search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவமனை"

    • சமீபகாலமாக 24 மணி நேரமும் இயங்கும் இருதய பிரிவில் தலை சிறந்த இதய நோய் மருத்துவ நிபுணர்கள்
    • ஓபன் ஹார்ட் சர்ஜரி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என பல்வேறு மருத்துவ சாதனை கள் செய்துள்ளனர்

    நாகர்கோவில், நவ. 22-

    டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை 58-வது ஆண்டுவிழா கொண்டா டப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குனர்கள் டாக்டர்கள் தேவ பிரசாத் ஜெயசேகரன், சாபு சேகரன், ரெஞ்சித் ஜெய சேகரன் தெரிவித்த தாவது:- மருத்துவமனையில் விபத்து காப்பு பிரிவு, இரு தயப்பிரிவு, மகளிர் நலம் மற்றும் மக ப்பேறு பிரிவு, உடல் எடை குறைக்கும் பிரிவு, சர்க்கரை நோயா ளிகள் பிரிவு, செயற்கை கருத்தரித்தல் பிரிவு, பிசியோ தெரபி பிரிவு, சிறுநீரக பிரிவு என எண்ணற்ற பிரிவுகள் குமரி மாவட்டம் மற்றும் இல்லாமல் அண்டை மாவ ட்டம், மாநில மக்களும் பயன் பெறுகின்ற னர்.சமீபகாலமாக 24 மணி நேரமும் இயங்கும் இருதய பிரிவில் தலை சிறந்த இதய நோய் மருத்துவ நிபுணர்கள், ஓபன் ஹார்ட் சர்ஜரி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என பல்வேறு மருத்துவ சாதனைகள் செய்துள்ளனர் என அவ ர்கள் தெரிவித்தனர். விழா வில் சிறப்பு விருந்தி னராக முன்னாள் இந்திய தபால் துறை ஜெனரல் மெர்வின் அலெக்ஸாண்டர், கவுரவ சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழ்நாடு காவ ல்துறை தலைவர் சைலே ந்திர பாபு, மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஆசீர் பாக்கிய் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். 20 வருடங்களுக்கு மேலாக சிறப்பாக பணி புரிந்துவரும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. சில துறைகள் புதிதாக திறக்கப்பட்டது மற்றும் சில துறைகள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. மருத்துவர்கள் நினோ ஜார்ஜ், பாலா வித்யா சாகர், திரவியம் மோகன், சந்திர சேகர் இம்மானு வேல், தீபக் டேவிட், கீதா ஆகியோர் அவரவர் துறைகள் குறித்து விளக்கிப் பேசினர்.

    • டாக்டர். ஐசக் சுந்தர்சென் தகவல்
    • நோயாளிகள் வந்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்

    குழித்துறை :

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் டாக்டர் ஐசக் விபத்து மற்றும் எலும்பு முறிவு மருத்துவமனையில் கடந்த 20 ஆண்டுகளாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. தற்போது இங்கு அதி நவீன சிகிச்சை மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முறை புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குனரும் தலை மை மருத்துவ நிபுணருமான டாக்டர். ஐசக் சுந்தர்சென் தெரிவித்ததா வது:-

    டாக்டர் ஐசக் மருத்துவமனையில் இடுப்பு மூட்டு, முழங்கால் மூட்டு, தோள்பட்டை மூட்டு மற்றும் கை முழங்கை மூட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் துபாய், ஓமன், மாலத்தீவு போன்ற நாடுகளில் இருந்தும் நோயாளிகள் வந்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். இதற்கான அல்ட்ரா மாட்யூல் கிருமி தொற்றினை தடுக்கும் முறையில் அமைந் துள்ள லேமினார் பிலோ அறுவை சிகிச்சை அரங்கு களுடன் மருத்துவ குழுவின ரும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள், அறுவை சிகிச்சைக்குப் பின் நோயா ளிக்கு வலி இல்லாமல் இருக்க நெர்வ் பிளாக் முறை கையாளப்பட்டு வரு கிறது. நோயாளிகள் அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே வலிகள் எதுவும் இல்லாமல் எழுந்து நடக்கக் கூடிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் நவீன முறையான பயோ பாண்ட்சிவ பினிஸ் தி நோ அலர்ஜினீ அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதற்கான நவீன கருவி வரவழைக்கப் பட்டு இந்த சிகிச்சை முறை செய்யப்பட்டு வருகிறது. இந்த நவீன சிகிச்சை மூலம் நோயாளிக்கு ஒவ்வாமை ஏற்படாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • எங்களில் படித்தவர்களுக்கு மட்டுமே அழைப்பு கடிதம் வந்துள்ளது
    • தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்

