என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 201649"
- வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
- குமரவேல், திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
குருபரபள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா, வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் திலகம் மற்றும் பணியாளர்கள் நுகர்வோர் விழிப்புணர்வு நல சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏஜி ஜாய் சுரேஷ் குமார் (கனரா வங்கி மேலாளர்- ஓய்வு) மற்றும் மல்லபாடி மக்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் குமரவேல், திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
- சேலம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு சங்ககிரி கோட்ட கலால் தாசில்தார் வேலாயுதம் தலைமை வகித்தார். கலால் வருவாய் ஆய்வாளர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
சங்ககிரி:
சங்ககிரியில், சேலம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்ககிரி கோட்ட கலால் தாசில்தார் வேலாயுதம் தலைமை வகித்தார். கலால் வருவாய் ஆய்வாளர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், கிராம நிர்வாக அலுவலர்கள் சதீஷ் பிரபு (சங்ககிரி), சண்முகம் (சின்னாக்கவுண்டனூர்), கிராம உதவியாளர்கள் தீனதயாளன், சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், திருச்செங்கோடு ரோடு உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.
- மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- ஜெயராஜ், அய்யனார், ராமகிருஷ்ணன், பாலமுருகன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
7-ம் நாள் மண்டகப்படியாக சோழவந்தான் விஸ்வகர்மா ஐந்திணை தொழிலாளர்கள் சார்பில் அக்கசாலை விநாயகர் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்ட நீதிபதி சுந்தர்ராஜ், சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன், பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், தி.மு.க. பேரூர் செயலாளரும், 9-வது வார்டு கவுன்சிலருமான வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் ஆகியோர் மரக்கன்றுகளை வழங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.
ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் கண்ணன், மணி, அங்குசாமி, நாகு ஆசாரி, பிச்சைமணி, முருகன், ஜெயராஜ், அய்யனார், ராமகிருஷ்ணன், பாலமுருகன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
- 12 கிராமமக்கள் ஒன்றினைந்து மஹாபாரத கதைகளை பகல் பொழுதில் வேதம் பயின்றவா் பொதுமக்களுக்கு சொல்லுவார்.
- அவா் குறிப்பிடும் கதைகளுக்கு ஏற்ப இரவில் கூத்து கலைஞா்கள் நடித்து காட்டுவார்கள்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஸ்ரீபுதூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் 12 கிராம மக்கள் மழை வேண்டி மஹாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 18 நாட்களாக நடைபெற்று வந்தது.
தருமபுரி மாவட்டத்தில் மஹாபாரத சொற்பொழிவுகள் நடத்தி பின் கூத்து கலைஞா்களை கொண்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றால் மழை வரும் என்பது மக்களின் நம்பிக்கை.
பாலக்கோடு சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள காவாப்பட்டி, சித்திர ப்பட்டி, வாழைத்தோட்டம், பாலக்கோடு, பனங்காடு உள்ளிட்ட 12 கிராமமக்கள் ஒன்றினைந்து மஹாபாரத கதைகளை பகல் பொழுதில் வேதம் பயின்றவா் பொதுமக்களுக்கு சொல்லுவார். அவா் குறிப்பிடும் கதைகளுக்கு ஏற்ப இரவில் கூத்து கலைஞா்கள் நடித்து காட்டுவார்கள்.
மஹாபாரத சொற்பொழிவில் கடைசி நாளான நேற்று 18-ம் நாள், 18-ம் போர் என்று அழைக்கப்படும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் துரியோதனனை பாண்டவர்கள் வதம் செய்யும் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.
- ஜமாபந்தி நிகழ்ச்சியில் பட்டா மாறுதல் தொடர்பாக மனு அளிக்கலாம்
- பேரூரில், கலால் துணை ஆணையர் தலைமையில், 23 முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது.
கோவை,
கோவை மாவட்டத்தில், 23-ந் தேதி ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்குகிறது. பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல், ரேஷன் கார்டு பெறுவது தொடர்பாக பொதுமக்கள் மனு கொடுக்கலாம்.
கோவை மாவட்டத்தில், 11தாலுகாக்கள் உள்ளன. இதில் ஆனைமலையில் கலெக்டர் தலைமையிலும், கிணத்துக்கடவில் டி.ஆர். ஓ. தலைமையிலும் 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை ஜமாபந்தி நிகழ்ச்சி நடக்கிறது.
பொள்ளாச்சியில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் முன்னிலையில் 23 முதல் 31-ந் தேதி வரை, வால்பாறையில் டி.ஆர்.ஓ. முன்னிலையில் 23-ந் தேதி மட்டும், சூலுாரில், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் தலைமையிலும், மதுக்கரையில் கோவை தெற்கு கோட்டாட்சியர் முன்னிலையிலும், 23 முதல் 30 -ந் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது.
