search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர்"

    • ஆசிரியர் பயிற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்யும் கல்வி துறையின் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
    • ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    வேதாரண்யம்:

    பள்ளிகளில் எண்ணும், எழுத்தும் திட்டத்தின் படி ஆசிரியர்கள் மேற்கொள்ளும் கற்பித்தல் பணிகளை, ஆசிரியர் பயிற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்யும் கல்வி துறையின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி வேதாரண்யம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வட்டார தலைவர் சிவக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் வட்டார பொருளாளர் வீரசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், வட்டார துணை தலைவர் சங்கரன், வட்டார துணை செயலாளர் அன்பழகன், மாநில செயற்குழு உறுப்பினர் மணிமேகலை, வட்டார செயற்குழு உறுப்பினர் செல்வி உள்ளிட்ட வட்டார, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • ராஜேந்திரன், கொளஞ்சியப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
    • கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராம நத்தம், மங்களூர் வட்டார கல்வி அலுவல கத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் ெஜய பால் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர், மாவட்ட பொருளாளர் சுரேஷ், மாவட்டத் துணைத் தலைவர் சரவணன், துணைச் செயலாளர் வாசுகி, மகளிர் வலை யமைப்பு அமுதா, பொரு ளாளர் சுரேஷ், இயக்கப்புர வலர் ராஜேந்திரன், கொளஞ்சியப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர். இதில் கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போதைப் பாக்குகளைமென்று மயக்கத்தில் உறங்கிய அவரை எழுப்பியதற்காகத் தான் ஆசிரியரை அவர் தாக்கியிருக்கிறார்.
    • சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் மாவா, குட்கா உள்ளிட்ட போதைப் பாக்குகளும் தான் காரணம் ஆகும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை திருவொற்றியூரில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில், மாவா எனப்படும் போதைப் பாக்குகளை சாப்பிட்டு வகுப்பறையில் போதையில் உறங்கிய மாணவனை கண்டித்த ஆசிரியர், அந்த மாணவனால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் மருத்துவத்திற்காக சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆசிரியரைத் தாக்கிய மாணவர், போதைப் பாக்குகளையும், புகையிலையையும் மெல்லும் வழக்கத்திற்கு ஆளானவர் என்று கூறப்படுகிறது. வகுப்பறையிலேயே போதைப் பாக்குகளைமென்று மயக்கத்தில் உறங்கிய அவரை எழுப்பியதற்காகத் தான் ஆசிரியரை அவர் தாக்கியிருக்கிறார்.

    சமூகம் சீரழிவதற்கு சட்டப்படி விற்கப்படும் மது உள்ளிட்ட போதைப் பொருட்களும், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் மாவா, குட்கா உள்ளிட்ட போதைப் பாக்குகளும் தான் காரணம் ஆகும். இவற்றை ஒழிக்காமல் மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியாது. இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்தையும் காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருப்பதால், அனைத்து வகையான போதைப் பொருட்களையும் முற்றிலுமான ஒழித்து தமிழ் நாட்டை போதையில்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மாணவர் ஒருவர் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. தேர்வும் எழுதாமல் இருந்தார்.
    • தேர்வு அறையில் ஆசிரியரை மாணவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், விம்கோ நகர் பகுதியில் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த சேகர் (46) என்பவர் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இவர் பிளஸ் - 2 வகுப்புக்கு பாடம் எடுத்து வந்தார். தற்போது பள்ளியில் 2-ம் கட்ட பருவ தேர்வு கடந்த 30-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் பள்ளியில் பிளஸ்- 2 படித்து வரும் மாணவர் ஒருவர் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. தேர்வும் எழுதாமல் இருந்தார்.

    இதையடுத்து மாணவரை அவரது தந்தை பள்ளிக்கு அழைத்து வந்து ஆசிரியரிடம் வருத்தம் தெரிவித்தார். பின்னர் அந்த மாணவரை வணிகவியல் தேர்வு எழுத அனுமதித்து உள்ளனர். அந்த தேர்வு அறையில் ஆசிரியர் சேகர் கண்காணிப்பாளாராக இருந்தார்.