    கடலூர்:

    நெய்வேலி என்.எல்.சி. பொது மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் மொத்தம் 44 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.அவர்கள் இன்று காலை என்.எல்.சி. பொதுமருத்துவமனை முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-என்.எல்.சி. நிறுவனம் தற்போது மருத்துவமனையில் பணி செய்வதற்காக நேரடியாக ஆட்களை நியமனம் செய்ய எழுத்து தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் எங்களில் படித்தவர்களுக்கு மட்டுமே அழைப்பு கடிதம் வந்துள்ளது. மீதி பேருக்கு வரவில்லை. ஆகவே அதில் எங்களுக்கு முதலில் முன்னுரிமை அளித்து விட்டு அதன் பிறகு காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்து 4-ந்தேதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம்.

    தொடர் போராட்டம்...அப்போது எங்களிடம் நெய்வேலி டி.எஸ்.பி. ராஜ்குமார் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் நாங்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏவிடமும் நேரில் சென்று இந்த பிரச்னை தொடர்பாக மனு கொடுத்ேதாம். ஆனால் நாங்கள் கொடுத்த மனுவிற்கு இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனால் நாங்கள் மீண்டும் இன்று காலை மீண்டும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் கொடுத்த மனுவிற்கு நடவடிக்கை எடுக்கும்வரை இந்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக இருந்தது.

    நிர்வாக இயக்குனருக்கு டாக்டர் பட்டம்

    நாகர்கோவில், செப்.30-

    பார்வதிபுரத்தில் அமைந் துள்ள கிருஷ்ண குமார் எலும்பு சிகிச்சை மருத்துவ மனையின் நிர்வாக இயக்கு னரும், மூத்த அறுவை சிகிச்சை நிபுணரு மான டாக்டர் கிருஷ்ண குமாரின் மருத்துவம் மற்றும் கல்வி, தொழில் சார்ந்த செயல் பாடுகளை அங்கீக ரித்து, கவுரவப்படுத்தி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்க லைக்கழகம் கவுரவ பேராசிரியர் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

    பட்டம் பெற்ற டாக்டர் கிருஷ்ணகுமாருக்கு சமூக ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள், உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள், மருத்துவ மனை ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.
    • காத்திருப்பு போராட்டமும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. அதன்பிறகு பல்வேறு தரப்பு மக்களின் வேண்டுகோளை ஏற்று கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.

    ஆனால் பெயரளவிற்கே அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. போதிய மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனை கண்டித்து பல போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கே. கே. செல்லபாண்டியன் மற்றும் கறம்பக்குடி பேரூராட்சி தலைவர் முருகேசன் ஆகியோர் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியனை சந்தித்து கறம்பக்குடி அரசு மருத்துவமனையின் தற்போதைய நிலையைப் பற்றி எடுத்து கூறினார்.

