search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாய்"

    • நாயும் கன்று குட்டி பால் குடிக்கும் வரை அமைதியாக இருந்தது.
    • நாயிடம் கன்றுக்குட்டி பால் குடிக்கும் காட்சியை அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் அதிசயத்துடன் பார்த்தனர்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர்கேட் பாஷா நகரில் வசிப்பவர் அஸ்கர் மாடு வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டில் கன்றுக்குட்டி ஒன்று வளர்ந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று கன்றுக்குட்டி வீட்டிற்கு வெளியே இருந்துள்ளது. அப்போது அங்கே நாய் தனது குட்டிகளுக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தது.அதனை கண்ட கன்றுக்குட்டியும் அந்த நாயிடம் சென்று பால் குடித்தது.

    அந்த நாயும் கன்று குட்டி பால் குடிக்கும் வரை அமைதியாக இருந்தது நாயிடம் கன்றுக்குட்டி பால் குடிக்கும் காட்சியை அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் அதிசயத்துடன் பார்த்தனர்.

    • இதற்கு முன்பு பிஸ்பீ என்ற நாய் நீளமான நாக்கு கொண்டதாக சாதனை பட்டியலில் இருந்தது.
    • ஜோயியை நடைபயிற்சிக்கு அழைத்து செல்லும் போது மக்கள் அதன் அருகில் செல்ல விரும்புவார்கள்.

    அமெரிக்காவில் லூசியானாவை சேர்ந்த ஜோயி என பெயரிடப்பட்ட லாப்ரடோர்- ஜெர்மன் ஷெப்பர்ட் கலவை கொண்ட நாய், மிக நீளமான நாக்குக்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த நாய்க்கு 12.7 சென்டி மீட்டர் நீளம் (5 அங்குலம்) கொண்ட நாக்கு உள்ளது. கால்நடை மருத்துவர் ஒருவர் அந்த நாயின் நாக்கு நீளத்தை அளந்ததை தொடர்ந்து இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன்பு பிஸ்பீ என்ற நாய் நீளமான நாக்கு கொண்டதாக சாதனை பட்டியலில் இருந்தது. அதன் நாக்கு 9.49 சென்டி மீட்டர் இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை ஜோயி முறியடித்துள்ளது. ஜோயி நாயின் உரிமையாளர்களான சாடி மற்றும் ட்ரூ வில்லியம்ஸ் ஆகியோர் கூறுகையில், ஜோயி 6 வாரமாக இருக்கும் போது நாங்கள் அதனை வாங்கினோம். குட்டியாக இருக்கும் போதே ஜோயின் நாக்கு வாயில் இருந்து அடிக்கடி வெளியேறும். அது இவ்வளவு நீளமாக வளரும் என்று நினைத்தோம். இப்போது சாதனை படைத்துள்ளது.

    நாங்கள் ஜோயியை நடைபயிற்சிக்கு அழைத்து செல்லும் போது மக்கள் அதன் அருகில் செல்ல விரும்புவார்கள். நாங்கள் அவர்களை முன்கூட்டியே எச்சரித்து பாதுகாப்பாக அழைத்து செல்வோம் என்றனர். மேலும் ஜோயி பந்துகளை எடுப்பது, அணில்களை துரத்துவது, கார் சவாரி செல்வது, கால்வாயில் நீந்துவது போன்றவற்றை விரும்புவதாகவும், குளிப்பதை வெறுப்பதாகவும் அதன் உரிமையாளர்கள் கூறினர்.

    • நாய் வளர்க்கும் தகராறில் கணவன் - மனைவி மீது தாக்குதல் நடந்தது.
    • காயமடைந்த இருவரும் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள பூதமங்கலத்தை சேர்ந்தவர் தினகரன் (வயது 55), விவசாயி. இவரது வீட்டின் அருகே வசிப்பவர் சத்தியமூர்த்தி (44). இவர் வளர்க்கும் நாய் தினகரன் குடும்பத்தினர் மற்றும் அவரது வீட்டுக்கு வருபவர்களைப் பார்த்து குரைத்து விரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் தினகரன் வீட்டின் அருகே நடந்துவந்த போது, அவரை வழிமறித்து இரும்பு கம்பியால் சத்தியமூர்த்தி தாக்கியுள்ளார். அதைப் பார்த்து தடுக்க வந்த தினகரன் மனைவி ஜெயசீலாவுக்கு அடி விழுந்தது. இதில் காயமடைந்த இருவரும் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    இதுகுறித்து தினகரன் கொடுத்த புகாரின் பேரில் கீழவளவு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  

    • கோபம் அடைந்த சங்கர் உள்பட 3 பேரும் சேர்ந்து ராமமூர்த்தி வளர்த்து வந்த நாயை கத்தியால் குத்தினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர், பிரபாகரன், ரோகித் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. டிரைவர். இவர் நாய் ஒன்று வளர்த்து வந்தார்.