    ஆனால் அந்தமாணவர் மட்டும் தேர்வு எழுதாமல் மேஜை மீது படுத்து ஹாயாக தூங்கத்தொடங்கினார். இதனை கவனித்த ஆசிரியர் சேகர் மாணவரை தட்டி தேர்வு எழுதுமாறு அறிவுரை கூறினார். இதனை மாணவன் கண்டு கொள்ளாமல் மீண்டும் தூங்கத்தொடங்கினார். அப்போது அருகில் புகையிலை பாக்கெட் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனை கவனித்த ஆசிரியர் சேகர், மாணவரை கண்டித்து கேள்விகள் கேட்டுக்கொண்டு இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர் திடீரென ஆசிரியர் சேகரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு முகத்தில் ஓங்கி குத்துவிட்டார். இதில் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் அவரை மாணவர் விடாமல் சரமாரியாக தாக்கினார். இதில் ஆசிரியர் சேகரின் முகம் முழுவதும் வீங்கி ரத்தம் கொட்டியது.

    இதனை பார்த்து தேர்வு அறையில் இருந்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் மற்ற வகுப்பறையில் இருந்த ஆசிரியர்கள் விரைந்து வந்து மாணவரை சமாதானப்படுத்தி ஆசிரியர் சேகரை மீட்டனர். ரத்தம் சொட்ட,சொட்ட நின்ற சேகரை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக ஆசிரியர் சேகர் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மாணவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். தேர்வு அறையில் ஆசிரியரை மாணவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குண்டும் குழியுமான மலைச் சாலையில் 7 கிலோமீட்டர் தூரம், 45 டிகிரி கோணத்தில் ஏறி, இறங்க வேண்டும்.
    • குழந்தைகள் பள்ளி படிப்பை 5-ம் வகுப்பிற்கு மேல் படிக்காமல் நிறுத்தி விடுகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த வட்டவனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிமலை, கோட்டூர் மலை, அலக்கட்டுமலை என 3 மலை கிராமங்கள் உள்ளன. இதில் அலக்கட்டு மலையில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு அடர்ந்த வனப் பகுதிகளில் சாலை வசதி முழுவதுமாக இல்லாத, குண்டும் குழியுமான மலைச் சாலையில் 7 கிலோமீட்டர் தூரம், 45 டிகிரி கோணத்தில் ஏறி, இறங்க வேண்டும். இந்த மலையில் உள்ள மக்களுக்கு சாலை, குடிநீர், மருத்துவம், கல்வி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.

    இந்த நிலையில் இந்த பகுதியை மலை கிராமத்தில் உள்ள குழந்தைகள் படிப்பதற்காக அரசு மலை மீது தொடக்கப்பள்ளி தொடங்கியுள்ளது. போதிய கட்டிட வசதி இல்லாமல் பைபர் மூலமாக 2 அறைகள் கொண்ட வகுப்பறை கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மலை கிராமத்தில் உள்ள குழந்தைகள் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை இதே பள்ளியில் படித்து விட்டு, 6-ம் வகுப்பு மலையை விட்டு கீழே இறங்க வேண்டும். அவ்வாறு 7 கிலோ மீட்டர் தூரம் நடக்கின்றபோது வனப்பகுதியில் 5 இடங்களில் சிற்றாறுகள் குறுக்கிடுவதும், ஆங்காங்கே யானைகள், காட்டு எருமை உள்ளிட்ட விலங்குகளின் அச்சுறுத்தல் இருப்பதால், பெரும்பாலான குழந்தைகள் பள்ளி படிப்பை 5-ம் வகுப்பிற்கு மேல் படிக்காமல் நிறுத்தி விடுகின்றனர்.

    மேலும் இந்த தொடக்கப் பள்ளியில் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் தினந்தோறும் 7 கிலோ மீட்டர் மலையேறி செல்ல வேண்டும், இருசக்கர வாகனங்களில் மலை சாலையில் பயணிக்கும் அனுபவம் இல்லாததால், அடிக்கடி விழுந்து அடிபடுகின்ற சூழலும், விலங்குகளின் அச்சுறுத்தல்களும் இருப்பதால், பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கு வாரம் ஒரு முறை கூட வராமல் நின்று விடுகின்றனர். இதனால் இந்த மலை கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி என்பதும் ஒரு எட்டாக் கனியாகவே இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு பாப்பரப்பட்டியை சேர்ந்த தமிழரசன் என்ற ஆசிரியர் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று கலந்தாய்வு கூட்டத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது 16 ஆசிரியர்கள் இந்த அலக்கட்டு மலை கிராமத்திற்கு செல்ல முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழரசன் பதவி உயர்வு பெற்ற நிலையில், விரும்பி அலக்கட்டு மலை கிராம பள்ளியை தேர்ந்தெடுத்துள்ளார். அவர் தேர்ந்தெடுத்த பொழுது உடன் கலந்தாய்வு கூட்டத்தில் இருந்த ஆசிரியர்கள் மலை கிராமம், வன விலங்குகள் அச்சுறுத்தல், தினமும் சென்று வருவதில் பல்வேறு சிக்கல்கள் என அச்சுறுத்தியுள்ளனர்.

