search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கோட்டை"

    • தொடர்ந்து விமானம் மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 7 மணிக்கு தேவதா அனுஞ்ஞை, எஜமானர் அனுஞ்ஞை, மகா கணபதி பூஜை, புண்ணியாக வாசனம், பஞ்ச கவ்யபூஜை, வேதிகா அர்ச்சனை, கும்பூஜை, மகா கணபதி ஹோமம், மூலமந்திர ஹோமம், அஸ்திர ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களுடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து விமானம் மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தர்மஸம்வர்த்தினி அம்பாள், குலசேகரநாத சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு பக்தி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பத்தர்கள் குழுவினர் செய்திருந்தனர். 

    • பேரணியை இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தொடங்கி வைத்தார்.
    • பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை காவல்துறை மற்றும் எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. செங்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர குமார் தலைமை தாங்கினார். உதவித் தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி வரவேற்று பேசினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் பேரணியை தொடங்கி வைத்தார்.

    பள்ளி மாணவர்கள் பேரணியாக வாஞ்சி நாதன் சிலை, கீழபஜார், காவல்நிலையம், தாலுகா அலுவலகம் வழியாக சென்று விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.

    பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்துகளை இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் இளவரசன் ஆகியோர் எடுத்துக் கூறினர். நிகழ்ச்சியில் காவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாண வர்கள் திர ளாக கலந்து கொண்டனர். பள்ளி உடற் கல்வி இயக்கு னர் சஞ்சய் காந்தி நன்றி கூறினார்.

    • மாணவர்களுக்கு தமிழ் புத்தகம் வாசிப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் கொடுக்கப்பட்டன.
    • சிறப்பாக செயல்பட்ட மாணவ- மாணவிகளை பள்ளி தாளாளர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறையில் இணையவழி மூலம் ட்ரஷர் எக்ஸ்பெர்டைஸ் மாரத்தான் நடைபெற்றது. இதில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த ட்ரஷர் எக்ஸ்பெர்டைஸ் மாரத்தானில் மாணவர்களுக்கு தமிழ் புத்தகம் வாசிப்பது, கணக்கு வாய்ப்பாடு, ஆங்கிலத்தில் கதை சொல்வது என பல்வேறு செயல்பாடுகள் கொடுக்கப்பட்டன.

    இதனை சரிவர முடித்து செயல்படுத்திய மாணவ, மாணவிகளுக்கு வகுப்பு வாரியாக முதல் 3 இடத்திற்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட மாணவ- மாணவிகளை பள்ளி தாளாளர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர். விழா ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் அருள் வர்சலா மற்றும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் நூஸ்மா பேகம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கிருஷ்ணவேணி செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளியில் ஆசிரியை யாக வேலை பார்த்து வந்தார்.
    • போலீசார், கிருஷ்ணவேணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஏ.கே. நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் அம்சு பாண்டி. இவரது மனைவி கிருஷ்ணவேணி ( வயது 42). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    ஆசிரியை தற்கொலை

    கிருஷ்ணவேணி செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளியில் ஆசிரியை யாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இன்று காலை கிருஷ்ணவேணி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து செங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கிருஷ்ணவேணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்தவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணை

    மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கிருஷ்ணவேணி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்கர் ஒரு கல் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.
    • கணவர் இறந்த செய்தி கேட்டதும் கல்யாணி மயங்கி விழுந்து இறந்தார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை மேலூர் செல்வவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி என்ற துரை. இவருடைய மகன் சங்கர் (வயது 28). இவர் ஒரு கல் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி மாயாண்டிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். கணவர் இறந்த செய்தி கேட்டதும் அதிர்ச்சியில் சங்கரின் அம்மா கல்யாணி மாயாண்டி உடல் மீது மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்து போனார். ஒரேநாளில் தாய்-தந்தையை இழந்த சங்கர் அன்று முதல் துக்கத்தில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் செங்கோட்டை அருகில் இருக்கும் விஸ்வநாத புரம் கலங்காதகண்டி வாய்க்காலில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செங்கோட்டைபோலீசார் விரைந்து சென்று சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அவரது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • பூமியை பாதுகாப்பதற்கான நோக்கங்கள் குறித்த பதாகைகள் பள்ளியின் வளாகத்தில் அமைக்கப்பட்டது.
    • மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் பூமியை பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் ஒவ்வொரு மாதமும் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு தலைப்பு தேர்வு செய்யப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன் பேரில் பூமியை பாதுகாத்தல் என்னும் தலைப்பு தேர்வு செய்யப்பட்டது. மாணவ-மாணவிகள் ஆசிரியர்களின் துணையோடு பூமியை பாதுகாப்பதற்கான நோக்கங்கள் மற்றும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் பதாகைகளை பள்ளியின் வளாகத்தில் அமைத்தனர். மேலும் அறிவியல் ஆசிரியைகள் ராஜேஸ்வரி, அபிஷா மற்றும் ரெக்ஸி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பூமியை பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

