என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் பலி"

    • லெட்சுமி இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. லெட்சுமியின் மகன்களை சந்தித்து ஆறுதல் கூறி உதவித்தொகை வழங்கினார்.

    நெல்லை:

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பாளை ஒன்றியம், பாளை கிழக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட உடையார்குளம் பஞ்சாயத்தில் உள்ள வாகைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமி (வயது 55). ஏழை விவசாயியான இவர் சில தினங்களுக்கு முன்பு கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு சென்று அழைத்து வரும்போது இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையறிந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. வாகைகுளம் கிராமத்திற்கு நேரில் சென்று குடும்ப தலைவியை இழந்து தவிக்கும் அப்பெண்ணின் மகன்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு உதவித்தொகையும் வழங்கினார்.

    அவருடன் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி,மூத்த காங்கிரஸ் தலைவர் புத்தனேரி சண்முகம்,மாவட்ட துணைத்தலைவர் செல்லப்பாண்டி, பாளையங்கோட்டை வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கனகராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் இட்டமொழி நம்பித்துரை, இளைஞர் காங்கிரஸ் நாங்குநேரி தொகுதி தலைவர் ராஜ்குமார், உடையார்குளம் பஞ்சாயத்து காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் உச்சிமாகாளி, கிராம காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் சங்கரகோனார், முத்துபாண்டி, கண்ணன் மற்றும் வாகைகுளம் ஊர் பெரியவர்கள் உடன் இருந்தனர்.

    • செல்வ நாயகம் நேற்று வீட்டின் முன்பு நின்று துணி களை துவைத்து கொண்டு இருந்தார்.
    • தாயார் தண்ணீர் தொட்டியில் விழுந்து தத்தளிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கோவை,

    பொள்ளாச்சியை அடுத்த கோட்டூரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி செல்வநாயகம் (வயது 52).இவர்களது மகன் செந்தில்குமார் (32).செல்வ நாயகம் நேற்று வீட்டின் முன்பு நின்று துணி களை துவைத்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி அருகில் இருந்த நிலத்தடி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார்.

    வீட்டிற்குள் இருந்த அவரது மகன் செந்தில்குமார் ஏதோ சத்தம் வருவதை கேட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது அவரது தாயார் தண்ணீர் தொட்டியில் விழுந்து தத்தளிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் தண்ணீர் தொட்டியில் இருந்து செல்வ நாயகத்தை மீட்டார். பின்னர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். ஆம்புலன்சில் வந்த டாக்டர் செல்வநாயகத்தை பரிசோதனை செய்து பார்த்தார். அவர் செல்வநாயகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து செல்வநாயகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்த படி ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
    • நரசிம்ம ஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த மூக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னபையன் மனைவி சாரதாம்பாள் (வயது 65). இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தனது மகன் அரவிந்தனுடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்த படி ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சாரதாம்பாள் இறந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வாகன விபத்தில் பெண் என்ஜினீயர் பலியானார்.
    • பணிக்கு சென்ற போது நடந்த சம்பவம்

    திருச்சி:

    திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பர்மா காலனி, 15-வது தெருவில் வசித்து வருபவர் குமாரமங்கலம் மகள் காயத்ரி (வயது25) இவர் பி.இ. பட்டதாரியான இவர், தனியார் கம்பெனியில் பணி செய்து வந்தார்.

    இன்று காலை வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்றார். ஆர்டிஓ ஆபீஸ் அருகே சென்ற பொழுது அவ்வழியே சென்ற மற்றொரு டூவீலர் வாகனம் மற்றும் ஐடி பார்க் கம்பெனி ஊழியர்கள் பணிக்கு செல்லும் பஸ் சென்றுள்ளது. இந்த இரண்டு வாகனங்களில் எந்த வாகனம் இவர் மீது மோதியது என்று தெரியவில்லை.

    அப்போது நிலை தடுமாறி காயத்திரி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. டூஇதனை பார்த்த பஸ்ஸில் பயணித்த சக ஊழியர்கள் உடனடியாக இவரை மீட்டு நவல்பட்டு பர்மா காலனியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நவல்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தன் சொந்த கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்
    • அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் வண்ண பூபால் பரிதாபமாக இறந்தார்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே குந்தலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. அவரது மனைவி வண்ணபூபால். இவர் அவலூர்பேட்டையிலிருந்து தன் சொந்த கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் வண்ண பூபால் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புவனகிரி அருகே நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.
    • இதில் பின்னால் இருந்த வெற்றிச்செல்வி நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.

    கடலூர்:

    புவனகிரி அருகே திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் உமா மகே ஸ்வரன். இவரது மனைவி வெற்றிச்செல்வி .(வயது 50) இந்நிலையில் உமா மகேஸ்வரன் மனைவி வெற்றிச்செல்வி உடன் தனது மோட்டார் சைக்கி ளில் புவனகிரி கடைவீதிக்கு சென்றனர். அப்போது தனியார் பெட்ரோல் பங்க் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடியது. இதை எதிர்பாராத உமா மகேஸ்வரன் நாய் மீது மோதினார்.

