search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர்"

    • தவறுகள் நேரிடாமல் பணியாற்ற வேண்டும்.
    • அறுவை சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் புதியதாக திருத்தி வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    அறுவை சிகிச்சைகளின் போது பெரும்பாலும், ஒருமுறை பயன்படுத்தும் சாதனங்களையே உபயோகப்படுத்த வேண்டும். தவறுகள் நேரிடாமல் பணியாற்ற வேண்டும் என அரசு டாக்டர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி, தலைமை அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவில் பணியாற்றும் டாக்டர், மருத்துவக் குழுவினர் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

    அதன் விபரம் வருமாறு:- அறுவை சிகிச்சைக்கு நோயாளி தகுதியானவரா என்பதை உறுதி செய்த பிறகே அது தொடர்பான நடவடிக்கைகளை துவங்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளியின் ரத்த சர்க்கரை அளவு 200க்கும் குறைவாகவும், ரத்த அழுத்தம் குறைந்தபட்சம் 90. அதிகபட்சம், 150க்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். அறுவை சிகிச்சைக்கு முன், சிகிச்சையின் தன்மை உள்ளிட்ட பிற விபரங்களை நோயாளியிடம் அல்லது அவர்களது உறவினர் ஒருவரிடம் தெளிவாக எடுத்து கூறி, ஒப்புதல் பெற வேண்டும்.

    அறுவை சிகிச்சை அரங்கு கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு முன்பாக ஒன்றுக்கு இருமுறை வழிகாட்டுதல்களை சரிபார்த்து அதனடிப்படையில் சிகிச்சைகளை துவங்க வேண்டும். அறுவை சிகிச்சைகளின் போது பெரும்பாலும் ஒருமுறை பயன்படுத்தும் சாதனங்களையே உபயோகப்படுத்த வேண்டும். தவறுகள் நேரிடாமல் பணியாற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம் அடைந்ததையடுத்து, அறுவை சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் புதியதாக திருத்தி வழங்கப்பட்டுள்ளது.அவை குறித்து அரசு டாக்டர்கள், அறுவைசிகிச்சை பிரிவில் பணியாற்றுவோருக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றனர்.

    • நாகர்கோவில் பார்வதிபுரத்தில் பொன்ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
    • ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டு உடனடியாக ரத்தக்குழாயில் ஸ்டென்டிங் போடப்பட்டு ரத்தக்குழாய் அடைப்பு நீக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரத்தில் பொன்ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 9-ந்தேதி 62 வயது முதியவர் ஒருவர் நெஞ்சுவலி மற்றும் மூச்சுதிணறல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    அதன்பின்னர் அவருக்கு டாக்டர்கள் இ.சி.ஜி. மற்றும் எக்கோ பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு மேஜர் மாரடைப்பு வந்தது தெரியவந்தது. பின்னர் அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. இதில், இதயத்தில் உள்ள ரத்தக்குழாய் முழுவதும் கொழுப்பு மற்றும் த்ரோம்பஸால் அடைக்கப்பட்டிருந்தது. உடனடியாக ரத்தக்குழாயில் ஸ்டென்டிங் போடப்பட்டு ரத்தக்குழாய் அடைப்பு நீக்கப்பட்டது. அதன்பிறகு அவருக்கு நெஞ்சுவலி முழுமையாக குறைந்து விட்டது. மறுநாள் அவர் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார். இப்போது அவர் நலமாக உள்ளார். 62 வயது முதியவரின் ரத்தக்குழாய் அடைப்பை நீக்கி பொன் ஜெஸ்லி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

    • பறக்கும் படைகளை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
    • தமிழ்நாடு அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

    சென்னை :

    கோவை அரசு மருத்துவமனையில் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் காலாவதியானதால், அந்த ஆஸ்பத்திரியின் மருந்து காப்பக பொறுப்பாளர் முத்துமாலை ராணிக்கு பணி ஓய்வு பலன்கள் வழங்க அரசு மறுத்து விட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அவர் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், காலாவதியான மருந்துகள் அரசு ஆஸ்பத்திரியில் வினியோகம் செய்யப்படுகிறதா? அரசு ஆஸ்பத்திரிகளில் இருந்து விலை உயர்ந்த மருந்து கடத்தப்படுகிறதா? புதுப்புது நோய்கள் பரவ என்ன காரணம்? என்று சரமாரியான கேள்விகளை கேட்டு, அதற்கு தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

    முத்துமாலை ராணி மீதான நடவடிக்கைகளை ரத்து செய்கிறேன். அவருக்கு எதிரான புகார் குறித்து புதிதாக விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணைக்கு மனுதாரர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்சுகள் சரியான நேரத்தில் பணிக்கு வருகின்றனரா? நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்துவதற்காக மண்டல மற்றும் மாவட்ட அளவில் பறக்கும் படைகளை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்.

