search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூகுள்"

    • கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்ட் ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகமாகிறது.
    • பிக்சல் ஃபோல்ட் வெளியீட்டை உணர்த்தும் டீசரை கூகுள் பகிர்ந்து இருக்கிறது.

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்ட் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் கூகுள் I/O 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முதல் முறையாக பிக்சல் ஃபோல்ட் ஸ்மார்ட்போன் வெளியீட்டை கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது.

    பிக்சல் ஃபோல்ட் ஸ்மார்ட்போனிற்காக கூகுள் நிறுவனம் பிரத்யேக வீடியோ வெளியிட்டுள்ளது. டுவிட்டர் மற்றும் யூடியூப் வலைதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் டீசர் வீடியோவில் பிக்சல் ஃபோல்ட் எப்படி காட்சியளிக்கும் என்பது தெரியவந்துள்ளது. அதன்படி பிக்சல் ஃபோல்ட் ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில், டேப்லட் போன்று காட்சியளிக்கிறது.

     

    தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது. ஸ்மார்ட்போனின் வெளிப்புறம் சிறிய டச் ஸ்கிரீன் பேனல் உள்ளது. சமீபத்திய பிக்சல் போன்களில் உள்ளதை போன்றே பிக்சல் ஃபோல்ட் பின்புறமும் கேமரா பார் உள்ளது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி பிக்சல் ஃபோல்ட் மாடலில் 5.8 இன்ச் டிஸ்ப்ளே, 7.6 இன்ச் ஸ்கிரீன், கூகுள் டென்சார் G2 சிப்செட் வழங்கப்படுகிறது.

    • மே 11 ஆம் தேதி பிக்சல் 7a இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • பிக்சல் 7a அம்சங்கள் பற்றிய தகவல்கள் பலமுறை இணையத்தில் வெளியாகியுள்ளன.

    கூகுள் நிறுவனம் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் கூகுள் I/O 2023 நிகழ்வில் புதிய பிக்சல் 7a ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதைத் தொடர்ந்து மே 11 ஆம் தேதி பிக்சல் 7a இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்மார்ட்போன் சந்தையில் பிக்சல் 7a மாடலுக்கான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.

    அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் யூனிட்கள் இபே (EBay) வலைதளத்தில் தற்போது விற்பனைக்கு பட்டியலிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அறிமுக நிகழ்வுக்கு முன்பே பிக்சல் 7a யூனிட்கள் விற்பனைக்கு வந்துள்ளது பற்றி ஸ்மார்ட்போன் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

     

    அதாவது கூகுள் தவிர வேறு நபர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பிக்சல் 7a யூனிட்களை வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டாம் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கிடைக்கும் யூனிட்களை கூகுள் நிறுவனம் மென்பொருள் மூலம் செயலிழக்கச் செய்துவிடும் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

    இன்னும், சில நாட்களில் பிக்சல் 7a மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விலை 499 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அறிமுகமாகாத சாதனங்கள் சந்தையில் விற்பனைக்கு கிடைப்பது முதல்முறை இல்லை. முன்னதாக பல சமயங்களில் நிறுவனங்கள் அறிமுகம் செய்வதற்கு முன்பே புதிய சாதனங்கள் இபே போன்ற வலைதளங்களில் விற்பனைக்கு வந்துள்ளன.

    புதிய பிக்சல் 7a ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றிய தகவல்கள் பலமுறை இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், இபே தளத்தில் பட்டியலிடப்பட்டு இருப்பதன் மூலம் அதன் அம்சங்கள் கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. அதன்படி பிக்சல் 7a மாடலில் டூயல் சிம் வசதி, 5ஜி, ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் டென்சார் G2 சிப்செட் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. 

    • கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 7a ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • ப்ளிப்கார்ட் தளத்தில் பிக்சல் 7 மற்றும் 7 ப்ரோ மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிக் சேவிங் டேஸ் சேல் பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனை இந்த வாரம் துவங்க இருக்கிறது. இந்த விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கு அசத்தல் தள்ளுபடி, கேஷ்பேக் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படவுள்ளன. இதில் பயனர்கள் வாங்கும் பொருட்களின் மீது அதிக சேமிப்புகளை பெற முடியும். இந்த நிலையில், சிறப்பு விற்பனை துவங்கும் முன்பே பிக்சல் 7 ப்ரோ மற்றும் பிக்சல் 7 ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டு உள்ளன.

