search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 201649"

    • உதவும் கரங்கள் குழுவில் உள்ளவர்கள் திரட்டினர்
    • மறைந்த காவலர் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது

    அரியலூர்:

    அரிலூர் மாவட்டம் திருமானூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த கலைச் செல்வம் உடல் நலக் குறைவால் கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார். இந்தநிலையில் அவரது குடும்பத்திற்கு உதவும் வகையில், காவலர் உதவும் கரங்கள் குழுவில் உள்ள காவலர்கள் 5,807 பேர் நிதி திரட்டினர். இதன்படி, திரட்டப்பட்ட ரூ.29,03,500-ஐ குவின் அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள், திருமானூர் சென்று கலைச் செல்வன் குடும்பத்தினரிடம் நேரில் வழங்கினர்.

    • 18 ம் போர் என்று அழைக்கப்படும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கூத்துக்கலைஞா்கள் துரியோதனன் வேடம் தரித்தும் பஞ்சபாண்டவா் வேடம் அணித்தும் நடித்துக்காட்டினா்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம் திண்டல் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவிலில் 7 கிராமமக்கள் மழை வேண்டி பொதுமக்களும் நோய் நொடியின்றி வாழ மஹாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 18 நாட்களாக நடைபெற்றது.

    தருமபுரி மாவட்டத்தில் மஹாபாரத சொற்பொழிவுகள் நடத்திய பின் கூத்துக்கலைஞா்கள் கொண்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றால் மழைவரும் என்பது மக்களின் நம்பிக்கை. திண்டல் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள 7கிராம மக்கள் ஒன்றினைந்து மஹாபாரத கதைகளை பகல் பொழுதில் வேதம் பயின்றவா் பொதுமக்களுக்கு சொல்லுவார்.

    அவா் குறிப்பிடும் கதைகளுக்கு ஏற்ப இரவு பொழுதில் கூத்துக்கலைஞா்கள் நடித்துக்காட்டுவார்கள்.

    இதனையடுத்து மஹாபாரத சொற்பொழிவில் நேற்று 18 ம் நாள் 18 ம் போர் என்று அழைக்கப்படும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றிவேல் நாடக சபா கோபால் மற்றும் கூத்துக்கலைஞா்கள் துரியோதனன் வேடம் தரித்தும் பஞ்சபாண்டவா் வேடம் அணித்தும் நடித்துக்காட்டினா்.

    இந்த நிகழ்ச்சியை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பார்த்து சென்றனா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஊர் தர்மகர்த்தா, மண்டு கவுண்டர் மற்றும் 7 ஊர் கவுண்டர்கள் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடைபெற்றது
    • 250க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில்,மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் உயர்க்கல்வி சார்ந்த வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன் தலைமை வகித்து, உயர்க்கல்வி தொடர்பான தகவல்கள், அரசு கல்வி உதவித் தொகைகள், நுழைவுத் தேர்வுகள், அரசுத் துறை பணிகள், போட்டித் தேர்வில் எவ்வாறு வெற்றிப் பெறுவது, தனியார் துறை வேலைவாய்ப்பு சார்ந்த தகவல்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இலவச திறன் பயிற்சி தகவல்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.கல்வி நிலையச் செயலர் கொ.வி.புகழேந்தி முன்னிலை வகித்தார். முன்னதாக அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் சௌந்தரராஜன் வரவேற்றார். இதற்கான ஏற்பாடுகளை இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர்கள் ராஜா, சிவக்குமார் ஆகியோர் செய்தி ருந்தனர். இதில் மாணவ, மாணவிகள் 250 பேர் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மின் நூலகத்தை பயன்படுத்தும் முறை குறித்த நிகழ்ச்சி நடந்தது.
    • சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்பவியல் துறை தலைவர் பாலாஜி பங்கேற்றார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வணிகவியல் (நிறுமச் செயலரியல்) துறை மின் நூலகத்தை சிறந்த முறையில் பயன்படுத்தும் முறை பற்றிய விரிவுரையை ஏற்பாடு செய்தது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்பவியல் துறை தலைவர் பாலாஜி பங்கேற்றார். அவர் பேசுைகயில், மின் நூலகத்தின் நன்மைகளையும், அதைப் பயன்படுத்தும் முறைகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

    இணைய நூலகத்தில் உள்ள புத்தகங்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்யும் முறை? அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பதைப் பற்றியும் எடுத்துரைத்தார். இணைப் பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். உதவிப்பேராசிரியை சூர்யா நன்றி கூறினார்.

    உதவிப்பேராசிரியை ஜாஸ்மின் பாஸ்டினா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.