    இந்த பறக்கும் படைகள் முறையாக செயல்படுகிறதா? என்பதை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

    • நேற்று 70 வயதான செல்லையா என்பவர் உடலுக்கு மிகவும் முடியாத நிலையில் உறவினர்களால் தூக்கி வரப்பட்டார்.
    • பணியில் இருந்த அரசு மருத்துவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.


    ஏற்காடு:


    ஏழையின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 67 மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சிகிச்சைக்காக முக்கிய சிகிச்சை மையமாக கருதப்படுவது ஏற்காடு அரசு மருத்துவமனை.


    ஏற்காட்டில் ஆங்காங்கே சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் சிறிய அளவில் மருத்துவமனைகள் இருப்பினும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 67 கிராம மக்களுக்கு பெரிய மருத்துவமனையாக இது திகழ்கிறது.


    இந்த மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று 70 வயதான செல்லையா என்பவர் உடலுக்கு மிகவும் முடியாத நிலையில் உறவினர்களால் தூக்கி வரப்பட்டார். அப்போது பணியில் இருந்த அரசு மருத்துவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.


    மேலும் சிகிச்சைக்கு வந்த நபரிடம் தரக்குறைவாகவும் தகாத வார்த்தை பயன்படுத்தி கீழே தள்ளி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தகவலறிந்து வந்த போலீசாரையும் அவர் திட்டினார்.


    இதுபற்றி அந்த முதியவரின் பேரன் கவுதம் ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் அளிதார். அதன் பேரில் ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.


    • மகப்பேறு டாக்டர், மயக்கவியல் நிபுணர் ஆகியோர் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர்.
    • விண்ணப்பங்களை 20-ந்தேதிக்குள், பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் டி.எஸ்.கே., நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், மகப்பேறு டாக்டர், மயக்கவியல் நிபுணர் ஆகியோர் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர். மாதம் 70 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பங்களை கமிஷனர், திருப்பூர் மாநகராட்சி என்ற முகவரிக்கு 20-ந்தேதிக்குள், பதிவு தபாலில் அனுப்ப வேண்டும். நேர்முக தேர்வு 25 ம் தேதி நடக்குமென மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தில் காலியாக உள்ள, தற்காலிக நகர்ப்புற சுகாதார செவிலியர் பணியிடத்துக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் 14 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பதிவு தபால் மூலமாக கமிஷனர், திருப்பூர் மாநகராட்சி என்ற முகவரிக்கு, 20ந் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • போலீஸ் நிலையத்தில் கந்து வட்டி வழக்கு உள்பட மொத்தம் 8 வழக்குகள் காசி மீது பதிவு செய்யப்பட்டன.
    • இளம்பெண் அளித்த பாலியல் புகார் மீதான விசாரணை நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்க பாண்டியன். இவரது மகன் காசி (வயது 27). இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் என்ஜினியர், நாகர்கோவில் பகுதியை சோ்ந்த 27 வயதுடைய இளம்பெண் ஆகியோர் பாலியல் புகார் அளித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காசியை கைது செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே காசி மீது அடுத்தடுத்து இளம்பெண்கள் புகார் அளித்தனர். அந்த வகையில் வடசேரி போலீஸ் நிலையத்தில் கந்து வட்டி வழக்கு உள்பட மொத்தம் 8 வழக்குகள் காசி மீது பதிவு செய்யப்பட்டன.

