search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 196711"

    • இசக்கி முத்து என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து ஆட்டோ மீது மோதினார்.
    • விபத்தில் ஆட்டோ டிரைவர் ஹேம்குமார் கால் முறிந்தது. அவர் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த ஹேம்குமார் (வயது 35). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு தனது ஆட்டோவில் காயல்பட்டினத்தில் இருந்து ஆறுமுகநேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது காயல்பட்டினம் வடக்கு முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கி முத்து (30) என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து ஆட்டோ மீது மோதினார்.

    இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் ஹேம்குமார் கால் முறிந்தது. அவர் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் இசக்கி முத்துவின் பின் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கோவில்பத்து கிராமத்திலுள்ள நெல் சேமிப்பு கிடங்கில் சுமைதூக்கும் வேலை பார்த்து வந்தார்.
    • வெள்ளப்பள்ளம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த மண்அள்ளும் எந்திரம் மோதி படுகாயமடைந்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா உம்பளச்சேரியை சேர்ந்தவர் சிவமணி (வயது30).

    இவர் வேதாரண்யம் அடுத்த கோவில்பத்து கிராமத்தில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கில் சுமைதூக்கும்வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 19ம் தேதி பணி முடித்து வெள்ளப் பள்ளம் அருகே இரு சக்கர வாகனத்தில்சென்றபோது எதிரே வந்த மண் அள்ளும் எந்திரம் மோதி படுகாயம் அடைந்தார்.

    அவரை மீட்டு நாகை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்பு மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்கசை பெற்று வந்த சிவமணி கடந்த 23ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    புகாரின் போரில் வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • கார் மோதிய வேகத்தில் ரோட்டில் இருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது.
    • இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள புன்னம் நாரப்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் சக்திவேல் (29). மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த செங்கோடன் மகன் நந்தகோபால் (26).

    இவர்கள் 2 பேரும் பவானி ஆப்பக்கூடல் மெயின் ரோடு, ஜம்பை பேரூராட்சி அலுவலகத்தின் அருகே உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து விட்டு மோட்டார் சைக்கிளுடன் ரோட்டின் ஓரமாக நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த கார் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து கார் மோதிய வேகத்தில் ரோட்டில் இருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது.

    இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவர்களை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சக்திவேல் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையிலும், நந்தகோபால் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கார் டிரைவர் அர்த்தனாரீஸ்வரர் என்பவரிடம் போலீசார் விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஜம்பையில் டீக்கடை முன்பாக ரோட்டின் ஓரம் நின்று கொண்டிருந்த வாலிபர்கள் 2 பேர் மீது கார் மோதி தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • டிரைவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கருங்கல் அணஞ்சிகோடு பகுதியை சேர்ந்தவர் சுமன் (வயது 40). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார்.சம்பவத்தன்று ஆப்பி கோட்டிற்கு சென்றுவிட்டு சுமன் வீட்டிற்கு வரும்போது பருத்திவிளை சாஸ்தா கோவில் அருகே எதிர்பாராதவிதமாக ஆட்டோ கவிழ்ந்தது.

    இதில் சுமன் பலத்த காயம் அடைந்தார். இதனைக் கண்டவர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சுமன் சிகிச்சை பெற்று வரு கிறார். இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

    • திருச்செங்கோடு, தொக்கவாடி பகுதியில் சேலம், கோவை புறவழிச்சாலையில் சாலையை மொபட்டில் கடக்க முயன்றார்.
    • அப்போது, சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார்.

    குமாரபாளையம்:

    திருச்செங்கோடு, தொக்கவாடி பகுதியில் வசிப்பவர் பரந்தாமன்(வயது 57). தொலைபேசி நிலைய ஊழியர். இவர் நேற்று எக்ஸல் கல்லூரி பிரிவு சாலை பகுதியில் சேலம், கோவை புறவழிச்சாலையில் சாலையை மொபட்டில் கடக்க முயன்றார்.

    அப்போது, சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்த பரந்தாமன் சிகிச்சைக்காக திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து குமாரபா ளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு கரடி திம்மையனை துரத்தி வலது காலை கடித்தது.
    • இது குறித்து கேர்மாளம் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் கடம்பூர்- கேர்மாளம் இடையே உள்ள கோட்டமாளத்தை சேர்ந்தவர் திம்மையன் (45). வனப்பகுதியை ஒட்டி உள்ள நிலத்தில் நேற்று மாலை மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு கரடி திம்மையனை துரத்தி வலது காலை கடித்தது. வலியால் அவர் அலறவே அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று கரடியை விரட்டினர்.

    பின்னர் அவர் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கேர்மாளம் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே லாரிகள் மோதியதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
    • இதனால் சிறிது நேரம் திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழி சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

    திருமங்கலம்

    கடலூர் மாவட்டத்தி லிருந்து நெல் மூைடகளை ஏற்றிக்கொண்டு நெல்லை மாவட்டம் ஆலங்குளத்திற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று காலை மதுரை மாவட்டம் திருமங்கலம்-விருதுநகர் 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.

    ராஜபாளையம் சாலை பிரியும் இடத்திற்கு அருகே உள்ள பாலத்தில் சென்றபோது ஓசூரில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு நெல்லைக்கு சென்ற லாரி முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காய்கறி லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. அதனை ஓட்டி வந்த டிரைவர் நெல்லையைச் சேர்ந்த பொன்ராஜ் (வயது 25) என்பவர் படுகா யமடைந்தார்.

