என் மலர்
நீங்கள் தேடியது "அஞ்சலி"
- குருபூஜை விழாவில் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.
- அஞ்சலி செலுத்த வருவோருக்கு ஏதுவாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
காளையார்கோவில்
மாமன்னர் மருது பாண்டியர்களின் 221-வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. நினைவிடத்தில் ஏராளமா னோர் அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்த வருவோர் முளைப்பாரி எடுத்தும், பால்குடம் எடுத்தும், வேல் குத்தியும் அஞ்சலி செலுத்தினர். சிவகங்கை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் கண்காணி க்கப்படுகின்றனர்.
மருதுபாண்டியர் குருபூஜையையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அஞ்சலி செலுத்த வருவோர் டூவீலரில் செல்ல அனுமதி இல்லை. வாடகை வாகனத்தில் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, மானா மதுரை, திருப்புவனம், இளையான்குடி, காளையார் கோவில், தேவகோட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
அஞ்சலி செலுத்த வருவோருக்கு ஏதுவாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. திரளானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- ங்கள் முன்னோர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையை சுத்தம் செய்து அதில் மெழுகுவர்த்தி மற்றும் வண்ண மலர்களால் அலங்கரித்தனர்.
- நாகர்கோவில் சி.எஸ்.ஐ. கல்லறை தோட்டங்களிலும் ஏராளமானோர் குவிந்து பிரார்த்தனை செய்தனர்.
நாகர்கோவில் :
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந் தேதியை சகல ஆத்துமாக்கள் தினமாக அனுஷ்டிப்பது வழக்கம்.
இந்நாளை கல்லறை திருநாள் என்றும் அழைப்பார்கள். இந்த நாளில் கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டங்களுக்கு சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்ட முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
அதன்படி இன்று குமரி மாவட்டம் முழுவதும் உள்ள கல்லறை தோட்டங்களில் காலை முதலே கிறிஸ்தவர்கள் குவிந்தனர். அவர்கள் தங்கள் முன்னோர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையை சுத்தம் செய்து அதில் மெழுகுவர்த்தி மற்றும் வண்ண மலர்களால் அலங்கரித்தனர்.
நாகர்கோவில் சி.எஸ்.ஐ. கல்லறை தோட்டங்களிலும் ஏராளமானோர் குவிந்து பிரார்த்தனை செய்தனர். இதுபோல கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டங்களில் இன்று மாலை சிறப்பு வழிபாடு மற்றும் திருப்பலி நடக்கிறது.
கோட்டார் சவேரியார் பேராலய கல்லறை தோட்டம், நாகர்கோவில், ராமன்புதூர், புன்னை நகர், கோணம் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளில் உள்ள கல்லறை தோட்டங்களிலும் இன்று மாலை சிறப்பு வழிபாடு மற்றும் திருப்பலி நடைபெறுகிறது.
- இயக்குனர் ராம் தற்போது ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இந்த படத்தில் நிவின் பாலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2007-ஆம் ஆண்டு வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதன்பிறகு 'தங்கமீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது 'ஏழு கடல் ஏழு மலை' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார்.

ஏழு கடல் ஏழு மலை
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

ஏழு கடல் ஏழு மலை போஸ்டர்
அதன்படி, 'ஏழு கடல் ஏழு மலை' படக்குழு நடிகை அஞ்சலியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நிவின் பாலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அஞ்சலி வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Presenting the first look of @yoursanjali in #Yezhukadalyezhumalai!#DirectorRam @sureshkamatchi @VHouseProd_Offl @sooriofficial @thisisysr #nivinpauly#anjali#soori#yuvan pic.twitter.com/Rb2h7vFBjG
— Nivin Pauly (@NivinOfficial) November 9, 2022
- அஞ்சலி தற்போது நடித்துள்ள வெப் தொடர் 'ஃபால்'.
- இயக்குனர் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது.