    முடிவில் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரிய,ஆசிரியர்கள் அனைவரும் பூமியை பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர். விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் முன்னிலை வகித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் அருள் வர்ஷலா செய்திருந்தார்.

    • வாஞ்சி மணிமண்டபத்தில் உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • செங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதன் 112-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் அரசு சார்பில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில், செங்கோட்டையில் உள்ள வாஞ்சி மணிமண்டபத்தில் உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சயில் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், செங்கோட்டை வருவாய் தாசில்தார் முருகுசெல்வி, செங்கோட்டை நகர தி.மு.க. செயலாளர் வக்கீல் வெங்கடேசன், நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி, வடகரை சேர்மன் சேக்தாவூது, வருவாய் ஆய்வாளர் குமார், வி.ஏ.ஓ. முருகேசன், நூலகர் ராமசாமி, வாஞ்சிநாதனின் உறவினர் ஹரிஹர சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ரஹீம், கலைஞர் தமிழ்சங்க செயலாளா் வக்கீர் ஆபத்துக்காத்தான், முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் லிங்கராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதபோல் செங்கோட்டை பஸ் நிலையம் அருகில் திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு செங்கோட்டை நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் வக்கீல் வெங்கடேசன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    • கண்ணாட்சி முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • இன்று காலை முளைப்பாரி கரைத்தல் நடந்தது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை கண்ணாட்சி முப்புடாதி அம்மன் கோவில் கொடைவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா கடந்த 23-ந் தேதி கால் நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் நாள்தோறும் கண்ணாட்சி முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. 28-ந்தேதி காலை கும்பாபிஷேகம், மகாதீபாராதனை, முழுக்காப்பு தரிசனம், இரவு அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நடந்தது. 29-ந்தேதி மாலை குடியழைப்பு, நேற்று உச்சிக்கால பூஜை, பொங்கலிடுதல், முளைப்பாரி எடுத்தல், அக்கினி சட்டி எடுத்தல், குற்றாலம் தீர்த்தம் கொண்டு வருதல், இரவு கொடைவிழா நடந்தது. இன்று காலை முளைப்பாரி கரைத்தல் நடந்தது. மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடைபெறுகிறது.

    • பயிற்சி வகுப்பை கலெக்டர் ரவிச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
    • சுமார் 150 மாணவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை முழு நேர அரசு பொதுநுாலக கட்டிடத்தில் நான் முதல்வன் திட்டம் வாயிலாக சுமார் 150 மாணவர்களுக்கு மத்திய தேர்வாணயம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளின் தொடக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற செயலாளா் மயிலேறும்பெருமாள், பயிற்சி அலுவலா் சதாசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ரம்யா வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து கலெக்டர் ரவிச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் நுாலக வாசகர் வட்ட செயலாளா் செண்பக குற்றாலம், நூலகர் ராமசாமி, நுாலக அரசுத்தேர்வு பொறுப்பாளா் விழுதுகள்சேகர் உள்பட பலா் கலந்து கொண்டனா். பயிற்சி வகுப்பில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர். வாசகர் வட்ட பொருளாளா் தண்டமிழ்தாசன் சுதாகர் நன்றி கூறினார்.

    • விழாவில் அம்பாளுக்கு நறுமண பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் கடந்த செவ்வாய் கிழமை கொடை விழா நடைபெற்ற நிலையில் 8-ம் நாள் காலை ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து நறுமண பொருட்களால் அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் தீபார தனை காண்பிக்கப்பட்டது.இரவு அம்பாளுக்கு பல்வேறு வண்ண மயமான நறுமண பூக்க ளால் சிறப்பு புஷ்பா ஞ்சலி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து அவர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது.

