என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 199330"

    • கேரளாவிலிருந்து கழிவு பேப்பர் ஏற்றிக் கொண்டு உடுமலை அருகே உள்ள தனியார் பேப்பர் மில்லுக்கு வந்துள்ளார்.
    • இயற்கை உபாதையை கழிப்பதற்காக ரோட்டு ஓரத்தில் லாரியை நிறுத்தியுள்ளார்.

    உடுமலை :

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த மனப்பூர் பகுதியை சேர்ந்தவர் விஜி (வயது 38).டிரைவரான இவர் கேரளாவிலிருந்து கழிவு பேப்பர் ஏற்றிக் கொண்டு உடுமலை அருகே உள்ள தனியார் பேப்பர் மில்லுக்கு வந்துள்ளார். அங்கு பேப்பரை இறக்கி விட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்த அவர் அதிகாலை உடுமலை பொள்ளாச்சி ரோட்டிலுள்ள தனியார் கல்லூரி அருகில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக ரோட்டு ஓரத்தில் லாரியை நிறுத்தியுள்ளார்.

    அப்போது பின்னால் அதிவேகமாக வந்த லோடு ஆட்ேடா ஒன்று நின்று கொண்டிருந்த லாரியில் பயங்கரமாக மோதியது. இதில் மோதிய லாரியின் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கியது. அந்த லாரியில் இடது புறம் அமர்ந்திருந்த கேரள மாநிலம் மணப்புரம் பகுதியைச் சேர்ந்த கிளீனர் உன்னிகிருஷ்ணன் (வயது 52) இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த டிரைவர் ராமச்சந்திரனை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கைப்பற்றப்பட்ட மண்எண்ணை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
    • கடத்தல் ஆட்டோ வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    வட்டவழங்கல் அதிகாரி கே.புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு களியக்காவிளை அருகே பி.பி.எம் சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக கேரள பதிவெண் கொண்ட ஆட்டோ ஒன்று வந்தது.

    அந்த ஆட்டோவை நிறுத்துமாறு சைகை காட்டினர் இருந்தும் அந்த ஆட்டோ நிறுத்தாமல் சென்று விட்டது. தொடர்ந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று கோழிவிளை பகுதியில் வைத்து ஆட்டோவை மடக்கி பிடித்தனர். ஆனால் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

    ஆட்டோவை சோதனை செய்து பார்த்த போது 13 கேன்களில் சுமார் 500 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரேஷன் மண்ணெண்ணை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    ஆட்டோவில் இருந்து கைப்பற்றப்பட்ட மண்எண்ணை காப்பிக் காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் ஆட்டோ வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்ப டைக்கப்பட்டது. தப்பி ஓடிய ஓட்டுநர் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

    • நாமக்கல் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆட்டோ தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைவா் பொன்னுசாமி தலைமை வகித்தாா். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளா் வேலுசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

    மோட்டாா் வாகனச் சட்டத்தை நடை முறைப்படுத்தக் கூடாது. சட்டப் பேரவையில் இதற்கான தீா்மா னத்தை நிறைவேற்ற வேண்டும். ஆட்டோ தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • விதி மீறி இயக்கிய 694 ஆட்டோக்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
    • முறையான அனுமதியுடன் 1,911 ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது.

    மதுரை

    மதுரை மாவட்ட மினி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் ஆட்டோக்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனர். இதனால் பயணிகள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். பல நேரங்களில் விபத்து களும் ஏற்படுகின்றன. எனவே இவற்றை தவிர்க்க ஆட்டோவில் பயணிகளை ஏற்றி, இறக்க தனி இடம் ஒதுக்கி தருமாறு உத்தர விட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி கள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறி இருந்ததாவது:-

    விதிமுறைகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகி றது. கடந்த 2013ம் ஆண்டு முதல் முதல் 2017ம் ஆண்டு வரை அதிக மக்களை ஏற்றியதாக 27 ஆயிரத்து 751 ஆட்டோக்களும், மீட்டர் இல்லாமல் இயக்கி யதாக 10 ஆயிரத்து 286 ஆட்டோக்களும், சீட்டை மாற்றி அமைத்து இயக்கி யதாக 2 ஆயிரத்து 354 ஆட்டோக்கள் உள்பட பல்வேறு விதிகளை மீறியது தொடர்பாக 1 லட்சத்து 56 ஆயிரத்து 468 ஆட்டோக்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த ஆட்டோக்களிடம் இருந்து அபராத தொகையாக ரூ.2 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மதுரை மாநகர் முழுவதும் 113 ஆட்டோ நிறுத்தும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. முறையான அனுமதியுடன் 1,911 ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. தொடர்ந்து விதிமுறைகளை மீறும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதேபோல வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கடந்த 2013 முதல் 2017-ம் ஆண்டு வரையில் விதி மீறியது தொடர்பாக 1,412 ஆட்டோக்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

    இதில் வழக்கு பதியப்பட்ட 694 ஆட்டோக்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. 813 ஆட்டோக்கள் பறி முதல் செய்யப்பட்டன. அபராதமாக ரூ.9 லட்சத்து 26 ஆயிரத்து 850 வசூலிக்கப்பட்டது.