'அங்காடி தெரு' படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

ஃபால்
இதையடுத்து இயக்குனர் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஃபால்' வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் "வெர்டிஜ்" எனும் கனடிய வெப் தொடரின் ரீமேக்காகும். இதில், எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ஃபால்
இந்த தொடருக்கு அஜேஷ் இசையமைக்க கிஷன் சி செழியன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இத்தொடரை இயக்குவது மட்டுமல்லாமல் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் இயக்குனர் சித்தார்த் ராமசாமி. இந்த தொடரின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

ஃபால்
இந்நிலையில், இந்த தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. மர்மங்களும் குழப்பங்களும் நிறைந்ததாக வெளியாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. 'ஃபால்' வெப் தொடர் வருகிற டிசம்பர் 9 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வேன் குளத்தில் கவிழ்ந்து ஆசிரியர் சுகந்தி மற்றும் 9 மாணவர்கள் உயிரிழந்தனர்.
- பெற்றோர்கள், ஆசிரியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து மலர் தூவி அஞ்சலி .
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா நாகக்குடையான் அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு வேன் குளத்தில் கவிழ்ந்து ஆசிரியர் சுகந்தி மற்றும் 9 மாணவ - மாணவிகள் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் நினைவாக நாகக்குடையான் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூண் அருகே 13 ஆம் ஆண்டு நினைவு நாளில் உயிரிழந்த குழந்தைகளுக்கு ஆசிரியைக்கும் ஊர் மக்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
- தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்தவர் அஞ்சலி.
- அஞ்சலிக்கு திருமணம் முடிவாகி விட்டதாக வெளியான தகவலுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அஞ்சலி, தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். தற்போது அஞ்சலிக்கு 36 வயது ஆனாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சில நடிகர்களுடன் அஞ்சலியை இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்து அடங்கியது. நடிகர் ஜெய்யுடன் காதல் மலர்ந்ததாகவும், பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாகவும் பேசினர். இதற்கெல்லாம் அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

அஞ்சலி
இந்த நிலையில் அஞ்சலிக்கு திருமணம் முடிவாகி விட்டதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் புதிய தகவல் பரவி வருகிறது. இதற்கு அஞ்சலி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ''நான் இப்போது திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இல்லை. திருமணத்தை பற்றி யோசிக்கவே இல்லை. ஆனாலும் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். திருமணம் முடிவானதும் மறைக்காமல் எல்லோருக்கும் தெரியப்படுத்துவேன்" என்றார்.
- முன்னாள் அ.தி.மு.க. எம்.பி. ராதாகிருஷ்ணன் திடீரென மரணமடைந்தார்.
- அவருக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி- அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
சிவகாசி
சிவகாசியில் முன்னாள் அ.தி.மு.க. எம்.பி. ராதா கிருஷ்ணன் நேற்று திடீரென மரணமடைந்தார்.
சிவகாசி அருகே உள்ள வடபட்டியை சேர்ந்தவர் டி.ராதாகிருஷ்ணன் (வயது 67). 2014-ம் ஆண்டு நடந்த விருதுநகர் நாடாளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளராகவும், 3 முறை சிவகாசி யூனியன் தலைவராகவும் இருந்துள்ளார். அ.தி.மு.க. வில் பல்வேறு பதவிகள் வகித்த இவர், தற்போது விருதுநகர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளராக இருந்தார்.
ராதாகிருஷ்ணனுக்கு நேற்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடலுக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலா ளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, அ.தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் கருப்பசாமி, வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க. மாநில வர்த்தக அணி துணைத்தலைவர் வனராஜா, சிவகாசி தி.மு.க. ஒன்றிய செயலாளரும், யூனியன் துணைத்தலை வருமான விவேகன்ராஜ், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.ஏ.சந்திரன், விருதுநகர் அ.ம.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் பயில்வான்சந்தோஷ்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் சி.எம்.ராஜா உட்பட அரசியல் கட்சி நிர்வாகிகளும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
ராதாகிருஷ்ணனின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான சிவகாசி அருகே உள்ள வடபட்டி மேலூர் கிராமத்தில் இன்று மாலை நடக்கிறது.