    இந்த வழக்குகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி காசியின் நண்பர் ஒருவரை கைது செய்தனர்.மேலும் காசிக்கு உதவும் வகையில் பல்வேறு சாட்சியங்களை அழித்ததாக தங்கபாண்டியனையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். பின்னர் காசி மற்றும் தங்கபாண்டியன் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்கள் பலமுறை ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    ஏற்கனவே கந்துவட்டி, போக்சோ உள்பட 6 வழக்குகளுக்கு கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நாகர்கோவில் இளம்பெண் அளித்த பாலியல் புகார் மீதான விசாரணை நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கை நீதிபதி சசிரேகா விசாரித்து வருகிறார். வழக்கு விசாரணைக்கு இன்று காசி மற்றும் அவரது தந்தை தங்கபாண்டியன் நேரில் ஆஜராகினர்.

    இதுவரை 12-க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் நேரில் வந்து வாக்கு மூலம் அளித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று டாக்டர்கள் வந்து சாட்சி அளித்தனர். பின்னர் காசி மற்றும் தங்கபாண்டியனிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காசி மற்றும் தங்கபாண்டியன் மீண்டும் பாளையங்கோட்டை ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    • நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தும்போதோ கிருமி சளியோடு வெளியேறி அடுத்தவர்களுக்கும் பரவிவிடுகிறது.
    • குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் அதிகமாக இருக்கும்போது, வலிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    திருப்பூர் :

    மழைக்காலம் வந்துவிட்டாலே நோய்களும் பஞ்சம் இல்லாமல் தொற்றிக்கொள்ளும். இதில் முதன்மையாக திகழ்வது வைரஸ் காய்ச்சல். குறிப்பாக புளு காய்ச்சல் அதிக அளவில் ஏற்படுகிறது. நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தும்போதோ கிருமி சளியோடு வெளியேறி அடுத்தவர்களுக்கும் பரவிவிடுகிறது.

    தும்மல், மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை வலி, கடும் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கைகால் வலி போன்றவை இதன் அறிகுறிகள்.

    இது குறித்து திருப்பூர் மருத்துவர்கள் கூறுகையில், காய்ச்சலைக் குறைக்க பாராசிட்டமால் மாத்திரை உதவும். ஒரு வாரத்தில் இது தானாகவே சரியாகிவிடும். இருப்பினும் மருத்துவர்களைக் கலந்தாலோசித்து மருந்து உட்கொள்வதே சிறந்தது.குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் அதிகமாக இருக்கும்போது, வலிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. காய்ச்சலைத் தணிக்க நடவடிக்கை தேவை. வழக்கமாக காய்ச்சல் நோயாளிகள், திட உணவு உட்கொள்வதற்கு பதிலாக திரவ உணவுகளை உட்கொள்வது சிறந்தது. எளிதில் ஜீரணிக்க உதவும். தூய்மையான குடிநீரைக் காய்ச்சி பருகுவதும் அவசியம். கொரோனா தொற்று பரவல் பொதுமக்களுக்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தியது. அதேசமயம் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக சுகாதாரம் குறித்த அக்கறை மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது. இது நோய்களில் இருந்து காக்கும் என்றனர்.

    ஊட்டச்சத்து வல்லுனர்கள் கூறுகையில், நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாதவர்களுக்கு எளிதாக நோய் தொற்றிக்கொள்ளும். ஊட்டச்சத்து ஆகாரங்களை உட்கொள்வது முக்கியம். மழைக்காலத்தில் வைரஸ் காய்ச்சல் மட்டுமின்றி, வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்றவையும் பரவுகின்றன. கவனத்துடன் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியமே பிரதானம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு உணவு வழங்குவதிலும் கவனம் தேவை. முடிந்தவரை, நோயில் இருந்து விடுபடும் வரை பள்ளி செல்வதை குழந்தைகள் தவிர்க்க வேண்டும் என்றனர்.

    • டாக்டர்களுக்கான மருத்துவ கல்வி மேம்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • 60 மருத்துவர்கள் கலந்துகொண்டனர்

    திருச்சி:

    திருச்சியை தலைமையிடமாக கொண்டு மருத்துவ சேவையாற்றி வரும் ஹர்ஷமித்ரா உயர் புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் அனைத்திந்திய மருத்துவ சங்கம், திண்டுக்கல் கிளை சார்பில் மருத்துவர்களுக்கான தொடர் மருத்துவக் கல்வி மேம்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு சிறப்பு பிரிவுகள் டாக்டர்கள குழுவினர் 60 பேர் கலந்து கொண்டனர்

    ஹர்ஷமித்ரா புற்றுநோய் மையத்தின் இயக்குநர்கள் டாக்டர்.ஜி.கோவிந்தராஜ் மற்றும் டாக்டர் சசிப்ரியா கோவிந்தராஜ் ஆகியோர் பொது நடைமுறையில் புற்றுநோயால் ஏற்படும் தாக்கம் குறித்து விரிவுரை வழங்கினர்.