    உடனே அந்த வழியாக வந்தவர்கள் விபத்தில் சிக்கிய அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நெடுஞ்சாலை உதவி வாகனத்திற்கு தகவல் அளித்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியில் சிக்கிய வேன் மீட்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழி சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

    • ஜே.சி.பி.எந்திரம் மோதி 3 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
    • இந்த விபத்து தொடர்பாக செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜே.சி.பி. டிரைவரான அ.கொக்குளத்தை சேர்ந்த விஜயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அருள்தாஸ்புரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துபாண்டி. இவரது மகன் அஜித் (வயது 17). சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் மாசாணம் (20), ராஜ்குமார் (21) ஆகியோரும் அவருடன் சென்றனர்.

    ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர்கள் செக்கானூரணி-விக்ரமங்கலம் ரோட்டில் சென்ற போது எதிரே வந்த ஜே.சி.பி. எந்திரம் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அஜித், மாசாணம், ராஜ்குமார் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து தொடர்பாக செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜே.சி.பி. டிரைவரான அ.கொக்குளத்தை சேர்ந்த விஜயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • படுகாயம் அடைந்த சிறுவனுக்கு நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • 15 வயது சிறுவன் மற்றும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சிறுவனுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு கொடுத்ததாக சிறுவனின் தந்தை நெல்சன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமாரி:

    மண்டைக்காடு அருகே உள்ள சேரமங்கலம் மருதிவிளையை சேர்ந்தவர் ராஜன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் டாரியோ (வயது6). புதூரில் ஒரு தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறான்.

    சம்பவத்தன்று டாரியோ தனது அக்கா, பாட்டி தங்கத்துடன் உறவினர் வீட்டிற்கு செல்ல வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளான். அப்போது அந்த வழியாக சக்கப்பற்றை சேர்ந்த 15 வயது சிறுவன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராமல் டாரியோ மீது மோதியது. இதில் டாரியோவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியினர் டாரியோவை மீட்டு நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து டாரியோ வின் தாய் டோன் ஜெரின் பபி மண்டைக்காடு போலீ சில் புகார் செய்தார். போலீ சார் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற சக்கப்பற்றை சேர்ந்த 15 வயது சிறுவன் மற்றும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சிறுவனுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு கொடுத்ததாக சிறுவனின் தந்தை நெல்சன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இடிந்து விழுந்த கட்டிடம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் இருக்கும்.
    • தந்தையும் மகளும் வெளியே கிளம்புவதற்காக சென்ற நிலையில் வீட்டின் பின்புறம் இருந்த கழிவறை சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை 2-ம் தெருவில் 11 வீடுகள் கொண்ட குடியிருப்பு உள்ளது.

    இந்த கட்டிடம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த கட்டிடம் முறையான பராமரிக்கப்படாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் அந்த குடியிருப்பில் ஒரு வீட்டில் வசித்து வருபவர் ரஹீம் (45). இவர் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு செய்யதலிபாத்திமா என்ற மனைவியும், ரபீக் (9) என்ற மகனும், ரூபினா (7) என்ற மகளும் உள்ளனர். இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக ரஹீம் கிளம்பினர்.

    அப்போது 2-ம் வகுப்பு படிக்கும் அவருடைய மகள் ரூபினாவும் கிளம்புவதற்காக சென்ற நிலையில் வீட்டின் பின்புறம் இருந்த கழிவறை சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

    இதில் ரூபினா மற்றும் அவரது தந்தை ரஹீம் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து அக்கம்பக்கத்தினர் அவர்களை உடனடியாக மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    • பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த 12 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.
    • இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் இரவு பெருந்துறையை அடுத்துள்ள சரளை ஏரிகருப்பராயன் கோவில் அருகே சென்றது. அப்போது பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது.

    இதில் பஸ்சில் பயணம் செய்த 12 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். பஸ்சில் இருந்தவர்களின் அலறல் சுத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டனர்.

    பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ஈரோடு பகுதியை சேர்ந்த கீர்த்தி (26), அவரது தாயார் சரஸ்வதி (55), முகமது ஹுசைன் (49), சுல்தான் (49), முனீரியா (46), நசீமா பானு (18), முரளி (34), அன்புக்கரசி (50), சிவஞானம் (53), ரஹிக் (31), ரஷீதா பேகம் (20) மற்றும் பஸ் டிரைவர் பெருந்துறை சேர்ந்த மோகன்ராஜ் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • டீசல் டேங்க் -ஐ துண்டிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த டீசல் டேங்க் வெடித்தது.
    • உடனே அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர் .இதனால் அக்கம் பக்கம் தீ வராமல் தடுக்கப்பட்டது.

    கொண்டலாம்பட்டி:

    சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை சன்னியாசிகுண்டு அருகே உள்ள பகுதியில் விஜயகுமார் (வயது 45) என்பவர் பழைய பஸ் லாரிகளை வாங்கி, உடைக்கும் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் இன்று காலை 11.30 மணி அளவில் பழைய அரசு பேருந்தை வாங்கி வந்து உடைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

    ஓமலூர் அருகே உள்ள தண்ணீர்தொட்டி நாரன்பாளையம் பகுதியை சேர்ந்த பங்க்ராஜ் (50) என்ற தொழிலாளி கியாஸ் கட்டிங் மூலம் அந்த பேருந்தின் டீசல் டேங்க் -ஐ துண்டிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த டீசல் டேங்க் வெடித்தது. மேலும் டேங்க் முழுவதும் தீ பற்றி எரிந்தது.இதில் படுகாயம் அடைந்த பங்க்ராஜ் அலறி துடித்தார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது குறித்து ஊழியர்கள் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர் .இதனால் அக்கம் பக்கம் தீ வராமல் தடுக்கப்பட்டது.

    உடல், கை, கால், முகம் போன்ற பகுதிகளில் தீக்காய மடைந்த பங்க்ராஜ் -க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    ×