    தாலுக்கா மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியான பிறகு, அந்த நடைமுறைகள் செயல்படுத்த மூன்று மாத காலமாகும் அதன் பின்னரே தாலுக்கா மருத்துவமனைக்கு தேவையான டாக்டர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    இதை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் முருகேசன் மருத்துவமனை மீட்பு குழுவினர் மற்றும் வர்த்தக சங்கம் வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகளிடம் இதனை தெரிவித்தார். இந்நிலையில் மருத்துவமனை மீட்பு குழுவினர் மற்றும் வர்த்தக வியாபாரிகள் சங்கத்தினர் திட்டமிட்டபடி வரும் 3-ந்தேதி மருத்துவமனையில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர கோரி கடையடைப்பு போராட்டமும் காத்திருப்பு போராட்டமும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

    • மேலும் சலுகை கட்டணத்தில் சிகிச்சைகளும் செய்யப்படு கிறது.
    • முகாமிற்கான ஏற்பாடுகளை ரத்னா நினைவு மருத்துவமனை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    மார்த்தாண்டம் :

    சாமியார்மடம் ரத்னா நினைவு மருத்துவமனையில் பெண்களின் கர்ப்பப்பை கட்டிகளுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நேற்று தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை 6 நாட்கள் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் தேவை ப்படுகின்ற வர்களுக்கு இலவசமாக ஸ்கேன் எடுக்கப்படுகிறது. முகாமில் மகளிருக்கு ஏற்படும் பல்வேறு விதமான உடல் பிரச்சினைகளுக்கும், வியாதிகளுக்கும் உடனடி யாக தகுந்த இலவச மருத்துவ ஆலோசனை வழ ங்கப்படுகிறது. மேலும் சலுகை கட்டணத்தில் சிகிச்சைகளும் செய்யப்படு கிறது.

    இதில் கலந்துகொள்ளும் பெண்களில் அறுவை சிகிச்சை தேவைபடு பவர்க ளுக்கு சலுகை கட்டணத்தில் அறுவை சிகிச்சை செய்யப்ப டுகிறது.

    சிறப்பு மருத்துவ முகாமை ரத்னா நினைவு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் மகிழன் தொடங்கி வைத்தார். முகாமில் ரத்னா டெஸ்ட் டியூப் பேபி மைய இயக்குனர் டாக்டர் சாந்தி மகிழன் மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டு சிகிச்சை அளித்தனர்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை ரத்னா நினைவு மருத்துவமனை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    • இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம்
    • 115 தம்பதியினர் பயனடைந்தனர்.

    உசிலம்பட்டி

    தேனி நாட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம் சார் பில் இலவச கருத்த ரித்தல் பரிசோதனை முகாம் மதுரை மாவட்டம் உசிலம் பட்டியில் உள்ள சரஸ்வதி மகாலில் நடைபெற்றது. முகாமில் தொடர்ச்சியாக கரு சிதைவால் பாதிக்கப் பட்டவர்கள், திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேல் குழந்தை இல்லாதவர்கள், கருக்குழாய் அடைப்பு உள்ள வர்கள், விந்தணு குறை பாடு உள்ளவர்கள், கர்ப் பப்பையில் நீர்க்கட்டி உள்ள வர்கள் பங்கேற்றனர்.

    அவர்கள் அனைவருக்கும் ஸ்கேன் பரிசோதனை உள்பட மருத்துவ பரிசோத னைகள் இலவசமாக பார்க்கப்பட்டது. மேலும் ஆண், பெண்களுக்கான குழந்தையின்மை பிரச்சி னைகள், கர்ப்பப்பை சம்பந் தமான பிரச்சினைகள், கர்ப்பப்பையில் விந்தணு உட்செலுத்தும் முறை, செயற்கை கருத்தரித்தல்,

    ஹார்மோன் சிகிச்சைகள், விந்தணுவை விதைப்பை யில் இருந்து பிரித்தெடுத்தல், விந்தணு கருமுட்டை மற்றும் கருவை தானமாக பெறுதல், விந்தணு கருமுட்டை மற்றும் கரு உறைநிலைப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைக ளுக்கு முகாமில் இலவச ஆலோசனைகள் வழங்கப் பட்டன. இதில் 115 தம்பதிகள் கலந்து கொண்டு பயன டைந்தனர்.

    உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவர் சகுந்தலா கட்ட பொம்மன், உசிலம்பட்டி நாட்டாத்தி நாடார் உற வின்முறை தலைவர் எஸ்.எம்.எஸ்.ஆர்.நடராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தேனி நாட்டாத்தி நாடார் மருத்துவமனை மேலாளர் சாந்தி, செயற்கை கருத்த ரித்தல் கிசிச்சைப்பிரிவு மேலாளர் ஏ.பி.ஜேம்ஸ், மக்கள் தொடர்பு அலுவ லர்கள் சலீம், சேக் பரீத், தீபன் மற்றும் கார்த்திக் ஆகி யோர் சிறப்பாக செய்தி ருந்தனர்.

    • மருத்துவ முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
    • ஆக்சிஜன் பரிசோதனை, இ.சி.ஜி. பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மறவன் குடியிருப்பு புனித மரி யன்னை தொடக்கப்பள்ளியில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம் இன்று நடந்தது.

    முகாமை மறவன்குடி யிருப்பு ஊர் தலைவர் ஆண்டனி எட்வின் தொடங்கி வைத்தார். பொன்ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை டாக்டர்கள் பாபி, சிவனேசன், சமீன், மதன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். பொது மருத்துவம், ரத்த பரிசோதனை, ஆக்சிஜன் பரிசோதனை, இ.சி.ஜி. பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் பங்கு தந்தை ஜோசப் அருள் ஸ்டாலின், ஸ்டீபன் அமலதாஸ், ஆரோக்கிய வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜெயாவை மார்த்தாண்டம் ஐசக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • 8 நாள் சிகிச்சைக்கு பிறகு துண்டான கட்டை விரல் மீண்டும் ரத்த ஓட்டம் சீராகி இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

    குழித்துறை :

    கன்னியாகுமரி மாவட் டம் மார்த்தாண்டம் நல்லூர் பரமாணிக்க விளையை சேர்ந்தவர் ரமேஷ்குமார்.

    இவரது மனைவி ஜெயா (45), இவர் கடை நடத்தி வருகிறார், மேலும் இளநீர் வியாபாரமும் செய்து வருகிறார். கடந்த 22-ந்தேதி வாடிக்கையாளர் ஒருவ ருக்கு அரிவாளால் இளநீர் வெட்டும் போது இடது கை கட்டை விரல் துண்டாகி கீழே விழுந்தது. இதனால் ஜெயா துடிதுடித்து போனார். உடனடியாக உறவினர்கள் ஜெயாவை மார்த்தாண்டம் ஐசக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    துண்டான கைவிரலையும் தனியாக கொண்டு மருத்துவ மனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஐசக் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஐசக் சுந்தர் சென் தலைமை யிலான டாக்டர் அகமது ரபிக் மீரான் மற்றும் டாக்டர் ஆனந்த கிருஷ்ணன் அடங் கிய மருத்துவ குழுவினர் அவருக்கு உடனடியாக தீவிர சிகிச்சை மேற் கொண்டனர்.

    அப்போது அவருக்கு துண்டான கை விரலை மீண்டும் சேர்த்து பொருத்தி வைத்து சிகிச்சை அளித்த னர். 8 நாள் சிகிச்சைக்கு பிறகு துண்டான கட்டை விரல் மீண்டும் ரத்த ஓட்டம் சீராகி இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இதனால் ஜெயாவின் குடும்பத்தார் டாக்டர் ஐசக் சுந்தர் சென்னு க்கு நன்றி தெரி வித்தனர்.

    இது குறித்து டாக்டர் ஐசக் சுந்தர் சென் கூறியதா வது:-

    பொதுவாக கை மணிக் கட்டு பகுதிகள் துண்டாகி பொருத்தும்போது ரத்த நரம்புகள் பெரிதாக உள்ளதால் இதைவிட எளிதாக இருக்கும் ஆனால் இது கட்டை விரல் என்ப தால் மிகச் சிறிய ரத்த குழாய் களை பொருத்துவது சவா லாக இருந்தது. எனினும் மிகத் துல்லியமாக சிகிச்சை அளித்து கைவிரல் சரி செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

    • மிகக்குறைந்த எடையில் பிறந்த குழந்தையை காப்பாற்றி அரசு டாக்டா்கள் சாதனை
    • அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மிகக்குறைந்த எடையில் பிறந்த குழந்தையை காப்பாற்றி அரசு டாக்டா்கள் சாதனை படைத்துள்ளனர்.