    ஆனாலும் மனம் தளராமல் அந்த மலை கிராம மாணவர்களுக்கு கட்டாயம் கல்வியை கற்பிப்பேன், அவர்களது முன்னேற்றத்திற்கு நான் உறுதுணையாக இருப்பேன் என்ற உறுதியோடு முதல் நாள் பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்பொழுது மலை மீது ஏறுகின்ற பொழுது முறையான சாலை வசதி இல்லாமல், மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளார். மேலும் பள்ளி முடிந்து கீழே இறங்கும்பொழுது பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்துள்ளார். இதனை அடுத்து அவர் நடைப்பயணமாக சென்றுள்ளார். அப்பொழுது கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு மலை ஏறுவதும் இறங்குவதுமாக தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

    ஆனால் கீழிருந்து பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் நடந்து செல்ல முடியாத சூழல் இருந்து வந்துள்ளது. இதனால் மீண்டும் இரு சக்கர வாகனத்திலேயே ஆசிரியர் தமிழரசன் செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால் அடிக்கடி விழுந்து அடிபடுவதால், இதற்கு மாற்று ஏற்பாடாக பள்ளிக்கு தினம் தோறும் செல்கின்ற வகையில் அதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். கிராமத்தில் 2 பேர் மட்டுமே இரு சக்கர வாகனத்தை ஆட்களை அமர வைத்துக் கொண்டு பாதுகாப்பாக ஓட்டி வருகின்ற நிலையில், அதில் ஒருவர் மகாலிங்கம் என்பவர். இவர் தினந்தோறும் ஆசிரியரை வண்டியில் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதும், பள்ளி முடிந்த பிறகு அழைத்து வந்து கீழே கொண்டு வந்து விடுவதுமாக இருந்துள்ளார். இதனால் தொடர்ச்சியாக மகாலிங்கம் மூலமாகவே தினந்தோறும் பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கலாம் அதற்காக மகாலிங்கத்திற்கு மாதம் ஊதியம் வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதற்கு மகாலிங்கம் ஒப்புதல் தெரிவித்து தினந்தோறும் காலை ஆசிரியரை மலைக்கு அழைத்துச் செல்வதும், பள்ளி முடிந்து மாலை கீழே கொண்டு வந்து விடுவதுமாக இருந்து வருகிறார்.

    இதனால் பள்ளிக்குச் செல்கின்ற ஆசிரியர் தமிழரசன் மலை கிராமத்தில் உள்ள பெற்றோர்களிடம் பேசி, குழந்தைகளை பள்ளிக்கு வர வைத்துள்ளார். தற்பொழுது 15 பிள்ளைகள் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். மேலும் 5-ம் வகுப்பு முடித்த மாணவர்களை கீழே உள்ள பள்ளிகளில் விடுதிகளில் சேர்த்து படிக்க வைக்கும் முயற்சியும் மேற்கொண்டுள்ளார்.

    இந்தப் பள்ளியில் மாணவர்களின் வருகை அதிகரிக்க வேண்டும், மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக நண்பர்கள் மூலமாக பள்ளிக்கு தேவையான கணினி உள்ளிட்ட உபகரணங்களை வாங்கி வருவதும், பள்ளி வகுப்பறை முழுவதும் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஆர்வமூட்டுகின்ற வகையில் புகைப்படங்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவைகளை காட்சிப்படுத்தியுள்ளார்.