    இதில் பின்னால் இருந்த வெற்றிச்செல்வி நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். மேல்சிகிச்சைக்காக புதுவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு வெற்றிச்செல்வி உயிரிழந்தார். இது குறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக போத்தனூர் ெரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
    • பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    கோவை,

    கோவை இருகூர்-போத்தனூருக்கு இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ஒண்டிப்புதூர் மேம்பாலத்திற்கு அருகே பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக போத்தனூர் ெரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

    அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். தொடர்ந்து அவர் யார்? ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் மேட்டு வலவு பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த ஒரு லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.
    • இதில் தூக்கி வீசப்பட்டு சின்ன ராசாத்தி படுகாயம் அடைந்தார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் தொட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மனைவி சின்ன ராசாத்தி (52). கூலி வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் பார்த்திபன் என்பவருடன் மொபட்டில் சின்ன ராசாத்தி சென்று கொண்டு இருந்தார். அவர்கள் கோபிசெட்டி பாளையம் மேட்டு வலவு பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த ஒரு லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு சின்ன ராசாத்தி படுகாயம் அடைந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளை யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்ன ராசாத்தி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • துப்பட்டா கழுத்தை இறுக்கி தலையில் அடிபட்டதால் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி கன்னிகா பரமேஸ்வரி.

    திருப்பத்தூர் அடுத்த இருனாப்பட்டு கிராமத்தில் ஊர் புற நூலகராக கன்னிகா பரமேஸ்வரி பணியாற்றி வந்தார். முரளிக்கு சொந்தமாக தானியங்கள் அரைக்கும் ரைஸ் மில் உள்ளது.

    இந்த ரைஸ்மிலில் இன்று காலை கன்னிகா பரமே ஸ்வரி தானியம் அரைத்து கொ ண்டிரு ந்தார். அப்போது எதிர்பா ராதவித மாக எந்திரத்தில் கழுத்தில் போட்டிருந்த துப்பட்டா பெல்ட் சக்கரத்தில் சிக்கியது. இதில் கழுத்து இறுக்கி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கன்னிகா பரமேஸ்வரி இறந்தார். இதுகுறித்து ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து கன்னிகா பரமேஸ்வரி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆழ்வார்குறிச்சி சேர்ந்தவர் முகமது வைசாலி தனது சகோதரர் செய்யது என்பவருடன் மொபட்டில் வந்துள்ளார்.
    • கருத்தப்பிள்ளையூர் சாலையில் மொபட்டை ஓட்டி வந்தபோது கனமழை பெய்துள்ளது.

    நெல்லை:

    ஆழ்வார்குறிச்சி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது பரூக். இவரது மனைவி முகமது வைசாலி(வயது 33). இவர் கடந்த 2-ந்தேதி தனது சகோதரர் செய்யது என்பவருடன் மொபட்டில் வந்துள்ளார்.

    கருத்தப்பிள்ளையூர் சாலையில் முகமது வைசாலி மொபட்டை ஓட்டி வந்தபோது கனமழை பெய்துள்ளது. அப்போது சாலை பள்ளத்தில் சறுக்கி மொபட் சாலையோரம் நின்ற மரத்தில் மோதியது. இதில் வைசாலியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைசாலியை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

    • கடந்த சில நாட்களாக காட்டுமன்னார்கோவில் பகுதியில் பலத்தமழை பெய்தது.
    • இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரையும் மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர்.

    கடலூர்:  

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள டி.புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம். அவரது மனைவி நிர்மலா (வயது 49). இவர்களது மகன் அய்யப்பன். கடந்த சில நாட்களாக காட்டுமன்னார்கோவில் பகுதியில் பலத்தமழை பெய்தது. இதன் காரண மாக சோமசுந்தரத்தின் வீடு மழையில் நனைந்திருந்தது. சம்பவத்தன்று சோமசுந்தரம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார்.

    அப்போது கனமழை காரணமாக வீட்டுசுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 3 பேரும் இடிபாடு களுக்குள் சிக்கினர். அவர்கள் வேதனையால் அலறிதுடித்தனர். சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ள வர்கள் ஓடி வந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரையும் மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிர்மலா நேற்று நள்ளிரவு இறந்தார். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து டி.புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பஸ் மோதி பெண் பலியானார்.
    • திருமங்கலத்தில் இருந்து டி.கல்லுப்பட்டி சென்ற அரசு பஸ் சாலையை கடக்க முயன்ற சைக்கிள் மீது மோதியது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி சந்திரா(50). இவர்களுடைய பேரன் கார்த்திக்(வயது9). பாண்டி சைக்கிளில் மனைவியையும், பேரனையும் அமர வைத்து ஆலம்பட்டியில் உள்ள பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். திருமங்கலத்தில் இருந்து டி.கல்லுப்பட்டி சென்ற அரசு பஸ் சாலையை கடக்க முயன்ற சைக்கிள் மீது மோதியது. இதில் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்த சந்திரா படுகாயம் அடைந்தார். பாண்டிக்கும், பேரனுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 108 ஆம்புலன்சு மூலம் காயமடைந்தவர்களை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த சந்திரா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ×