search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆனித்திருவிழா"

    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. அருணாசலேஸ்வரரை காண உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    அதுமட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலில் விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஆனி பிரம்மோற்சவ விழா நாளை (சனிக்கிழமை) காலை 6.30 மணியில் இருந்து 7.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கு கிறது. இதையடுத்து அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் மற்றும் பராசக்தி அம்மன் வீதி உலா நடை பெறும்.

    விழாவை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) காலையிலும், மாலையிலும் விநாயகர் வீதி உலா நடைபெற உள்ளது.

    இந்த விழா வருகிற 16-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் காலை, மாலை சாமி வீதியுலாவும், விநாயகர், சந்திரசேகர் வீதியுலாவும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் தலைமை யிலான விழா குழுவினர் செய்து வருகின்றனர். 
    வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
    நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் அர்த்தநாரீஸ்வரர் என்ற சிந்தாமணி நாதர் கோவில் உள்ளது. பழமைவாய்ந்த இக்கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்மாளுக்கு சிறப்பு பூஜைகள், திருவீதி உலா, பக்தி சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு அம்மையப்பன் தேரில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு தேரோட்ட மண்டகப்படிதாரரான வாசுதேவநல்லூர் தொழிலதிபர் எஸ்.தங்கப்பழம் குடும்பத்தினரால் அலங்காரம் செய்யப்பட்ட தேரை எஸ்.தங்கப்பழம் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். பஞ்சவாத்தியங்கள் முழங்க தேர் கோவில் முன்பு இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதிகள் வழியாக வந்து மாலை 3.45 மணிக்கு நிலையத்தை அடைந்தது.

    தேரோட்டத்தில் மனோகரன் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, ஆய்வாளர் கண்ணன், செயல் அலுவலர்கள் ஜெயராமன், தங்கப்பாண்டியன், சதீஷ், எஸ்.தங்கப்பழம் கல்லூரி தாளாளர் எஸ்.டி.முருகேசன், நகரப்பஞ்சாயத்து செயல் அலுவலர் லெனின், பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி கமிட்டித்தலைவர் தவமணி, வாசுதேவநல்லூர் வட்டார அட்மா தலைவர் மூர்த்திப்பாண்டியன், நகர அ.தி.மு.க. செயலாளர் வக்கீல் குமரேசன், ஒன்றிய அவைத்தலைவர் முகமது உசேன், நிர்வாகிகள் சீமான் மணிகண்டன், சுமங்கலி சமுத்திரவேலு மற்றும் அனைத்து சமுதாய மண்டகப்படிதாரர்களும், ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    10-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) தீர்த்தவாரி மண்டகப்படிதாரரான இல்லத்துபிள்ளைமார் சமுதாயம் சார்பில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. காலை 9 மணிக்கு தீர்த்தவாரி கனகபல்லக்கில் அம்மையப்பன் வீதிஉலாவும், மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் அம்மையப்பன் மண்டகப்படியில் இருந்து வீதிஉலாவும் நடைபெறும். தெப்பத்திருவிழா மண்டகப்படிதாரரான நாடார் உறவின்முறை சமுதாயம் சார்பில் இரவு 8 மணிக்கு 8-ம் ஆண்டு தெப்பத்திருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை வாசுதேவநல்லூர் நாடார் உறவின்முறை சமுதாயத்தினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். 
    நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழாவையொட்டி தங்க சப்பரத்தில் கங்காளநாதர் வீதிஉலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்து வருகிறது. இன்று (புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. இதற்காக நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சுப்பிரமணியன், விநாயகர், சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்களும் சுத்தம் செய்யப்பட்டு, தேரோட்டத்துக்கு தயார் நிலையில் உள்ளன.

    நெல்லையப்பர் கோவிலில் தினந்தோறும் காலை, மாலை சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்து வருகிறது. நேற்று காலை 7.30 மணிக்கு சுவாமி நடராஜ பெருமாள் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, கோவிலுக்குள் வீதிஉலா நடந்தது.

    காலை 8.30 மணிக்கு சுவாமி நடராஜ பெருமாள் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து நான்கு ரதவீதிகளிலும் வீதிஉலா நடந்தது. மாலையில் தங்க சப்பரத்தில் சுவாமி கங்காளநாதர் வீதிஉலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து சிவனடியார்கள் ஊர்வலம் நடந்தது.

    இரவு தேர் கடாட்சம் வீதிஉலா நடந்தது. சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வெளிநாட்டை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

    நெல்லையப்பர் கோவிலில் உள்ள நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கில் தினந்தோறும் மாலை பக்தி இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம் ஆகியவை நடந்து வருகின்றன. நேற்று மாலையும் நிகழ்ச்சிகள் நடந்தன.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து செய்து இருந்தன. 
    சாத்தூரில் உள்ள பழமை யான கோவிலான வெங்கடாஜலபதி கோவிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    சாத்தூரில் உள்ள பழமையான கோவிலான வெங்கடாஜலபதி கோவிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. உற்சவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    12 நாட்கள் நடைப்பெறும் விழாவின் ஒவ்வொரு நாளும் கருடவாகனம், சே‌ஷ வாகனம், அன்னவாகனம், குதிரை வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 28-ம் தேதி நடைப்பெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சுந்தரராசு, தக்கார் சுமதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா இன்று (19-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
    நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா இன்று (19-ந் தேதி) காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து சுவாமி-அம்பாள் பூங்கோவில் சப்பரத்தில் வீதி உலா நடைபெற்றது. நாளை காலை 8.30 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா, இரவு 7 மணிக்கு சுவாமி வெள்ளி கற்பக விருட்சக வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் வீதியுலா நடக்கிறது.

