என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலந்தாய்வு"

    • 31-ந் தேதி, மாணவர் சேர்க்கைக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.
    • இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களும் நேரடி விண்ணப்பம் பெற்று இதில் பங்கேற்கலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி முதல்வர் அனுராதா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதுநிலைப் பாடப்பிரிவுகளுக்கான எம்.ஏ.,(தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல்), எம்.எஸ்.சி., (கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல்) உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு இணைய வழியில் விண்ணப்பித்த வர்களுக்கும், துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்று விண்ணப்பித்தவர்களுக்கும் வருகிற 31-ந் தேதி, மாணவர் சேர்க்கைக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களும் நேரடி விண்ணப்பம் பெற்று இதில் பங்கேற்கலாம்.

    கலந்தாய்வின் போது, மாணவர்கள் தங்களது மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ், நான்கு மார்பளவு புகைப்படங்கள், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல், சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ்கள் ஆகிய வற்றுடன், கலைப்பாடப் பிரிவுக்கு ரூ.1750, அறிவியல் பாடப்பிரிவுக்கு ரூ.1810, கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கு ரூ.2,010 சேர்க்கைக்கான கட்டணத்தை செலுத்தும் வகையில் வரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடைபாதைகளில் உள்ள செடி, கொடிகளை தூய்மைப்படுத்தினர்.
    • நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு நடைபெற்றது.

    சீர்காழி:

    விழுதுகள் இயக்கத்தின் சார்பில் சீர்காழி ரெயில் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு விழுதுகள் இயக்கத்தின் தலைவர் ஏ.கே.ஷரவணன் தலைமை வகித்தார். ரெயில் நிலைய அதிகாரி முன்னிலை வகித்தார்.

    சீர்காழி எல்.எம்.சி. மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ரயில் நிலையத்தில் நடைபாதைகளில் இருந்த செடி, கொடிகளை தூய்மைப்படுத்தினர்.

    கடும் வெயிலிலையும் பொருட்படுத்தாமல் தூய்மைப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

    நிகழ்ச்சி முடிவில் விவசாய பயிர்களை அழிக்கும் எலிகளின் எதிரியான பாம்புகளை அடித்து கொல்லாமல் பாம்புகளை பாதுகாப்பான முறையில் பிடித்து கையாளுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் பாம்பு பாண்டியன், நாட்டு நலப்பணி திட்ட ஆசிரியர்கள், விழுதுகள் இயக்கத்தினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் விழுதுகள் இயக்கத்தின் காமராஜ் நன்றி கூறினார்.

    • சீனியாரிட்டி தரவரிசை அடிப்படையில் தேர்வு
    • போலீசார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்து 3 ஆண்டுகள் நிறைவு பெற்ற காவல்துறையினரை மாவட்டத்தில் உள்ள வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணியமர்த்துவதற்கான வெளிப்படையான பணி மாறுதலுக்கான ஆலோசனைக் கூட்டம் பால்நாங்குப்பம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு கே.எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    இதில் 3 ஆண்டுகள் ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்த 138 போலீஸ் துறையினர் தாங்கள் பணிபுரிய விரும்பும் காவல்நிலையங்களை சீனியாரிட்டி தரவரிசை அடிப்படையிலும், காலி பணியிடங்களின் அடிப்படையிலும் தேர்வு செய்தனர்.

    மேலும் இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், துணை போலீஸ் கண்காணிப்பாளர்கள் திருப்பத்தூர் கணேஷ், வாணியம்பாடி சுரேஷ் பாண்டியன், ஆம்பூர் சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், அமைச்சுப் பணியாளர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், உள்ளிட்ட போலீசார் பலர் பங்கேற்றனர்.

    • சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் இன்று தொடங்கியது.
    • காலை 7 மணி முதல் 10 மணி வரை மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவுக்கு கலந்தாய்வு நடந்தது.

    சென்னை:

    இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி உள்ளன.

    இந்த 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல் 26 தனியார் கல்லூரிகளில் 1,990 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படும்.

    அரசு ஒதுக்கீடு இடங்கள், நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசுக் கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது. இந்தப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

    சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி (பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ்., பி.எச்.எம்.எஸ்) ஆகிய ஆயுஷ் பட்டப்படிப்புகளுக்கு 2022-23 ஆம் கல்வி ஆண்டிலும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்பைடையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

    அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2,573 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 878 விண்ணப்பங்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 707 பேரின் விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டுள்ளன.

    இந்த இடங்களுக்கு அரசு பள்ளி மாணவர்கள் 424 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் இன்று தொடங்கியது.