    • கீழப்புலியூர் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது
    • மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது

    குன்னம், 

    கீழப்புலியூர் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எல்கேஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா முதன் முறையாக நடைபெற்றது.பள்ளியின் தாளாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளியின் நிறுவனர் ஆர்.பரமசிவம், இயக்குனர் தனலட்சுமி முருகேசன், திருச்சி உறையூர் தயாநிதி மெமோரியல் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.சுதர்சன், அந்நிறுவனத்தின் முதல்வர் நர்மதா சுதர்சன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.பள்ளியின் துணை முதல்வர்கள் உமா, ஜாய், ஒருங்கிணைப்பாளர்கள் ஹபிபுனிஷா, குமரவேல் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். முன்னதாக ஒன்றாம் வகுப்பு மாணவி பாரதி அனைவரையும் வரவேற்று பேசினார். இறுதியில் ஒன்றாம் வகுப்பு மாணவி ஆராதனா அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவில், பேச்சு, இசை, நடனம், நாடகம் என்று மாணவ-மாணவிகளின் வண்ணமிகு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • பெருமாள் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பெருமாள் தங்க கருட வாகனத்துடன் கூடிய ஓலை சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் அடுத்த திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு 108 திவ்ய தேசங்களுள் 17-வது தலமாக போற்றப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா 15 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டு மாசிமக விழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 4-ம் நாளில் காலை பெருமாள் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, இரவு பெருமாள் தங்க கருட சேவை நடந்தது.

    இதில் பெருமாள் தங்க கருட வாகனத்துடன் கூடிய ஓலை சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதில் தக்கார் முருகன்,செயல் அலுவலர் குணசேகரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழா வருகிற 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (5-ந் தேதி) நடைபெறுகிறது. தொடர்ந்து, 7-ம் தேதி காலை சவுரிராஜ பெருமாள் புறப்பட்டு திருமருகல் வரதராஜபெருமாள் கோவிலுக்கு வந்து அங்குள்ள வரதராஜபெருமாள் உடன் சேர்ந்து 2 பெருமாள்களும் தீர்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும், அன்று மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    பின்னர், 12-ம் தேதி இரவு 10 மணிக்கு சவுரிராஜ பெருமாள் கோவில் முன்பு உள்ள நித்ய புஷ்கரணி குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெற இருக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், கிராமமக்களும் செய்து வருகின்றனர்.

    • இன்னிசை நிகழ்ச்சி, நாமசங்கீர்த்தனம், ஆஞ்சநேய உற்சவம் ஆகியவை நடைபெற்றது.
    • விஷ்ணுசகஸ்ரநாம பாராயணம், அஷ்டபதிபஜனை ஆகியோருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் வடக்குராமலிங்க அக்ரஹாரம் சார்பில் ஆண்டுதோறும் ராதாகல்யாண மகோத்சவம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி 68-ம் ஆண்டு ராதா கல்யாண மகோற்சவம் மற்றும் ஸ்ரீவாஞ்சியம் ராமச்சந்திர பாகவதர் நூற்றாண்டு விழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது.

    விழாவின் கடைசி நாளில் விஷ்ணுசகஸ்ரநாம பாராயணம், அஷ்டபதிபஜனை, திவ்யநாம பஜனை, மதியம் பலராமகன்பாகவதர், சுப்ரமணிய பாகவதர் ஆகியோருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    பின்னர் ஸ்ரீ ராதாகல்யாண மகோற்சவம் நடைபெற்றது.

    மாலையில் ஸ்பூர்த்திராவ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும், கடையநல்லூர் ராஜகோபால்தாஸ் குழுவினரின் நாமசங்கீர்த்தனம், ஆஞ்சநேய உற்சவம் ஆகியவை நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.

    • மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
    • ஊராட்சி ஒன்றியப்பள்ளி தலைமை ஆசிரியை மரகதம் சிறப்புரையாற்றினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஸ்ரீ தாயுமானவர் வித்யாலயம் உதவி நடுநிலைப்பள்ளியில் சுதந்திர போராட்ட தியாகி குருகுலம் பள்ளி நிறுவனர் சர்தார் வேதரத்னம் பிள்ளையின் 126-வது பிறந்தநாள் விழா திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் சென்ட் உறுப்பினர் ராஜலிங்கம் தலைமையில் நடந்தது.

    விழாவில் சர்தார் தேசிய சேவைகள் மற்றும் கல்வி பணிகள் குறித்து கைலவனம் பேட்டை ஊராட்சி ஒன்றியப்பள்ளி தலைமை ஆசிரியை மரகதம் சிறப்புரையாற்றினார்.

    விழாவை யொட்டி வேதா ரண்யம் சரகத்தில் உள்ள 17 பள்ளிகளின் மாணவ- மாணவிகளிடையே போட்டிகள் நடைபெற்றது.

    இதில் வெற்றி பெற்ற 200 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் குருகுலம் கல்வியியல் கல்லூரி நிர்வாகி கேடிலியப்பன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சங்கர வடிவேல், முன்னாள் ரோட்டரி கிளப் தலைவர் அம்பிகாதாஸ், திருநாவுக்கரசு வார வழிபாட்டு மன்ற ராஜேந்திரன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் சித்திரவேல், வைரக்கண்ணு உள்பட பிரமுகர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    முன்னதாக குருகுலம் நிர்வாக அறங்காவலர் கயிலைமணி வேதரத்னம் அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் வித்யாலயம் பள்ளி தலைமை ஆசிரியை நந்தினி நன்றி கூறினார்.