    மேலும் வகுப்பறையில் பாடம் எடுக்கின்றபோது மாணவர்கள் ஆசிரியரை உற்று கவனிக்க வேண்டும் என்பதற்காக, பாடங்களில் வருவதை தானே நடித்து பாடம் நடத்தி வருகிறார். இதனால் மாணவர்கள் ஆர்வமாக ஆசிரியரின் வருகையையும், பாடம் வகுப்பு நடத்துவதையும் கூர்ந்து கவனித்து வருகின்றனர். இந்த அணைக்கட்டு மலை கிராம பள்ளிக்கு ஆசிரியர் தமிழரசன் வந்த பிறகு பள்ளியில் உள்ள மாணவர்கள்இடைநீற்றல் இல்லாமல், பள்ளிக்கு வருவதும், நன்றாக படித்தும் வருகின்றனர். இதனால் மலை கிராமத்தில் உள்ள பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தற்பொழுது தமிழரசன் ஆசிரியர் பள்ளி மாணவர்களின் நலனுக்காக, அவர்களது வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக மலையில் உள்ள பள்ளிக்கு செல்ல மாத ஊதியும் கொடுத்து ஒருவரை வைத்து தினந்தோறும் பள்ளிக்கு சென்று வருவது மலை கிராம மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதேபோல் மலை கிராம மாணவர்களுக்கு கல்வியும் தடையில்லாமல் கிடைக்கிறது. எத்தனையோ அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சிறந்த ஆசிரியர் என்ற விருதை பெற்றிருந்தாலும், இந்த மாணவர்களின் வளர்ச்சிக்காக, மலை, வன விலங்கு அச்சுறுத்தல்கள், இதையெல்லாம் கடந்து கல்வி கற்பிக்கின்ற பொழுது ஒரு மிகுந்த மன நிறைவு இருப்பதாக ஆசிரியர் தமிழரசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    ஒவ்வொரு ஆசிரியரும் தமிழரசன் போலவே மாணவர்களின் வளர்ச்சிக்கு கல்விக்கும் தங்களது சிரமங்களை பார்க்காமல் பணியாற்றினால் மலை பகுதியில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமல்ல, எல்லா மாணவர்களுக்கும் கல்வி அறிவு புகட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோபமுற்ற ஆசிரியர், மாணவிகளை கடுமையாக வசைபாடினார் என்று தகவல்.
    • சம்பவம் குறித்து மாணவிகளின் பெற்றோர் பள்ளி கல்வித் துறையிடம் புகார்.

    கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் உருது பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் கன்னட மொழிப் பாடம் நடத்தும் ஆசிரியர் மாணவிகளிடம் கடுமையாக நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா இந்துக்களுக்கான நாடு என்பதை கூறி மாணவிகளை பாகிஸ்தானுக்கு போகுமாறு அந்த ஆசிரியர் கூறி இருக்கிறார்.

    உருது பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் இரண்டு மாணவிகள் வகுப்பறையில் பேசியதாக கூறப்படுகிறது. மாணவிகள் பேசியதால் கோபமுற்ற ஆசிரியர், மாணவிகளை கடுமையாக வசைபாடினார் என்று கூறப்படுகிறது. கன்னடா மொழிப்பாடம் நடத்தி வரும் இந்த ஆசிரியர், மாணவிகளிடம், "பாகிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள். இந்த நாடு இந்துக்களுக்கானது," என்று கூறியுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து மாணவிகளின் பெற்றோர் பள்ளி கல்வித் துறையிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த பள்ளி கல்வித் துறை, சம்பந்தப்பட்ட ஆசிரியரை வேறு பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்து இருக்கிறது.

    "நாங்கள் அந்த ஆசிரியரை வேறு பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்து இருக்கிறோம். அவர் மீது துறை ரீதிலியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிக்கை வெளியான பிறகு, மேற்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்று பள்ளி கல்வித் துறை அலுவலர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.

    26 ஆண்டுகள் அனுபவம் மிக்க இந்த ஆசிரியர் உருது பள்ளியில் கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சுக்காபி, சுண்டல் போன்றவற்றை சாப்பிட்டு பார்த்து விட்டு தரமாக அனைத்தும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
    • துணை அமைப்பாளர் பழனி, கோளூர் கோபால், முருகானந்தம் கோதண்டன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி மீஞ்சூர் அரசு பள்ளி கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் மற்றும் மாணவிகள் விடுதிகளில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தார்.

