என் மலர்
நீங்கள் தேடியது "பெட்ரோல் குண்டு வீச்சு"
- பைனான்ஸ் தொழில் நடத்தி வந்த சதீஸ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால் முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் வீசியுள்ளனர்.
- பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 3-வது தெருவில் வசித்து வந்தவர் வாஞ்சி (எ) சதீஸ் (வயது40). இவர் பைனான்ஸ் தொழில் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற கிருஷ்ணகிரி மாவட்ட துணை தலைவராகவும் இருந்து வந்தார். இவரது மனைவி ராதா. இவரது மகள் கவிஸ்ரீ (6). சதீசுடன் அவரது தாயார் லட்சுமியும் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்றிரவு லட்சுமி, ராதா, கவிஸ்ரீ ஆகியோர் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். இரவு 11 மணி அளவில் திடீரென ஒரு பயங்கர சத்தம் கேட்டது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் வெளியே வந்து பார்த்தனர்.
அப்போது மர்மநபர்கள் 7 பேர் கொண்ட கும்பல் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.
இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்தனர். சதீஸ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கும், டி.எஸ்.பி. அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
மர்மநபர்கள் காரில் வந்து சதீஸ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசியுள்ளனர். வீட்டின் கேட்டில் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இதனால் பெரும் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.
பைனான்ஸ் தொழில் நடத்தி வந்த சதீஸ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால் முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் வீசியுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து சதீஸ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிய மர்ம நபர்கள் யார்? தொழில் போட்டியா? அல்லது வேறு எதுவும் காரணமாக என போலீசார் தீவிரமாக விசாரணை வருகின்றனர்.
பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஈரோடு அடுத்த நசியனூரில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அர்ஜுனன் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.
- ஓட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு அடுத்த நசியனூரில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அர்ஜுனன் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். அதே பகுதியில் மற்றொருவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இருவருக்கும் தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் அர்ஜுனன் வழக்கம்போல் ஓட்டலை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று அதிகாலை அர்ஜுனன் ஓட்டல் முன்பு கார் ஒன்று வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய மர்ம நபர் ஓட்டலின் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளார். பெட்ரோல் குண்டு வீசியதும் பயங்கர சத்தத்துடன் அது வெடித்து ஓட்டல் தீப்பிடித்து எரிந்தது.
இதை பார்த்தவர்கள் இதுகுறித்து சித்தோடு போலீசாருக்கும், பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 30 நிமிடம் போராடி தீயணைத்தனர். எனினும் கடையின் முன் பகுதியில் இருந்த 2 பிரிட்ஜ்கள், மேற்கூரை எரிந்து சேதமடைந்தது.
சம்பவ இடத்திற்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜானகிராமன் சென்று விசாரணை நடத்தினார். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவி பிடிக்கவில்லை. கடையின் முன்பு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது இன்று அதிகாலை காரில் இருந்து இறங்கி வந்த மரம் நம்பர் ஒருவர் பெட்ரோல் குண்டை ஓட்டல் மீது வீசியது பதிவாகி இருந்தது.
அதில் அந்த நபரின் முகம் தெளிவாக தெரிந்தது அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றது தெரிய வந்தது. ஓட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வீட்டில் இருந்து தண்ணீரை எடுத்து மோட்டார் சைக்கிள் மீது ஊற்றி தீயை அணைத்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அண்ணா நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் மகேஷ் பூபதி (வயது 24). இவர் நேற்று இரவு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார்.
சிறிதுநேரத்தில், வீட்டின் முன்பாக வந்த மர்ம நபர் மகேஷ் பூபதியின் வீட்டின் மீது பெட்ரோல் போன்று திரவம் நிரப்பப்பட்ட பாட்டிலில் தீ பற்ற வைத்து வீசினார்.
அந்த பாட்டில் அவரது மோட்டார் சைக்கிள் மீது பட்டு தீப்பற்றி எரிந்துள்ளது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்த மகேஷ் பூபதி எழுந்து வெளியே பார்க்கும் போது அவர் மோட்டார் சைக்கிள் எரிந்து கொண்டிருந்தது.
உடனடியாக வீட்டில் இருந்து தண்ணீரை எடுத்து மோட்டார் சைக்கிள் மீது ஊற்றி தீயை அணைத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- குண்டு வீச்சில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்தது.
- விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி போலீஸ் சரகம் ஆவுடையார் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 42). விவசாயி. இவருக்கும் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது.
இது தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்து, விசாரணை செய்யப்பட்டு இருவருக்கும் சமரச தீர்வு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் இது சம்பந்தமாக வினோத்குமார் ஆவுடையார்பட்டு கிராமத்தை சேர்ந்த சிலருடன் சேர்ந்து ஸ்ரீதரிடம் மீண்டும் பணம் கேட்டு மிரட்டினார். நேற்று மாலை 3 மணி அளவில் வீட்டின் மீது மர்ம நபர்கள் கற்களை எரிந்துள்ளனர். இது குறித்து விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் ஸ்ரீதர் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
நேற்று இரவு ஸ்ரீதர் தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அப்போது வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அந்த இடமே தீப்பிளம்பாக காட்சி அளித்தது.
இந்த குண்டு வீச்சில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு ஸ்ரீதர் மற்றும் வீடடில் உள்ளவர்கள் வெளியே ஓடிவந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை செய்தனர்.
- பாஸ்கர் மது பாட்டில் கொடுக்க மறுத்து அவர்களை தட்டிக்கேட்டார்.
- புகழேந்திரன், அஜித் ஆகியோர் நேற்று நள்ளிரவு பாஸ்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு ஓடினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள தேவூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 50). இவர் தேவூரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பார் வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் எரும்புகண்ணியை சேர்ந்த புகழேந்திரன், பட்டமங்கலத்தை சேர்ந்த அஜித் ஆகிய 2 பேரும் அங்கு வந்து பாஸ்கரை கத்தியை காட்டி மிரட்டி இலவசமாக மதுபாட்டில் கொடுக்க வேண்டும் எனக்கூறி தகராறில் ஈடுபட்டனர். ஆனால் பாஸ்கர் மது பாட்டில் கொடுக்க மறுத்து அவர்களை தட்டிக்கேட்டார்.
அதன் பிறகு 2 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து கடை மேற்பார்வையாளர் விஜயகுமார் கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த புகழேந்திரன், அஜித் ஆகியோர் நேற்று நள்ளிரவு பாஸ்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு ஓடினர். இதில் வீட்டின் முன்புறம் தீ பற்றி எரிந்தது.
சத்தம் கேட்டவுடன் அங்கு தூங்கி கொண்டிருந்த பாஸ்கரின் மாமனார் பாலசுந்தரம் கண்விழித்து எழுந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். இந்த குண்டு வீச்சில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை.
இது பற்றி கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் பாஸ்கர் புகார் அளித்தார்.
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பால கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.
இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து புகழேந்திரன், அஜித் மற்றும் இதில் தொடர்புடைய 2 பேர் என மொத்தம் 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பெட்ரோல் வெடிகுண்டு மாதிரிகளை சேகரித்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரைச் சேர்ந்தவர் ராஜா முகமது. இவர் அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு ராஜா முகமது வழக்கம் போல் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார்.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் ராஜா முகமது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் பெட்ரோல் குண்டு வெடித்ததில் வீட்டின் வெளியே இருந்த திரைச்சீலை எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜா முகமது உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மேலூர் டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி, மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பெட்ரோல் வெடிகுண்டு மாதிரிகளை சேகரித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று மாலை ராஜா முகமது, தனது மனைவி ரம்ஜானுடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ராஜா முகமது ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி கீழே விழுந்தனர். இது தொடர்பாக ராஜா முகமது, விபத்தை ஏற்படுத்திய நபர்களிடம் தட்டிக்கேட்ட போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே அந்த நபர்கள் தான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க, அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
- தலைமறைவாக உள்ள மற்றொரு வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலூர்:
மேலூர்-சிவகங்கை சாலையில் மலம்பட்டி நான்கு வழிச்சாலை பாலத்திற்கு கீழே நேற்று மாலை 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்கள் மதுபோதையில் இருந்துள்ளனர்.
பின்னால் அமர்ந்திருந்தவர் கையில் பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் வைத்திருந்தார். மேலும் 2 மதுபாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி திரி போட்டு அதனை மோட்டார் சைக்கிளில் பவுச்சில் வைத்திருந்தனர்.