    இந்திய சந்தையில் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ. 84 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இதன் விலை ரூ. 69 ஆயிரத்து 999 என்று ப்ளிப்கார்ட் தளத்தில் மாறி இருக்கிறது. இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போதும், மாத தவணை முறையை பயன்படுத்தும் போது அதிகபட்சம் பத்து சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     

    இத்துடன் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது அதிகபட்சம் ரூ. 28 ஆயிரத்து 250 வரையிலான தள்ளுபடி பெற முடியும். மே 4 ஆம் தேதி துவங்கும் சிறப்பு விற்பனையின் போது பிக்சல் 7 ப்ரோ மாடல் ரூ. 65 ஆயிரத்து 999 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கும். இதில் எக்சேஞ்ச் மற்றும் வங்கி சலுகைகளும் அடங்கும். பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஆப்ஷனில் கிடைக்கிறது.

    பிக்சல் 7 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ. 69 ஆயிரத்து 999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருப்பதை அடுத்து பயனர்கள் இதனை ரூ. 44 ஆயிரத்து 999 விலையிலேயே வாங்கிட முடியும். இதில் தள்ளுபடி, வங்கி சலுகைகள் மற்றும் எக்சேஞ்ச் சலுகைகளும் அடங்கும். பிக்சல் 7 ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஆப்ஷனில் கிடைக்கிறது. 

    • கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் 64MP பிரைமரி கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு கேமரா கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
    • முந்தைய பிக்சல் 6a மாடலின் விலை இந்தியாவில் ரூ. 43 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே மே 10 ஆம் தேதி நடைபெறும் கூகுள் I/O 2023 நிகழ்வில் வைத்து சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் இந்திய வெளியீடு மே 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நாளில் இதன் விலை விவரங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    புதிய பிக்சல் 7a ஸ்மார்ட்போன் இந்தியாவில் மே 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் முந்தைய பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

     

    இதன் இந்திய விலை பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், டிப்ஸ்டர் பரஸ் குக்லானி வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பிக்சல் 7a மாடலின் விலை ரூ. 35 ஆயிரத்தில் துவங்கும் என்றும் இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 39 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய பிக்சல் 6a மாடலின் விலை இந்தியாவில் ரூ. 43 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    கூகுள் பிக்சல் 7a எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், கூகுள் நிறுவனத்தின் டென்சார் G2 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 64MP பிரைமரி கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10.8MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 4400 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது.

    புதிய பிக்சல் 7a மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படலாம். அந்த வகையில் புதிய பிக்சல் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்கள், சக்திவாய்ந்த பிராசஸர், அதிகளவு ரேம் மற்றும் மெமரி, தலைசிறந்த கேமரா மற்றும் நீண்ட நேர பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    • பிக்சல் 7a ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் Full HD+ OLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என தகவல்.
    • பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ மாடல்களில் டென்சார் G2 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் பிக்சல் 6a மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய பிக்சல் 7a மாடல் மே 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் கூகுள் I/O 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய பிக்சல் 7a பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    அந்த வரிசையில், இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. டிப்ஸ்டர் யோகேஷ் ரார் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி பிக்சல் 7a ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் Full HD+ OLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், டென்சார் G2 பிராசஸர் கொண்டிருக்கும் எனறு கூறப்படுகிறது.

     

    முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கூகுள் அறிமுகம் செய்த பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ மாடல்களில் டென்சார் G2 பிராசஸர் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க பிக்சல் 7a மாடலில் 64MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    பிரைமரி கேமராவுடன் OIS சப்போர்ட், 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், 10.8MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 4000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கேமரா, வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை பிக்சல் 7a மாடலில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இவைதவிர இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்படலாம்.

