search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணையதளம்"

    • போட்டித்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டம்
    • மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப் பணிகளுக்கு போட்டித்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது.

    கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

    இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை தஞ்சாவூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்றுக் கொள்ளலாம்.

    விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணைய தளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பூர்த்தி செய்து தஞ்சாவூர் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 873/4 அறிஞர் அண்ணாசாலை, கீழவாசல் தஞ்சாவூர் - 613001 என்ற முகவரியில் இயங்கும் தஞ்சாவூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட தகவலை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

    • தொழிலாளா்கள் அனைவரும் இ.எஸ்.ஐ. சட்டப்படி இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
    • மாநில அரசின் கீழுள்ள 58 இ.எஸ்.ஐ. மருந்தகங்கள், 2 நடமாடும் மருந்தகங்கள், இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மூலமாக மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    திருப்பூர் :

    இ.எஸ்.ஐ. திட்டத்தில் பயனடைய தொழிலாளா்கள் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    கோவை, திருப்பூா், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரியம் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணிபுரியும் ரூ.21 ஆயிரம் வரை மாத ஊதியம் பெறும் தொழிலாளா்கள் அனைவரும் இ.எஸ்.ஐ. சட்டப்படி இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இ.எஸ்.ஐ.காா்ப்பரேஷனின் 18 கிளை அலுவலகங்கள் மூலம் இ.எஸ்.ஐ. காப்பீட்டாளா்களுக்கு பணப் பயன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர மாநில அரசின் கீழுள்ள 58 இ.எஸ்.ஐ. மருந்தகங்கள், 2 நடமாடும் மருந்தகங்கள், இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மூலமாக மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    பொதுமக்கள் குறைகேட்பு முகாம்,இஎஸ்.ஐ.காா்ப்பரேஷன் தலைமை அலுவலகம், மண்டல அலுவலகம், சாா் மண்டல அலுவலகம், கிளை அலுவலகம், இ.எஸ்.ஐ.மருந்தகங்கள், மருத்துவமனைகளில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. காப்பீட்டாளா்களின் புகாா்களுக்கு தீா்வு காணும் வகையில் கோவை சாா் மண்டல அலுவலகத்தில் 0422-2314430, 2362329 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    புகாா் எண்கள்: பணப் பயன்கள் குறித்த புகாா்களை கோவை, ராமநாதபுரத்தில் உள்ள பொது மக்கள் குறைதீா் அலுவலகத்திலும், 0422-2362329 என்ற எண்ணிலும், இ.எஸ்.ஐ. மருந்தகம் குறித்த புகாா்களை சிங்காநல்லூரில் உள்ள மண்டல நிா்வாக மருத்துவ அதிகாரி அலுவலகத்திலும், 0422-2595078 என்ற எண்ணிலும், இ.எஸ்.ஐ. மருத்துவமனை தொடா்பான புகாா்களை கல்லூரி முதல்வா், கண்காணிப்பாளா் ஆகியோரிடம் நேரிலும் மருத்துவ செலவீடு தொடா்பான புகாா்களை சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநில மருத்துவ அதிகாரி அலுவலகத்திலும் 044-28267080 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்.

    • பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
    • wlw2020atrtpr@gmail.com என்ற இணையதளத்தில் 28 ந் தேதி மாலை 5:30 மணிக்குள் பதிவேற்ற வேண்டும்.

    உடுமலை :

    வனஉயிரின வார விழா ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரத்தில் (2 முதல் 8 -ந்தேதி வரை) கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து உடுமலை ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் க.கணேசராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டத்தில் வன உயிரின வார விழாவினை கொண்டாடும் விதமாக பல்வேறு விதமான போட்டிகள் நடத்துவதற்கு வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது.அதில் ஓவியம், கட்டுரை,பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது.ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் இணைய வழி மூலமாகவும், பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நேரடியாகவும் நடத்தப்பட உள்ளது.