பேரூரில், கலால் துணை ஆணையர் தலைமையில், 23 முதல் ஜூன் 1-ந் தேதி வரை, மேட்டுப்பாளை யத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக் டர் முன்னிலையில், 23 முதல் 30-ந் தேதி வரை, அன்னுாரில் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், 23 முதல் 25-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.கோவை வடக்கு தாலுகாவில், மாவட்ட வழங்கல் அலுவலர் தலை மையில் 23 முதல், 31-ந் தேதி வரை, தெற்கு தாலுகா வில் 23 முதல் 24-ந் தேதி வரையும் ஜமாபந்தி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல், நில எல்லை அளத்தல், முதி யோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ரேஷன் கார்டு பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக, அந்தந்த தாலுகா அலுவல கங்களில் நடைபெறும் ஜமாபந்தியில், காலை 10 மணியளவில் மனு அளிக்கலாம் என, கலெக் டர் கிராந்திகுமார் தெரி வித்துள்ளார்.
- தொண்டியில் நடந்த கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் சாதனை மாணவ-மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர்.
- உயர் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ஐக்கிய ஜமாஅத் மற்றும் ராமநாத புரம் எகனாமிக் சேம்பர் இணைந்து கல்வி வழி காட்டி நிகழ்ச்சியை நடத் தின. இதில் மாண வர்கள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்பது பற்றிய பல்வேறு துறை சார்ந்த பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.
உயர் கல்வியின் முக்கி யத்துவம் பற்றி பேராசிரியர் முகம்மது அப்துல்லாஹ், ஆசிரியப்பணி மற்றும் அரசு பள்ளிகள் பற்றி பேராசிரியர் சுல்தான், மருத்துவம், துணை மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி சம்பந்த மாக பேராசிரியர் சுல்தான் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
பள்ளி அளவில் முதல் 3 இடங்களை பிடித்த 17 மாணவ-மாணவிகளை பாராட்டி கேடயம், ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
- கல்லூரி மாணவிகளுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு நலக்கல்வி அளிக்கப்பட்டது.
- அனைவரும் டெங்கு குறித்த சுகாதார உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை துணை இயக்குனர் சுகாதார பணிகள் விஜயகுமார் உத்தரவின் பேரில் பொரவாச்சேரி ஆண்டவர் நர்சிங் கல்லூரியில் தேசிய டெங்கு தினம் மே 16 கடைபிடிக்கப்பட்டது.
மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அதிகாரி மரு. லியாக்கத் அலி மாவட்ட நல கல்வி அலுவலர் மணவாளன் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் நேர்முக உதவியாளர் கோகுல்நாதன் வட்டார சுகாதார மேற்பா ர்வையாளர் பொறுப்பு செந்தில்குமார் ஆண்டவர் கல்லூரியின் தாளாளர் நடராஜன் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர்கள் களப்பணி உதவியாளர்கள் டெங்கு காய்ச்சல் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கல்லூரியில் பயிலும் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பேரணி சென்றனர் கல்லூரி மாணவிகளுக்கு டெங்கு பற்றிய விழிப்புணர்வு நலக்கல்வி அளிக்கப்பட்டது மேலும் டெங்கு பற்றிய சுகாதார உறுதிமொழியை சுகாதார ஆய்வாளர் மணிமாறன் வாசித்தார்.
முடிவில் வடுகச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையசுகாதார ஆய்வாளர் சுத்தானந்த கணேஷ் நன்றி கூறினார்.
- முருகனுக்கு தீர்த்தம் செலுத்தி அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது.
- பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
காங்கேயம் :
காங்கேயம் அருகே உள்ள பாப்புரெட்டிப்பாளையம் பழனி ஆண்டவர் அக்கினி நட்சத்திர பரம்பரை தீர்த்தக் காவடி குழுவினர் சார்பில் வருடாந்திர அக்கினி நட்சத்திரத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் 750 பேர் கொடுமுடி காவேரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வந்து பழனிக்கு சென்று முருகனுக்கு தீர்த்தம் செலுத்தி அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமிக்கு தீர்த்த அபிஷேகமும், ஆராதனையும் நடத்தி வழிப்பட்டனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக பொத்திபாளையம் பஞ்சாயத்து துணைத்தலைவர் தெய்வசிகாமணி தலைமையில் பழனி ஆண்டவர் கோவிலில் கொடுவாய் வெற்றிவேலன் கலைக்குழு சார்பில் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. இதில் ஆசிரியர் வேலன் தங்கவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சமத்துவ எருதுகட்டு விழாவுக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
- ஏற்பாடுகளை விழா ஒருங் கிணைப்பாளர் ராஜேந்திரன் செய்து வருகிறார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் தாதனேந்தல் பஞ்சாயத்துக்குட்பட்ட பொக்கனாரேந்தல் கிராமத்தில் உள்ள மலை மேல் சாத்தார் உடையார் அய்யனார் கோவில் ஜல்லிக்கட்டு, எருது கட்டு, வடமாடு உரிமை யாளர்கள் நலச்சங்கம் சார்பில் 57-ம் ஆண்டு சமத்துவ எருதுகட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கு முகூர்த்தக்கால் நட்டு காப்பு கட்டும் வை பவம் இன்று நடைபெற்றது.