    பயணிகள் சிரமமின்றி பயணம் செய்யவும், விதிமீறலை கட்டுப்படுத்த வும் தொடர் நடவ டிக்கைகள் எடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

    • 4 வயது குழந்தை-தாய் காயம்
    • புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் புதுக்கடை அருகே இனயம்புத்தன்துறை கடற்கரை கிராம பகுதியை சேர்ந்தவர் அந்தோணியம்மாள் (வயது 32). இவர் கணவர் அல்டோ ராபின் மற்றும் மகன் ரஷினா (4) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் புதுக்கடைக்கு சென்றார். பின்னர் அவர்கள் வீடு திரும்பும்போது பின்னால் வந்த ஆட்டோ ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் கீழே விழுந்த அந்தோணியம்மாள், அவரது மகள் ரஷினா படுகாயம் அடைந்தனர். ஆனால் ஆட்டோ நிற்காமல் சென்று விட்டது. காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கதினர் மீட்டு மார்த்தாண்டம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முகமது மைதீன் முபினின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
    • எலும்பு முறிந்த நிலையில் கதிர்வேல் மூர்த்தி திருச்செந்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் பெரிய நெசவு தெருவை சேர்ந்தவர் முகமது மைதீன் முபின் (வயது 25). இவர் மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார்.

    விபத்து

    சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் காயல்பட்டினம் பழைய பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே வந்தபோது எதிரே வந்த லோடு ஆட்டோ இவர் மீது மோதியது.

    இதில் நிலைகுலைந்த முகமது மைதீன் முபினின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

    இதில் முகமது மைதீன் முபின் படுகாயம் அடைந்தார். சுயநினைவற்ற நிலையில் அவர் உடனடியாக பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார்.

    இந்த விபத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த உச்சினி மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அப்துல் கனி மற்றும் கதிர்வேல் மூர்த்தி ஆகியோரும் பலத்த காயம் அடைந்தனர்.

    வழக்குப்பதிவு

    எலும்பு முறிந்த நிலையில் கதிர்வேல் மூர்த்தி திருச்செந்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகமது மைதீன் முபின் நள்ளிரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிரைவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கருங்கல் அணஞ்சிகோடு பகுதியை சேர்ந்தவர் சுமன் (வயது 40). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார்.சம்பவத்தன்று ஆப்பி கோட்டிற்கு சென்றுவிட்டு சுமன் வீட்டிற்கு வரும்போது பருத்திவிளை சாஸ்தா கோவில் அருகே எதிர்பாராதவிதமாக ஆட்டோ கவிழ்ந்தது.

    இதில் சுமன் பலத்த காயம் அடைந்தார். இதனைக் கண்டவர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சுமன் சிகிச்சை பெற்று வரு கிறார். இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

    • ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு; மனைவி- குழந்தை படுகாயம் அடைந்தனர்.
    • விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் கம்மாபட்டி தெருவை சேர்ந்தவர் பவுன்குரு (வயது 28). இவர் சொந்தமாக ஆட்ேடா வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு புவனேஸ்வரி (21) என்ற மனைவியும், 1 வயது கபிலன் என்ற ஆண் குழந்தை உள்ளது. வருகிற 29-ந் தேதி குழந்தைக்கு காது குத்து விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக உறவினர்களை அழைக்கும் பணியில் பவுன்குரு, அவரது மனைவி தீவிரமாக இருந்தனர். சம்பவத்தன்று காடனேரி பகுதியில் உள்ள உறவினரை அழைப்பதற்காக பவுன்குரு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஆட்டோவில் புறப்பட்டார்.மருதநத்தம் விலக்கு ரோட்டில் சென்றபோது திடீரென ஒரு மோட்டார் சைக்கிள் குறுக்கே சென்றது. அதன்மீது மோதாமல் இருப்பதற்காக பவுன்குரு ஆட்டோவை திருப்பினர்.