    காலை 7 மணி முதல் 10 மணி வரை மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவுக்கு கலந்தாய்வு நடந்தது. பிறகு காலை 10 மணி முதல் பகல் 1.30 மணிவரை அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

    பிற்பகலில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஜனவரி 4-ந் தேதி வரை (டிசம்பர் 31, ஜனவரி 1,2-ந் தேதிகளில் கலந்தாய்வு இல்லை) கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வு தொடர்பான விவரங்கள் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    • நிலுவை வழக்குகளை விரைவாக முடிக்க கலந்தாய்வு நடந்தது.
    • போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் வாகனங்களை ஆய்வு செய்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்து, புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கலந்தாய்வு செய்தார். இதில் போலீசார், மருத்துவத்துறையினர், சுகாதார துறையினர், போக்குவரத்து துறையினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்பட பல்வேறு துறையினர் கலந்து கொண்டனர். முன்னதாக போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் வாகனங்களை ஆய்வு செய்தார்.


    • தரவரிசைப் பட்டியல் கடந்த 27-ந் தேதி அன்று வெளியானது.
    • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தொடங்கியது.

    கோவை,

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புகளுக்கான இணையவழி கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் போன்ற பட்டயப் படிப்புகளுக்கு 2022- 2023ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு 2,036 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன.

    இதில் 2,025 விண்ணப்பங்கள் தகுதியானவையாக கருதப்பட்டு அவற்றுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 27-ந் தேதி அன்று வெளியானது.

    இதைத் தொடர்ந்து, இணையவழி கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இது ஜனவரி 30-ந் தேதி வரை நடை பெறுகிறது. கலந்தாய்வு தொடர்பான விரிவான தகவல், தகுதியுள்ள அனைத்து விண்ணப் பதாரர்களுக்கும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இணையவழி கலந்தாய்வின்போது விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

    சான்றிதழ் சரிபார்ப்பின் போது விண்ணப்பதாரர்களிடம் இருந்து கட்டணம் பெற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் www.tnau.ucan apply.com என்ற இணையதளம் மூலம் ஜனவரி 30-ந் தேதி மாலை 5 மணி வரை தங்களின் கல்லூரி, விருப்பப் பாடங்களை மாற்றிக்கொள்ளலாம். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 1-ந் தேதி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்றும் கலந்தாய்வுக் கான வழிமுறைகள், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட மாணவர் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும், மேலும் விவரங்களுக்கு 0422 6611345 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறையின் 3-ம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. உதவிப்பேராசிரியை சாந்தி வரவேற்றார். ஆங்கிலத்துறையின் தலைவர் பெமினா, உதவிப் பேராசிரியர்கள் சாந்தா கிறிஸ்டினா, ஸ்வப்னா ஆகியோர் பேசினர்.

    பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வகுப்பாசிரியர்களிடம் கலந்துரையாடினார். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகை குறிப்புகள் பெற்றோர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. உதவிப்பே ராசிரியர் அர்ச்சனா தேவி நன்றி கூறினார்.

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வணிக நிறும செயலரியல் துறை சார்பில் மாணவர்களிடையே போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் நோக்கமானது மாணவர்களிடையே சந்தையிடுதல் குறித்த சிந்திக்கும் திறனை ஊக்குவிப்பதாகும். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    இதில் 105 மாணவர்கள் இணைய வழி சந்தையிடுதலை மையமாக வைத்து விளம்பர நடிப்பு மற்றும் வண்ண கோலம் வரைதல் போன்ற போட்டிகளில் ஆர்வமாக பங்கேற்றனர். துறைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் விண்ணரசி ரெக்ஸ் போட்டிக்கான விதிமுறை களை எடுத்துரைத்தார்.

    முடிவில் உதவி பேராசிரியர் சூர்யா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் ஜாஸ்மின் பாஸ்டினா செய்திருந்தார்.

    • ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
    • அதன்படி நடப்பாண்டிற்கான கலந்தாய்வு வருகிற 8-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டிற்கான கலந்தாய்வு வருகிற 8-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து கலந்தாய்வில் பங்குபெறும் ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, எமிஸில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

    ெதாடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் உபரி பணியிடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் தமிழ்-12, ஆங்கிலம்-3, கணிதம்-13, அறிவியல் -17, மறறும் சமூக அறிவியல் -4 பணியிடங்கள் என 49 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதே போல் நாமக்கல் மாவட்டத்தில் 5, தருமபுரி மாவட்டத்தில் 45, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 179 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதுபோல் உபரியாக கண்டறி யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு வருகிற 17-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலியாக உள்ள பணியிடங்களுக்கும், கூடுதல் தேவையுள்ள இடங்க ளுக்கும் பணிமூப்பு அடிப்ப டையில் கலந்தாய்வு நடத்தப்ப டும். மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு வருகிற 20-ந்தேதி நடைபெ றும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • என்ஜினீயரிங் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கியது.
    • பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வருகிற 8-ந்தேதி வெளியாகும் நிலையில் ஜூன் 6-ந்தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 2023-24-ம் கல்வி ஆண்டில் பி.இ., பி.டெக், பி.ஆர்க் போன்ற என்ஜினீயிரிங் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி என்ஜினீயரிங் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கியது.