    இந்த நிலையில் அந்த நாய் அடிக்கடி சாலையில் செல்வோரை குரைத்து மிரட்டி அச்சுறுத்திவந்ததாக தெரிகிறது.மேலும் வாகனங்களில் செல்லும் போது அதன் முன்பு நின்றும் குரைத்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி அதே பகுதியைசேர்ந்த சங்கர், பிரபாகரன், ரோகித்த ஆகியோர் ராமமூர்த்தியிடம் கூறினர். அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் கோபம் அடைந்த சங்கர் உள்பட 3 பேரும் சேர்ந்து ராமமூர்த்தி வளர்த்து வந்த நாயை கத்தியால் குத்தினர். மேலும் அதன் கழுத்தையும் அறுத்ததாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த நாய் இறந்து போனது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராமமூர்த்தி மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர், பிரபாகரன், ரோகித் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாயின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்ட பல்கலைக்கழகம் முடிவு செய்தது.
    • சான்றிதழை ஜஸ்டின் தனது வாயில் கவ்வியபடி பெற்று செல்லும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.

    அமெரிக்காவில் நியூஜெர்சியில் சவுத் ஆரஞ்ச் பகுதியில் செட்டான் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. புகழ்பெற்ற இந்த பல்கலைக்கழகத்தில் 90-க்கும் மேற்பட்ட பட்டப்பிரிவுகளின் கீழ் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்த பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவியான கிரேஸ் மரியானி என்பவர் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு பயின்று வந்தார். இவர் வகுப்புக்கு செல்லும் போதெல்லாம் தனக்கு துணையாக ஜஸ்டின் என்ற தனது வீட்டு வளர்ப்பு நாயையும் அழைத்து சென்றார்.

    கிரேசுடன் அனைத்து வகுப்புகளிலும் அந்த நாயும் கலந்து கொண்டுள்ளது. எனவே அந்த நாயின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்ட பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இந்நிலையில் கிரேஸ் தனது பாடத்தில் முழுதேர்ச்சி பெற்று பட்டப்படிப்பு முடித்ததையடுத்து அவருக்கு பட்டயச்சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர் பட்டம் பெற பல்கலைக்கழகத்திற்கு சென்ற போது, கிரேசுக்கு பட்டயச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

    பின்னர் பல்கலைக்கழகம் சார்பில் ஜஸ்டின் நாய்க்கும் அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஆடை அணிவித்து, டிப்ளமோ பட்டம் வழங்கப்பட்டது. அந்த சான்றிதழை ஜஸ்டின் தனது வாயில் கவ்வியபடி பெற்று செல்லும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.

    • கண்காணிப்பு கேமராவில் நான்கிற்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் இரவு நேரங்களில் சுற்றுவது பதிவாகியுள்ளது.
    • இறைச்சிக்கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவது அதிகரித்துள்ளது.

     உடுமலை :

    உடுமலை அருகே தாந்தோணி, துங்காவி, இந்திராநகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக தோட்டங்களில், பராமரிக்கப்படும் ஆடுகள் மர்மவிலங்குகளால் வேட்டையாடப்படுவது தொடர்கதையாக உள்ளது. சின்னவீரம்பட்டி இந்திராநகர் பகுதியில், கந்தவேல் என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள், கழுத்து மற்றும் வயிறு பகுதியில் கடிபட்டு உயிரிழந்து கிடந்தது.அப்பகுதியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் சில கன்றுக்குட்டிகள் இவ்வகையில் உயிரிழந்து ள்ளது.வனத்துறை சார்பில் மர்மவிலங்கு நடமாட்டம் குறித்து கண்காணிக்க பல்வேறு இடங்களில் கேமரா பொருத்தப்பட்டது.