    மாணவ- மாணவிகள் தங்களது ஓவியம் மற்றும் கட்டுரை விவரங்களை wlw2020atrtpr@gmail.com என்ற இணைய தளத்தில் வருகின்ற 28 ந் தேதி மாலை 5:30 மணிக்குள் பதிவேற்ற வேண்டும்.வினாடி வினா மற்றும் பேச்சுப் போட்டியானது உடுமலையில் உள்ள ஆர்.ஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். விழாவிற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்துள்ளனர்.  

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணை யத்தின் வழிகாட்டுதலின்படி வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் செம்மை யாக்கும் பொருட்டும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்கா ளர்களின் தனி தகவலை உறுதிப்படுத்தி டவும், ஒரு வாக்காளரின் விவ ரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது இருவேறு தொகுதிகளில் இடம் பெறுதல் ஆகியவற்றை தவிர்க்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    அதன்படி குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்கா ளர்கள் தாமாக முன் வந்து https://www.nvsp.in என்ற இணையதளத்திலும் அல்லது வோட்டர் ஹெல்ப் லைன் என்ற செயலி மூலமாகவும் இணைத்து வருகிறார்கள். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கொண்டு வரும் படிவம் 6பியில் பூர்த்தி செய்து கொடுத்தும், வாக்காளர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வாக்கா ளர் பதிவு அலுவலர்கள், வாக்காளர் உதவி மையம் மற்றும் இ-சேவை மையத் தினை அணுகியும் ஆதார் விவரங்களை சமர்ப்பித்து தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட் டையுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவ மாணவிகள் பலரும் செல்போன்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
    • செல்போனை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் அருகே உள்ள ஏ.வி.பி. பள்ளியில் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நவீன காலத்திற்கு ஏற்ப செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக மாணவ மாணவிகள் பலரும் செல்போன்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். நாம் செல்போனை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம். நமது தேவைகளுக்கு மட்டும் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு இணையதளம் மூலமாக தெரியாத நபர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். மேலும் தங்களது செல்போன் எண்களை கொடுக்கக் கூடாது. மாணவிகள் தெரியாத நபர்களை நம்பி புகைப்படங்களை அனுப்பக்கூடாது. அவ்வாறு புகைப்படங்களை அனுப்பினால் அவை தவறாக பயன்படுத்தக்கூடும் வாய்ப்புள்ளது. எனவே மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தேவைக்கு மட்டும் செல்போன்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுபோல் வீடுகளில் உள்ள தங்களது பெற்றோர்களிடமும் தற்போது நடந்து வருகிற மோசடிகள் குறித்து தெரிவிக்க வேண்டும். வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏடிஎம் அட்டை எண்களை பெறுகிறவர்கள், நமக்கு தெரியாமலே பணத்தை எடுக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே மாணவ மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம், வங்கி விவரங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டால் தெரிவிக்கக் கூடாது என அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சையது ரபிக் சிக்கந்தர், வடக்கு மகளிர் அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கனகவல்லி மற்றும் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு உரையாற்றினர்.

    • சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சியில் இணையதள செயலிழப்பால் பணிகள் பாதிப்படைந்தனர்.
    • இணையதள சர்வர் சரிவர இயங்காததால் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சியில் சில தினங்களாக வரைபடப் பிரிவு, பிறப்பு-இறப்பு சான்றிதழ் பிரிவு, வரி வசூல் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் இணையதள சர்வர் சரிவர இயங்காததால் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.

    இதனால் பிறப்பு-இறப்பு சான்றிதழ் கேட்டு மனு செய்தவர்கள், வீடு கட்டுவதற்காக வரைபட அனுமதி கேட்டு காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு தாராளமாக பொதுமக்களிடம் புழங்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தனர். பொதுமக்களின் தேவைகளை அறிந்து உடனடி தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • குறிப்பாக வாட்ஸ்அப்பில் மாவட்ட கலெக்டர் பெயரில், மாவட்ட கலெக்டர் புகைப்படத்துடன் அமேசான் செயலிகள் மூலம் ஆன்லைன் வாயிலாக கிஃட் கார்டு உள்ளிட்டவற்றிற்கு தங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்திட கேட்டு செய்திகள் அனுப்பப்படுகின்றன.
    • மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 9442626792 என்ற வாட்ஸ் அப் எண்களில் புகார் அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மயிலாடுதுறை:

    வாட்ஸ்அப் உள்ளிட்ட இணையதளத்தில் போலியான பெயரில் கணக்குகளை வைத்திருக்கும், பொதுமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களிடம் பணமோசடிக்கான முயற்சிகள் தற்பொழுது நடத்தப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன.

