search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 189952"

    • திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது
    • 3 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை

    திருச்சி,

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்ல இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 3 ஆண் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தபோது அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி, மறைத்து வைத்து எடுத்து வந்த அமெரிக்க டாலர், சவுதி ரியால் மற்றும் யுஏஇ திர்காம்ஸ் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் இந்திய ரூபாய் மதிப்பு 37 லட்சத்து 93 ஆயிரத்து 845 ஆகும்.இந்த சம்பவம் தொடர்பாக வெளிநாட்டு கரன்சிகளை எடுத்து வந்த 3 பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏர்போர்ட் வயர்லஸ்ரோட்டில் உள்ள கடையில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
    • புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது -கார் பறிமுதல்

    திருச்சி

    திருச்சி ஏர்போர்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாலாட்சி மற்றும் போலீசார் ஏர்போர்ட் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வந்தனர் .அப்போது வயர்லெஸ் ரோட்டில் உள்ள ஒரு கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்றது தெரிய வந்தது. அப்போது பெட்டி பெட்டியாக புகையிலைப் பொருட்கள் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக திருச்சி கே.கே.நகர் சிந்தாமணி நகரை சேர்ந்த சுரேஷ், திருச்சி ஏர்போர்ட் காமராஜ் தெரு காந்தி நகரைச் சேர்ந்த அப்பாவு சகாயராஜ் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.

    • கள்ளத்தனமாக தனது வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார்.
    • மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட பாடகச்சேரியை அடுத்த சொரக்குடி பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (வயது 50) என்பவர் கள்ளத்தனமாக தனது வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார்.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரின் உத்தரவின் பேரில் வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ராஜா, குடவாசல் இன்ஸ்பெக்டர் ராஜ், தனிப்பிரிவு காவலர் அறிவழகன், சிறப்பு தனிப்படை காவலர்கள் புகழேந்தி, முஜ்பூர் ரஹ்மான், ஐஸ்வர்யா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். மது பாட்டில்க ளை பறிமுதல் செய்தனர்.

    • திருப்பூர் மாநகரின் பிரதான சாலைகளில் உள்ள மையத்தடுப்புகளை தனியார் நிறுவனங்கள் அகற்றுவதால் விபத்து ஏற்படுகிறது. அதை தடுக்க வேண்டும்.
    • மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கும்போது உரிய பதில் அளிக்காமல் உள்ளனர்.

    திருப்பூர்:

    அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் சரவணன் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- கே.செட்டிப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்துள்ள முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். உடனடியாக செயலாளரை நியமிக்க வேண்டும். சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். திருப்பூர் மாநகரில் காலாவதியான கனரக வாகனங்களை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். திருப்பூர் மாநகரின் பிரதான சாலைகளில் உள்ள மையத்தடுப்புகளை தனியார் நிறுவனங்கள் அகற்றுவதால் விபத்து ஏற்படுகிறது. அதை தடுக்க வேண்டும். மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கும்போது உரிய பதில் அளிக்காமல் உள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • சேலம் பழைய பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காய்கறி, பழக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • சில கடைகளில் முத்திரை இல்லாத, மறுமுத்திரையிடாத, தரப்படுத்தப்படாத மின்னணு தராசுகள், மேஜை தராசுகள் மற்றும் விட்ட தராசுகள் பயன்படுத்தியது கண்டுபிடுக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ண வேணி தலைமையில் தொழி லாளர் உதவி ஆய்வாளர்கள் அன்பழகன், முருகானந்தம், இளையராஜா, ரமணி, முத்திரை ஆய்வாளர்கள் வாசுகி, சந்திரன் மற்றும் போலீசார் நேற்று சேலம் பழைய பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காய்கறி, பழக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது சில கடை களில் முத்திரை இல்லாத, மறுமுத்திரையிடாத, தரப்படுத்தப்படாத மின்னணு தராசுகள், மேஜை தராசுகள் மற்றும் விட்ட தராசுகள் பயன்படுத்தியது கண்டுபிடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடைகளில் இருந்து 17 தராசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அரசு முத்திரை மற்றும் மறுமுத்திரை இல்லாமல் வணிகர்கள் பயன்படுத்திய 27 இரும்பு எடை கற்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதுகுறித்து சேலம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் கிருஷ்ண வேணி கூறியதாவது:-