    இது குறித்து உடுமலை வனச்சரக அலுவலர்கள் கூறியதாவது:- தாந்தோணி சுற்றுப்பகுதியில் குறிப்பிட்ட சுற்றளவில் மட்டுமே இத்தகைய சம்பவங்கள் நடக்கிறது.சம்பவ இடத்தில் கால்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டது.மேலும் கண்காணிப்பு கேமராவில் நான்கிற்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் இரவு நேரங்களில் சுற்றுவது பதிவாகியுள்ளது.சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வேட்டையாடினால் இறை ச்சியை அவ்விடத்திலேயே விட்டு செல்லாது.எனவே குறிப்பிட்ட சுற்றளவில் சுற்றித்திரியும் நாய்களே ஆடுகளை குறிவைத்து தாக்குவது உறுதியா கியுள்ளது என்றனர். உடுமலை சுற்றுப்பகுதியில் இறைச்சிக்கழிவுகளை திறந்தவெளியில் கொ ட்டுவது அதிகரித்துள்ளது. இத்தகைய கழிவுகளை உண்ணும் நாய்கள் தோட்டங்களில், வளர்க்கப்படும் கோழி, ஆடு, கன்றுக்குட்டிகளை குறிவைத்து தாக்குகின்றன.

    எனவே இறைச்சிக்க ழிவுகளை திறந்தவெளியில் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அச்சத்திலுள்ள மக்களின் பாதுகாப்புக்காக சம்பவ இடங்களில் கூண்டு வைத்து நாய்களை பிடிக்க, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • பொதுமக்கள் சோழவரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
    • குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சோழவரம்:

    சென்னையை அடுத்த சோழவரம் அருகேயுள்ள பள்ளி சூரப்பட்டு கிராமத்தில் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையின் உடலை நாய்கள் கடித்து குதறிக் கொண்டிருந்தன.

    இதைப் பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் நாய்களை விரட்டினார்கள். அப்போது குழந்தையின் இடுப்பு பகுதியில் இருந்து கால் வரை உள்ள பாகங்கள் அழுகிய நிலையில் காணப்பட்டன. முகமும் அழுகி சிதைந்து காணப்பட்டது.

    குழந்தையின் பாதி உடல் மட்டுமே இருந்தது. இதனால் அந்த குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து பொதுமக்கள் சோழவரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த குழந்தையின் உடலில் தொப்புள் கொடி உள்ளது. எனவே பிறந்தவுடன் குழந்தையை தாய் வீசிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த பகுதியை சுற்றியுள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 10 நாட்களில் குழந்தை பெற்றவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். அதன் மூலம் குழந்தையின் தாயை கண்டு பிடிக்கும் பணியில் போலீ சார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • மர்ம விலங்கு கடித்ததில் கன்று குட்டிகள் காயம் ஏற்பட்டு இறந்து கிடந்தது.
    • கால்நடை மருத்துவர் மூலமாக பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த சின்னவீரம் பட்டியைச் சேர்ந்தவர் அருளானந்தம்.விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் பெரிய கோட்டை கிராமத்தில் உள்ளது. அருளானந்தம் சாகுபடி பணிகளுடன் சேர்த்து கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டு வருகிறார்.இவர் சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க இரண்டு கன்று குட்டிகளை தோட்டத்து சாளையில் கட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.நேற்று காலை வந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத மர்ம விலங்கு கடித்ததில் கன்று குட்டிகள் வயிறு மற்றும் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டு இறந்து கிடந்தது.

    அதைத்தொடர்ந்து சந்தேகம் அடைந்த அருளானந்தம் உடுமலை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.அதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.அதைத் தொடர்ந்து கன்றுக் குட்டிகளுக்கு கால்நடை மருத்துவர் மூலமாக பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது.அதில் தெரு நாய்கள் கடித்ததில் கன்று குட்டிகள் இறந்தது தெரிய வந்தது.அதைத் தொடர்ந்து வனத்துறையினர் சார்பில் அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது.மேலும் ரோந்து பணியிலும் வனத்துறையினர் ஈடுபட்டு வருவதுடன் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.வனத்துறையினரின் நடவடிக்கையால் விவசாயிகள் நிம்மதி அடைந்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,

    சின்னவீரம்பட்டி பகுதியில் வளர்ப்பு கோழி பண்ணைகள் உள்ளது.அதில் இறக்கும் கோழிகளை முறையாக அப்புறப்படுத்துவதில்லை. ஆங்காங்கே திறந்த வெளியில் வீசி விடுகின்றனர்.இதனால் அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்கள் இறந்த கோழிகளை உணவாக்கி வருகிறது.கோழிகள் கிடைக்காத சமயத்தில் மாமிசத்தின் மீது உள்ள மோகத்தால் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளை தெருநாய்கள் துன்புறுத்தி வருகிறது. இதனால் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் பண்ணைகளில் இறக்கும் கோழியை முறைப்படி குழி தோண்டி புதைப்பதும் அவசியமாக உள்ளது.அவர்களது அலட்சியமே தெரு நாய்களுக்கு ரத்தவெறி பிடித்து கால்நடைகள் பாதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட துறையினர் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும் கடமையாகும் என்று தெரிவித்தனர்.