    விடுதியில் வருகை பதிவேடு உணவு பொருள் இருப்பு விவரங்கள் உணவுபட்டியல் மாணவர்கள் சேர்க்கை சமையலறை தங்குமிடம் போன்றவற்றை முறையாக பார்த்து மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர் மாணவர்களுக்கு வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுக்காபி, சுண்டல் போன்றவற்றை சாப்பிட்டு பார்த்து விட்டு தரமாக அனைத்தும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    அப்போது மாணவர்கள் தங்களின் துணிகளை துவைக்க கஷ்டப்படுவதாகவும் தங்களுக்கு மின்சலவை இயந்திரங்கள் வழங்க வேண்டும் எனவும் மகளிர் விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் தங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கவேண்டும். தமிழ் நாளிதழ்கள் படிப்பதற்கு கொடுப்பதை போன்று ஆங்கில நாளிதழ்களையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்:- ஆதிதிராவிட உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்துவது மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்துதான் செய்ய முடியும் தேவை ஏற்பட்டால் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்து கல்லூரி பள்ளிமாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் உயர் நிலைபள்ளிக்கும் நடுநிலை பள்ளிகளுக்கும் தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிவர்த்தி செய்வதாகவும் விரைவில் தேர்வின் மூலம் உரிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

    ஆய்வின்போது தாசில்தார் மதியழகன் நகர மன்ற தலைவர் பரிமளம்விஸ்வநாதன் சேர்மன் ரவி காப்பாளர் அன்பழகன், நகரச் செயலாளர் ரவிக்குமார், ஒப்பந்ததாரர் ஆசானபுதூர் சம்பத், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீசன், சுகுமார், கூட்டுறவு சங்க துணை தலைவர் நேதாஜி, முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர் டாக்டர் மா. தீபன் மாவட்ட மகளிர் அணி தலைவர் உமா காத்தவராயன், ஆதிதிராவிடநலக்குழு அமைப்பாளர் ஏனம்பாக்கம் சம்பத் , துணை அமைப்பாளர் பழனி, கோளூர் கோபால், முருகானந்தம் கோதண்டன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காந்தி நினைவு அருங்காட்சியகத்திற்கு இத்தாலிய யோகா குழுவினர் வருகை தந்தனர்.
    • பயிற்சியை பெற இத்தாலிய ஆசிரியர் குழுவினனர் இந்தியா வந்துள்ளனர்.

    மதுரை

    இந்தியாவில் பின்பற்றப்படும் யோகா, தியானம், நல வாழ்வு ஆகியவற்றை கற்றுக் கொண்டு இத்தாலிய மாணவ-மாணவிகளுக்கு கற்று கொடுப்பதற்கான பயிற்சியை பெற இத்தாலிய ஆசிரியர் குழுவினனர் இந்தியா வந்துள்ளனர்.

    இந்த குழுவினர்கள் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் வந்தனர். காந்திய சிந்தனைகள் குறித்து அருங்காட்சியக நிர்வாகிகளிடம் கேட்டறிந்தனர். காந்தி நினைவு அருங்காட்சி யகத்தை பார்வையிட்ட யோகா குழுவினர் அந்த அருங்காட்சியகத்திற்கும் இத்தாலி நாட்டிற்குமான தொடர்புகள் வருங்காலத்தி லும் தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த னர்.

    இதற்காக காந்திய கலாசார பரிமாற்றம் தொடர்பான செயல் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என வேண்டு கோள் விடுத்தனர். காந்தி நினைவு அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

    • அரசு பள்ளி ஆசிரியர் ‘சஸ்பெண்டு’
    • மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது

    நாகர்கோவில் : கன்னியாகுமரி அருகே மகாராஜபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரி டம் கூறினார்.இந்த நிலையில் நேற்று மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு வந்தனர். பள்ளியை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் தெரிந்ததும் கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.விசாரணையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது நெல்லை மாவடட்டம் கூடங்குளம் மாடித்தோட்டம் பகுதியை சேர்ந்த பச்சைப் பூ ராஜா (41) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். மாணவிகள் மற்றும் பெற்றோர் போராட்டம் நடத்துவதை அறிந்த ஆசிரியர் பள்ளிக்கு வராமல் தலைமறைவானார்.இதையடுத்து போலீசார் அவரை பிடித்தனர். பிடிபட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில் ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மேலும் 7 மாணவிகள் புகார் அளித்தனர்.

