search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேவை"

    • முன்னாள் ராணுவ வீரர்கள் 25 பேருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • பள்ளி மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம் சார்பாக சுதந்திர தினத்தையொட்டி வி.ஐ.ஏ ஷிப் கேட்டரிங் கல்லூரி ரோட்ராக்ட் சங்கத்துடன் இணைந்து கல்லூரி வளாகத்திலும் அதனைத் தொடர்ந்து மணி பல்நோக்கு மருத்துவமனை வளாகத்திலும் டெல்டா ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ் இனிப்பு வழங்கினார்.

    தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்கள் 25 பேருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கத்தின் தொடர் சேவை திட்டமான ரத்ததான முகாம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காந்தி கருணை மருத்துவ சேவை மையத்துடன் இணைந்து மணி மருத்துவமனையில் நடைபெற்றது.

    இதில் தன்னார்வலர்கள் 35 நபர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் கொடுத்தனர். இந்நிகழ்ச்சிக்கு டெல்டா ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார் செயலாளர்ராஜதுரை பொருளாளர் அகிலன், மாவட்ட மருத்துவ சேர்மன் மணி பல்நோக்கு மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் பாபு, மண்டலம் 25ன் உதவி ஆளுநர் சிவக்குமார் கலந்து கொண்டனர்.

    சென்னை-கூடூர் இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் நாளையும், நாளை மறுநாளும் (சனி, ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    வேளச்சேரி-கும்மிடிப்பூண்டி காலை 8.50 மணி மின்சார ரெயில் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையே 2 நாட்களும், மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை காலை 9.55 மணி ரெயில் கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை இடையேயும், சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் மதியம் 1.15 மணி ரெயில் சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையேயும், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி காலை 10.25 மணி ரெயில் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையேயும், கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் காலை 11.20, 1.35 மணி ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையேயும் நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி காலை 10.25, 1.25 மணி ரெயில் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையேயும், கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் காலை 11.20, 1.35, 3.15 மணி ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையேயும், மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை மதியம் 12.40 மணி ரெயில் கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை இடையேயும், சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் மதியம் 1.15 மணி ரெயில் சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையேயும் நாளை மறுநாள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 
    கிராமப்புற ஏழை பெண்களுக்காக பணியாற்றும் மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளைக்கு அவ்வையார் விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
    சென்னை:

    கிராமப்புற ஏழை பெண்களுக்காக பணியாற்றும் மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளைக்கு அவ்வையார் விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டம் பில்லுச்சேரி கிராமத்தை சேர்ந்த பெ.சின்னப்பிள்ளை பெருமாள் களஞ்சியம் பெண்கள் சுய உதவிக்குழு அமைப்பின் தலைவராக பொறுப்பேற்று, கடந்த 30 வருடங்களாக கிராமப்புற ஏழை பெண்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்றி வருகிறார்.

    2 ஆயிரத்து 589 சுய உதவிக்குழுக்களை உருவாக்கி கிராமப்புற பெண்களின் வாழ்வை வெற்றிகரமாக மாற்றியது மூலம் சமுதாய மேம்பாட்டிற்கு முக்கிய பங்காற்றியுள்ளார். இதைத் தவிர அவர் கிராமப்புற பெண்களின் ஆரோக்கியத்திற்காக இலவச மருத்துவ முகாம்கள், வேளாண்மை சார்ந்த பணிகளில் பெண்களை மேம்படுத்துவதற்காக, இயற்கை முறையில் காய்கறிகளை பயிரிடுதல், மரம் நடுதல் போன்ற பணிகளை ஊக்கப்படுத்தி பெரும் பங்காற்றியுள்ளார்.

    அவருடைய மகளிர் மேம்பாட்டுப் பணிகளை பாராட்டி 2000-ம் ஆண்டு மத்திய அரசு, ஸ்ரீசக்தி புரஸ்கார் விருது வழங்கியுள்ளது.

    கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட தன்னலமற்ற சேவை புரிந்து வரும் பெ.சின்னப்பிள்ளை பெருமாளை கவுரவிக்கும் பொருட்டு, 2018-ம் ஆண்டிற்கான அவ்வையார் விருதுக்கு தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டார்.

    அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவ்வையார் விருதை வழங்கினார். விருதுடன் ரூ.1 லட்சம் காசோலை, 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி, பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

    அவ்வையார் விருதை பெற்றுக்கொண்ட சின்னப்பிள்ளை பெருமாள், தனது சமூக சேவையினை அங்கீகரித்து விருது வழங்கியமைக்காக தனது நெஞ்சார்ந்த நன்றியை முதல்-அமைச்சருக்கு தெரிவித்துக்கொண்டார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    ×