    முன்னதாக வெளியான தகவல்களின் படி பிக்சல் 7a மாடல்- கிரே, வைட் மற்றும் புளூ என்று மூன்றுவித நிறங்களில் வெளியாகும் என்றும் இவை சார்கோல், ஸ்னோ மற்றும் சீ என்று அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. விலையை பொருத்ததவரை பிக்சல் 7a மாடல் 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 40 ஆயிரத்து 900 என்று துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    • மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 6a மாடல் ஜூலை மாத வாக்கில் விற்பனைக்கு வந்தது.
    • பிக்சல் 7a ஸ்மார்ட்போன் கார்பன், காட்டன் மற்றும் ஆர்க்டிக் புளூ என மூன்று நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 7a ஸ்மார்ட்போனினை கூகுள் I/O 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் மற்றும் அம்சங்கள் பற்றிய தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. இந்த வரிசையில், புதிய பிக்சல் 7a நிறங்கள் மற்றும் விற்பனை தேதி பற்றிய விவரங்களை டிப்ஸ்டர் ஜான் ப்ரொசர் வெளியிட்டுள்ளார். இதோடு பிக்சல் 7a விலை விவரங்களை 9டு5கூகுள் வெளியிட்டுள்ளது.

    அதன்படி சர்வதேச சந்தையில் பிக்சல் 7a ஸ்மார்ட்போனின் விலை 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 40 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இது ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் பிக்சல் 6a மாடலின் விலையை விட 50 டாலர்கள் வரை அதிகம் ஆகும்.

     

    இந்திய சந்தையில் பிக்சல் 6a மாடலின் விலை ரூ. 43 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி இதன் மேம்பட்ட மாடலான பிக்சல் 7a விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. கடந்த ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 6a மாடல் ஜூலை மாத வாக்கில் விற்பனைக்கு வந்தது.

    ஏற்கனவே வெளியான தகவல்களின் படி கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் கார்பன், காட்டன் மற்றும் ஆர்க்டிக் புளூ என மூன்றுவித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர பிக்சல் 7a மாடல் சார்கோல், ஸ்னோ மற்றும் சீ போன்ற நிறங்களில் கிடைக்கும் என்றும் தகவல் வெளியானது. 

    • அமெரிக்க நிறுவனங்கள் ஐரோப்பாவில் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளன.
    • 2023 ஆண்டில் மட்டும் 1,68,918 ஊழியர்களுக்கு பணிநீக்க ஆணையை டெக் நிறுவனங்கள் வழங்கி உள்ளன.

    உலகளவில் பிரபலமாக அறியப்படும் முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்லாயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஆண்டு முதலே பணிநீக்க நடவடிக்கைகளால் ஊழியர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கூகுள், மெட்டா, அமேசான் உள்பட உலகளவில் 570 தொழில்நுட்ப நிறுவனங்கள் 2023 ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 68 ஆயிரத்து 918 ஊழியர்களுக்கு பணிநீக்க ஆணையை வழங்கி உள்ளன.

    இதுதவிர, மேலும் பலரை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் இந்த நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இந்த வரிசையில் அமெரிக்க நிறுவனங்கள் தற்போது ஐரோப்பாவில் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளன. எனினும், இந்த பகுதிகளில் உள்ள கடுமையான விதிகள் காரணமாக நிறுவனங்கள் தரப்பில் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகளிடம் முன்கூட்டியே அறிவிக்காமல் பணிநீக்கம் செய்ய முடியாது என்ற சூழல் நிலவுகிறது.

     

    பணிநீக்க நடவடிக்கைகளுக்கு முன்பு ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆணையங்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது. இதன் காரணமாக கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களிடம் பணியினை ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகின்றன. பிரான்ஸ் நாட்டில் உள்ள ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஆல்ஃபாபெட் நிறுவனம், ஊழியர்கள் பணியை ராஜினாமா செய்து, பெரும் தொகையை பணி நீக்க ஊதியமாக பெற்றுக் கொள்ள வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இது போன்ற தகவல்களால், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இயங்கி வரும் கூகுள் அலுவலக ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்படும் சூழலுக்கு ஆளாகியுள்ளனர். கூகுள் போன்றே அமேசான் நிறுவனமும் தனது மூத்த மேலாளர்களிடம், பணியை ராஜினாமா செய்து அதிகபட்சம் ஒரு வருடத்திற்கான சம்பளத்தை பணி நீக்க ஊதியமாக பெற்றுக் கொள்ள வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7 ஸ்மார்ட்போனிற்கு ப்ளிப்கார்ட் தளத்தில் அசத்தல் சலுகை வழங்கப்படுகிறது.
    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 7 விலை ரூ. 59 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டது.