    சேலம் மாவட்டத்தில் இந்த மாதத்தில் இதுவரை 30 ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டன. இதில் 16 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. மேலும் 28 கடைகளில் மற்றும் நிறுவனங்க ளில் ஆய்வு மேற்கொண்ட போது 10 முரண்பாடுகள் கண்டறி யப்பட்டது. இதுதவிர சினிமா தியேட்டர்கள், சுற்றுலா வழிபாட்டு தலங்கள் மற்றும் சிகரெட் பாக்கெட் நிறுவனங்களில் பொட்டல பொருட்கள் விதிகள் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 16 நிறுவனங்களில் 2 முரண் பாடுகள் கண்டறியப்பட்டது.

    அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள் இதுவரை முத்திரையிடப்ப டாமல் பயன்படுத்தும் எடையளவுகளை அந்தந்த பகுதிகளுக்கான முத்திரை ஆய்வாளர் அலுவலகங் களுக்கு சென்று முத்திரை யிட்டு கொள்ள வேண்டும். எடை அளவுகளை உரிய காலத்துக்குள் மறுமுத்திரை யிடாமல் இருந்தால் குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆட்டோவில் கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • ஆட்டோவில் வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவையும், வாள், கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மதுரை

    திருப்பரங்குன்றம் பெரியரத வீதியில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.

    அங்கு ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த திருநகர் நெல்லையப்பபுரம் மலைச்சாமி மகன் அஜய்(21), தனக்கன்குளம் கார்த்திகா நகர் பாலகிருஷ்ணன் மகன் கண்ணன்(32), தனக்கன்குளம் போஸ்ட் ஆபீஸ் தெரு மாரியப்பன் மகன் தீபக்குமார் (29) ஆகியோரை கைது செய்தனர். ஆட்டோவில் வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவையும், வாள், கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • மதுரையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 9 பேர் சிக்கினர்.
    • பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை நகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அதிரடியாக அனைத்து பகுதிகளையும் கண்காணித்தனர்.

    தெப்பக்குளம் மாரி யம்மன் மேற்குத்தெருவில் புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்த பிரதீப் குமார் சோனி (45) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 கிலோ புகையிலை பாக்கெட்டு களை பறிமுதல் செய்தனர்.

    தெப்பக்குளம், கீரைத்துறை, சுப்பிரமணிய புரம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் தடைெசய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இவ்வாறு பதுக்கிவைத்து விற்ற புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்ததுடன் இதில் தொடர்புடைய 9 பேரை கைது செய்தனர்.

    • சிவகங்கை வாரச்சந்தையில் கெட்டுப்போன 200 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை பஸ் நிலையப் பகுதியில் தடை செய்யப் பட்ட பாலித்தீன் பை, கப்கள் பயன்படுத்துவ தாகவும் அதே போல் உணவ கங்களில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்வதாகவும், நகராட்சி மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து அதிகாரி கள் மேற்கண்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு உணவகங்களில் ரசாயன பொடிகளை பயன் படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுகள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப் பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

    அரண்மனை வாசல் பகுதியில் மளிகை குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் பாலித்தீன் பைகள், டீ கப்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் வாரச்சந்தை யில் ஒரு இறைச்சி கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கெட்டுப்போன மீன்கள், 50 கிலோ தரமற்ற இறைச்சி பறிமுதல் செய்து கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • லாட்டரி சீட்டு விற்ற வெட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரை கைது செய்தனர்.
    • கள்ளச்சந்தையில் மது விற்ற கிஷோர்குமார் என்பவரிடமிருந்து 38 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    திருவோணம்:

    ஒரத்தநாடு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா விற்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ற ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் சக்திவேல் (வயது 32) என்பவரை கைது செய்தனர்.