    அனைத்திந்திய திண்டுக்கல் மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர். கே.மஹாலட்சுமி செயலாளர்டாக்டர் டி.ஜோசப் கிறிஸ்டோபர் பாபு, டாக்டர்.எஸ்.டீன் வெஸ்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    டாக்டர். ஜி.கோவிந்தராஜ் பேசுகையில், புற்றுநோயாளிகளின் சிகிச்சையில் பல்வேறு சிறப்புகளின் பங்கு குறித்து பேச்சாளர்கள் விளக்கினர். மேலும் இத்தகைய திட்டங்கள் புற்றுநோய் சிகிச்சையில் பல்வேறு நிபுணர்களை புதுப்பிப்பதற்கு உதவுகின்றன, இதனால் புற்றுநோயாளிகளின் விரிவான பலதரப்பட்ட கவனிப்பை மேம்படுத்துகிறது என்றார் .

    • மனைவி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • 3 பேரும் சேர்ந்து என்னை தாக்கி வீட்டில் இருந்த 6 பவுன் தங்க நகைகள் பணத்தை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர்.

    குனியமுத்தூர்;

    கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பதிவாளர் காலனியை சேர்ந்தவர் ஜான் சாமுவேல் (வயது 39). இவர் போத்தனூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் தனியார் ஆஸ்பத்திரியில் பிசியோதெரபிஸ்ட் டாக்டராக பணியாற்றி வருகிறேன். எனக்கும் ஷீலா என்ற பெண்ணுக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான 3 மாதத்தில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனையடுத்து அவர் என்னை பிரிந்து அவரது வீட்டிற்கு சென்றார். இந்தநிலையில் அவரது உறவினர் வந்து எனது மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு கூறினர். இதற்கு நான் சம்மதம் தெரிவித்தேன்.

    சம்பவத்தன்று நான் வீட்டில் இருந்த போது எனது மனைவி ஷீலா, அவரது சகோதரர் கவின், தந்தை வாசிங்டன் ஆகியோர் வந்தனர். அப்போது எங்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து என்னை தாக்கினர். பின்னர் வீட்டில் இருந்த மோதிரம், கைசெயின், செயின் உள்பட 6 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் டாக்டரின் மனைவி ஷீலா, சகோதரர் கவின், தந்தை வாசிங்டன் ஆகியோர் மீது தாக்குதல், திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    பல கஷ்டங்களுக்கு மத்தியில் விடாமுயற்சியுடன் படித்து மருத்துவரான ஒருவர், வேலை நேரம் போக மீதிநேரத்தில் தாம் படித்த அரசு பள்ளிக்கு சென்று இலவசமாக வகுப்புகள் எடுக்கிறார்.
    ஓசூர்:

    உத்தனப்பள்ளி அடுத்த கோவிந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி கலையரசன். சிறுவயதில் பெற்றோரை இழந்த இவர், தந்தை வழி பாட்டி அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். அரசு பள்ளி சத்துணவை சாப்பிட்டு, கஷ்டத்திலும் இஷ்டப்பட்டு படித்து, மருத்துவராகி சாதனை படைத்துள்ளார். 

    நம்பிக்கை நட்சத்திரமான ரஜினி கலையரசன் எம்.டி படிப்பதற்காக தற்போது உத்தனப்பள்ளியில் கிளினீக் நடத்தி வருகிறார். கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தாம் படித்த அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு, அறிவியல் மற்றும் தமிழ் பாடங்களை நடத்தி வருகிறார் இளம் மருத்துவர்.  

