search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்ப்பு"

    • முசிறி அருகே சொத்து தகராறில் சம்பவம்
    • திருச்சி கோர்ட்டு இன்று பரபரப்பு தீர்ப்பு

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள ஆமூர் கல் யாண சுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் முருகையா. இவ–ரது மனைவி சுபாஷினி. இந்த தம்பதியினருக்கு சாதனாஸ்ரீ (வயது 1½), சஞ்சனாஸ்ரீ (வயது 1½) ஆகிய இரட்டைக்குழந்தைகள் இருந்தனர்.இதற்கிடையே சஞ்சனா–ஸ்ரீ தனது பெற்றோருடனும், சாதனாஸ்ரீ சுபாஷினியின் தந்தையான ஆமூர் சடை–யப்ப நகரில் உள்ள சாமி–தாஸ் வீட்டிலும் வளர்ந்து வந்தனர்.இந்தநிலையில் சுபாஷி–னியின் தந்தை சாமிதாசுக்கும், அவரது மகன் லோகநாதனுக்கு சொத்துக் களை பிரிப்பதில் தகராறு இருந்து வந்தது. மேலும் லோகநாதன் தனக்கு வந்து சேர வேண்டிய சொத்துக்களை தனது சகோதரி சுபாஷினியின் மகள் சாதனாஸ்ரீக்கு எழுதி வைத்துவிடுவாரோ என்ற பயம் இருந்தது. அத்துடன் தன்னுடைய குழந்தைகளை பார்த்துக்கொள்வதை விட, சாதனாஸ்ரீயை பராம–ரிப்பதிலேயே சாமிதாஸ் அதிக கவனம் செலுத்தியதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த லோகநாதன் கடந்த 31.12.2018 தனது சகோதரி சுபாஷினியுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அதே நாளில் தாத்தா வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சாதனாஸ்ரீயின் கழுத்தை பிடித்து தூக்கி கட்டிலில் அடித்தார்.பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த குழந்தை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 4.1.2019 அன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்த முசிறி போலீசார் லோகநாதனை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத் தில் நடந்து வந்தது. இதில் அரசு வழக்கறிஞராக கே.பி.சக்திவேல் ஆஜரா–னார்.வழக்கு விசா–ரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி பி.செல்வ–முத்துக் குமாரி இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் 1½ வயது குழந்தையை சொத்து தகராறில் கொடூரமாக கொலை செய்த லோக–நாதனுக்கு ஆயுள் தண்ட–னையும், ரூ.3 ஆயிரம் அப–ராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.இதையடுத்து லோக–நாதனை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • வழக்கில் 1 ஏக்கருக்கு ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.
    • கோர்ட் ஊழியர்கள் தீர்ப்பின் நகலை காட்டி ஜப்தி செய்யப் போவதாக தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கடந்த 1985ம் ஆண்டு கட்டப்பட்ட போது இப்பகுதியை சேர்ந்த செட்டிநாயக்கன்பட்டி கிராம மக்களின் 50க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. சுமார் 215 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் 1 ஏக்கருக்கு ரூ.1500 வழங்க அரசு முடிவு செய்தது.

    ஆனால் இந்த தொகை தங்களுக்கு போதவில்லை எனவும், கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என 50க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் சப்-கோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 1 ஏக்கருக்கு ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் திண்டுக்கல் கோர்ட்டு அறிவித்த தொகையை உறுதிசெய்து கடந்த 2012ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த தொகையை இதுவரை அரசு வழங்கவில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    அதனை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே நிர்ணயித்த இழப்பீட்டு தொகையுடன், 30 சதவீதம் ஆறுதல் தொகை, 15 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அந்த தொகையும் வழங்கப்படவில்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் இன்று திண்டுக்கல் மாவட்ட கலெகடர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்தனர்.

    அப்போது மாவட்ட கலெக்டர், அலுவலகத்தில் இல்லை. மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அதிகாரிகள் இருந்தனர். அவர்களிடம் கோர்ட்டு ஊழியர்கள் தீர்ப்பின் நகலை காட்டி ஜப்தி செய்யப் போவதாக தெரிவித்தனர். கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு வருவாய் அலுவலர் தெரிவித்தார். இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் சம்மதிக்காததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    • வீரக்குமாரை பாட்டிலால் தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி ரூ.1000-ஐ பறித்து சென்றனர்.
    • வழிப்பறி குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கும்பகோணம்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள அடுக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வீரக்குமார்.

    லாரி டிரைவரான இவர், கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறி கொண்டு வந்து இறக்கி விட்டு மார்க்கெட் அருகே லாரியை நிறுத்தி விட்டு தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த கும்பகோணம் மாணிக்கநாச்சியார் கோவில் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அருண் (வயது 19), அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் தேவன் (25) ஆகியோர் வீரக்குமார் ஓட்டி வந்த லாரி கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி லாரிக்குள் தூங்கிக் கொண்டிருந்த வீரக்குமாரை பாட்டிலால் தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி வீரக்குமார் வைத்திருந்த ரூ.1000-ஐ பறித்து சென்று விட்டனா்.

    இந்த தாக்குதல் மற்றும் வழிப்பறி குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசில் வீரக்குமார் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட அருண் மற்றும் தேவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    இந்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன் நேற்று தீர்ப்பு கூறினார்.

