search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கோட்டை"

    • மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடல்களை வைக்க குளிர்சாதன பெட்டி இல்லாத நிலை நிலவி வந்தது.
    • செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு குளிர்சாதன பெட்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைக்கு இணையாக பல்வேறு வசதிகளோடு அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்த வர்களின் உடல்களை வைக்க பயன்படும் குளிர்சாதன பெட்டி இல்லாத நிலை நிலவி வந்தது. இதனையடுத்து தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் வேண்டு கோளுக்கிணங்க தொழிலதிபர் காந்தி செல்வின் என்பவர் ரூ. 1 லட்சம் மதிப்பில் குளிர்சாதன பெட்டியை வாங்கி தென்காசி மாவட்ட சுகாதார நல பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதாவிடம், செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கினார்.

    பின்னர் சுகாதார நல பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா கூறும்போது, செங்கோட்டை அரசு மருத்துவமனையில் ரத்த குளிர்சாதன வைப்பறை விரைவில் அமைக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் செங்கோட்டை அரசு தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன், மாவட்ட சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் அறிவுடை நம்பி, மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினர் ஞானராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் குரூப்-4 தேர்வு, காவலர் தேர்வு என போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அரசு பொது நூலக கட்டிடத்தில் நூலக வாசகா் வட்டத்தின் சார்பில் தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் குரூப்-4 தேர்வு, காவலர் தேர்வு என போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    வாசகா் வட்ட தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சிசுந்தரம், வாசகர் வட்ட துணைத்தலைவா் ஆதிமூலம், இணைச்செயலாளா் செண்பகக்குற்றாலம், போட்டித்தேர்வு பொறுப்பாளா் விழுதுகள் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனா். வாசகர் வட்ட பொருளாளா் தண்டமிழ்தாசன் சுதாகர் வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

    தொடர்ந்து செங்கோட்டை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தேசிய திறனாய்வுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற 23 மாணவ, மாணவிகள், குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற 13 மாணவ, மாணவிகள், காவலர் தேர்வில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவிகள், ரெயில்வே தேர்வில் 1 மாணவர் என மொத்தம் 43 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பரிசுகள் வழங்கினார். ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி சுடலை, ஜே.பி.கல்லூரி முதல்வர் ஜான்கென்னடி, அகாடமி இயக்குநர்கள் மாரியப்பன், அருணாச்சலம், ஒருங்கிணைப்பாளா் ரமேஷ், எஸ்.எம்.எஸ்.எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க தலைவா் ஜவஹர்லால்நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா். நுாலகர் ராமசாமி நன்றி கூறினார்.

    • குற்றாலத்தில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
    • நள்ளிரவில் அம்பாள் சப்பர வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்புடாதி அம்மன் கோவில் கொடைவிழா கடந்த 25-ந் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை, தீபாராதனைகள் மற்றும் கும்மியாட்டம், கோலாட்டம், திருவிளக்கு பூஜைகள் மற்றும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியான கொடை விழாவையொட்டி காலை குற்றாலத்தில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு பொங்கலிடுதல் நிகழ்ச்சியும், 6 மணிக்கு முளைப்பாரி, பூந்தட்டு ஊர்வலமும் அதனை தொடர்ந்து விநாயகர் கோவிலில் இருந்து சுப்புரமணியதெரு பகுதியை சேர்ந்த ராம்தாஸ் என்பவர் 2-ம் ஆண்டாக பறவை காவடியை எடுத்து ஊர் முழுவதும் ஊர்வலமாக வந்தார். இரவு தீச்சட்டி, முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் நள்ளிரவில் அம்பாள் சப்பர வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு முளைப்பாரி எடுத்து ஆற்றில் கொண்டு கரைத்தல், மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ஏற்பாடுகளை யாதவர் சமுதாய மக்கள் மற்றும் இளைஞர் அணியினர் செயதிருந்தனர்.