பாலத்தின் கீழே சென்ற போது அங்கிருந்த வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது, பவுச்சில் இருந்த ஒரு பெட்ரோல் நிரப்பிய பாட்டில் கீழே விழுந்து நொறுங்கியது. இது தொடர்பாக அந்த வாலிபர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த ஒரு வாலிபர், பவுச்சில் இருந்த மற்றொரு பாட்டிலை எடுத்து அதிலிருந்த திரியில் தீயை பற்ற வைத்து தூக்கி வீசியுள்ளார். அது வெடித்துசிதறி சாலையோரத்தில் விழுந்து தீப்பற்றியது.
இதனை பார்த்து அச்சமடைந்த அந்த வாலிபர்கள், தீயை அணைத்து விட்டு அங்கிருந்து வேகமாக தப்பி சென்றனர். பெட்ரோல் குண்டு வெடித்ததில் அதனை கொண்டுவந்த வாலிபர்கள் இருவருக்கும் காயமும் ஏற்பட்டிருக்கிறது.
இந்த சம்பவத்தை பார்த்தவர்கள், அதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க, அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை கைப்பற்றி தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது பெட்ரோல் குண்டு வீசிய 2 வாலிபர்களின் உருவம் அதில் பதிவாகி இருந்தது.
மேலும் அவர்கள் சென்ற வாகனத்தின் எண் தெளிவாக தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்ததில், ஒரு வாலிபர் போலீசிடம் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர்கள் இருவரும் திருப்பத்தூருக்கு சென்றது தெரியவந்தது.
அவர்கள் மோட்டார் சைக்கிளில் எதற்காக பெட்ரோல் மற்றும் பெட்ரோல் குண்டுகளை கொண்டு சென்றனர்? ஏதேனும் சதித்திட்டத்துடன் சென்றார்களா? என்று அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- திருமணத்திற்கு முன்பு தாய்மாமனான தமிழ் தனது வீட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
- பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக முகம்மது இப்ராகிம் மற்றும் தினேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூர்:
சென்னை முகப்பேர் கோல்டன் பிளாட்ஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் தமிழ். தி.மு.க சென்னை கிழக்கு மாவட்ட துணை செயலாளரான இவரது சகோதரி மகள் சரண்யா. இவருக்கு வருகிற 14-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இவர்கள் குடும்பத்தினர் சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வருகின்றனர்.
இந்த திருமணத்திற்கு முன்பு தாய்மாமனான தமிழ் தனது வீட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு கௌசல்யா சவுண்ட் சர்வீஸ் மற்றும் இபு என்பவர் நடத்தி வரும் இபு சவுண்ட் சர்வீஸ் பார்ட்டிகள் இருவரும் கெளசல்யாவின் வீட்டிலிருந்து மேளம் அடித்துக் கொண்டு வந்தனர். அப்போது முகப்பேர் ரோடு சந்திப்பு பகுதியில் வைத்து கெளசல்யா சவுண்ட் பார்ட்டிக்கும் இபு சவுண்ட் பார்ட்டிக்கும் மேளம் அடிப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் கௌசல்யா சவுண்ட் பார்ட்டியைச் சேர்ந்த இலி என்பவர் என்னங்கடா மேளம் அடிக்கிறீங்க என்று கூறி இபுவை கையால் அடித்துள்ளார். அதையடுத்து இபு மற்றும் அவரது நண்பர்கள் மது பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி துணியை சொருகி பற்றவைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி கூட்டத்தில் வீசினர்.இதில் பயங்கர சத்தத்துடன் பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது.
ஆனால் நல்ல வேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனே அங்கிருந்த பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்த தகவலின் பேரில் கொரட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக முகம்மது இப்ராகிம் மற்றும் தினேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் காரணமாக முகப்பேரில் பரபரப்பு நிலவியது.
- மர்ம நபர்கள், குடிசையில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
- குடத்தில் பிடித்து வைத்திருந்த தண்ணீரை கொண்டு வந்து குடிசையில் ஊற்றி தீயை அணைத்து இளைஞர்களை காப்பாற்றினார்கள்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டைகள் நிறைய உள்ளன. இங்கு வட மாநிலங்களை சேர்ந்த ஏழை எளிய தொழிலாளர் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர்.