    • தமிழ்க்கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது
    • தொன்மையான தமிழை பாதுகாக்க வேண்டும் என்று நந்தலாலா தெரிவித்துள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில், தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் நடைபெற்ற தமிழ்க்கனவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கவிஞர் நந்தலாலா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,தொன்மையான தமிழில் எழுத, பேச மாணவர்கள் முன்வரவேண்டும்.

    எங்கெங்கோ பிறந்த பலரும் தமிழை கற்றுக்கொண்டு தமிழுக்காக கடுமையாக உழைத்துள்ளனர். குறிப்பாக இத்தாலியில் பிறந்த வீரமாமுனிவர், அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் வாழ்ந்து தமிழை கற்று தேம்பாவனி எனும் நூலை எழுதினார். அதேபோல், திருக்குறளை லத்தீன் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதனால் திருக்குறளின் அருமை உலகறிந்தது.

    இந்தியா பல்வேறு மாநிலங்களை கொண்டிருந்தாலும், தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல முக்கிய காரணங்கள் இலவச கல்வி, சமூகநீதியை கடைபிடித்தல், மொழிக்கொள்கையை பின்பற்றுதல் ஆகும்.மாணவர்கள் மொழியின் வளத்தை தெரிந்து கொள்ள இலங்கணங்களை கற்றறிய வேண்டும். எனவே, மாணவர்கள் பழமையான தமிழ் மொழியை நன்கு படிக்க வேண்டும். எழுத வேண்டும். தமிழை வளர்க்க வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் மருத்துவர் யாழனி , மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன், அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


    • புதுக்கோட்டையில் இன்று கலை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது
    • இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் கிராமப்புற கலைஞர்களால் நடத்தப்பட உள்ளது.

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வாயிலாக பொங்கல் கலை விழாவினை முன்னிட்டு, கலை சங்கமம் நிகழ்ச்சி இன்று (24-ந் தேதி) மாலை 06.00 மணியளவில் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் (டவுன்ஹால்) நடைபெற உள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர், கிராமப்புற கலைகளை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதனை முன்னிட்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வாயிலாக மாவட்டம்தோறும் கிராமப்புற கலை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில், இன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலை சங்கமம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில், கிராமப்புற கலைகளான தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், கோலாட்டம், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கிராமப்புற கலைஞர்களால் நடத்தப்பட உள்ளது.எனவே புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த கலை சங்கமம் நிகழ்ச்சியினை கண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.


    • விழிப்புணர்வு நிகழ்ச்சி நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது.
    • கல்லூரி முதல்வர் பரஞ்சோதி முன்னிலை உரையாற்றினார்,

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. பென்னாகரம் வட்ட நுகர்வோர் மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு சங்க தலைவர் சம்பத்குமார் வரவேற்று பேசினார்.

    மருதம் நெல்லி கல்வி குழும தாளாளர் கோவிந்த் முதலைமை உரையாற்றினார்.ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பரஞ்சோதி முன்னிலை உரையாற்றினார்,

    சிறப்பு அழைப்பாளர் களாக தருமபுரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன், த.நூ.பா.சு. ஆராய்ச்சி மைய மாநில ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, சின்னப் பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பழனி, தருமபுரி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்க தலைவர் அண்ணாமலை, தருமபுரி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்க உறுப்பினர் ஜீவாநந்தம், பெங்களூர் ராணுவ துறையை சேர்ந்த மாரிமுத்து, பொருளாளர் பென்னாகரம் வட்ட நுகர்வோர் மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு சங்க பொருளாளர் மணிவண்ணன், பென்னாகரம் வட்ட வழங்கல் அலுவலர் உமாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
    • உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது அவர் பேசியதாவது :-

    தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி பல்வேறு கல்லூரி சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்னிலையில் நடை பெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் தமிழ்நாடு நவீனமடைந்த கதை என்ற தலைப்பிலும், கவிஞர் நந்தலாலா அகப்பொறியின் திறவுகோல்- கேள்விகளின் சிறப்பு என்ற தலைப்பிலும் சொற்பொழிவு ஆற்றினா ர்கள்.

    உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது.

    நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும்.

    எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர் மரபும்- நாகரிகமும் தமிழ்நாட்டில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், திசைதோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தோற்றமும் தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள், வளரச்சியும், கணினி தமிழ் வளர்ச்சியும் தமிழ்நாட்டில் சுற்றுலா வாய்ப்புகள், நூற்றாண்டு கண்ட ஊடகங்களின் சவால்களும், கல்விப் புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    ஆகவே நீங்கள் அனைவரும் தமிழின் பெருமைகள் கேட்டறிந்தும், மேலும், இந்நிகழ்ச்சியில் உங்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் வழங்க ப்பட்டுள்ளது.இதனை மாணவர்கள் தவறாது படித்து பயன் பெறுவதோடு மட்டும ல்லாமல் சக மாணவர்கள் மற்றும் நண்பர்களிடமும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வு உள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கவிஞர்கள் மனுஷ்யபுத்திரன், நந்தலாலா, முனைவர் செந்தமிழ் குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா, தாசில்தார் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×