    குறிப்பாக வாட்ஸ்அப்பில் மாவட்ட கலெக்டர் பெயரில், மாவட்ட கலெக்டர் புகைப்படத்துடன் அமேசான் செயலிகள் மூலம் ஆன்லைன் வாயிலாக கிஃட் கார்டு உள்ளிட்டவற்றிற்கு தங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்திட கேட்டு செய்திகள் அனுப்பப்படுகின்றன. இதுபோன்ற பணமோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்படுள்ளது.

    எனவே பொதுமக்கள், அரசுத்துறை அலுவலர்கள் கவனமாக இருப்பதுடன் போலியாக உருவாக்கப்படும் வெவ்வேறு செல்போன் எண்கள் வயிலாக பணம் கேட்பவர்களை முற்றிலும் புறக்கணித்து உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 9442626792 என்ற வாட்ஸ் அப் எண்களில் புகார் அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • வயது 18-ல் இருந்து 59 வயதுக்குள் இருக்க வேண்டும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் கட்டுமான தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள், பேக்கிங், தச்சுவேலை, கல்குவாரி, மரஆலை, உள்ளூர் கூலித்தொழிலாளர்கள், முடிதிருத்துவோர், தெரு வியாபாரிகள், சிறுவியாபாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், நூறு நாள் வேலைதிட்ட பணியாளர்கள், பால் வியாபாரிகள், மீனவர்கள், செங்கல்சூளை, தையல், பட்டு வளர்ப்பு, துப்புரவு தொழிலாளர்கள், சாயப்பட்டறை தொழிலாளர்கள், டிரைவர், நடைபாதை வியாபாரிகள் என 156 வகையான அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களது விவரங்களை இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் இ-ஸ்ராம் (e-shram) அல்லது என்டியூடபுள்யூ (nduw) இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் தங்களது ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், அலைபேசி எண் ஆகியவற்றுடன் பொதுசேவை மையத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம். அல்லது இணைய வசதி இருப்பின் தாங்களாகவே பதிவு செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்வதற்கான வயது 18-ல் இருந்து 59 வயதுக்குள் இருக்க வேண்டும். வருமான வரி செலுத்துபவராக இருக்கக்கூடாது. இ.எஸ்.ஐ. சேமநலநிதி பிடித்தம் செய்யும் பணியாளராக இருக்க கூடாது. தொழிலாளர்கள் அரசுக்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • நடப்பாண்டுக்கான நீட் தேர்வு வருகிற 17ந் தேதி நடக்கிறது.
    • திருப்பூர் மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளரின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

    திருப்பூர் :

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.இத்தேர்வினை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.,) ஆண்டுதோறும் நடத்துகிறது. நடப்பாண்டுக்கான நீட் தேர்வு வருகிற 17ந் தேதி நடக்கிறது.தேர்வுக்கான நுழைவுச்சீட்டு விரைவில் வெளியிடப்படும்.

    கூடுதல் தகவல்களை, www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.ஏதேனும் சந்தேகம் இருப்பின் திருப்பூர் மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளரின் 73734 48484 மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.திருப்பூர் நகரப்புற நீட் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கே.எம்.சி., பப்ளிக் பள்ளி முதல்வருமான நாகமணி கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் நீட் தேர்வினை ஒருங்கிணைத்து நடத்தி முடிக்கும் பொறுப்பு, பெருமாநல்லூர் கே.எம்.சி., பப்ளிக் பள்ளிக்கு என்.டி.ஏ., வழங்கியுள்ளது. இந்த முறை ஈரோடு மாவட்ட மையங்களையும் ஒருங்கிணைத்து நடத்த உள்ளோம்.