ராதாகிருஷ்ணனின் மகன் தர்மராஜாவை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
- மேலூர் அருகே இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
- ஊர்வலமாக எடுத்துச்சென்று பெரிய கண்மாய் அருகே காளையை அடக்கம் செய்தனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சேக்கிபட்டியில் முத்தாலம்மன் கோவிலுக்கு சொந்தமான கோவில் காளை உள்ளது. இந்த காளை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்பட பல ஊர்களில் நடைபெற்ற பிரபலமான மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. இந்த நிலை உடல்நலக்குறைவு காரணமாக காளை நேற்று இரவு இறந்தது.
இதையடுத்து அந்த காளைக்கு ஜாதி மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று பெரிய கண்மாய் அருகே காளையை அடக்கம் செய்தனர்.
- எம்.ஜி.ஆர். படத்துக்கு அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.
- முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம்.

ஓ.பி.எஸ். அணி ஒன்றிய செயலாளர் முத்து முருகன் தலைமையில் எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ராமநாதபுரம்
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமை யில் நகர் சார்பில் செயலாளர் பொறியாளர் பால் பாண்டியன் ஏற்பாட்டில் அரண்மனை முன்பு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் தூவி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரத்தினம், மாவட்ட அவைத் தலைவர் சாமிநாதன், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து துறை துணைச் செயலாளர் ரத்தினம், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அசோக் குமார், நகர அவை தலைவர் ராமமூர்த்தி, வட்ட செயலாளர் ராம சேது, சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் சரவணகுமார் (தகவல் தொழில்நுட்ப பிரிவு), சேது பாலசிங்கம் (பேரவை), ஸ்டாலின் என்ற ஜெயசந்திரன் (இளை ஞரணி), செந்தில்குமார் (மாணவரணி), நகர் துணைச் செயலாளர் ஆரிப்ராஜா, இளைஞரணி துணை செயலாளர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஓ.பி.எஸ். அணி செயலாளர் தர்மர் வழிகாட்டுதலின்படி எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் ராமநாதபுரம் நகர செயலாளர் பாலசுப்பி ரமணியன் தலைமையில் நடந்தது.
நகர் இளைஞர் பாசறை செயலாளர் பார்த்தசாரதி, ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் முத்து முருகன், கோட்டைசாமி, நிர்வாகிகள் முனிய சாமி, கோவிந்தராஜ், ராஜ்கு மார், செல்வம், சேகர், அறிவழகன், கணேசன், ஸ்ரீபாகன் மணிகண்டன், முத்துகிருஷ்ணன், அழகம்மாள், பிரியா, தொகுதி நிர்வாகி முத்துப் பாண்டி, மாவட்ட விவசாய பிரிவு மாரிமுத்து, மூத்த நிர்வாகி முத்துகிருஷ்ணன் உள்பட பலர் எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் முத்து முருகன் தலைமையில், ராமநாதபுரம் பாரதி நகரில் எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட அவைத் தலைவரும், ஒன்றிய முன்னாள் தலைவருமான ராஜேந் திரன், நாரணமங்கலம் ஊராட்சி செயலாளர் சுரேஷ், ராமநாதபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் கோட்டைச்சாமி, ராமநாத புரம் நகர் செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய முன்னாள் கவுன்சிலர்கள் கழுகூரணி பூபதி, புத்தேந்தல் கல்யாணி, காருகுடி முத்துராமலிங்கம், சுப்புத்தேவன் வலசை ஊராட்சி செயலாளர் சோம சுந்தரம், தூளிவலசை கிளை செயலாளர் திருமுருகன், சக்கரக்கோட்டை ஊராட்சி உறுப்பினர் நல்லதம்பி உள்பட பலர் எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- ராஜ்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நல குறைவு காரணமாக காலமானார்.