    21-ந் தேதி காலை 8.30 மணிக்கு வெள்ளி கற்பக விருட்சக வாகனத்திலும், அம்பாள் வெள்ளி வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சுவாமி தங்க பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்திலும், 22-ந் தேதி காலை சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், இரவு வெள்ளி ரி‌ஷப வாகனத்திலும், 23-ந் தேதி காலை வெள்ளி ரி‌ஷப வாகனங்களில் வீதி உலா, 24-ந் தேதி காலை வெள்ளி சப்பரத்தில் சுவாமி அம்பாள் வீதி உலாவும் இரவு வெள்ளி சப்பரத்தில் சுவாமி- அம்பாள் வீதி உலா நடக்கிறது.

    25-ந்தேதி காலை சுவாமி அம்பாள் பல்லக்கிலும் (தவழ்ந்த கோலம்), இரவு சுவாமி, அம்பாள் வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது. 26-ந் தேதி காலை சுவாமி நடராஜ பெருமான் வெள்ளை சாத்தி எழுந்தருளல், உட்பிரகாரம் உலா வருதல் மாலை 4 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்கச்சப்பரத்தில் வீதி உலா, மதியம் 12 மணிக்கு சுவாமி நடராஜ பெருமான் பச்சை சாத்தி எழுந்து வீதி உலா, இரவு தேர் கடாட்ச வீதி உலா சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும் அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் நகர் வீதி உலா வருகின்றனர்.

    27-ந் தேதி காலை 9.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 1-ம் திருவிழா முதல் 7-ம் திருவிழா வரை தினமும் மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு சோடா உபசார விழா தீபாராதனை நடக்கிறது. தினமும் மாலையில் நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் பக்தி கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
    நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 27-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஒரு திருவிழா நடந்து வருகிறது. இதில் ஆனித்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். ஆனித்திருவிழா தேரோட்டத்தை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் நெல்லைக்கு வருவார்கள்.

    இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அன்று காலை சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து விழா தொடங்குகிறது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடக்கின்றன. கோவில் வளாகத்தில் உள்ள நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பக்தி சொற்பொழிவுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோவில் முன்பு உயரமான பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கோவில் வளாகத்தில் அலங்கரிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

    திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.

    இதையொட்டி சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன் மற்றும் சண்டிகேசுவரர் தேர்களை சுற்றி பாதுகாப்புக்கு பொருத்தப்பட்டிருந்த இரும்பு தகரங்கள் மற்றும் கண்ணாடி கூரைகள் பிரித்து அகற்றப்பட்டன. தேரை சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    தேரோட்டத்துக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. தேர் செல்லும் வேகத்தை குறைக்க புளியமரத்தடிகள் சீராக வெட்டி தயார் செய்யப்பட்டு வருகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லைப்பர் கோவில் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    விழா ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 19-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
    நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர் கோவிலில் ஆண்டு தோறும் ஆனித்திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு ஆனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று அதிகாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. காலை 7 மணி அளவில் கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி தினமும் பல்வேறு வகையான பூஜைகள் மற்றும் வீதிஉலா நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளுகிறார். 11 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. அன்று இரவு 7 மணிக்கு அபிஷேகமும், 8 மணிக்கு அலங்கார தீபாராதனை, அழகிய கூத்தர் தாமிர சபைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து 20-ந் தேதி ஆனி திருமஞ்சனமும், காலை 11 மணிக்கு மகா அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு நடன தீபாராதனையும், சுவாமி ரத வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் செய்து உள்ளனர்.
    நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் மிக சிறப்பு வாய்ந்தது. இந்த தேரோட்டத்துக்காக அந்த 5 தேர்களும் சுத்தம் செய்யப்படுகின்றன.
    நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். ஆனித்திருவிழா தேரோட்டம் மிக சிறப்பு வாய்ந்தது. சுற்று வட்டார பகுதி மக்கள் மட்டும் அல்லாமல் வெளியூரை சேர்ந்த பக்தர்களும் தேரோட்டத்தை பார்ப்பதற்காக நெல்லைக்கு வருவார்கள்.

    இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா வருகிற 19-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்குகிறது. 27-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவுக்கான பணிகள் தொடங்குவதற்காக கடந்த 1-ந் தேதி நெல்லையப்பர் கோவில் 2-வது பிரகாரத்தில் விநாயகர் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து திருவிழாவுக்கான பணிகள் தொடங்கின.

    நெல்லையப்பர் கோவிலில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியன், சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்கள் உள்ளன. இந்த தேரோட்டத்துக்காக அந்த 5 தேர்களும் சுத்தம் செய்யப்படுகின்றன. முதற்கட்டமாக தேரினை சுற்றியுள்ள பாதுகாப்பு கண்ணாடி கொட்டகை அகற்றப்பட்டது. தொடர்ந்து தேர் சுத்தம் செய்யப்படும் பணி தொடங்கியது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர். 
    ×