search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 190427"

    • எடப்பாடி பழனிசாமிக்கு சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
    • எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    சிவகங்கை

    சென்னையில் நடந்த பொதுக்குழுவில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    இதற்கு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 58 பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், 30ஒன்றிய செயலாளர்கள், 4 நகரசெயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் ஆகியோர் மாவட்ட செயலாளரும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமையில் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது சொந்த ஊரான தண்டுபத்தில் தங்கி இருந்தபோது விவசாயிகள், பல்வேறு பொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள் அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்தனர்.
    • மழை காலங்களுக்கு முன்பு உடன்குடி வட்டார பகுதி குளங்கள், குட்டைகள் மற்றும் கால்வாய்களை சீர் செய்ய நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டை அமைச்சருக்கு தெரிவித்தனர்.

    உடன்குடி:

    தமிழக மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது சொந்த ஊரான உடன்குடி தண்டுபத்தில் தங்கி இருந்தபோது உடன்குடி வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள், வியாபாரிகள், மற்றும் பல்வேறுபொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள் ஆகியோர் நேரில் சென்று அமைச்சருக்கு வாழ்த்துகளையும் பாராட்டையும்தெரிவித்தனர்.

    அப்போது வருகின்ற மழை காலங்களுக்கு முன்பு உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அனைத்து குளங்கள், குட்டைகள் மற்றும் தண்ணீர் வரும் கால்வாய்கள் ஆகியவற்றை சீர் செய்ய நடவடிக்கை எடுத்தமைக்கும், மேலும் செட்டியாவது ஊராட்சியில் புதியதாக குளம் அமைப்பதற்கும் வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்தனர். அப்போது செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், கூட்டுறவு சங்க தலைவர் அசாப் அலி, உடன்குடி நகர பஞ்சாயத்து துணை தலைவர் மால்ராஜேஷ் தி.மு.க.வை சேர்ந்த கிழக்குஒன்றிய இளங்கோ, சந்தையடியூர் ரவிராஜா, அஜய், பாய்ஸ், ஜெயபிரகாஷ் உட்பட தி.மு.க.வினர் பலர் உடன் இருந்தனர்,

    • அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
    • புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி'அம்மா' ஆகியோர் வகித்த பதவி தங்களுக்கு கிடைத்துள்ளது.

    திருப்பூர் :

    கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் , புரட்சித்தலைவி'அம்மா' ஆகியோர் வகித்த அந்தப் பதவி தங்களுக்கு கிடைத்துள்ளது.அவர்களைப் போலவே தாங்களும் பன்மடங்கு புகழ்பெறவேண்டும் என வாழ்த்துகிறேன்.

    மேலும் கொங்குநாடு முன்னேற்ற கழகம் தங்களுக்கு என்றும் ஆதரவாகஇருக்கும் என்று அன்புடன் தெரிவித்துக்கொண்டு மீண்டும் வாழ்த்துக்களைஎனது சார்பாகவும், கொங்குநாடு முன்னேற்ற கழகம்கழகம் சார்பாகவும்தெரிவித்துக்கொள்கின்றேன்.இவ்வாறு தனது அறிக்கையில் பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார்.

    • திருச்செந்தூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட சாத்தான்குளம் பிரிவு வன திருப்பதி பகுதியில் வனவராக தனது முதல் பணியை தொடங்கினார்.
    • வனத்துறையில் உயர்பதவியில் அமர வேண்டும் என்று விரும்பிய சுப்புராஜ் கடந்த 4 ஆண்டுகளாக விடாமுயற்சியுடன் தேர்வு எழுதி வந்தார்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்து கிருஷ்ணாபுரம் செவல் விளை தெருவில் வசிக்கும் குருசாமி-முனியம்மாள் தம்பதியரின் மூத்த மகன் சுப்புராஜ்(வயது 27).

    வனவர்

    என்ஜினீயரிங் முடித்த இவர் கடந்த 2016-ம் ஆண்டு சென்னைக்கு சென்றார். அங்கு சக நண்பர்களுடன் சேர்ந்து வேலை தேடியபோது தான் வனத்துறையின் மீது அவருக்கு ஆர்வம் அதிகரித்தது.

