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள கொல்லபட்டி கிராமம் ஜி.குரும்பபட்டியில் பழமையான மகாலட்சுமி அம்மன், கருப்புசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த இருந்த பக்தர்கள் நீண்டவரிசையில் நின்றனர். அவர்களை கோவில் பூசாரி சாட்டையால் அடித்தார். அதனைதொடர்ந்து கோவில் முன்பு அமரவைக்கப்பட்ட பக்தர்கள் தலைமீது தேங்காய் உடைக்கப்பட்டது.
இந்த திருவிழாவை காண சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை கிடாய் வெட்டுதல் மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.