    தன்னம்பிக்கை கதைகளையும், தாம் மருத்துவரான பின்புலங்களையும் எடுத்துரை மாணவ- மாணவிகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறார். அயராத உழைப்பால், மனதை தளரவிடாமல் விடாமுயற்சியுடன் வீர நடைபோடும் மருத்துவர் ரஜினி கலையரசனின், சுயநலமில்லாத தொண்டை பாராட்டி மனம் நெகிழ்கிறார்கள் உத்தனப்பள்ளி வாசிகள்.
    முதுகுவலி மற்றும் கை வலிக்காக சிகிச்சை அளித்த போது ஜெயலலிதா சைகை மூலம் தன்னிடம் பேசியதாக அப்பல்லோ மருத்துவர் விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் சஜன் ஹெக்டே, செவிலியர் ஜோஸ்னோமோல் ஜோசப் ஆகியோர் நேற்று ஆஜராகினர்.

    மருத்துவர் சஜன் ஹெக்டே அளித்த வாக்குமூலத்தில், ‘ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஒரு முறை முதுகுவலி இருப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து அவரது உடல்நிலையை பரிசோதித்து விட்டு முதுகுவலி குறைவதற்காக மருந்து, மாத்திரை வழங்கினேன். அதேபோன்று மற்றொரு முறை கை வலிப்பதாக கூறியதை தொடர்ந்து உரிய சிகிச்சை அளித்தேன். அந்த சமயங்களில் ஜெயலலிதா என்னிடம் சைகை மூலம் எங்கே வலிக்கிறது என்பதை தெரிவித்தார். மற்றபடி நான் அவருக்கு வேறு எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை’ என்று கூறி உள்ளார்.

    செவிலியர் ஜோஸ்னோமோல் ஜோசப், மருத்துவர் சஜன் ஹெக்டே

    செவிலியர் ஜோஸ்னோமோல் ஜோசப் பணியில் இருந்த போது, ஜெயலலிதாவுக்கு அளித்த மருந்து, மாத்திரைகள் மற்றும் உணவு பொருட்கள் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

    விசாரணை ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ள பலர் அப்பல்லோ மருத்துவமனையின் இயற்கை அமைப்புகளை ஒட்டியே சாட்சியம் அளித்துள்ளதால் அதன் உண்மைத்தன்மையை அறிந்துகொள்வதற்காக அப்பல்லோ மருத்துவமனையை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஆணையத்தின் வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆறுமுகசாமி, 29-ந் தேதி (நாளை) இரவு 7 மணி முதல் 7.45 மணி வரை ஆணையத்தின் வக்கீல்கள் அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு செய்யவும், அப்போது சசிகலா வக்கீல்கள் உடன் செல்ல அனுமதி அளித்தும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது தன்னையும், தனது வக்கீலையும் அனுமதிக்க வேண்டும் என்று ஜெ.தீபா ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி, ‘ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்பல்லோ மருத்துவமனையின் 2-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு அறை எண்.2008, அங்குள்ள நடைபாதை, ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இருந்த இடம் ஆகியவற்றை 29-ந் தேதி (நாளை) இரவு 8.15 மணி முதல் 8.40 மணி வரை ஜெ.தீபா மற்றும் அவரது வக்கீல் தொண்டன் சுப்பிரமணி ஆகியோர் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது. அந்த சமயத்தில் அவர்கள், அப்பல்லோ தரப்பு வக்கீல்கள் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் எந்தவித விவாதமும் மேற்கொள்ளக்கூடாது. மருத்துவமனை நிர்வாகத்துக்கும், நோயாளிகளுக்கும் எந்தவித இடையூறு இல்லாமல் பார்வையிட வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

    சாட்சிகளிடம் விசாரணை நடத்தும்போது சசிகலா தரப்பு வக்கீல்களை அனுமதிப்பது போன்று தனது தரப்பு வக்கீலையும் அனுமதிக்க வேண்டும் என்று ஜெ.தீபா தனியாக ஒரு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    அப்பல்லோவில் மருத்துவர்களாக பணியாற்றிய அர்ச்சனா, பிரசன்னா மற்றும் செவிலியர்களாக பணியாற்றி வரும் ரேணுகா, ஷீலா ஆகியோரிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை செய்வதற்காக அவர்களை 31-ந் தேதி ஆஜராக ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்டு 1-ந் தேதி அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் பி.எல்.அருண்செல்வன், ரேடியோலாஜிஸ்ட் ரவிக்குமார் ஆகியோரும், 2-ந் தேதி அப்பல்லோ மருத்துவர் கே.ஆர்.பழனிசாமி, செவிலியர் அனுஷா ஆகியோரும் விசாரணைக்காக ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
    ×