    இதனால் எப்படியாவது அரசு வேலையில் அதுவும் வனத்துறை பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்று முடிவு செய்த சுப்புராஜ் சென்னையில் உள்ள அரசின் அகில இந்திய குடிமை பணிகள் தேர்வாணையத்தில் 2 ஆண்டுகள் படித்தார்.அதனை தொடர்ந்து அரசு தேர்வு எழுதிய சுப்புராஜ் கடந்த 2019-ம் ஆண்டு வனவர் தேர்வில் வெற்றி பெற்றார். அவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட சாத்தான்குளம் பிரிவு வன திருப்பதி பகுதியில் வனவராக தனது முதல் பணியை தொடங்கினார். தற்போது அங்கேயே பணி செய்து வருகிறார்

    வன அதிகாரி

    ஆனாலும் அதே வனத்துறையில் உயர்பதவியில் அமர வேண்டும் என்று விரும்பிய சுப்புராஜ் கடந்த 4 ஆண்டுகளாக விடாமுயற்சியுடன் தேர்வு எழுதி வந்தார். சமீபத்தில் அவர் டி.எஸ்.பி. தரத்திலான பணிக்கு தேர்வாகி உள்ளார். இதற்காக ஏற்கனவே 5 முறை தேர்வு எழுதிய அவர் 6-வது முறையாக சமீபத்தில் தேர்வெழுதி வனத்துறை அதிகாரியாக வெற்றி பெற்றுள்ளார்.

    இதையறிந்த தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சுப்புராஜை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அதனை தனது முகநூல் பக்கத்தில் பாராட்டி டி.ஜி.பி. பதிவிட்டார். அதில், கடையநல்லூர் சிறு வியாபாரி குருசாமியின் மகன் சுப்புராஜ். முதல் பட்டதாரியான இவர் இன்று இந்திய வனப்பணியில் சேருகிறார். முயற்சி திருவினையாக்கும். முதல் பட்டதாரியான சுப்புராஜ் ஐ.எப்.எஸ். வாழ்த்துகள் என பாராட்டி தனது முகநூலில் வெளியிட்டுள்ளார்.

    • சர்வதேச செஸ் ஒலிம்பியாட் பார்வையாளர் தேர்வு போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் 44-வது ஒலிம்பியாட் போட்டியின் முன்னோட்டமாக 15 வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் பங்கு பெறும் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் உள்ள விளை யாட்டு அரங்கில் தேர்வுப் போட்டிகள் நடந்தது.

    கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ் போட்டியினை தொடங்கி வைத்தார். 9 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 40 மாண வர்கள், 60 மாணவிகள் உள்பட மொத்தம் 100 பேர் கலந்து கொண்டனர்.

    முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் முகம்மது யூசுப் தலைமையில் பரிசளிப்பு விழா நடந்தது. மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் அப்பா மெடிக்கல் சுந்தரம் வரவேற்றார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசி யேஷன் புரவலர் தேவி உலகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் புரவலர் தொழிலதிபர் சண்முகசுந்தரம் போட்டி யில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார், ராமநாதபுரம் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் கல்பனாத்ராய், முதன்மை ஆர்பிட்டர் அதுலன் உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    போட்டியில் மாணவர் பிரிவில் ராமநாதபுரம் நேசனல் அகாடமி பள்ளி மாணவர் ரக்சன், மாணவிகள் பிரிவில் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவி மிர்துலா ஆகியோர் முதலி டம் பெற்றனர்.ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழக செயலாளர் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த போட்டியில் பங்கு பெற்ற அனைத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். முதலில் வரும் 25 மாணவர்களுக்கும், 25 மாணவிகளுக்கும் வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது. மேலும் அகில இந்திய சதுரங்க கழகம், உலக சதுரங்க கழகம் அனுமதியுடன் மாமல்லபுரத்தில் தமிழக அரசின் முழு நிதி உதவி யுடன், ஜூலை28-ந்தேதி முதல் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.

    இதில் 189 நாடுகளிலிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். ராமநாதபுரம் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கும் ஒரு மாணவர், ஒரு மாணவி மாமல்லபுரத்தில் நடைபெறும் ஒலிம்பியாட் சதுரங்க போட்டியை பார்வையிடவும், சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடவும் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    முடிவில் மாவட்ட பொரு ளாளர் குணசேகரன் நன்றி கூறினார். போட்டிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை மாவட்ட செயலாளர் ரமேஷ், மாநில துணைச் செயலாளர் எப்ரேம் செய்திருந்தனர்.

    பாகிஸ்தான் தேர்தலில் அதிக இடங்களில் வென்று அடுத்து ஆட்சியமைக்க உள்ள இம்ரான்கானுக்கு பிரதமர் மோடி போன் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். #PMModi #ImranKhan
    புதுடெல்லி:

    பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இம்ரான்கானின் பிடிஐ கட்சி அதிக இடங்களில் வென்றது. பெரும்பான்மை இல்லை என்றாலும் சிறிய கட்சிகள் உதவியுடன் இம்ரான்கான் ஆட்சியமைக்க உள்ளார். வரும் 11-ம் தேதி அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    இந்நிலையில், இம்ரான்கானிடம் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேர்தல் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அப்போது, பாகிஸ்தானில் ஜனநாயகத்தின் வேர்கள் ஆழமான வேர் விடட்டும் என மோடி கூறியுள்ளார். 

    காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளை பேசி தீர்க்க தயாராக இருப்பதாக இம்ரான்கான் முன்னர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    ×