    பிளஸ்-2 முடித்துள்ள மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதி விறக்கம் செய்து அதை நிரப்பி விண்ணப்பிக்க தொடங்கினார்கள்.

    www.tneaonline.org மற்றும் www.tndte.gov.in ஆகிய இணைய தளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள என்ஜினீயரிங் சேர்க்கை சேவை மையத்திலும் மாணவர்கள் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வருகிற 8-ந்தேதி வெளியாகும் நிலையில் ஜூன் 6-ந்தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    ஜூன் 7-ந்தேதி ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது. ஜூன் 12-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை சான்றிதழ் சரி பார்ப்பு நடைபெறும்.

    ஜூலை 12-ந்தேதி தர வரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அதில் ஏதாவது குறைகள் இருந்தால் ஜூலை 13-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை அணுகி சரி செய்து கொள்ளலாம்.

    இதையடுத்து என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 2-ந்தேதி தொடங்குகிறது. அன்று முதல் 5-ந்தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது. இதில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் பங்கேற்பார்கள். அதன் பிறகு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 7-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 24-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    • பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
    • இதற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நன்றி தெரிவிக்கிறது.

    மதுரை

    தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர்  நா.சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி மூப்பின்படி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

    இந்த நிலையில் தொடக்க கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் தற்போது ஆசிரியர் பொது மாறுதல்-பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நன்றி தெரிவிக்கிறது.

    தமிழக அரசு இனிவரும் காலங்களில் பணிமூப்புடைய தொடக்க-நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வு உரிமையை பாதுகாக்கும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

    எங்களது பிரச்சினைகளுக்கு முழுமையாக தீர்வு கிடைக்கும் வகையில் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடவடிக்கைகளை தொடங்குவதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நில உரிமையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • நில உரிமையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் முதல் தென்காசி ரோட்டிற்கு இணைப்புச் சாலை திட்டப்பணியில் நில எடுப்பு பணிக்காக அரசு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    அந்த பணியில் நில உரிமையாளர்களுடன் இறுதி கலந்தாய்வு கூட்டம் ராஜபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது.

    தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜானகி தலைமை தாங்கினார். தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நில உரிமையாளர்கள் அனைவரும் தங்களது வங்கி கணக்கை ஒப்படைத்தனர்.

    அவர்கள் அனைவருக்கும் அவரவர் வங்கி கணக்கில் ஜூன் மாத இறுதியில் பணம் வரவு வைக்கப்படும், மேலும் நெடுஞ்சாலைத் துறை சார்பாக அடுத்த மாதம் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டு சாலை அமைக்கும் விரைவில் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

    சிறப்பு வாய்ந்த இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய நில உரிமை யாளர்கள் அனைவருக்கும், ராஜபாளையம் தொகுதி பொதுமக்கள் சார்பாகவும் சட்டமன்ற உறுப்பினரான தனது சார்பாகவும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    இந்த கூட்டத்தில் தாசில்தார் ராமச்சந்திரன், நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் ராமகிருஷ்ணன், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, நில உரிமையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தலைமையாசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற்றது
    • 20 பேருக்கு பணியிட மாறுதலுக்கான ஆைண வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டையில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் அருகில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள்ளான பொது மாறுதல் கலந்தாய்வு இணைய தள வாயிலாக நேற்று நடைபெற்றது.இதில் அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 35 தலைமையாசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 20 தலைமையாசிரியர்கள் விரும்பிய பள்ளிகளை இணைய தள வாயிலாக தேர்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலகத்தில் 20 தலைமையாசிரியர்களுக்கு அதற்கான ஆணையினை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி மஞ்சுளா வழங்கி வாழ்த்தினார்.இந்த நிகழ்ச்சியில்  முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ( உயர்நிலை) ராஜூ, கண்காணிப்பாளர் கார்த்திக்கேயன், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை.செந்தில், இருக்கைப்பணி கண்காணிப்பாளர் சீனிவாசன்,  பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி, பிரிவு உதவியாளர் ராஜ்மோகன் மற்றும் பலர் கலந்துகொ ண்டனர்.பொது மாறுதல் கலந்தாய்வின் வாயிலாக விரும்பிய பள்ளிகளை இணைய தள மூலம் தேர்வு செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி தந்த தமிழக முதல்வருக்கும், தமிழக கல்வி அமைச்சருக்கும், கல்வித்துறை உயர் அலுவலர்களுக்கும் தலைமையாசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்.

    ×