    அரியலூர் ,தாமரைக்குளம்:

    அரியலூர் மாவட்டம், அங்கனூரை சேர்ந்த ஆனந்தின்(வயது 25) மனைவி சத்தீஸ்வரி. 7 மாத கர்ப்பமாக இருந்த சத்தீஸ்வரிக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது, ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததை டாக்டர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து குழந்தையையும், தாயையும் காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் ஆகியோர் ஆலோசனைப்படி டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழந்தைகள் நல மருத்துவ குழுவினர் மற்றும் நர்சுகள் சத்தீஸ்வரிக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை 750 கிராம் எடையில் மட்டுமே இருந்தது. இதனையடுத்து இங்குபேட்டரில் வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரலாற்றிலேயே மிகக்குறைந்த எடையிலான குழந்தை இதுவே என்றும், அதனை காப்பற்றியது சாதனை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். குழந்தையின் பெற்றோர், டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.





    • கருனாநிதியின் படத்துக்கு மாவட்ட துணை செயலாளர் புஷ்பலீலா ஆல்பன் மாலை அணிவித்து மரியாதை
    • மருத்துவரணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    தமிழக முன்னாள் முதல் -அமைச்சர் கருனாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவரணி சார்பாக ஆற்றூர் ஆல்பன் நினைவு மருத்துவமனையில் கருனாநிதியின் படத்துக்கு மாவட்ட துணை செயலாளர் புஷ்பலீலா ஆல்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர்.பிஸ்வஜித் ஆல்பன், முன்னாள் பேரூர் செயலாளர் பெனட், மாவட்ட மருத்துவரணி துணை செயலாளர் அசின் ஜித், முன்னாள் திருவட்டார் பேரூராட்சி துணைத் தலைவர் ஐசக், ஆற்றூர் பேரூராட்சி முன்னாள் கிளை செயலாளர், ஞானதாஸ் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள், மருத்துவரணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மருந்துகள், உணவுகள் ஆகியவை குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
    • கட்டுப்பாட்டு அறை மற்றும் இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டுகள், தீவிர சிகிச்சை பிரிவு, மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை மையம், மகப்பேறு பிரிவு, பிரசவ அவசர சிகிச்சை பிரிவு, சிறுநீரகவியல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டு அந்த பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் மருத்துவ சேவைகள் மற்றும் மருந்துகள், உணவுகள் ஆகியவை குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

    மேலும் பல்வேறு பிரிவுகளில் உள்ள கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து மருத்துவமனையில் உள்ள வார்டுகள், வளாகங்கள் மற்றும் கழிப்பறைகளை தூய்மை யாக வைத்திருக்கவும் அலுவலர்களுக்கு அறிவு றுத்தினார். தொடர்ந்து மருத்துவமனையில் செயல்படும் சமையல் கூடத்தை பார்வையிட்டு சுகாதாரமான முறையில் உணவு தயார் செய்து குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார். முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை கலெக்டரின் நேரடி கவனத்திற்க்கு வாட்ஸ் அப் (82487 74852) எண் மூலம் அளிக்கபடுவதனை துறை சார்ந்த அலுவலர்களுக்கு பிரித்தனுப்பப்பட்டு தீர்வுகாணும் வகையில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை மற்றும் இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தினை பார்வையிட்டு, வளாக பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறித்தினார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரன், இணை இயக்குனர் (சுகாதாரம்) சாரா செலின் பால், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அசோக்பாஸ்கர், தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காரல் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×