இதில் ஜேடர்பாளையம் சரளைக்காடு பகுதியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர் என்கிற முத்துசாமி என்பவரது ஆலைக் கொட்டகையில் வட மாநில இளைஞர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அங்கு குடிசைகள் அமைத்து, அதில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு இந்த குடிசையில் வேலை முடிந்து வட மாநில தொழிலாளர்கள் உறங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 1 மணி அளவில் மர்ம நபர்கள் குடிசையின் பின்புறமாக வந்து குடிசையின் ஓரத்தில் தடுப்பாக வைத்திருந்த அட்டையை உடைத்து அறைக்குள் புகுந்தனர். அறையில் தூங்கிக் கொண்டிருந்த 4 தொழிலாளர்கள் மீது பெட்ரோலை வீசி ஊற்றி தீ வைத்தனர். இதில் வட மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் என்கிற ரோகி, சுகிலாம், ஸ்வந்த், கோகுல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தீ உடல் முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்ததால் அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அபாய குரல் எழுப்பினார்கள்.
இதனிடையே மர்ம நபர்கள், குடிசையில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனால் குடிசை முழுவதும் தீ கொளுந்து விட்டு எரிந்தது.
இந்த சத்தத்தை கேட்டதும், மற்ற குடிசையில் தங்கியிருந்த வட மாநில தொழிலாளர்கள் அலறி அடித்துகொண்டு வெளியே ஓடி வந்தார்கள். அவர்கள், தீயில் சிக்கிய இளைஞர்களை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை கையாண்டனர். குடத்தில் பிடித்து வைத்திருந்த தண்ணீரை கொண்டு வந்து குடிசையில் ஊற்றி தீயை அணைத்து இளைஞர்களை காப்பாற்றினார்கள்.
இதில் ராகேஷ் என்கிற ரோகி, சுகிலாம் ஆகியோருக்கு உயிருக்கு போராடியபடி துடி துடித்துக்கொண்டிருந்தனர். ஸ்வந்த், கோகுல் ஆகிய இருவரும் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் அடைந்திருந்தனர். அவர்கள் கதறி அழுது கொண்டே இருந்தனர். ஆம்புலன்ஸ் மூலம் 4 பேரும் கொண்டு செல்லப்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வட மாநிலத்தவர் மீது தீ வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட கலெக்டர் ஷ்ரேயா சிங், நீதிபதி, நித்யா, கோவை மண்டல ஐ.ஜி. சுதாகர், சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிகுமார், நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், பரமத்தி வேலூர் டிஎஸ்பி கலையரசன் மற்றும் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் அருகில் குடியிருந்த மற்ற வட மாநில தொழிலாளர்கள், ஆலை உரிமையாளர் உள்ளிட்டோரிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்ட தடய அறிவியல் துறை மாவட்ட உதவி இயக்குனர் வடிவேல் தலைமையிலான குழுவினர் தீ வைத்த இடங்களில் இருந்த தீக்கிரையான பொருட்களை சேகரித்து அவற்றை சுமார் 10-க்கும் மேற்பட்ட டப்பாக்களில் அடைத்து தடய அறிவியல் ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.
மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ஏவி விடப்படது. அது குடிசை மற்றும் அந்த பகுதியில் உள்ள வயல் வழியாக ஓடிச் சென்று நின்று கொண்டது.
கோவை மண்டல ஐ.ஜி. சுதாகர் சம்பவ இடத்தில் ஆய்வுகளை முடித்துக் கொண்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் வட மாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார்.
இதேபோல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களிடம் கரூர் விரைவு நீதிமன்ற நீதிபதி வாக்கு மூலம் பெற்றார்.
மர்ம நபர்களை பிடிக்க 4-க்கும் மேற்பட்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், அந்த பகுதியில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் மர்ம நபர்ளை வலைவீசி தேடிவருகின்றனர்.
இப்பகுதியில் நடந்து வரும் தொடர் அசம்பாவி தங்களால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து ரோந்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் குண்டை சரவணபிரபுவின் கடை முன்பு வீசி உள்ளார்.
- ஷேக்முகமதுவை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்தவர் தனவீரபாண்டியன். இவர் தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கத்தின் பகுதி தலைவராக இருந்து வருகிறார். இருவரது மகன் சரவணபிரபு (வயது 29). இவர் திருச்செந்தூர் பிரதான சாலை முத்தையாபுரத்தில் இ-சேவை மையம் மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார்.
