search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    கூகுள் பிக்சல் 7a இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு
    X

    கூகுள் பிக்சல் 7a இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

    • கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் 64MP பிரைமரி கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு கேமரா கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
    • முந்தைய பிக்சல் 6a மாடலின் விலை இந்தியாவில் ரூ. 43 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே மே 10 ஆம் தேதி நடைபெறும் கூகுள் I/O 2023 நிகழ்வில் வைத்து சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் இந்திய வெளியீடு மே 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நாளில் இதன் விலை விவரங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    புதிய பிக்சல் 7a ஸ்மார்ட்போன் இந்தியாவில் மே 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் முந்தைய பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

    இதன் இந்திய விலை பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், டிப்ஸ்டர் பரஸ் குக்லானி வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பிக்சல் 7a மாடலின் விலை ரூ. 35 ஆயிரத்தில் துவங்கும் என்றும் இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 39 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய பிக்சல் 6a மாடலின் விலை இந்தியாவில் ரூ. 43 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    கூகுள் பிக்சல் 7a எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், கூகுள் நிறுவனத்தின் டென்சார் G2 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 64MP பிரைமரி கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10.8MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 4400 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது.

    புதிய பிக்சல் 7a மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படலாம். அந்த வகையில் புதிய பிக்சல் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்கள், சக்திவாய்ந்த பிராசஸர், அதிகளவு ரேம் மற்றும் மெமரி, தலைசிறந்த கேமரா மற்றும் நீண்ட நேர பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×