    இதில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்த நடுரோட்டில் தலைகுப்பிற கவிழ்ந்தது. விபத்தில் படுகாயம் அடைந்த பவுன்குரு பரிதாபாக இறந்தார்.புவனேஸ்வரி,
    1 வயது குழந்தை படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஸ்டீபன் ராஜ் சவாரிக்காக பரமன்குறிச்சியில் இருந்து உடன்குடிக்கு சென்றார்.
    • திருச்செந்தூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் ஸ்டீபன் ராஜை சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    திருச்செந்தூர்:

    உடன்குடி அருகே உள்ள வெள்ளாளன் விளையை ேசர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் ( வயது 40). இவர் பரமன்குறிச்சியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    நேற்று மாலை இவர் சவாரிக்காக பரமன்குறிச்சியில் இருந்து உடன்குடிக்கு சென்றார். தண்டுபத்து பகுதியில் சென்றபோது நாய் ஒன்று குறுக்கே சாடியது. இதனால் ஸ்டீபன் ராஜ் திடீரென பிரேக் போட்டதும் எதிர் பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் ஸ்டீபன் ராஜ் படுகாயம் அடைந்தார். அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு திருச்செந்தூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆட்டோ மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலியானார்.
    • மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருேக உள்ள கீழகன்னிசேரி கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேல் மகன் மதிவாணன் (வயது 27). இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் எலக்ட்ரீசியன் படித்துள்ளார்.

    மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார். தற்போது பணியில் இல்லை. கீழகன்னிசேரியில் இருந்து மதிவாணன் இரவில் பைக்கில் வந்தபோது ஆட்டோ மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் முதுகுளத்தூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.இந்த விபத்து குறித்து முதுகுளத்தார் காவல்நிலைய ஆய்வாளர் இளவரசு வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் ஜெய்கணேசை கைது விசாரித்து வருகிறார்.

    • சேலம் அப்சரா இறக்கத்தில் இருந்து குகை நோக்கி பள்ளி மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்த ஆட்டோ விபத்தில் சிக்கியது.
    • இந்த விபத்தில் மாணவர்கள் அதிஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

    சேலம்:

    சேலம் அப்சரா இறக்கத்தில் இருந்து குகை நோக்கி ஆட்டோ ஒன்று சென்று பள்ளி மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவில் 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர்.

    அப்போது ஆட்டோவின் முன்பு சென்று கொண்டி ருந்த மோட்டார் சைக்கிளின் குறுக்கே குடிபோதையில் தள்ளாடிய படி ஒருவர் திடீரென வந்தார். இத னால் தடுமாறிய மோட்டார் சைக்கிளில் சென்றவர் அவர் மீது மோதி கிேழ விழுந்தார். இதனை கவனித்த ஆட்டோ டிரைவர் திடீரென பிரேக் போட்டு ஆட்டோைவ நிறுத்த முயன்றார். ஆனால் நிலை தடுமாறிய ஆட்டோ அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மாணவர்கள் அதிஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

    உடனடியாக அவர்கள் மாற்று வண்டியில் ஏற்றி பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த செவ்வாய்ப்பேட்டை போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    • ஆட்டோவில் 4 கேன்களில் 120 லிட்டர் அரசின் மானிய விலை மண்எண்ணை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது
    • 18 கேன்களில் பறிமுதல் செய்த 750 லிட்டர் மண்எண்ணை

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே அம்சி பகுதியில் நேற்று தனிப்பிரிவு ஏட்டு சுனில் மற்றும் நிலைய ஏட்டு ரமேஷ் ஆகியோர் அந்த வழியாக சென்ற கேரளா பதிவு எண் கொண்ட ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர்.

    அந்த ஆட்டோவில் 4 கேன்களில் 120 லிட்டர் அரசின் மானிய விலை மண்எண்ணை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில் கேரளா மாநிலம் நெய்யாற்றின் கரை பகுதி புல்லுவிளை என்ற இடத்தை சேர்ந்த ஜஸ்டின் மகன் ராஜேஷ் (வயது 28) என்பவர் இவற்றை கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரிந்தது.

    மேலும் விசாரித்ததில் இவற்றை இனயம்புத் தன்துறை பகுதி

    33-ம் அன்பியத்தை சேர்ந்த நெப்போலியன் (40) என்பவர் வீட்டில் இருந்து வாங்கி செல்வதும் தெரிய வந்தது. இதையடுத்து நெப்போலியன் வீட்டில் போலீசார் சோதனையிட் டனர்.

    அப்போது வீட்டில் இருந்து மேலும் 14 கேன் களில் மானிய விலை மண்எண்ணை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

    மொத்தம் 18 கேன்களில் பறிமுதல் செய்த 750 லிட்டர் மண்எண்ணை மற்றும் ஆட்டோவை கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    ×