    • தென்னையில் அதிக மகசூல் பெற எவ்வாறு உரம் இடுவது என்பது குறித்து எடுத்துக்கூறப்பட்டது.
    • முகாமில் பூச்சி நோய் மேலாண்மை பற்றிய விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    செங்கோட்டை:

    தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை மாநில தலைமையகம் தென்னை விவசாயி களின் நலன் கருதி தென்னை அதிகமாக சாகுபடி செய்யும் கிராமங்களில் சிறப்பு முகாம்களை நடத்திட உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர் ஆலோச னையின்படி செங்கோட்டை வட்டா ரத்தில் அதிகமாக தென்னை சாகுபடி செய்து வரும் அச்சன்புதூர் கிராமத்தில் தென்னையில் பூச்சி நோய் மேலாண்மை பற்றிய சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) முகுந்தாதேவி தலைமை தாங்கினார். கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை யத்தின் இணை பேராசிரியர் சிவப்பிர காஷ் தொழில்நுட்ப உரையாற்றி னார். வட்டார துணை வேளாண்மை அலு வலர் சேக்முகைதீன், தென்னை யில் அதிக மகசூல் பெற எவ்வாறு உரம் இடுவது, என்னென்ன உரங்களை இட வேண்டும் என்பது பற்றி விளக்கி கூறினார்.

    தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் தென்னையில் பூச்சி நோய் மேலாண்மை பற்றிய விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்க ப்பட்டது. அச்சன்பு தூர் கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயியான சம்சுதீன், கட்டாரிபாண்டியன், வாசு தேவன், மீராகனி உள்ளிட்ட தென்னை விவசா யிகள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அச்சன்புதூர் உதவி வேளாண்மை அலு வலர் சம்சுதீன் மற்றும் ஸ்டாலின்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • நகராட்சி கமிஷனர் ஜெயப்பிரியா தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • உரிமம் பெற்ற கழிவுநீர் அகற்றும் வாகனம் மட்டுமே மேற்கண்ட பணியில் பயன்படுத்தப்பட வேண்டும்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகராட்சி ஆணையாளா் அலுவலகத்தில் நகராட்சி கமிஷனர் ஜெயப்பிரியா தலைமையில், நகராட்சி சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி முன்னிலையில் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 16 கிராம பஞ்சாயத்துகளான புளியரை, இலத்தூர், சீவநல்லூர், கற்குடி, தெற்குமேடு, கணக்குபிள்ளைவலசை, காசிமேஜர்புரம், குத்துக்கல்வலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூர், சுமைதீர்த்தபுரம், தேன்பொத்தை, வல்லம், கொடிகுறிச்சி, நெடுவயல், காசிதர்மம் ஆகிய கிராம பஞ்சாயத்துக்கான கசடு கழிவு மேலாண்மை திட்டத்தில் இணைப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    உரிமம் பெற்ற கழிவுநீர் அகற்றும் வாகனம் மட்டுமே மேற்கண்ட பணியில் பயன்படுத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் நகராட்சி மூலம் வழங்கப்பட்ட உரிமம் பெற்ற கழிவுநீர் வாகன ஓட்டுநர்களின் தொலைபேசி எண் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தங்களது கிராம பஞ்சாயத்துகளில் மேற்கண்ட உரிமம் பெற்ற கழிவுநீர் அகற்றும் வாகனங்களையே பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

    • இன்று மாலை குண்டாற்றிலிருந்து குற்றால தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் காளியம்மன் கோவில் கொடை விழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. நேற்று கடையநல்லுார் கிருஷ்ணாபுரம் ஆரூத்ரா திருவாசக குழுவின் சார்பில் தேசிய இந்து கோவில் கூட்டமைபின் மாவட்டதலைவா் திருவாசகி சிவபிரேமா தலைமையில், தேசிய இந்து கோவில் கூட்டமைப்பின் தென்காசி மாவட்ட செயலாளா் ராம்நாத் முன்னிலையில் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது. இன்று மாலை 6 மணிக்கு வில்லிசை, 6.30 மணிக்கு செங்கோட்டை குண்டாற்றிலிருந்து குற்றால தீர்த்தம் எடுத்து வருதல், தொடா்ந்து கும்மி பாட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள் தலைவா் சுப்பையா, செயலாளா் சண்முகவேல், பொருளாளா் லெட்சுமணன், இளைஞர் சங்க நிர்வாகிகள் தலைவா் ஜெகநாதன், செயலாளா் சிவா, பொருளாளா் காளிராஜ் மற்றும் சேனைத்தலைவா் சமுதாய பெரியோர்கள், இளைஞர் சங்க நிர்வாகிகள் உறுப்பினா்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வாசிப்பின் அவசியம் குறித்து வேலம்மாள் விளக்க உரையாற்றினார்.
    • நிகழ்ச்சியில் வாசிப்பு பற்றிய உறுதி மொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நூலகத்தில் உலக புத்தக தின விழா மற்றும் தமிழ்நாடு வாசிப்பு இயக்க தொடக்க விழா நடைபெற்றது. வாசகர் வட்ட துணைத்தலைவர் ஆதி மூலம் தலைமை தாங்கி னார்.