    திருப்பூரில் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லூரி, கூலிபாளையம் வித்யாசாகர் பப்ளிக் பள்ளியிலும், உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லூரி சூரி என்ஜினீயரிங் கல்லூரி விஜயமங்கலம், கோபி கலை அறிவியல் கல்லூரி கோபிசெட்டிபாளையம் ஆகிய இடங்களில் மையம் அமைய உள்ளது.என்.டி.ஏ., அறிவுறுத்தலின் கீழ் அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு, உதவிபெறும், சுயநிதி கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகழகங்களில் உயர்கல்வியை தொடரும் மாணவிகள் கல்வி ஊக்கதொகை பயன்பெறலாம்.
    • சர்வர் கோளாறு காரணமாக விண்ணப்பிக்க முடியாமல் மாணவிகள் தவிக்கின்றனர்.

    திருப்பூர் :

    தொழில்நுட்ப கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்வி இளநிலை பயிலும் மாணவிகளுக்கு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை திட் டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. அரசுப் பள்ளிகளில் பயின்று, கல்லூரிகளில் உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்படும்.

    இதன்கீழ்அரசு பள்ளிகளில் நகராட்சி, மாநகராட்சி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகள், கள்ளர் மீட்பு பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் மற்றும் அரசு துறைகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படித்து தற்போது அரசு, உதவிபெறும், சுயநிதி கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகழகங்களில் உயர்கல்வியை தொடரும் மாணவிகள் பயன்பெறலாம்.

    இத்திட்டத்தை செயல்படுத்த https://penkalvi.tn.gov.in என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாதம் 30ந் தேதிக்குள் தகுதியான மாணவர்கள் தங்கள் விவரங்களை உள்ளீடு செய்ய அறிவுத்தப்பட்டுள்ளது.இதற்கென பிரத்யேக மையங்கள் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சர்வர் கோளாறு காரணமாக பாதியில் இணையதளம் முடங்கிவிடுதால் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

    திருப்பூர் எல்.ஆர்.ஜி., மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் எழிலி கூறுகையில், அரசு கலை கல்லூரியை பொருத்தவரை அரசு பள்ளி மாணவிகளே அதிகம் சேர்கின்றனர். வகுப்பில் 85 சதவீதம் பேர் இதற்கு தகுதிபெறுவர். இளநிலை பயிலும் மாணவிகளிடமிருந்து அவர்களது சுய விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் பயின்ற அரசு பள்ளி விவரங்கள் கேட்கப்படும்.சர்வர் பிரச்சினையால் பாதியிலேயே இணையதளம் முடங்கிவிடுகிறது. நாளொன்றுக்கு 5 சதவீதம் பேர் மட்டுமே விண்ணப்பிக்க முடிகிறது. கூடுதல் அவகாசம் வழங்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்

    சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் கூறுகையில், மாணவிகள், ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 10 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல்கள் அவசியம் தேவை. பொறுப்பாசிரியர்கள் இதனை உள்ளீடு செய்ய வேண்டும். துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும்.மாணவிகளின் செல்போனிற்கு ஓ.டி.பி., அனுப்பப்படும். இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவிகள் தேர்வு நடைபெற்றாலும் தேர்வு முடிந்த பிறகு இந்த விவரங்களை உள்ளீடு செய்கின்றனர். இணைய வசதி உள்ள மாணவிகள் தாங்களாகவே தங்களது செல்போன் அல்லது கணினி வாயிலாக பதிவேற்றம் செய்யலாம் என்றார்.

    • அட்மிஷன் பெற ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு வர வேண்டாம்.
    • ஒவ்வொரு மாணவிக்கு ஒரு தேதி குறிப்பிட்டு பதில் அனுப்பப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6,000 மாணவிகள் கல்வி கற்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 500க்கும் அதிகமான மாணவிகள் எழுதுகின்றனர். கூடுதல் எண்ணிக்கையிலான மாணவிகள் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வை எதிர்கொள்கின்றனர். நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவிகள் இப்பள்ளியில் சேர ஒவ்வொரு ஆண்டும் போட்டி போடுவர்.