வருகிற 19-ந் தேதி காலையில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சிக்கு திமுக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமை வகிக்க உள்ளார்.பொக்கனாரேந்தல், பால் கரை , பள்ளபச்சேரி,முத்து வீரப்பன் வலசை, ராஜ சூரிய மடை கோவிந்த னேந்தல், அச்சடிபிரம்பு, அம்மன் கோவில், இந்தியா நகர ்(திருப்புல்லாணி), ஆணைகுடி வீரன்வலசை, தெற்குத்தரவை, கொடிக்குளம், வித்தானூர், எல். கருங்குளம், ஆர். காவனூர், இந்திராநகர் (ராம நாதபுரம்), சிவஞான புரம், அரியகுடி புத்தூர், குமுக்கோட்டை, திருவரங்கம் மற்றும் கைக் கோளர்மடம் பாத்தியப்பட்ட அனைத்து கிராம பொறுப் பாளர்கள் முன்னிலை வகிக்க உள்ளனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா ஒருங் கிணைப்பாளர் ராஜேந்திரன் செய்து வருகிறார்.
- ஒரு கோடி உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்க்கிற “தொண்டர்களாய் ஒன்றிணைவோம்” என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது.
- தி.மு.க. அலுவலகத்தில், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ.விடம், நகர செயலாளர் நவாப் ஒப்படைத்தார்.
கிருஷ்ணகிரி,
தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாளையொட்டி ஒரு கோடி உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்க்கிற "தொண்டர்களாய் ஒன்றிணைவோம்" என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது.
இதில் முதல் கட்டமாக கிருஷ்ணகிரி நகர தி.மு.க. சார்பில் 65 சதவீத உறுப்பினர் படிவங்களை நேற்று மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ.விடம், நகர செயலாளர் நவாப் ஒப்படைத்தார்.
அப்போது மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினரும், நகராட்சி தலைவருமான பரிதாநவாப், பொதுக்குழு உறுப்பினர் சித்ரா சந்திரசேகர், நகர அவைத்தலைவர் மாதவன், துணை செயலாளர்கள் பொன்.குணசேகரன், அரங்கண்ணல், மாவட்ட பிரதிநிதி ஜான்டேவிட்ராஜ், நகர பொருளாளர் கனல் சுப்பிரமணி நகர மன்ற உறுப்பினர் வேலுமணி, வட்ட செயலாளர் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அதிராம்பட்டினத்தில் இருந்து 15 கி.மீட்டர் தூரம் வரை நடைபெற்றது.
- சேதுரோடு சாலை வழியாக மல்லிப்பட்டினத்தை சென்றடைந்தது.
அதிராம்பட்டினம்:
கடல்பசு தினத்தை முன்னிட்டு பான் செக்கர்ஸ் பப்ளிக் மற்றும் ஓம்கார் பவுண்டேசன் மற்றும் கிங்ஸ் ரோட்டரி சங்கம் இணைந்து நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் ரோலர் ஸ்கேட்டிங் உலக சாதனை நிகழ்ச்சி இன்று காலை அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது.
இந்த ரோலர் ஸ்கேட்டிங் உலக சாதனை நிகழ்வை பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரித்திவிராஜ் சௌகான் தொடக்கி வைத்தார்.அதிராம்பட்டினத்தில் இருந்து தொடர்ந்து 15 கிலோமீட்டர் மேலாக நடைபெற்ற இந்த உலக சாதனை ரோலர் ஸ்கேட்டிங் நிகழ்வில் 7 மாணவர்கள், பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்று கணக்கானோர் கலந்து கொண்டனர் .இந்த ஸ்கேட்டிங் அதிராம்பட்டினம் சேதுரோடு சாலை வழியாக மல்லிப்பட்டினத்தை சென்றடைந்தது.
- நேற்றிரவு சித்திரை முழு நிலவு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
- விழாவில் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத்தலமான பூம்புகாரில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று சித்திரை முழு நிலவு விழா (இந்திர விழா) நடைபெறுவது வழக்கம்.
பன்னெடுங்காலமாக நடைபெற்று வந்த இவ்விழா மழைக்கு தலைவனான இந்திரனை வணங்குவதாக ஐதீகம். பண்டைய காலத்தில் இவ்விழா தடைபட்டதால் பூம்புகார் கடல் கோளால் அழிந்ததாகவும் வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன.
அதனைத் தொடர்ந்து அரசின் சார்பாக நடைபெற்று வந்த இந்திர விழா பல ஆண்டுகளாக தடைபட்டு இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்திர திருவிழாவை நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி நேற்று இரவு சித்திரை முழு நிலவு (இந்திர திருவிழா) வெகு விமர்சையாக நடைபெற்றது.
கொற்றவை பந்தலின் அருகே நடைபெற்ற விழாவில் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார், ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், திமுக பொதுக்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன் முன்னிலை வகித்தனர்.
மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செ ல்வம் ஆகியோர் பங்கேற்று சிறப்புறை யாற்றினர்.
தப்பாட்டம்,நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, கிராமிய ஆடல் பாடல் நிகழ்ச்சி, சிலப்பதிகார நாட்டிய நாடகம், பொம்மலாட்ட கலைஞர்களின் சிலப்பதிகார கதை உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் திரளான சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட அனைத்து கலைஞர்களுக்கும் சான்றிதழ்களுடன் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்