    வாசகர் வட்ட பொருளாளர் தண்டமிழ் தாசன் சுதாகர் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக பணி நிறைவு பெற்ற கல்லூரி முதல்வர் வேலம்மாள் கலந்து கொண்டு வாசிப்பின் அவசியம் குறித்து விளக்க உரையாற்றினார்.

    எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஜவஹர்லால் நேரு, இல்லம் தேடி கல்வி ஒருங்கி ணைப்பாளர் அய்யப்பன், இலஞ்சி டேனியல், கல்லூரி நூலகர் ஏஞ்சலின், பட்டிமன்ற பேச்சாளர் மஹமுதா தசையத், கவிஞர்கள் அய்யப்பன், இளங்குமரன், தங்கராஜ், வக்கீல் கார்த்திக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    நூலகம் மற்றும் தகவல் அறிவியல் மைய மாநில துணைத்தலைவர் ராஜா வாசிப்பு பற்றிய உறுதி மொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியை விழுதுகள் சேகர் தொகுத்து வழங்கி னார். நூலகர் ராமசாமி நன்றி கூறி னார். விழாவில் வாசகர்கள் 70 பேர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு பள்ளிகளை சார்ந்த மாணவ- மாணவி களுக்கு திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட்டன.
    • அனைத்து மாணவர்களுக்கும் விருதுகள் மற்றும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நிறுவனர் தினவிழா நடந்தது. விழாவிற்கு மத்திய மரபுசாரா எரிசக்திதுறை உறுப்பினர் புளியங்குடி ஜார்ஜ் ஸ்டீபன்ராஜ் தலைமை தாங்கினார். தமிழக காங்கிரஸ் ஊடகப்பிரிவு செயலர் அப்துல்காதர்மஜித், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் பால்சாமி ஆகியோர் முன்னி லை வகித்தனர். பள்ளி தாளாளர் ராம் மோகன் வரவேற்புரை யாற்றினார்.

    விழாவில் பல்வேறு பள்ளிகளை சார்ந்த மாணவ- மாணவி களுக்கு திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட்டன. பேச்சுப் போட்டி, பாட்டுப்போட்டி, ஓவிய ப்போட்டி போன்ற பல்வேறு திறனாய்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.

    கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் விருதுகள் மற்றும் பங்கேற்பு சான்றிதழ் வழங்க ப்பட்டது.விழா ஏற்பாடு களை பள்ளி துணை முதல்வர் கார்த்திக், ஆசிரி யைகள் மற்றும் பசுமைப்ப டை மாணவர்கள் செய்தி ருந்தனர். 12-ம் வகுப்பு மாணவி தன மகே ஷ்வரி நிகழ்ச்சிகளை தொ குத்து வழங்கினார்.

    பள்ளி முதல்வர் ராணிராம்மோகன் நன்றி கூறினார்.

    • தட்சிணா மூர்த்தி பகவானுக்கு 21 வகை நறுமண பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அறம் வளா்த்தநாயகி உடனுறை குலசேகரநாத சுவாமி கோவிலில் தனி சன்னதியாக வீற்றியிருக்கும் தட்சிணா மூர்த்தி பகவான் சன்னதியில் குருபெயர்ச்சி விழா நடந்தது. இதனை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள், தட்சிணா மூர்த்தி பகவானுக்கு 21 வகை நறுமண பொருள் களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, இரவு 10மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினா் செய்தி ருந்தனா்.