    • கொடைவிழா கடந்த 16-ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • வீரகேரள விநாயகா் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை- இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள நித்யகல்யாணி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் கீழத்தெரு சேனைத் தலைவா் சமு தாயம் சார்பில் கொடை விழா நடை பெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டிற்கான கொடைவிழா கடந்த 16-ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து நித்யகல்யாணி அம்மன், பரிவார தேவதைகளுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான கொடை விழா நேற்று நடைபெற்றது.

    இதனையொட்டி காலையில் வீரகேரள விநாயகா் கோவிலில் இருந்து நித்யகல்யாணி அம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வருதல், குங்கும அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அம்மனுக்கு பொங்கலிடுதல், முளைப்பாரி எடுத்தல், அக்னிச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது.

    தொடர்ந்து அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நள்ளிரவு செண்டை மேளம் முழங்க வாண வேடிக்கைகளுடன் நித்யகல்யாணி அம்பாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கீழத்தெரு சேனைத்தலைவா் சமுதாயத்தினர், இளைஞர் சங்கத்தினர், விழா கமிட்டியினா் செய்திருந்தனர்.

    • அம்ருத் பாரத் ரெயில் நிலைய முன்னேற்ற திட்டத்தில் செங்கோட்டை ரெயில் நிலையத்தை சேர்க்க வேண்டும்.
    • செங்கோட்டை ரெயில் நிலையத்தில் 5-வது நடைமேடை அமைக்க வேண்டும்.

    நெல்லை:

    செங்கோட்டை ரெயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் சுந்தரம் ஆகியோர் தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் அளித்த கோரிக்கை மனு வில் கூறியிருப்பதாவது:-

    அம்ருத் பாரத்

    அடுத்த கட்ட அம்ருத் பாரத் ரெயில் நிலைய முன்னேற்ற திட்டத்தில் செங்கோட்டை ரெயில் நிலையத்தை சேர்க்க வேண்டும். செங்கோட்டை - சென்னை இடையேயான பொதிகை அதிவேக ரெயிலுக்கு (12662) சென்னை மாம்பலத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும். செங்கோட்டை ரெயில் நிலையத்தில் பிட்லைன் வசதி செய்து தரப்பட வேண்டும். அப்போதுதான் செங்கோட்டையில் இருந்து தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாகவும், தென்காசி, பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம், நெல்லை வழியாகவும் பிற மாநில ங்களுக்கு புதிய ரெயி ல்களை இயக்க முடியும்.

    செங்கோட்டை ரெயில் நிலையத்தில் தற்போதுள்ள 4 நடைமேடைகளோடு புதிதாக 5-வது நடைமேடை அமைக்க வேண்டும். இங்குள்ள கணினி முன்பதிவு மையம் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கோட்டை, தென்காசி ரெயில் நிலைய நடை மேடைகளில் லிப்ட்டு களை அமைக்க ஏற்கனவே ஆணை பிறப்பிக்கப்பட்டும் இன்ற ளவும் நிறுவப்ப டவில்லை. அவற்றை விரைவில் அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    நிரந்தர ரெயில்களாக

    தற்போது இயங்கி கொண்டிருக்கும் வாராந்திர ரெயில்களான நெல்லை - மேட்டுப்பாளையம், தென்காசி வழியாக இயக்கப்படும் நெல்லை- தாம்பரம் ரெயில்களை நிரந்தர ரெயில்களாக்க வேண்டும். எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம், புனலூர், செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம் வழியாக வேளாங் கண்ணிக்கு வாரம் ஒரு முறை இயக்கப்படும் ரெயிலை வாரம் இரு முறை நிரந்தரமாக இயக்க வேண்டும்.

    தற்போது 12 பெட்டிகளோடு ஓடும் செங்கோட்டை - மயிலாடுதுறை, மயிலாடு துறை - செங்கோட்டை முன்பதிவில்லாத விரைவு ரெயில்களில் கூடுதலாக 2 முன்பதி வில்லாத பெட்டி களையும், 2 முன்பதிவுடைய 2-ம் வகுப்பு பெட்டி களையும் இணைக்க வேண்டும். கொல்லம் - புனலூர் - செங்கோட்டை பாதையில் பயணிகள் ரெயில்கள் 14 பெட்டி களுடன் மட்டுமே ஓடு கின்றன. அதனை விரைவில் 18 பெட்டி களுடன் இயக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    ×