    பெற்றோரின் கடைசி நேர சிரமங்களை தவிர்க்க தேர்வு முடிவு வெளியாகும் இந்நாளில் பிற பள்ளி மாணவிகள்விண்ணப்பம், அட்மிஷன் பெற ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு வர வேண்டாம். தங்களது பெயர், முகவரி, ஏற்கனவே படித்த பள்ளி, பெற்ற மதிப்பெண் உள்ளிட்ட விபரங்களை http://www.javabaimghss.com என்ற இணையதள லிங்க்கில் பதிவு செய்தால் போதும். ஒவ்வொரு மாணவிக்கு ஒரு தேதி குறிப்பிட்டு பதில் அனுப்பப்படும். அந்நாளில் முழு விபரங்களுடன் பள்ளிக்கு வந்தால் போதுமானது என ஜெய்வாபாய் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா அமலோற்பமேரி தெரிவித்தார்.

    • பெற்றோருக்கு தெரியாமல் தனியாக வரக்கூடாது என்று சிறுமிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
    • பஸ் நிலையத்தில் தனியாக நின்ற சிறுமியை கண்டறிந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

    மதுரை:

    மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் கடந்த 17-ந் தேதி அதிகாலை நேரத்தில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அந்த சிறுமியை அழைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் சென்னையை சேர்ந்தவர் என்பதும், சமூக வலைதளம் மூலம் பழகிய ஒரு வாலிபரை பார்ப்பதற்காக தனியாக மதுரை வந்திருப்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரித்த போது, கடந்த ஒரு வருடமாக அந்த வாலிபரிடம் ஷேர்சாட் மூலம் பழகி வந்ததாகவும், அவரை பார்க்க பெற்றோருக்கு தெரியாமல் வந்ததாகவும் தெரிவித்தார்.

    சிறுமி கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் மேலும் விசாரணை நடத்தியதில், அவர் மாயமானது குறித்து அவரது பெற்றோர் சென்னை பாண்டி பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து சென்னை போலீசார் உதவியுடன் சிறுமியின் பெற்றோர் மதுரைக்கு வந்தனர். பின்பு பெற்றோருக்கு தெரியாமல் இப்படியெல்லாம் தனியாக வரக்கூடாது என்று சிறுமிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    பஸ் நிலையத்தில் தனியாக நின்ற சிறுமியை கண்டறிந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர். இதுகுறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறியதாவது:-

    தற்போதைய அறிவியல் வளர்ச்சியின் காரணமாக செல்போன் மற்றும் கணினி போன்ற சாதனங்களால் அனைவரும் அனைத்தும் எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் அந்த சாதனங்கள் மூலம் பயன்படுத்தும் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் முகம் தெரியாத நபர் மூலம் அறிமுகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கைப்பேசி மற்றும் கணினி ஆகியவற்றை பயன்படுத்த கொடுக்கும்போது அவ்வப்போது அவர்களை கண்காணிக்க வேண்டும். அவர்கள் தேவையில்லாத நபர்களுடன் தொடர்பு கொள்வது தெரியவந்தால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை எடுத்துக்கூற வேண்டும்.

    மேலும் அவர்கள் பயன்படுத்தும் செயலிகள் மூலம் யாரேனும் அவர்களுக்கு பாலியல் தொந்தரவு செய்கிறார்களா? என்பதையும் விசாரிக்க வேண்டும். அந்த செயலிகள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வது தெரியவந்தால் உடனே போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும்.

    இது தவிர போலீஸ் செயலியான எஸ்.ஓ.எஸ்., சிறப்பு கட்டுப்பாட்டு அறை எண் 1098, 1091, 181 மற்றும் மதுரை மாநகர் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 0452-2530070, 2530100, வாட்ஸ்அப் எண் 83000 21100 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×