என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
6-வது முறையாக எழுதிய தேர்வில் வெற்றி-டி.ஜி.பி.யிடம் வாழ்த்து பெற்ற கடையநல்லூர் வனஅதிகாரி
- திருச்செந்தூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட சாத்தான்குளம் பிரிவு வன திருப்பதி பகுதியில் வனவராக தனது முதல் பணியை தொடங்கினார்.
- வனத்துறையில் உயர்பதவியில் அமர வேண்டும் என்று விரும்பிய சுப்புராஜ் கடந்த 4 ஆண்டுகளாக விடாமுயற்சியுடன் தேர்வு எழுதி வந்தார்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்து கிருஷ்ணாபுரம் செவல் விளை தெருவில் வசிக்கும் குருசாமி-முனியம்மாள் தம்பதியரின் மூத்த மகன் சுப்புராஜ்(வயது 27).
வனவர்
என்ஜினீயரிங் முடித்த இவர் கடந்த 2016-ம் ஆண்டு சென்னைக்கு சென்றார். அங்கு சக நண்பர்களுடன் சேர்ந்து வேலை தேடியபோது தான் வனத்துறையின் மீது அவருக்கு ஆர்வம் அதிகரித்தது.
இதனால் எப்படியாவது அரசு வேலையில் அதுவும் வனத்துறை பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்று முடிவு செய்த சுப்புராஜ் சென்னையில் உள்ள அரசின் அகில இந்திய குடிமை பணிகள் தேர்வாணையத்தில் 2 ஆண்டுகள் படித்தார்.அதனை தொடர்ந்து அரசு தேர்வு எழுதிய சுப்புராஜ் கடந்த 2019-ம் ஆண்டு வனவர் தேர்வில் வெற்றி பெற்றார். அவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட சாத்தான்குளம் பிரிவு வன திருப்பதி பகுதியில் வனவராக தனது முதல் பணியை தொடங்கினார். தற்போது அங்கேயே பணி செய்து வருகிறார்
வன அதிகாரி
ஆனாலும் அதே வனத்துறையில் உயர்பதவியில் அமர வேண்டும் என்று விரும்பிய சுப்புராஜ் கடந்த 4 ஆண்டுகளாக விடாமுயற்சியுடன் தேர்வு எழுதி வந்தார். சமீபத்தில் அவர் டி.எஸ்.பி. தரத்திலான பணிக்கு தேர்வாகி உள்ளார். இதற்காக ஏற்கனவே 5 முறை தேர்வு எழுதிய அவர் 6-வது முறையாக சமீபத்தில் தேர்வெழுதி வனத்துறை அதிகாரியாக வெற்றி பெற்றுள்ளார்.
இதையறிந்த தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சுப்புராஜை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அதனை தனது முகநூல் பக்கத்தில் பாராட்டி டி.ஜி.பி. பதிவிட்டார். அதில், கடையநல்லூர் சிறு வியாபாரி குருசாமியின் மகன் சுப்புராஜ். முதல் பட்டதாரியான இவர் இன்று இந்திய வனப்பணியில் சேருகிறார். முயற்சி திருவினையாக்கும். முதல் பட்டதாரியான சுப்புராஜ் ஐ.எப்.எஸ். வாழ்த்துகள் என பாராட்டி தனது முகநூலில் வெளியிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்