- பாதுகாப்பு படை வீரர்கள் 21 குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
காரிமங்கலம்,
காரிமங்கலம் அடுத்த நாகனம்பட்டி ஊராட்சி சங்கனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 36). இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக டில்லி அருகே பணிபுரிந்து வந்தார்.
ராஜ்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நல குறைவு காரணமாக காலமானார். அவருடைய உடல் நேற்று மதியம் அவருடைய சொந்த ஊரான சங்கனம்பட்டி கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அங்கு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 21 குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
வட்டாட்சியர் சுகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், வருவாய் ஆய்வாளர் மணி மணி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் அவருடைய உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இறந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் ராஜ்குமாருக்கு சித்ரா என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.
- கொட்டில்பாடு குழந்தை ஏசு காலனியில் இருந்து மவுன ஊர்வலம் நடைபெற்றது.
- கல்லறை தோட்டத்தில் மெழுகுவர்த்தி ஏந்தியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
கன்னியாகுமரி:
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த 2004-ம் ஆண்டு கடலில் ஏற்பட்ட சுனாமி பேரலை கடற்கரை கிராமங்களை புரட்டி போட்டது.
குமரி மாவட்டத்திலும் சுனாமி ஆழி பேரலை ஏற்படுத்திய கோர தாண்டவத்தில் ஏராளமானோர் பலியானார்கள். குளச்சல் பகுதியில் 414 பேர் சுனாமிக்கு இறந்தனர். அவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. அதே போல் கொட்டில்பாடு மீனவர் கிராமத்தில் பலியான 199 பேர் உடல்களும் ஒரே இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டன.
சுனாமியால் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் நினைவு ஸ்தூபிகளும் அமைக்கப்பட்டன. இங்கு ஆண்டு தோறும் டிசம்பர் 26-ந் தேதி, பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கொட்டில்பாடு பகுதியில் உள்ள நினைவு ஸ்தூபியில் பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக இன்று காலை கொட்டில்பாடு குழந்தை ஏசு காலனியில் இருந்து மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மவுன ஊர்வலம், நினைவு ஸ்தூபி வரை சென்றது. அங்கு மலர் தூவியும் மலர் வளையம் வைத்தும் ஊர்வலத்தில் வந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து புனித அலெக்ஸ் சர்ச்சில், நினைவு திருப்பலி நடந்தது.
பங்குத் தந்தை ராஜ் தலைமையில் பங்குந்தந்தைகள் சர்ச்சில், ஜேசுதாஸ், ஜிந்தோ ஆகியோர் திருப்பலியை நடத்தினர். இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கொட்டில்பாடு நினைவு ஸ்தூபியில் மலர் தூவியும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவு ஸ்தூபியிலும் இன்று ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பயிற்சி கலெக்டர் குணால் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மணக்குடி புனித அந்திரேயா ஆலயத்தில் சுனாமியால் பலியானவர்களின் நினைவாக இன்று காலை திருப்பலி நடந்தது. தொடர்ந்து அங்கிருந்து 500-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் அங்குள்ள கல்லறை தோட்டத்தில் மெழுகுவர்த்தி ஏந்தியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
- சிக்கிம் மாநிலத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது
- நிகழ்ச்சியானது புள்ளம்பாடி முன்னாள் படை வீரர் நல சங்கத் தலைவர் அமலதாஸ் தலைமையில் நடைபெற்றது.
டால்மியாபுரம்:
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் புள்ளம்பாடி அண்ணா சிலை அருகில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வடக்கு சிக்கிம் மாநிலத்தில் பயணத்தின் பொழுது உயிரிழந்த 16 ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் நிகழ்ச்சியானது புள்ளம்பாடி முன்னாள் படை வீரர் நல சங்கத் தலைவர் அமலதாஸ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் மார்ட்டின் ஜோசப் மற்றும் முன்னாள் படை வீரர் நல சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.