    இதேப்போல் கள்ளச்சந்தையில் மது விற்ற ஒரத்தநாடு புதூர் கிராமத்தை சேர்ந்த கிஷோர்குமார் (43) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 38 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். 

    • தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
    • வாலிபர் நசீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், பெங்களூரு, சென்னை, மும்பை, டெல்லி, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் சிலர் தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் வரும் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து துபாய் விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த நசீம் என்ற பயணியின் பையை சோதனை செய்தனர். அப்போது அதில் பேஸ்ட் வடிவில் ஒரு கிலோ 565 கிராம் தங்கம் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.96 லட்சத்து 18 ஆயிரம் ஆகும். அதனை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், அதனை கொண்டு வந்த நசீமிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் சட்ட விரோதமாக தங்கத்தை கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாலிபர் நசீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பறவைகள் வேட்டையாடுவதாக திண்டிவனம் வனசார அலுவலகத்திற்கு தகவல் வந்தது.
    • பறவைகளை வேட்டையாடி விற்பனையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வானூர் வட்டம் உப்பு வேலூர் கிராமம் சிவன் கோயில் அருகே அதிகாலை நேரத்தில் பறவைகள் வேட்டையாடுவதாக திண்டிவனம் வனசார அலுவலகத்திற்கு தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்தபோது 3 வாலிபர்களால் 20 அரியவகை பறவை கள் மற்றும் 10 உள்நாட்டு பறவைகள் வேட்டையாடப்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து பறவைகளை வேட்டையாடிய 3 வாலிகர்களை பிடித்து வனசரக அலுவலகத்திற்கு வந்து அவர்களிடம் விசாரணை செய்ததில் புதுவை மாநிலத்தை சேர்ந்த கௌதம், சூர்யா, சரவணன், ஆகியோர் என்பதும் இவர்கள் அறிய வகை பறவைகளை வேட்டையாடி விற்பனையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரி யவந்தது. உடனே போலீசார் இவர்களை வானூர் நீதிமன்ற ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் வைத்திருந்த அரியவகை பறவைகள், மோட்டார் சைக்கிள் மற்றும் 2 நாட்டுத் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்தனர்.

    • சினிமாவில் வருவது போல் டெம்போவை அதிகாரிகள் துரத்தி பிடித்தனர்
    • தக்கலை வழியாக கேரளாவுக்கு டெம்போவில் ரேசன் அரிசி கடத்தபடுவதாக தக்கலை வட்ட வழங்கல் அதிகாரி சுனில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவிலில் இருந்து தக்கலை வழியாக கேரளாவுக்கு டெம்போவில் ரேசன் அரிசி கடத்தபடுவதாக தக்கலை வட்ட வழங்கல் அதிகாரி சுனில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் வட்ட வழங்கல் அதிகாரி சுனில் குமார் தலைமையில் ஊழியர்கள் தக்கலை அருகே இரவிபுதூர்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத் திற்கிடமாக ஒரு டெம்போ வைக்கோல் ஏற்றிவந்தது. அதனை அதிகாரிகள் கை காட்டி நிறுத்தினர். ஆனால் டெம்போ நிற்காமல் வேகமாக சென்றது.

    உடனே அதிகாரிகள் அந்த டெம்போவை பின் தொடர்ந்து துரத்தி சென்ற னர். மார்த்தாண்டம் மேம்பாலத்தின் மீது சென்றபோது டிரைவர் டெம்போவை சாலையில் நிறுத்திவிட்டு இறங்கி ஓடினார். பின்னர் டெம்போவை சோதனை செய்த போது அதில் வைக்கோல் கட்டுகளுக்கு அடியில் நூதனமாக மறைத்து சுமார் 4 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கேர ளாவுக்கு கடத்துவதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் ரேசன் அரிசியையும், டெம்போவையும் பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்த ரேசன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய டெம்போ வட்ட வழங்கல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சினிமாவில் வருவது போல் அதிகாரிகள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று கடத்தல் வாகனத்தை பிடித்தது அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×