இவரது ஓட்டல் பக்கத்தில் கடை நடத்தி வருபவர் ஷேக்முகமது. இவருக்கும், சரவண பிரபுவுக்கும் நிலம் சம்பந்தமாக கடந்த 2005-ம் ஆண்டு முதல் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் ஷேக்முகமது, நேற்று முன்தினம் இரவு தனது கடையில் வேலை செய்யும் மாரிகணேஷ் என்பவரிடம் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொடுத்து அனுப்பி உள்ளார். அவர் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் குண்டை சரவணபிரபுவின் கடை முன்பு வீசி உள்ளார். பெட்ரோல் குண்டு கடையின் முன்பு இருந்த விறகுகளில் பட்டு தீப்பற்றி எரிந்து அணைந்தது. இதனால் பெரிய அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.
இது தொடர்பாக சரவணபிரபு அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தர், மகாராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஷேக்முகமது, தனது கடையில் வேலை செய்யும் மாரிகணேஷ் என்பவரிடம் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொடுத்து அனுப்புவதும், அவர் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் குண்டை சரவணபிரபுவின் கடை முன்பு வீசுவதும் பதிவாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஷேக்முகமதுவை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது அதே பகுதியை சேர்ந்த தாமரைசெல்வன் என தெரியவந்தது.
- வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது48). இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் கொப்புசித்தம்பட்டியில் ஊராட்சி மன்றத்தலைவராக உள்ளார்.
விஜயலட்சுமி பந்தல்குடியில் வசித்து வருவதால் கொப்புசித்தம்பட்டியில் உள்ள அவர்களுக்கு சொந்தமான வீட்டில் உறவினர் பஞ்சவர்ணம் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று பஞ்சவர்ணம் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் 3 காலி மது பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி தீ வைத்து வீட்டின் மீது சரமாரியாக வீசிவிட்டு தப்பினார். இதில் பெட்ரோல் வெடிகுண்டுகள் வீட்டின் கதவு முன்பு மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. கதவு, ஜன்னல் போன்றவை எரிந்து சேதமாயின.
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஜெய்சங்கர், அருப்புக்கோட்டை போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி அங்கு சிதறிக்கிடந்த வெடி குண்டுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது அதே பகுதியை சேர்ந்த தாமரைசெல்வன் என தெரியவந்தது.
கடந்த ஊராட்சி மன்ற தேர்தலின்போது இவரது மனைவி தோல்வியடைந்தார். இது தொடர்பாக விஜயலட்சுமி தரப்புக்கும், தாமரைசெல்வன் தரப்புக்கும் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக விஜய லட்சுமிக்கு சொந்தமான வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தாமரை செல்வனை போலீசார் தேடி வருகின்றனர்.
வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சத்யநாராயணனின் வீட்டுக்கு வந்த மர்ம கும்பல் அவரது வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டை வீசினர்.
- பா.ம.க. மாவட்ட செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராயபுரம்:
பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவை சேர்ந்தவர் சத்யநாராயணன்.பா.ம.க. வடசென்னை மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது மகன் நிஷால். தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று இரவு நிஷால் காசிமேடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் திடீரென நிஷாலை வழிமறித்து கத்தி, அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நிஷால் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பினார். இதையடுத்து மர்ம கும்பல் அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து நிஷால் தனது தந்தை சத்யநாராயணனிடம் தெரிவித்தார். அவர் மர்ம கும்பல் குறித்து காசிமேடு போலீசில் புகார் அளித்தார்.
அந்த நேரத்தில் சத்யநாராயணனின் வீட்டுக்கு வந்த மர்ம கும்பல் அவரது வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டை வீசினர். இதில் பெட்ரோல் குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பற்றியது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததும் மர்ம கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். பெட்ரோல் குண்டு வீச்சில் அதிர்ஷ்டவசமாக சத்யநாராயணனின் வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி அறிந்ததும் காசிமேடு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சத்யநாராயணனின் வீட்டு முன்பு பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று அப்பகுதியில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக நிஷாலுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது.
இது பற்றி சத்யநாராயணன் போலீசில் புகார் அளித்து பின்னர் சமாதானம் செய்து முடித்து உள்ளனர். இந்த தகராறில் கொலை முயற்சி மற்றும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்து உள்ளது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்து போலீசார் மேலும் விசாரித்து வருகிறார்கள்.
பா.ம.க. மாவட்ட செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே இதே கும்பல் ராயபுரம் மஸ்தான் கோவில் தெருவில் வந்த போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் நவீன், தினேஷ் ஆகியோரிடமும் மோதலில் ஈடுபட்டு அவரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் இருவரும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.