    அவர் தனது தீர்ப்பில், லாரி டிரைவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட அருணுக்கு 3 வருடம் 5 மாதம் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    மேலும் உடந்தையாக இருந்த தேவனுக்கு 2 வருடம் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    • உள்ளாட்சி தேர்தலின்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.
    • 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, கருவாழக்கரை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). இவரது எதிர் வீட்டைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்கிற ராஜசேகர் (34).

    இவர்கள் இருவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலின்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.

    இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு கணேசன் மற்றும் அவரது உறவினர்கள் அமிர்தம், லட்சுமி ஆகியோர் அங்கு நின்று கொண்டிருந்தபோது் ராஜசேகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெங்கடேசன் (33), வெங்கடேஷ் (33), மணி (38), முனி என்கிற மணிகண்டன் (27), விஜி என்கிற விஜய் (27), விக்னேஷ் (28) ஆகிய 7 பேரும் சேர்ந்து கணேசன், அமிர்தம், லட்சுமி ஆகிய 3 பேரையும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

    மேலும் கணேசன் வீட்டில் இருந்த நாற்காலிகள், ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து சேதப்படுத்தி உள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த வழக்கு மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று மாவட்ட கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி இளங்கோ தீர்ப்பு வழங்கினார்.

    ராஜசேகர், வெங்கடேசன், வெங்கடேஷ், மணி, விஜய், விக்னேஷ் ஆகிய 6 பேருக்கும் 4 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், மணிகண்டனுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

    அபராத தொகையை கட்டத்தவறினால் தலா 2 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

    • கோவை - சேலம் புற வழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலின் பூட்டை உடைத்து அங்கிருந்த 50 ஆயிரம் மதிப்புள்ள டி.வி. மற்றும் போகஸ் லைட்டை திருட்டு
    • 1 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.200 அபராதம் விதித்து தீர்ப்பு

    அவினாசி :

    கடந்த 26.1.2018-ம் ஆண்டு சேடர்பாளையம் சாய் கார்டன் பகுதியில் வீட்டு பூட்டை உடைத்து அங்கிருந்த 2 பவுன் சங்கிலி, ரூ. 45 ஆயிரம் மற்றும் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் 16.2.2018-ம் ஆண்டு கோவை சேலம் புற வழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலின் பூட்டை உடைத்து அங்கிருந்த 50 ஆயிரம் மதிப்புள்ள டி.வி. மற்றும் போகஸ் லைட்டை திருடி சென்ற வழக்கில் அவினாசி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சபீனா விருதுநகரை சேர்ந்த செல்வராஜ் (46) என்பவருக்கு தலா 1 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.200 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

    அவினாசியை அடுத்த பெருமாநல்லூர்வலசு பாளையத்தை சேர்ந்தவர் அம்மணியம்மாள் (வயது 53). இவர் கடந்த 25.7.2016 அன்று சாலையில் நடந்த சென்றபோது மர்ம ஆசாமி ஒருவர் அம்மணியம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த 9 பவுன் தாலிக்கொடியை பறித்து சென்றார். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளகோவில் நடுப்பாளையத்தை சேர்ந்த பிரபு என்கிற மோகன் பிரபுவை (38) கைது செய்தனர். இதையடுத்து இவர் மீதான வழக்கு அவினாசி கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் பிரபு என்கிற மோகன் பிரபுவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி சபீனா தீர்ப்பு கூறினார்.

    யூனியன் பிரதேசங்களில் அதிகாரம் யாருக்கு என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட் நேற்று வழங்கிய தீர்ப்பு டெல்லிக்கு பொருந்தாது என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். #KiranBedi
    புதுச்சேரி:

    நாட்டில் 7 யூனியன் பிரதேசங்கள் இருந்தாலும், புதுவை-டெல்லி ஆகிய மாநிலங்களில் மட்டுமே சட்டசபை செயல்படுகிறது. ஆனால், இவை யூனியன் பிரதேசம் என்பதால் கவர்னருக்குத்தான் அதிகாரம் என்று கூறி புதுவை கவர்னர் கிரண்பேடி, டெல்லி கவர்னர் அனில் பைஜால் ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.

    இதை எதிர்த்து டெல்லியில் ஆம் ஆத்மி அரசு தொடர்ந்த வழக்கில் கவர்னருக்கு அதிகாரம் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

    இந்த தீர்ப்பு 100-க்கு 110 சதவீதம் புதுவைக்கும் பொருந்தும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். மேலும் கவர்னர் கிரண்பேடி இனிமேலும் இதை மீறும் வகையில் செயல்பட்டால் அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொட ரப்படும் என்றும் கூறினார்.

    இது சம்பந்தமாக கவர்னர் கிரண்பேடி நேரடியாக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் நேற்று கூறப்பட்ட தீர்ப்பில், புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு டெல்லி தீர்ப்பு பொருந்தாது என்று சுப்ரீம் கோர்ட்டே கூறி இருக்கிறது. 

    அதாவது டெல்லி மாநிலம் அரசியல் சாசன சட்டம் 239 ஏ.ஏ. பிரிவின் கீழ் செயல்படுகிறது. புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்கள் 239 ஏ. பிரிவின் கீழ் செயல்படுகிறது. எனவே, இப்போதைய தீர்ப்பு 239 ஏ.ஏ. பிரிவின் அடிப்படையில்  கூறப்பட்டுள்ளது. இதனால் புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தாது என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறி இருந்தனர்.

    இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை இன்று சந்தித்த கிரண்பேடி, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வாசித்து காட்டி, டெல்லியின் தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
    ×