    இந்திய சந்தையில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. போட்டி நிறுவன மாடல்களுடன் ஒப்பிடும் போது பிக்சல் 7 விலை சற்று அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில், ப்ளிப்கார்ட் தளத்தில் பிக்சல் 7 மாடலுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    பிக்சல் 7 (8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி) மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் இதன் விலை ரூ. 56 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இதுதவிர அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 7 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     

    இதன் மூலம் பிக்சல் 7 விலை ரூ. 49 ஆயிரத்து 999 என்று மாறிவிடுகிறது. இதுதவிர தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ. 30 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போன் ஸ்னோ, அப்சிடியன் மற்றும் லெமன்கிராஸ் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    கூகுள் பிக்சல் 7 அம்சங்கள்:

    6.3 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    கூகுள் டென்சார் G2 பிராசஸர்

    8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ்

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    50MP பிரைமரி கேமரா

    12MP அல்ட்ரா வைடு கேமரா

    11MP செல்ஃபி கேமரா

    5ஜி, 4ஜி எல்டிஇ, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி போர்ட்

    4700 எம்ஏஹெச் பேட்டரி

    30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    • சுவிட்சர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்தில் உள்ள கூகுள் நிறுவன ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தொழிற்சங்க உறுப்பினர்கள், கூகுள் நிறுவனம் பிரச்சினைகளை தவிர்க்கும் செயலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினர்.

    இங்கிலாந்தில் உள்ள கூகுள் அலுவலக ஊழியர்கள், அந்நிறுவனத்தின் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு உலகம் முழுக்க சுமார் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கூகுள் அறிவித்து இருந்தது. இதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூகுள் நிறுவனத்தில் சுமார் 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவில் உள்ள கூகுள் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இங்கிலாந்து கூகுள் அலுவலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிநீக்கம் தொடர்பான பிரச்சினைகளை கூகுள் நிறுவனம் தவிர்த்து விட்டதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இங்கிலாந்தின் பாங்ராஸ் சதுரங்க அலுவலகத்தின் வெளியில் போராட்டம் நடத்தப்பட்டது.

     

    சர்வேதச பணிகளில் ஈடுபட்டு வரும் சுமார் 10 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்படுவர் என கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிவித்து இருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அலுவலகத்தில் பணியாற்றி வருவோரில் நூற்றுக்கும் அதிகமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டது. விவகாரம் தொடர்பாக கூகுள் நிறுவனம் ஊழியர்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

    எனினும், இது போன்ற பேச்சுவார்த்தைகளில் தொழிற்சங்க நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளாமல் இருப்பதை கூகுள் உறுதிப்படுத்தி வருகிறது. ஊழியர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை கூகுள் நிறுவனம் கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. முன்னதாக சுவிட்சர்லாந்தில் உள்ள கூகுள் அலுவலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
    • புதிய பிக்சல் ஃபோல்டு மாடல் மே மாதம் நடைபெற இருக்கும் கூகுள் IO நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்.

    கூகுள் நிறுவனம் தனது சொந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் வெளியாகியுள்ளது.

    பிரபல டிப்ஸ்டரான யோகேஷ் பிரர் வெளியிட்டு இருக்கும் புதிய தகவல்களின் படி பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் விலை 1300-இல் தொடங்கி 1500 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 07 ஆயிரத்து 421 முதல் ரூ. 1 லட்சத்து 23 ஆயிரத்து 947) வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

     

    இந்த தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் கூகுள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விலை சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 4 விலையை விட 500 டாலர்கள் வரை குறைவாகவே இருக்கும். கேலக்ஸி Z ஃபோல்டு 4 ஸ்மார்ட்போன் சாம்சங் அறிமுகம் செய்த கடைசி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சாம்சங் முன்னணி நிறுவனமாக இருக்கிறது.

    கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனுடன் மிட் ரேன்ஜ் பிக்சல் 7a ஸ்மார்ட்போனினை கூகுள் IO 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி வருகிறது. 2023 கூகுள் IO நிகழ்வு இந்த ஆண்டு மே மாத வாக்கில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் பிக்சல் ஃபோல்டு மற்றும் பிக்சல் 7a ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது.

    புதிய பிக்சல் 7a ஸ்மார்ட்போனின் விலை 450 டாலர்களில் துவங்கி 500 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 37 ஆயிரத்து 188 என துவங்கி அதிகபட்சம் ரூ. 41 ஆயிரத்து 320 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 6a மாடலின் விலையும் இதேபோன்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Photo Courtesy: How to I Solve | Steve Hemmerstoffer

    • கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா, 5 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கும் என தகவல்.
    • புதிய பிக்சல் 7a மாடலில் 6.1 இன்ச் FHD+ 90Hz OLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 7a குறைந்த விலை ஸ்மார்ட்போனினை 2023 கூகுள் IO நிகழ்வில் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. விரைவில் வெளியீடு நடைபெற இருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    புதிய பிக்சல் மிட் ரேன்ஜ் மாடலில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. பிக்சல் 7a மாடலில் 6.1 இன்ச் FHC+ 90Hz OLED டிஸ்ப்ளே, டென்சார் G2 சிப்செட், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

     

    புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 12MP இரண்டாவது லென்ஸ், 10.8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கும் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் 5 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.

    சமீபத்தில் தான் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கூகுள் IO 2023 நிகழ்வு மே 10 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருந்தார். இந்த முறை கூகுள் IO நிகழ்வு அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள மவுண்டெயின் வியூ, கூகுள் தலைமையகத்தின் ஷோர்லைன் ஆம்ஃபிதியேட்டரில் நடைபெற இருக்கிறது.

    கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்முறையாக கூகுள் IO நிகழ்வு பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்பட இருக்கிறது. நிகழ்வுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள் இதனை ஆன்லைனில் நேரலையில் பார்க்க முடியும்.

    Photo Courtesy: @Onleaks

    • கூகுள் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனை ஒருவர் பொதுவெளியில் பயன்படுத்துவது அம்பலமாகி இருக்கிறது.
    • தோற்றத்தில் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் ஒப்போ ஃபைண்ட் N2 போன்றே காட்சியளிக்கிறது.

    கூகுள் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் பொது வெளியில் ஒருவர் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. புதிய பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் மே 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் IO 2023 நிகழ்வில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் நியூ யார்க் வீதிகளில் ஒருவர் பயன்படுத்தி வருவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

    புதிய புகைப்படங்களில் கூகுள் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் கவர் ஸ்கிரீன், பிளாக் பெசல்கள் தெளிவாக காட்சியளிக்கின்றன. இதில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் கவர் ஸ்கிரீன் மட்டுமே காணப்படுகிறது. ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் இருக்கும் படம் வெளியாகவில்லை. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஒப்போ ஃபைண்ட் N2 போன்றே காட்சியளிக்கிறது.

     

    பிக்சல் ஃபோல்டு லைவ் படங்களில் அதனை பயன்படுத்தி வருபவர் வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறார். தற்போது பிக்சல் ஃபோல்டு லைவ் படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், இதே போன்ற மேலும் சில புகைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது.

    முன்னதாக வெளியான தகவல்களின் படி பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் 7.57 இன்ச் மடிக்கக்கூடிய ஸ்கிரீன், 5.78 இன்ச் கவர் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 4700 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், பேக் பேனலில் ரியர் கேமரா கொண்டிருக்கும் என தெரிகிறது.

    புதிய பிக்சல் ஃபோல்டு மாடலில் டென்சார் G2 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே பிராசஸர் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் பிக்சல் 7 ப்ரோ மாடலில் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. பிக்சல் ஃபோல்டு மாடலின் விலை 1800 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Soruce: 91Mobiles

    ×