    மேலும் செங்கோட்டை அடுத்துள்ள புளியறை சிவகாமி அம்பாள் உடனுறை சதாசிவமூர்த்தி ,தட்சிணா மூர்த்தி கோவிலில் இன்று குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இந்த சிறப்பு குருபெயர்ச்சி வழிபாடு மற்றும் தமிழ் புத்தாண்டை யொட்டி தென்காசி மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளாவிலிருந்தும் பக்தா்கள் அதிகளவில் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

    • கனிமவளங்கள் கடத்தப்படுவதை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் அய்யா வழி சிவச்சந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    செங்கோட்டை:

    தமிழகத்தில் இருந்து அளவுக்கு அதிகமாக கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதை கண்டித்து தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாலகுருநாதன்,ராமநாதன் அருள்செல்வன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் துணைத்தலைவர்கள் முத்துக்குமார், பால்ராஜ் முத்துலட்சுமி, பால சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டித்துரை, மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துப்பாண்டி, மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் மாரியப்பன், இளைஞர் அணி தலைவர் முப்புடாதி, மகளிர் அணி தலைவி மகாலட்சுமி மற்றும் தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்,விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் குருசாமி, இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அய்யா வழி சிவச்சந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு கனிம வள கொள்ளையை தடுக்க கோரி செங்கோட்டை தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை செங்கோட்டை நகர பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் செய்திருந்தார்.

    • உளவியல் ஆலோசகர் சத்திய பிரியங்கா மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினார்.
    • நிகழ்ச்சியில் 6 முதல் முதல் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சித்த மருத்துவர் மற்றும் குழந்தைகள் உளவியல் ஆலோசகர் சத்திய பிரியங்கா கலந்து கொண்டு மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் உடல் நலத்தை பேணி பாதுகாப்பதற்கான நெறிமுறைகள் பற்றி விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள ட்ரஷர் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களுடைய சந்தேகங்களையும், ஆலோசனைகளையும் கேட்டு தெரிந்து கொண்டனர்.

    • கேரளாவில் விலை உயர்வு காரணமாக எரிபொருள் நிரப்பவும் ஏராளமான வாகனங்கள் வருகிறது.
    • போக்குவரத்து நெரிசலால் பஸ்களும் உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை.

    செங்கோட்டை:

    அண்டை மாநிலமான கேரளாவிற்கு தென்காசி மாவட்டம் செங்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள இடங்களுக்கு தொழில்நுட்ப வேலைக்கு பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் மூலமாக ஆயிரக்க ணக்கான தொழிலாளர்கள் நாள்தோறும் செல்கின்றனர். அவ்வாறு பணிக்கு செல்வோர் அதிகாலையில் 5 மணியில் இருந்து 8 மணிக்குள் செல்ல வேண்டி உள்ளது.

    மேலும் அண்டை மாநில தலைநகர் திருவனந்தபுரம் மற்றும் புனலூர், தென்மலை, அடூர், அஞ்சல், எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்காகவும், பிற காரணங்க ளுக்காகவும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். மேலும் அவசர காலங்களில் துரிதமாக கேரளா செல்லவும் இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தற்போது அண்டை மாநிலமான கேரளாவில் டீசல், பெட்ரோல் விலை உயர்வு காரணமாக தமிழகத்தின் எல்லையில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பவும் ஏராளமான வாகனங்கள் கடந்த சில வாரங்களாக அதிக அளவில் வருகிறது.

    இதனால் எல்லை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பயணிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்று வர முடியாத சூழ்நிலை நிலவுகிறது. பஸ்களும் உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை.

    இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருகிறது. அவர்களுடைய வாழ்வா தாரம் பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க புளியரை சோதனை சாவடியில் இருந்து தமிழக-கேரள எல்லை வரை 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து காவலர்களை ரோந்து வரச்செய்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×