    இது போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. புகாரில் ஆசிரியர் வகுப்பறையில் தங்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.ஆசிரியர் பச்சப்பூராஜா மீது அடுக்கடுக்கான புகார்களை மாணவிகள் தெரிவித்ததையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப் பட்ட பச்சப்பூராஜா மீது கன்னியாகுமரி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.பின்னர் ஆசிரியர் பச்சப்பூராஜாவை ஆசாரி பள்ளம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்ட அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதையடுத்து அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து ஆசிரியர் பச்சப்பூராஜாவை சஸ்பெண்டு செய்து கல்வி அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    • கை, காலில் வீக்கம் அடைந்த மாணவருக்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளார்.
    • பெற்றோர் விசாரித்த போது ஆசிரியர் மோகன் பிரம்பால் தாக்கியதாக கூறினார்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகையில் அரசினர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தற்காலிக ஆசிரியராக மோகன்(36) என்பவர் வேலைபார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை ஆசிரியர் மோகன் பிரம்பால் அடித்ததாக தெரிகிறது. இதில் கை, காலில் வீக்கம் அடைந்த மாணவருக்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளார். இதுபற்றி யாரிடமும் கூறவேண்டாம் என்று மாணவரிடம் ஆசிரியர் மோகன் சொன்னதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே நேற்றுகாலை மாணவனின் கை, காலில் வீக்கம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விசாரித்த போது ஆசிரியர் மோகன் பிரம்பால் தாக்கியதாக கூறினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மோகனி டம் விசாரித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவா தத்தில் அவர்கள் ஆசிரியர் மோகனை சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் ஆசிரியர் மோகனை மீட்டனர். தாக்குதலில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து மோகன் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வகுப்பில் பாடம் நடத்தும் போது மாணவர் குறுக்கிட்டு சந்தேகம் கேட்டதாலும் அறிவியல் பாடத்தில் குறிப்பு எடுக்க சொன்னபோது புரியவில்லை என்று கூறியதாலும் மாணவரை ஆசிரியர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இது தொடர்பாக பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் வைலட்மேரி இசபெல்லா தலைமையில் கல்வி அதிகாரிகள் நேற்று நள்ளிரவு வரை கிராமமக்கள் மற்றும் பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இன்று 2-வது நாளாக பள்ளியில் விசாரணை நடந்து வருகிறது. விசார ணைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் நடந்தது.
    • மாணவர்களுக்கு பாடங்கள், பாடநூல் பயிற்சி ஏடுகள், ஆசிரியர் கையேடுகள் ஆகியவற்றை முடித்து மாணவர்கள் மகிழ்வுடன் கற்கும் வகையில் பாடச் சுமையை குறைக்க வேண்டும்.

    ராசிபுரம்:

    தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்

    ராசிபுரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மகளிரணி அமைப்பாளர் பாரதி வரவேற்றார். மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பழனிசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சங்கர், பொருளாளர் பிரபு ஆகியோர் அறிக்கை வாசித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் முருக செல்வராசன் கலந்து கொண்டு பேசினார். முடிவில் துணைச் செயலாளர் ஜெயவேலு நன்றி கூறினார்.

    பாடச்சுமை

    கூட்டத்தில் எண்ணும் எழுத்தும் கல்வித் திட்டத்தில் மாணவர்கள் நன்கு பயிலும் வகையில் தொடக்கப்பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். 3 பருவத் தேர்வுகளை மட்டும் பள்ளியின் சூழ்நிலைக்கு ஏற்ப தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களே வினாத்தாள் வடிவமைத்து தேர்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும். இணைய வழி வாராந்திர மற்றும் பருவத் தேர்வுகள் கைவிடப்பட வேண்டும்.

    மாணவர்களுக்கு பாடங்கள், பாடநூல் பயிற்சி ஏடுகள், ஆசிரியர் கையேடுகள் ஆகியவற்றை முடித்து மாணவர்கள் மகிழ்வுடன் கற்கும் வகையில் பாடச் சுமையை குறைக்க வேண்டும்.

    தமிழ்நாடு அரசு இனைய வழி பணிகளை பதிவேற்றம் செய்யும் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடு வித்துவிட்டு கற்றல் கற்பித்தல் பணிகளில் மட்டுமே பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும். தமிழ்நாட்டின் சாதாரண நிலை இடையிலே ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவிக்கும் அதே நாளில் அதே சதவிகிதத்தில் அகவிலைப்படி உயர்வுகள் தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் நடந்தது.
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்

    காளையார்கோயில்

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் காளையார்கோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்கள் குறித்து பேசினார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோசபரோஸ், குமரேசன், கல்வி மாவட்ட செயலாளர்கள் சகாயதைனேஸ், சிங்கராயர், ஜெயக்குமார், கல்வி மாவட்ட தலைவர்கள் ஜோசப், பாலகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர்கள் ரவி, ஸ்டீபன், துணை செயலார்கள் ஜான் அந்தோனி, அமலசேவியர், ஜீவா ஆனந்தி, உள்ளிட்ட மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தமிழக அரசு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×