    • அந்த வழியாக யாராவது சென்றால், நாய் குறைப்பது வழக்கம்
    • ஜஸ்டின் வெளியே வந்து பார்த்த போது 2 பேர் கத்தியோடு நிற்பதை பார்த்துள்ளார்.

    கன்னியாகுமரி :

    ஆரல்வாய்மொழி அருகே மரப்பாலம் பகுதியில் வசிப்பவர் ஜஸ்டின், கட்டிட தொழிலாளி. இவர் தனது வீட்டில் நாய் வளர்த்து வந்தார். அதனை வீட்டு முன்பு கட்டி இருந்தார். அந்த வழியாக யாராவது சென்றால், நாய் குறைப்பது வழக்கம். இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு கும்பல் சம்பவத்தன்று நாயை அடித்ததோடு, கத்தியாலும் குத்தி உள்ளனர். இதில் நாய் பரிதாபமாக இறந்தது. நாயின் அலறல் சத்தம் கேட்டு ஜஸ்டின் வெளியே வந்து பார்த்த போது 2 பேர் கத்தியோடு நிற்பதை பார்த்துள்ளார். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசில் ஜஸ்டின் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அந்த மானை அப்பகுதியில் உள்ள நாய்கள் திடீரென துரத்தி துரத்தி கடித்தது.
    • பின்னர், அந்த மான் கோடியக்கரை சரணாலய பகுதியில் விடப்பட்டது

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த நாலுவேதபதி கடற்கரை பகுதியில் 2 வயதுடைய புள்ளிமான் ஒன்று சுற்றித்திரிந்தது.

    வழக்கம்போல் சுற்றித்திரிந்த அந்த மானை அப்பகுதியில் உள்ள நாய்கள் திடீரென துரத்தி துரத்தி கடித்தது.

    இதனால் காயங்களுடன் கிடந்த அந்த மானை அவ்வழியாக வந்த பிரபுகுமார் என்பவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே, கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கானுக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலறிந்தவர்கள் வனவர் பெரியசாமி, வனக்காவலர் நாகூரான், வேட்டை தடுப்பு காவலர்கள் நிர்மல்ராஜ், வேதமூர்த்தி, நவநீதகிருஷ்ணன் ஆகியோர்கள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மானை மீட்டு கோடியக்கரை உதவி கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

    பின்னர், அந்த மான் கோடியக்கரை சரணாலய பகுதியில் விடப்பட்டது.

    • நாய்கள் யாரையும் தொந்தரவு செய்வதில்லை.
    • வீடுகளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தன.

    பல்லடம் :

    பல்லடம் மாணிக்காபுரம் ரோடு பகுதியில், சுற்றித்திரிந்த தெரு நாய்களை சம்பவத்தன்று மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- நன்றி என்ற சொல்லுக்கு உதாரணமாக விளங்கிவரும் நாய்களை பல்லடத்தில் விஷம் வைத்து கொன்றது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த நாய்கள் இந்த பகுதியில் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. அவைகள் இங்குள்ள வீடுகளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தன. புதியவர்களை கண்டால் மட்டுமே குரைக்கும். அவைகள் இதுவரை யாரையும் கடித்ததில்லை. இந்த நிலையில் கொடூரமனம் படைத்தவர்கள் இங்கு சுற்றிச் திரிந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்று ள்ளனர்.

    இது குறித்து விலங்குகள் நல வாரியம் மற்றும் போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளோம். விஷம் வைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அர்ஜுனன் தனது விவசாய தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
    • காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் ஊராட்சி வலையபாளையத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன்(வயது 42). இவர், தனது விவசாய தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அங்கு வந்த நாய்கள் ஆடுகளை கடித்து குதறியதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு வந்த அவரது குடும்பத்தினர். நாய்களை விரட்டியுள்ளனர். ஆனால் நாய்கள் கடித்ததால் பலத்த காயம் அடைந்திருந்த ஆடுகள் ஒவ்வொன்றாக இறந்தன.மொத்தம் 6 ஆடுகள் இறந்ததாக கூறப்படுகிறது.

    இதன் மதிப்பு சுமார் ரூ.40 ஆயிரம். ஆடுகளை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அந்த பகுதியில் அடிக்கடி நடப்பதாகவும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    ×